பிரிட்டிஷ் பேரரசில் சூரியன் அஸ்தமிப்பதில்லை என்றார் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சார்ச்சில். 20 ம் நூற்றாண்டின் மத்தியில் ஐரோப்பாவின் அந்த பிர்அவனிய உதடுகள் உதிர்த்த இந்த வார்த்தைகள் வரலாற்றில் இடம் பிடித்து விட்டன என்றாலும் அந்த வார்ததைகள் நிலைத்த அளவு அதிலுள்ள உண்மை நிலைக்க வில்லை. நூற்றுக்கணக்கான உலக நாடுகள் ஆங்கிலேயரிடம் அடிமைப் பட்டுக்கிடந்தன. உலகின் அத்தனை கண்டத்திலும் தன்னுடைய கலனிகனை உருவாக்கி ஏதோச்சதிகாரம் செலுத்திக் கொண்டிருந்தது பரிட்டன் அரசாங்கம். காலனி நாடுகளிலுள்ள வளங்களை சுரண்டி அங்கிருந்த மக்களை கசக்கிப் பிழிந்து கொண்டிருந்த கிரேட் பரிட்டனின் சூரியன் அஸ்தமிக்காத அரசாட்சிக்கு இந்தியா முதல் அபாயச் சங்கு ஊதியது. இந்தியாவில் நடைபெற்ற விடுதலைப் பேராட்டங்கள் இந்தியவின் விடுதலைக்கும் அதை தொடர்ந்து மற்ற காலனிகள் விடுதலையாவதற்கும் காரணமாக அமைந்தன. தேசத்தின் சுயமரியாதையை மீட்டெடுக்கிற சுதந்திரப் பொரில் முஸ்லிம்களில் பெருமளவில் வீரத்தோடும் தீரத் தோடும் ஈடுபட்டனர். இந்த தேசத்தில் வாழ்ந்த வேறு எந்த சமூகத்திற்கும் சளைக்காத வகையில் முஸ்லிம்கள் விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தார்கள் என்பதும் அந்த பேராட்டதில் சகல விதமான அர்ப்பணிப்புகளையும் அவர்கள் மனமுவந்து செய்தார்கள் என்பதும் மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மைகளாகும். சற்று அழுத்தமாக சொல்வதானால் விடுதலைப் போராட்டத்தின் உணர்ச்சி மிகு வரலாற்றில் முஸ்லிம்களிடம் இருப்பது போன்ற பெறுமைக்கரிய செய்திகள் மற்ற சமூகத்தாரிடம் இல்லை எனலாம்.மொத்த சமுதாயமும் விடுதலைப் போராட்டதில் வெகு தீவிரமாக ஈடுபட்டதால் இரண்டு தலைமுறைக்கான எதிர்காலத்தை முஸ்லிம்கள் அர்ப்பணிக்க நேர்ந்தது. ஐக்கிய இந்தியாவிலிருந்து பாகிஸ்த்தான் பரிந்து போனதை மட்டுமே காரணமாக காட்டி இந்திய முஸ்லிம்களின் விடுதலைப் போராடடப் பங்களிப்பை குறைத்து மதிப்பிட பலர் முயற்சி செய்கிறார்கள். அது கைகளால் சூரியனை மறைக்க முயல்வது போலாகும்.பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் எழுதுகிறார்:இந்திய விடுதலைக்கு சிறை சென்றவர்களிலும் உயிர் நீத்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிகமாகவே இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப்போரில் மாண்டோர் எண்ணிக்கையின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது. (இல்லஸ்ட்ரேட் வீக்லி. 29.12.1975)நாட்டு விடுதலைக்காக போராடுவது என்பது முஸ்லிம்களைப் பொருத்த வரை தேசப்பற்றாக மட்டும் இல்லாமல் அது சமயத்தின் வழிகாட்டுதலாகவும் இருந்தது. முஸ்லிம்கள் சமயததின் மீது அதிகப் பற்று கொண்டவர்கள் என்பது எல்லூருக்கும் தெரிந்த செய்திதான். தேசப் பற்று என்பதோ சுதந்திர உணர்ச்சி என்பதோ சமயப்ற்றின் ஒரு பகுதியாக இஸ்லாம் கருதுவதால் சுதந்திர மனப்பான்மையும் தேசப்பற்றும் அவர்களிடம் இயற்கையாக உருக்கொண் கொண்டிருந்தது.சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்கள் தீவிரமாக ஈடுபட்டதற்கான காரணங்களை ஆராய்கிற பேச்சாளர்கள் பலரும் முஸ்லிம்கள் தான் ஆங்கிலேயரிடம் ஆட்சியை பறிகொடுத்திருந்தனர் அதனால் இழந்தததை பெருவதற்காக தீரத்தோடு போராடினார்கள் என்று சொல்வது வாடிக்கை. இதை ஒரு சிறு காரணமாக ஏற்றுக் கொள்ளலாமே தவிர இதுவே பிரதான காரணம் அல்ல. வுpடுதலைப் போரில் முஸ்லிம்கள் தீவிரமாக ஈடுபட பிரதான காரணம் இஸ்லாம் ஆகும். ஆம் இஸ்லாமிய மனப்பான்மை தான் அவர்களை விடுதலைப் போருக்கு அதிகம் தூண்டியது. ஆதனால் தான் ராஜீய முஸ்லிம்கள் மட்டுமின்றி சாமான்ய முஸ்லிம்களும் பெருவாhக இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். சுதந்திரப் போராட்ட கால வரலாற்றை நினைவு கூர்கிற பலரும் அதில் முஸ்லிம்களின் பங்களிப்பை பற்றியே அதிகம் பேசுகின்றனர். போரட்ட களத்தில் இஸ்லாம் என்கிற சமயத்தின் பங்களிப்பை அதிகம் கண்டு கொள்வதில்லை. விடுதலைப் போரில் முஸ்லிம்கள் ஆற்றிய பணி என்பதை விட இந்திய விடுதலைப் போரில் இஸ்லாம் ஆற்;றிய பணி பற்றி ஆராய்வது மனித சுதந்திரத்தின் வரலாற்றின் இஸ்லாதின் தாக்கம் எத்தகையது என்பதை புரியவைக்கும். இஸ்லாம் இந்த உலகுக்கு வழங்கிய கொடைகளில் முக்கியமான ஒன்று மக்களுக்கு சுதந்திர மனப்பான்மையை கற்பித்ததாகும். எந்த ஒரு முஸ்லிமும் தன்னை அடக்கி ஆளும் தகுதி இறைவன் ஒருவனுக்கு மட்டுமே உண்டு என்பதை அழுத்தமாக நம்புகிறார். இந்த நம்பிக்கை, இன்னொரு மனிதனுக்கு சட்டரீதியாக அன்றி மற்ற வழிகளில் அடங்கிப் போவதை தடுத்துவிடுகிறது. இதுவே சுதந்திர மனப்பான்மை முஸ்லிம்களிடம் இயற்கையாக எழுவதற்கு காரணமாகிறது. ஒரு முஸ்லிம் முதன்மையாக மொழிகிற லாயிலாக இலாஹ இல்லல்லாஹ் (வணங்கத் தகுந்தவன் அல்லாஹவை தவிர வேறு எவரும் இல்லை) என்ற கலிமா வாசகம்; மனிதன் மனிதனுக்கு தலைவணங்கிச் கிடப்பதை தடை செய்கிறது. அது தனிமனிதனின் சுய மரியதையை மீட்டெடுத்து அவனுக்கு சுதந்திர மனிதனுக்குரிய கம்பீரத்தை வழங்கியது. நபித்தோழர்களில் ஒருவரான பிலால் (ரலி) அவர்கள் ஒரு நீக்ரோ இனத்து அடிமையாக மக்காவில் பல்லாண்டுகள் வாழ்ந்தவராவார். அவர் இஸ்லாமைத் தழுவிய பிறகு ஒரு நாள் அபூதர் (ரலி) என்ற நபித் தோழர் அவரை கருப்பியின் மகனே! என்று ஏசிவிடுகிறார். இந்த வார்த்தைகளால் வேதனை அடைந்த பிலால் (ரலி) அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களிடம் சென்று முறையிட்டார். பெருமானார் (ஸல்) அவர்கள் அபூதர் (ரலி) அவர்களை அழைத்து உங்களிடம் அறியாமைக் காலத்து பழக்கம் இருக்கிறது என்று கடுமையாக கடிந்து கொண்டார்கள். (புகாரி:30)இந்த நிகழ்சியில் ஒரு கருப்பின மனிதரின் கருத்துக்கு பெருமானார்(ஸல்) அவர்கள் மதிப்பளித்தார்கள், அவரது மரியதையை பாதுகாத்தார்கள் என்ற செய்தியை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்த வேறு ஒரு செய்தி இருக்கிறது. பல்லாண்டு காலம் அடிமையாய் ஏச்சுக்கும் பேச்சுக்கும் அடிக்கும் உதைக்கும ஆளாகி, அதை தாங்கிக் கொண்டிருந்த ஹஜ்ரத் பிலால் (ரலி)அவர்கள் இஸ்லாமை தழுவிய பிறகு கருப்பியன் மகனே என்ற வார்த்தைக்கு ஆவேசம் ஆடைந்தார்கள் என்றால் லாயிலாக இல்லல்hஹ் கலிமா வாகசம் அவருக்கு சுதந்திர உணர்வையும் சுய மரியாதையையும் ஊட்டியிருந்தது தான் காரணம் என்பதை கவனிக்க வேண்டும்.அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற போராடுவதும் ஆதிக்க வெறியர்களின் கொட்டத்திற்கு முடிவு கட்டுவதும் நபிமார்களின் வழிமுறையாக இருந்ததது என்பதை திருக்குர் ஆன் சுட்டிக்காட்டுகிறது. இறைத்தூதர் மூஸா (அலை) அவர்கள் எகிப்திய கொடுங்கோல் அரசன் பிர்அவ்னிடம் ஏகத்துவத்தின் செய்தியை மட்டும் எடுத்துச் சொல்ல வில்லை. அவன் கொத்தடிமைகளாக வைத்திருக்கிற சுமார் 6 லட்சம் யூதர்களின் விடுதலைக்hகாக போராடவும் செய்தார்கள்;.திருக்குர்ஆன் கூறுகிறது. ''ஆகவே, (மூஸா - ஹாரூன் ஆகிய) நீங்கள் இருவரும் அவனிடம் சென்று: 'நாங்களிருவரும் உன்னுடைய இறைவனின் தூதர்கள், பனூ இஸ்ராயீல்களை எங்களுடன் அனுப்பி விடு, மேலும் அவர்களை வேதனை படுத்தாதே, நிச்சயமாக, நாங்கள் உன் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை உனக்குக் கொண்டு வந்திருக்கிறோம், எவர் நேர் வழியைப் பின்பற்றுகிறாரோ அவர் மீது (சாந்தி) ஸலாம் உண்டாவதாக' என்று சொல்லுங்கள்'' (என்று அல்லாஹ் கட்டளையிட்டான்). (20:47)நபி தாவூத் (அலை) ஜாலு{த்தின் கொடுங்கோன்மைக்கு முடிவு கட்டினார்கள் எனபதையும் குர்ஆன் குறிப்பிட்டுச் சொல்கிறது. (2.251)விடுதலைப் பாராட்டத்திற்கு தலைமை ஏற்பதும் கொடுங்கோன்மையை எதிர்ப்பதும் நபிமார்கள் எனும் இறைத்தூதர்களின் பணியாக இருந்திருக்கிறது என்பதை இவ்வசனங்கள் சுட்டிக்காட்டகின்றன. அடக்குமறைகளுக்கு எதிரான நபிமார்களின் மரபு வழியான பிரச்சாரத்தின் தொடர்ச்சியாகத்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது கடைசி ஹஜ்ஜின் போது இனம் நிறம் மொழி தேசம் என்ற எந்த அடிப்படையிலும் மனிதனை மனிதன் அடிமைப்படுத்த முடியாது என்ற பிரகடணத்தை வெளியிட்டார்கள். அந்தப் பிரகடணம் தனி மனித சுதந்திரததை இறுதிநாள் வரைக்கும் உறுதிப்படுத்துகிற எஃகுப்பிரகடணமாக அமைந்தது.ஹஜ்ஜுப் பெருநாளுக்கு அடுத்து வந்த அய்யாமுத் தஸ்ரீக் எனப்படும் புனித நாட்களின் ஒரு பொழுதில், மக்களுக்கு உரையாற்றிய பெருமானார் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: மக்களே! உங்களது இறைவன் ஒருவனே! உங்களது தந்தையும் ஒருவரே! ஆரபியர்களுக்கு மற்றவர்களை விட தனிச்சிற்பபு எதுவுமில்லை.அதுபோவே மற்றவர்களுக்கு அரபியரைவிட சிறப்பு எதுவுமில்லை. சிவப்பு நிறமுடையவர்களுக்கு கருப்பர்களை விட எந்தச் சிறப்பும் இல்லை. கருப்பர்களுக்கும் சிவப்பு நிறமுடையவர்களைவிட எந்தச் சிறப்பும் இல்லை. இறையச்சத்தினால் மட்டுமே நீங்கள் சிறப்படைய முடியும். (அஹ்மது: 22391)அரபு மொழி பேசத் தெரியாதவர்களை அஜமி ஊமையன் என்று சொல்லும் அளவுக்கு தமது இனத்தின் மீதும் மொழியின் மீது வெறி கொண்டிருந்த மக்களை பெருந்திரளாக வைத்துக் கொண்டு பெருமானார் (ஸல்) அவர்கள் வெளியிட்ட இந்தப்பிரகடணம் தனி மனித சுதந்திரத்தையும் சமத்தவத்தையும் உரத்து உறுதியாக பறைசாற்றியது. எந்தக் காரணத்தை கொண்டும் மனிதன் மனிதனுக்கு அடிமையாகக் கூடாது என்ற கட்டளையை தந்தது. ஐரோப்பாவில் 1789 ல் நடை பெற்ற பிரஞ்சுப் புரட்சிக்குப் பின்னால் வெளியிடப்பட்ட (னநஉடயசயவழை ழக வாந சiபாவள ழக அயn ) மனித உரிமைப்; பிரகடணத்தை விட இப்பிரகடணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது வே மனித வரலாற்றில் நிலைத்த தாக்கத்தை செலுத்தியத்திய பிரகடணமாகும். பிரஞ்சு புரட்சியின் தொடக்க காலம் சுதந்திரத்தை பாதுகாப்பதாக இருந்தது என்றாலும் அதன் கடைசி முடிவு நெப்பொலியன் என்ற சர்வாதிகாரியின் பிறப்பிலே தான் முடிந்தது. 1789 புரட்சியின் மூலம் 16 லூயியின் மன்னராட்சியை தூக்கி எறிந்த பிரான்ஸ் தேசம் 1804 ம் ஆண்டில் நெப்பொலியனை மன்னராக ஏற்றுக் கொண்டது. இந்தக் காரணத்தினாலேய வரலாற்றாசியர்கள் பலரும் பிரஞ்சுப் புரட்சி முழு வெற்றியடைந்ததாக கருத முடியாது என்று சொல்வதுண்டு.ஆனால் முஹம்மது (ஸல்) அவர்களின் பிரகடணம் இன்று வரை சமூகத்தின் அனைத்து தளத்திலும் செயல்பாட்டில் இருக்கிறது. சுதந்திரம் என்ற உடன் பலரும் பிரஞ்சுப் புரட்சியையையும் அதன் பிரகடனங்களையும் மெச்சிப் பேசுவது பலருடைய வழக்கம். ஆனால் உன்மையில் பிரஞ்சுப் புரட்சிக்கும் அதற்கு முன்னதாக நிகழ்ந்த ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கும் கூட இஸ்லாமும் முஸ்லிம்களும் முக்கிய காரணிகளாக இருந்தார்கள். சிலுவைப் பேர்களின் போது ஐரோப்பிய வீரர்கள் முஸ்லிம்களின் நிலப்பகுதிக்குள் நுழைந்தார்கள். அங்கு பிரபுக்கள் குடியானவர்கள் என்ற பேதமின்றி முஸ்லிம்கள் வாழ்வதை கண்டார்கள். திருச்சபைகளின் ஆதிக்கமோ பிரபுக்களின் அதிகார வெறியாட்டமோ இல்லாத சமத்துவ சமுதாயத்தை அவர்கள் முஸ்லிம்களிடம் கண்டார்கள். இது ஐரோப்பிய வீரர்களின் மனதில் ஒரு மாற்றத்தை உண்டு பண்ணியிருந்தது. தங்கள் ஊருக்கு திரும்பிய அவர்கள் முஸ்லிம்களிடம் காணப்படுவது போன்ற சமத்துவ வாழ்வுக்காக போராடினார்கள். அந்தப் போராட்டத்தின் விளைவே ஐரோப்பிய மறுமலாச்சியாகவும் பிரஞ்சுப் புரட்சியாகவும் வெடித்தது.இந்தியாவில் சுதந்திரப் பொராட்ட காலத்தின் போது 1906 ஆண்டு பாலகங்காதர திலகர் சுதந்திரம் எனது பிறப்புரிமை என்ற கோஷத்தை முன்வைத்தார். அது இந்தியாவிலருந்த மற்றவர்களுக்கு புதிய கோஷமாக இருந்திருக்கலாம். ஆனால் முஸ்லிம்களுக்கு அது புதியதல்ல. கி.பி. 7 ம் நூற்றாண்டிலேயே ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் உலகுக்கு சுதந்திரம் மக்களது பிறப்புரிமை என்ற கருத்தை முன்வைத்து விட்டார்கள்.ஹஜ்ரத் (உமர்) அவர்கள் காலத்தில் எகிப்தின் ஆளுநராக அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஒரு முறை எகிப்தில் ஒட்டகப் பந்தயம் நடந்தது. அதில் கவர்னர் அம்ரின் மகன் முஹம்மதுவும் கலந்து கொண்டார். அவரது ஒட்டகை முதலில் ஒடிக் கொண்டிருந்தது. திடீரென எகிப்தை பூர்வீகமாக கொண்ட ஒரு கிப்தி இன இளைஞன் அவரை முந்திச் சென்றான். அப்படி முந்திச் செல்லும் போது அவனது வாயிலிருந்து ஒரு ஆவேச வாக்கியம் வெளிப்பட்டது. அது முஹம்மதை கோபப்படுத்தி விட்டது. அவர் அந்த இளைஞனை நோக்கி இந்தா பிடி! நான் பிரமுகரின் மகனாக்கும்! (குத்ஹா! வ அன இப்னுல் முக்ரமீன்) என்று சொல்லி ஓங்கி ஒரு குத்து விட்டார். கவர்னரின் மகன் தன்னை தாக்கியிருப்தால் இங்கு முறையிட்டால் நீதி கிடைக்காது என்று கருதிய அந்த எகிப்திய இiளுஞன் நேரே மதீனாவுக்கு வந்து ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களிடம் முறையிட்டான். உடனடியாக உமர் (ரலி) அவர்கள் ஆளுநர் அம்ரையும் அவரது மகனையும் தலைநகருக்கு வரும்படி உத்தரவிட்டார்கள். அவர்கள் வந்ததும், அரசாங்க மண்டபத்தில் வைத்து விசாரித்துவிட்டு எகிப்திய இளைஞனிள் கையில் சவுக்கை கொடுத்து உன்னை தாக்கிய முஹம்மதை அடி என்றார்கள். அவ்விளைஞன் அப்படியே செய்தான். அவன் அவரை அடித்து முடித்ததும் ஆளுநர் அம்ரை சுட்டிக்காட்டி இவரையும் அடி என்றார்கள். அந்த இளைஞன் அதிர்ந்து போனான். இவர் என்னை ஒன்றும் செய்ய வில்லையே என்று கூறினான். அப்பொது உமர் (ரலி) அவர்கள் அவருடைய மகன் உன்னை அடிப்பதற்கு அவரது தந்தை ஆளுநர் என்ற எண்ணம்தான் காரணம். அத்தகைய எண்ணத்தை மகனுக்கு கெடுத்தததற்கு இவரையும் நீ அடிக்கலாம் என்றார்கள். (இன்னமா லரபக இப்னுஹு பி ஸுல்தானி அபீஹி). அந்த வாலிபர் ஆளுநரை அடிக்கத் தயங்கினார். அப்படியானால் அது உன் இஷ்டம் என்று கூறிய உமர் (ரலி) அவர்கள் ஆளுநர் அம்ர் (ரலி) அவர்களைப் பார்த்து எப்போதிருந்து நீங்கள் மக்களை அடிமைகளாக கருத ஆரம்பித்தீர்கள். அவர்கiளுடைய தாய்மர்கள் அவர்களை சுதந்திர மனிதர்களாக பெற்றெடுத் திருக்கிறார்கள் (மதா தஅப்பத்துமுன்னாஸ வகத் வலதத்ஹும் உம்முஹாத்துஹும் அஹ்ராரா) என்று கேட்டார்கள். இஸ்லாம் ஊட்டிய இத்தகைய சுதந்திர உணர்வு தான் அடிமை இந்தியாவில் விடுதலைக்காக போராடும்படி முஸ்லிம்களில் அனைத்து தரப்பினரையும் தூண்டியது. இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் என்று சொல்லப்படும் சிப்பாய் கலகம் ஏற்படுவற்கு முஸ்லிம்கள் முக்கியக்காரணம் என்றும் பலரும் சொல்வார்கள்.சரியாகச் சொல்வதானால் சிப்பாய் கலகம் ஏற்படுவதற்கு இஸ்லாமே காரணமமாக இருநந்தது. சிப்பாய் கலகத்திற்கான காரணத்தை எழுத முற்படும் எந்த வரலாற்றாய்வளரும் ஆங்கிலேயர்களை எதிர்ககும் துணிச்சல் இந்தியர்களுக்கு எப்படி வந்தது என்பதை விவரிக்கையில் ஆப்கானிஸ்தான் போர் தான் இந்திய வீரர்களுக்கு ஆங்கிலேயரை எதிர்ககும் துணிச்சலை கொடுத்தது என்று சொல்லுவார்கள். ஆப்கானிஸ்தானை வெற்றி கொள்வதற்காக மேற்கோண்ட போரில் இங்கிலாந்து நாட்டின் வலிமை மிக்க படை தோல்வியடைந்தது. 20 ஆயிரம் பிரிட்டிஷ் வீரர்கள் அதில் பலியானார்கள். இந்த செய்தி ஆங்கிலேயர்களை எதிர்க்க முடியும் என்ற துணிச்சலை இந்திய வீரர்களுக்கு கொடுத்தது. பேராசிரியர் அப்துஸ்ஸமத் தியாகத்தின் நிரம் பச்சை என்ற தன்னுடைய நூலில் இப்டிக் கூறுகிறார். ஆங்கிலேயரை வென்று துரத்த முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்தது ஒரு இஸ்லாமிய நாடென்றால் அவர்களுக்கு எதிராக கிளர்ந்து எழுவதற்கான சூழலை உருவர்கிகியது ஒரு இஸ்லாமிய மார்க்க நெறியாகும். 1856 ம் ஆண்டு புதிய என்பீல்டு ரக துப்பாக்கியை பிரிட்டிஷார் அறிமுகம் செ;யதனர். அப்போது வங்காளத்தில் முகாமிட்டிருந்த 19 வது படைப்பிரிவில் பயன்படுத்தி அதை பரிசீலிக்க பிரிட்டிஷார் திட்டமிட்டிருந்தனர். அத்துப்பாக்கியில் அடைக்கப்பட்டுள்ள தோட்டாக்கள் அதிலிருந்து எளிதில் வெளியேறுவதற்காக பன்றிக் கொழுப்பும் பசுக் கொலுப்பும் தோட்டாக்களில் தடவப்பட்டது. தோட்டாக்கள் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய பின் அதன் மேலுரைத் தகடுகளை பல்லால் கடித்து இழுத்துத்தான் வெளியேற்ற வேண்டும். அந்த சமயத்தில் அதில் தடவப்பட்டிருக்கும் கொலுப்பு வாயில்படுவதற்கு வாய்ப்பிருந்தது. எனவே அத்தோட்டக்களை பயன்படுத்த முடியாது என் முஸ்லிம்கள் மறுத்தனர் இது வே சிப்பாய்கலகம் ஏற்படுவதற்கு காரணம். இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் என்று வர்ணிக்கப்படுகிற அந்த சிப்பாய் கலகம் இந்தியவிவிருந்த கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்திற்கு முடிவுகட்டி. இங்கிலாந்து ராணியின் ஆளமையின் கீழ் கொண்டு வந்தது. 1857 ம் ஆண்டு நடைபெற்ற அந்த சிப்பாய் கலகத்திற்குப்பிறகு தொடர்ச்சியாக நடைபெற்ற போராட்டங்களின வழியாக நாடு சுதந்திரம் பெற்றது. இன்று இந்தியா சுதந்திர தேசங்களின் வரிசையில் தலை நிமிர்ந்து நிற்கிறது. அரசியல் சாசனரீதியாக அமெரிக்க ஐக்கிய குடியரசின் குடிமக்களை விட உலக அளவில் போற்றத்தகுந்த உரிமைகள் பெற்ற சுதந்திரக் குடிமக்களாக நாம் இருக்கிறோம். இங்கே பிரச்சினைகள் ஏராளமாக இருக்கலாம். மதவெறியும் லஞ்ச லாவண்யமும் தரம் குறைந்த அரசியலும் நிர்வாக குளறுபடிகளும் சுதந்திரத்தின் மரியாதையை கேள்விக்குரியாக ஆக்கியிருக்கலாம். பாசிசக் கருத்துக்களும் வன்முறைகளும் பெருகி அவ்வபபோது அமைதியை குலைத்து வரலாம். ஆனால் ஒன்று மட்டும் மறுக்க முடியாத நிஜம். அத்தைன கசப்பான சூழலிலும் இந்திய தேசத்தின் குடிமகன் சுதந்திரமானவனாக இருக்கிறான். உலகின் வேறு பல நாடுகளிலும் குடிமக்களுக்கு கிடைக்காத மரியதையும் அமைதியான வாழ்வும் செழிப்பும் இந்தியக் குடிமகனுக்கு கிடைதது வருகிறது. இது நமது முன்னோர்கள் அரும்பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தின் சுகந்தமான விளைவுகளாகும். இன்று இந்தியா அறிவுத்துறைகளில் வெகுவேகமாக முன்னேறி வருகிறது. பொருளாதார வளர்ச்சி சீராக உயர்ந்து வருகிறது. மக்களின் வாழ்கை தரம் மிகப் பெரிய அளவில் மாற்றம் கண்டிருக்கிறது. இந்த தேசத்தின் சுதந்திரத்தை எல்லா வகையிலும் பாதுகாக் வேண்டிய கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது. முஸ்லிம்கள் தேசத்தின் விடுதலைக்காக பணியாற்றியவர்கள் என்ற அடிப்படையில் அவர்களது பொறுப்பு இன்னும் அதிகமாகிறது.இந்த தேசத்தின் விடுதலைக்கு காரணமாக இருந்த இஸ்லாமும் முஸ்லிம்களும் இன்று பல் முனைத்தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறது என்பது வாஸ்த்தவம் தான். மிகப் பக்குவமாக அதை கையாள வேண்டிய கடமை முஸ்லிம்களுக்கு இருக்கிறது. இன்றுள்ள சூழ்நிலையில் முஸ்லிம்களது வாழ்வின் மீது தெடுக்கப்படுகிற தாக்குதல்களும் அவர்களது சமூக அமைப்பின் மீது ஏவப்படுகிற கணைகளும் கலவரங்களும் கண்ணீத் துளிகளும் இந்த தேசத்தை பாதுகாப்பதில் அவர்களது பொறுப்புணர்வை அதிகரித்திருப்பதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்திய சுதந்திரத்திற்கும், இந்திய மக்களின் சமத்துவ சமூக அமைப்புக்கும் யார் விரோதிகாளக இருந்தார்களோ அவர்களே இப்பொது முஸ்லிம்களின் எதிர்கால வாழ்விற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.இந்தச் சந்தர்பத்தில் முஸ்லிம்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விசயங்கள் உண்டு.எந்த ஒரு விவகாரமானாலும் அதில் முஸ்லிம் என்ற பெயர் எளிதில் இணைக்கப்படுகிற கசப்பான சூழ்நிலையில் நமது அனைத்து விசயங்களையும் சட்டத்திற்கு உட்பட்டதாக அமையுமாறு பார்ததுக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். வியாபாரம், வீடுகட்டுதல், வாகனங்கள் வாங்குதல், தெழிற்கூடங்கள் அமைத்தல், ஒன்று கூடுதல் அதிகார வர்க்கத்துடன் ஒத்துப் போகுதல், இன்னபிற ஈடுபாடுகள் அனைத்திலும் சட்டத்தின் வரையரைகளை அறிந்து கொள்வதும் அதன்படி செயலாற்றுவதும் மிக முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய விசயமாகும். ஆதே போல, வாய்ப்பின் வாசல்கள் அகலத் திறந்திருக்கிற நமது தேசத்தில் நமக்கான வாய்ப்புகளை தேடி எடுத்துக் கொள்வதில் ஆர்வமும் அக்கறையும் காட்ட வேண்டும். அரசியல், அரசாங்கம், அரசுப்பணிகளில் ஒதுங்கியிருக்கிற மனப்பான்மை மாற வேண்டும். சலுகைகளை எதிர்பார்த்துக் கொண்டிராமல் பொதுவில் போட்டியிடுகிற திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். நமது தகுதிகளை நாம் நிர்மாணித்தால் நமது அந்தஸ்த்தை நாடு தீர்மாணிக்கும். இது நமது தேசம். நாம் இதன் குடிமக்கள். இது நாம் பெற்ற சுதந்திரம். வாருங்கள் எல்லோரும் கொண்டாடுவோம். அனைவரக்கும் இனிய சுதந்திர தின நல் வாழ்த்துகள்.
No comments:
Post a Comment