Saturday, December 1, 2007

சீர்திருத்தம் என்பது எதுவரை?

தினமும் சுபுஹ் தொழுகைக்குப்பிறகு ஒரு நபி மொழியை சொல்லி, அது பற்றி மட்டுமே உள்ள கருத்துக்களை ஒரு சொற்பொழிவு போல் இல்லாமல் சாதாரண பாணியல், 5 லிருந்து 7 நிமிடங்களுக்குள்ளாக சொல்லி முடித்து விடுவது எங்களது பள்ளிவாசலில் வழக்கம். நேற்றைய தினம் ஒரு நபிமொழியை வாசித்தேன். அதன் பொருளை கேட்டவுடன் தொழுகையாளிகளின் முகத்தில் ஒரு ஆச்சரியக் கேள்விக் குறி படர்ந்தது. அது படர்கிறதா என்பதை நான் கவனித்து காத்திருந்தேன். அப்படியே நடந்தது. தூக்கக் கலக்கத்திலோ, ஒரு சம்பிரதாயத்திற்காகவோ இவர்கள் இங்கு உட்கார்ந்திருக்கவில்லை என்ற திருப்தி எனக்கு. என்ன இது கொஞ்சம் குழப்பமாக இருக்கிறதே என்ற கேள்வி அவர்களுக்கு.அந்த நபி மொழி இது தான். ஆபூஹுரைiரா (ரலி) அறிவிக்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். ஓரு மக்கள் கூட்டத்தைப் பார்த்து அல்லாஹ் ஆச்சரியம (மகிழ்ச்சிய) டைகிறான். விலங்குகளோடு அவர்கள் சுவர்கத்துக்குள் நுழைவார்கள். (புகாரி 3010)முதல் பார்வையில் இந்நபி மொழி நம்முடைய புருவங்களை உயரவைக்கும். செர்க்கம் என்பதே எல்லா சிரமங்களிருந்தும் விடுதலை தருகிற சுகமல்லமா? அந்த சொர்கத்துக்குள்ளேயே கைவிலங்கோடு செல்வதா? பிறகும் அது சொக்கமாக இருக்குமா? ஒரு வேளை திருமணம் செய்து கொள்கிற ஆண்களை அல்லாஹ் ஒருவரியில் விமாச்சிக்கிறானா? அல்லது சில ஜும்ஆ உரைகளை கேட்கும் நிர்பந்தத்திற்குள்ளான மக்களுக்காக சொல்லப்பட்ட நற்செய்தியா? அல்லது சிறைக் கூடங்களை நிரப்புவதை சமயக் கடைமையாக்கிய தலைவர்களை நம்பி ஏமாந்து போன மக்களுக்கான ஆறுதலா? ஏது பற்றி இந்நபிமொழி பேசுகிறது எனபதை சட்டடென்று புரிந்து கொள்ள முடியாத ஒரு சந்தேக வினாவை இந்நபி மொழி எழப்புகிறது.ஊண்மையில் இந்த அசம்பாவிதங்களைப் பற்றி எல்லாம் இல்லாமல் மிக மக்கியமான ஒரு வழிகாட்டுதலை அதுவம் இன்றைய நகரீகரிக உலகிற்கு தேவையான ஒரு தெளிவை இந்நபிமொழி தருகிறது.விலங்கிடப்பட்ட நிலையில் சொர்க்கத்தில் நுழைபவர்கள் என்ற வார்த்தை, வேறு வழியில்லாத நிர்பந்த சூழ்நிலையில் இஸ்லாத்தை ஏற்பவர்களை குறிக்கிறது.முஸ்லிம்களோடு சண்டையிட்டு தோற்றுப் போனவர்கள் கைதிகளாக பிடிக்கபட்டு கைவிலங்கிட்டு அழைத்துச் செல்லப்படுகிற போது அந்த தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக இஸ்லாமை தழுவினால் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள். அத்தகையோர் நிர்பந்த சூழ்நிலையில் இஸ்லாமை தழுவினாலும் இஸ்லாம் என்கிற அபரிமிதமாகன நன்மையின் விளைவாக சொர்க்கத்திற்குள்ளே நுழையும் வாய்ப்பை பெற்றுவிடுகிறார்கள். அதை கண்டு அல்லாஹ் ஆச்சரியமடைவதாக பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.அல்லாஹ் ஆச்சரியமடைகிறான் என்ற வார்ததை அல்லாஹ் திருப்தியடைகிறான் என்ற பொருள் கொண்டது என ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். குறும்புக்கார மாணவர் ஒருவர் ஆசிரியரிமிருந்து தண்டனை பெற்ற பிறகு சரியாக நடந்து கொண்டால் அதைப்பார்த்து ஆசிரியருக்கு ஏற்படுமே ஒரு திருப்தி கலந்த ஆச்சரியம் அத்ததைகய திருப்தி, நிர்பந்த சூழ்நிலையில் இஸ்லாமை ஏற்றுக் கொண்டு சொhக்கத்திற்கு சொந்தக்காரர்களாகிறவர்களைப் பார்த்து அல்லாஹ்வுக்கு ஏற்படுகிறது என்பது இந்நபி மொழியின் கருத்து.நிர்பந்த சூழ்நிலையில்தான் இஸ்லாத்திற்கு வந்தார்கள் மனம் விழும்பி வரவில்லை என்றாலும் இஸ்லாமின் நன்மையை, அதன் பலாபலன்களை அவர்கள் பெறுக்கொள்வார்கள்.மக்கா வெற்றியடைந்தவுடன் இஸ்லாமைத் தழுவியோர் பலரும், தாயிப் நகரிலிருந்து இஸ்லாமைத் தழுவியோர் பலரும் இத்தைகய மனோ நிலையில் தான் இஸ்லாமைத் தழுவினார்கள். ஆயினும் இஸ்லாமின் பலாபலன்களை உணர்ந்த பிறகு, அதன் கனிகளைச் சுவைத்த பிறகு சொhக்கத்திற்குரிய வாழ்கை அவர்களிடம் வந்தது.கொஞ்சம் எச்சரிக்கையோடு அணுகப்பட வேண்டிய விசயம் இது. இழை பிசகினாலும் இஸ்லாம் சமய நிர்பந்தம் செய்கிறது அல்லது வாள் முனையில் மக்களை மதம் மாற்றுகிறது என்ற கருத்தோட்டம் வந்தவிடுகிற வாய்ப்பிருக்கிறது. ஆனால் நிர்பந்தப்படுத்தி எவரையும் தன்வயம் ஈர்ப்பதில் இஸ்லாத்திற்கு துளியும் விருப்பம் கிடையாது. இந்த மாhக்கத்தை தழுவும் விசயத்தில் எந்த நிர்பந்தமும் இல்லை என்று திருக்குர்ஆன் பகிரங்கப் பிரகடணம் செய்துள்ளது.இஸ்லாம் கொள்கைப் பிடிப்பை அழத்தந் திருத்தமாக வலியுறுத்துகிற மார்க்கம். கொள்கை விசயத்தில் துளியும் சமரசம் செ;யது கொள்ளாத சமயம். அத்தகைய ஒரு சமயம் வேண்டா வெருப்பாகவோ, அலட்சிய மனோபாவத்துடனோ எவரும் தம் மார்க்கத்திற்கு வருவதை ஏற்காது. ஏற்கவும் இல்லை. ஒரு அடையாளத்திற்காவோ ஆட்களை காட்டுவதற்காகவோ நூறு பேரை குல்லா போடவைக்க வேண்டிய எந்த அரசியல் தேவையும் இஸ்லத்திற்கு இல்லை. எனவே நிர்பந்தப்படுத்தி எவரையும் இஸ்லாத்திற்கு கொண்டு வருவது குறித்து இந்நபி மொழியில் பேசப்படவில்லை. நிர்பந்த சூழ்நிலையில் இஸ்லாத்தை ஏற்றவர்களைப் பற்றியே இது பேசுகிறது. நிர்பந்தப்படுத்தி இஸ்லாத்திற்கு கொண்டு வருதல் என்பதற்கும் நிர்பந்த சூழ்நிலையில் இஸ்லாத்தை ஏற்குதல் என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.குழந்தையை அடித்து மிரட்டி மருந்து சாப்பிட வைப்பது நிர்பந்தம். அதே குழந்தைக்கு மிட்டாய் தருவதாய்ச் சொல்லி அக்குழந்தை தானே மருந்தை உண்ணும் சூழ்நிலையை ஏற்படுத்தினால் அதை நிர்பந்த சூழ்நிலை என்று சொல்லலாம்.நிர்பந்தப்படுத்தப் படும் போது மறுப்தற்கு வாய்ப்பிரக்காது, நிர்பந்த சூழ்நிலையில் மறுப்பதற்கு வாய்ப்ப்புக்கிடைக்கும். ஆனால் ஏற்பதனால் கிடைக்கிற நன்மைகள் மறுக்கவிடாமல் செய்து விடும்.இத்தகைய நிர்பந்தச் சூழலில் ஒருவர் இஸ்லாமைத் தழுவினாலும் அது வரவேற்கத்தக்கதே! நிர்பந்தத்திற்கு வந்தவர் தானே என்று ஏளனமாக கருதுவதற்குரிய விசயமல்ல அது. மாறாக அல்லாஹ்வை ஆச்சரியப்படவைக்கிற விசயம் அது என்ற கருத்தை முதல் பொருளாக இந்நபிமொழி வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில் இலக்கிய பாணியில் குறியீட்டு முறையில் சொல்லப்பட்டுள்ள இந்நபி மொழி, சீர்திருத்தத்திற்கான முயற்சியை எந்த எல்லை வரை கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் சாடையாக உணர்த்துகிறது.சீர்திருத்தவாதிகள், கொள்கை கோட்பாடுகளில் பற்றுக் கொண்டோர், தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வகையகம் என்ற சித்தாந்தத்தில் உறுதி கொண்டோர் மிக அக்கறையோடு கவனிக்க வேண்டிய விசயம் இது.ஓரு சீர்திருத்வாதி நிர்பந்தப்படுத்தி எவரையும் தன்வயப்படுத்தக் கூடாது தான் என்றாலும் நிர்பந்த சூழ்நிலையை உருவாக்கி அவரை தன் தன்பக்கத்திற்கு ஈர்ப்பது தவறாகாது. என்பது மாத்திரமல்ல அத்தகைய நிர்பந்த சூழ்நிலைகளை உருவாக்க்குவதில் அவர் அக்கறை எடுத்தக் கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டுதலை இந்பிமொழி தருகிறது.இன்றைய நாகரீக உலகம் ஒரு மனிதர் அடுத்தவர் மீது அக்கறை கொள்வதற்கு மிகக்குறுகிய எல்லைகளை வைத்திருக்கிறது. மதுவினால் சமுதாயம் சகதியில் கிடக்கிறதா? பரவாயில்லை அது கிடந்துவிட்டு போகட்டும். ஆதற்காக மதுக்குடிக்காதே என்று நீ சட்டம் போடாதே! ஏன் சத்தம் கூட போடாதே! சக மனிதனின் மதி கெட்டு மிதிபட்டுச் சீரழிந்தாலும் சரி அது அவனது உரிமை. அந்த உரிமையில் தலையிடுவது அநாகரீகம். போதி மரத்தடி புத்தனாக மாறி எதையாவது ஒன்றை செய்தாக வேண்டும் என்று நீ விரும்பினால் ஒன்று செய்! மதுக்கடைகளை விளம்பரப்படுத்தும் வானளாவிய போர்டுகளின் ஒரு மூளையில் கண்ணுக்கு தெரிhயத சிறிய எழுத்தில் குடி குடியை கெடுக்கும் என்று போட்டு வை! என்பது தான் இன்றைய நகரீகம் சமூக அக்கறையை வெளிப்படுத்துவதற்கு வைத்திருக்கிற அளவுகோல். இந்த அளவுகோலை நாச10க்கானது என்றும் நாகரிகமானது என்றும் நிறுவுவதில் மேற்குலகும் அது சார்ந்த ஊடகங்களும் வெற்றியடைந்துவிட்டன.அதன் விளைவாக மேற்குலக மோகம் சூழ்ந்த மக்களிடம் அறிவுரை எனப்தோ சீர்திருத்தம் என்பதோ ஒரு நன்மை பெறுவதற்கான வழி என்ற மரியாதையை இழந்து விட்டன. ஒரு கட்டத்தில் அது மனித உரிமை மீறலாகவும் பிற்போகுத்தனமாகவும் காட்டுமிராண்டித்தனமாகவும் கூட சித்திரிக்கப்படுகிறது. அதனால், நல்லுரைகளும் நன்னெறி நூற்களும் கண்ணாடிப் பெட்டிக்குள் கவனமாக பாதுகாக்கப்டுகின்றன. நீங்கள் விரும்பினால் படித்துக் கொள்ளலாம்.இந்த சூழ்நிலையில் ஓருவர்மீது ஒருவர் சாய்நதபடி அந்தப் பெட்டிக்குள் இருக்கிற அறபோதனைகளை வாசிக்கிற இளைஞனும் யுவதியும் ஸோ! இட்ஸ் ஸவீட் யா! ஏன்று ஐஸ்கீரிமை சப்பியபடி நகர்ந்து வீடுகிறார்கள்.இந்தக் கோட்பாட்டின் விளைவாக தமது சொந்தக் குழந்தைகளை கூட வழிப்படுத்த முடியாத சூழ்நிலை மேற்குலகு சார்ந்த பெற்றோர்களுக்கு சட்ட ரீதியாக ஏற்பட்டது. ஒரு தந்தை தவறான பாதையில் செல்லத் தொடங்கிய தன்னுடைய பெண் மகளை கண்டித்தார். ஆவள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்நது தனியாக வாழ அனுமதி பெற்றேதோடு தந்தையிடமிருந்தே மாதச் செலவுக்கான தொகையும் பெற்றுக் கொள்ள தகுதியும் பெற்றாள். இத்தகைய தீர்ப்புகள், இன்றைய மேற்குலகின் கலாச்சாரத்தில் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி விட்டன. கண்ணுக்கு நேர போதைப் பொருளை உபயோகிக்கிற பிள்ளைகளைக் கூட கண்டித்து தடுக்கிற சக்தியற்றவர்களாக பெறறோர்கள் ஆனார்கள். காலப்பொக்கில் அதை தடக்க வேண்டும் என்ற எண்ணம் கூட தேவையறற்றது மனோ நிலைக்கு ஆளாகிவிட்டார்கள். கல்விக் கூடங்கள், அலுவலகங்கள், சமூக சமய மையங்கள் அனைத்திலும் இந்த எண்ணம் மேலோங்கி இதுவே மேற்குலகின் மனசாட்சியாகவும் பண்பாடாகவும் மாறிவிட்டது. ஒரு சமூக அக்கறை, அல்லது சீhதிருத்த முயற்சிக்கான எல்லை இது தான் என்ற இந்த வரையரை இஸ்லாத்தின் இயல்புக்கு எதிரானது. இந்த எல்லையை இஸ்லாம் ஏற்கவில்லை.ஓரு சீர்திருதத்திற்கான முயற்சி என்பது அடுத்தவரின் உரிமை என்ற அளவீட்டை தாண்டி அவரது நலன் என்ற எல்லைக் கோட்டை தொடவேண்டும் என்று இஸ்லாம் கருதுகிறது. அதையும் தாண்டி சமுதாய நலன் என்ற சிகரத்தையும் எட்டிப்பிடிக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் விருப்பமாகும். அதே நேரத்தில் இத்தகைய நலம் நாடுதல் என்பது சாத்வீகமான அல்லது சாத்தியப்பட்ட வழிமுறைகளின் அடிப்படையில் மட்டுமே அமைய வேண்டுமேயன்றி வன்மமான நிர்பந்திக்கிற வழிவகைகளின் அடிப்படையில் அமையக் கூடாது என்றும் தெளிவாக இஸ்லாம் உத்திரவிட்டுள்ளது.இஸ்லாமின் இரண்டாம் கலிபா உமர் (ரலி) அவர்கள் தமது ஆட்சிக்காலத்தில் ஒர வயதான பெண்மணியை அணுகி இஸ்லாமை எடுத்துச் சொன்னார்கள். அந்தப் பெண்;மணி மறுத்துவிட்டார். (அன அஜுஸுன் கபீரத்துன் வல் மவ்து இலைய்ய கரீபுன்) நானோ முதிhந்தவள்.மரணத்தின் பக்கத்திலிருப்பவள். இந்த சமயத்தில் என்னை விட்டு விடுங்கள் என்று சொன்னார். அந்த மக்கள் தலைவர் மார்க்கத்தில் நிர்பந்தம் அல்லை என்ற குர்ஆனிய வசனங்களை முனுமுனுத்தபடி அந்த இடத்தை விட்டு அகன்று விட்டார்.இந்த நிகழ்வில் ஒரு சீர்திருத்த வாதியின் அக்கறைக்கான அளவும் அதன் எல்லையும் மிகத்துல்லியமாக வரையரைக்கு உட்பட்டிருப்பதை காணலாம். ஒரு ஜனாதிபதி தனது சமூக கடமையை எந்த நிலையிலும் மறக்கவில்லை. ஓரு கிழவியொடு பேசுகிற அளவுக்கு கீழே இறங்கி வரவும் அவர் தயங்கவில்லை. ஓரு ஆட்சித் தலைவர் இறங்கி வந்து ஒரு குடியானவனிடம் பேசினால் அது ஒருவகை நிர்பந்தமாகி விடாதா என்று அவர் கவலைப் படவும் இல்லை. ஆனால் அந்த பெண் மறுத்த போது அவளை அவர் நிர்பந்தப்படுத்தவும் இல்லை.ருஷ்யாவில் லெனின் ஸ்டாலின் போன்றோர் கம்யூனிஸத்தை பரப்பியதற்கும், முஸ்லிம்கள் வெற்றி கண்ட நாடுகளில் கலீபாக்கள் இஸ்லாமைப் பரவச் செய்தத்தற்கும் இடையே உள்ள மிக முக்கியமான வேறுபாடு இது.ஓரு தத்துவம் தோற்றுப் போனதற்கும் ஒரு சமயம் வெற்றியடைந்தததற்குமான காரணத்தை கூட இந்தப் பின்னணியல் அறிந்து கொள்ளலாம்.ஓரு நிர்பந்த சூழ்நிலைக்கு உட்படுத்துவது வரை சீர்திருத்தவாதி கவனம் செலுத்த வேண்டும். ஆனால் நியாயம் இன்றி எவரையும் நிர்பந்தப்படுத்தக் கூடாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்கு எடுபிடி வேலைகள் செய்து கொண்டிருந்த ஒரு யூதச் சிறுவனுக்கு உடல்நலமில்லை என்று அறிந்தார்கள். நலம் விசாரிப்பதற்காக சிறுவனுயைட வீட்டிற்குச் சென்றார்கள். குசல விசாரிப்புகள் முடிந்த பிறகு அந்தச் சிறுவனுக்கு இஸ்லாமிய கோட்பாடுகளின் சாரம்சமாக திகழ்கிற கலிமா வாசகத்தை சொல்லிக் கொடுத்து அதைச் சொல்லும்படி சொன்னார்கள். என்ன செய்வதென்று புரியாமல் சிறுவர் திகைத்தார். தன் வீடு தேடி வந்து சுகம் விசாரித்த இஸ்லாமியத் தலைவரின் அன்புக் கட்டளைக்கு அடிபணியாமல் இருப்பது எப்படி? அப்படி அடிபணிந்து விட்டால் தந்தை என்ன சொல்வாரோ? ஏன்ற பரிதவிப்பில் தந்தையை பாhக்கிறார். தந்தை சொன்னார் மகனே! அபுல்காஸிமின் (முஹம்மதின்) வார்த்தகை;கு கட்டுப்படு! ஆச்சிறுவர் இஸ்லாமைத் தழுவினார். நுரகிலிருந்து இவரை காப்பாற்றிய இறைவனு;ககே எல்லா புகழும் என்று கூறியபடி முஹம்மது (ஸல்)அவர்கள் அங்கிருந்து திரும்பினார்கள். (புகாரி 1268)இந்தச் செய்தியும் ஒரு நல்ல விசயத்தை ஏற்றுக் கொள்ள வைப்பதில் நிர்பந்த சூழ்நிலையை உருவாக்க தயங்கத் தேவை இல்லை என்பதை உணர்ததுகிறது.ஓரு கொள்கை வாதி இப்படித்தான் இருக்க முடியும். அது தான் கொள்கை வாதிக்கான அடையாளமும் கூட. நம்மில் பலபேர் மது அருந்துவதில்லை. அதனாலேயே நாம் மதுவுக்கு எதிரான கொள்கையுள்ளவர்கள் என்று அர்த்தம் ஆகிவிடாது. காசில்லாததால், அல்லது வாய்ப்பில்லாதததால், அல்லது சமூகம் தூற்றுமே என்று பயப்படுவதால் நாம் குடிக்காதவர்களாக இருக்க வாயப்புண்டு. மது அருந்துகிற ஒருவரை நாம் தடுத்து திருத்துகிற போது அல்லது கிடைக்கிற சமயத்தை பயன்படுத்திக் கொண்டு அதைப்பறிறி பிரச்சாரம் செய்கிற போது தான் நாம் அந்தக் கொள்கையுடைவர் என்பது நிஜப்படும்.ஓரு கொள்கைவாதி அல்லது சீர்திருத்த வாதியின் அடையாளம் அந்தக் கொள்கையை நடைமுறைப் படுத்துவதற்காக ஒரு சூழ்நிலையை உருவாக்குவதில் அவர் எவ்வளவு தூரம் ஈடுபடுகிறார் என்பதை பொறுத்தும்.அதில் எந்த அளவு வெற்றி பெறுகிறார் என்பதை பொறுத்துமே அமைகிறது.என் கடமையை நான் சொல்லி விட்டேன். மற்றது உன் பாடு என்ற வாசகத்தை ஒரு சீர்திருத்தவாதி அவரது முன்னுரையின் முடிவில் சொல்லக் கூடாது. முடிவுரையின் கடைசி வரியில்தான் சொல்ல வேண்டும். ஆதுவரை அவர் முயற்சி செய்ய வேண்டும்.திருக்குர்ஆன் குடும்பத்தை சீர்திருத்துவது குறித்து பேசுகிற போது நீங்கள் உங்களையும் உங்களைச் சார்ந்தவர்களையும் நெருப்பிலிரு;து காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்ற ஒரு வாசகத்தை சொல்கிறது. (66:6)திருக்குர்ஆனிய விரிவுரையாளர்களால் மிக விரிவாக விவரிக்கப்பட்டுள்ள இந்த வசனத்தின் அமைப்பும் கருத்தும் சீர்திருத்தம் செய்ய முயற்சித்தல் என்ற களத்தின் கணபரிமாணத்தை மிகச் சரியாகவும் பக்குவமாகவும் விண்டுரைத்து விடுகிறது.ஓருவரை நெருப்பிலிருந்து காப்பாற்றுதல் என்றால் அவர் விழுந்த பிறகு காப்பாற்றுதல் என்று அதற்கு பொருளாகாது. விழுவதற்கு முன்னரே தடுத்துவிடவேண்டும். அதே போல நெருப்பில் விழப் போகிறவரைப் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு, விழாதே ! இறந்துவிடுவாய் என்று ஊதுகுழல் வைத்து உபதேசித்துக் கொண்டிருப்பது அவரைக் காப்பாற்றுவதாகாது. இதையே ஒரு பதாகையில் எழதிக் காட்டி எச்சரிக்கை செய்வதும அவரை காப்பாற்றியதாகாது. அவரது கையைப் பிடித்துத் தடுக்க முயற்சி செய்ய வேண்டும். அப்படித் தடுக்கிற போது தன்சக்தி முழவதையுமு; பிரயோகித்தால் கூட அது தவறாகிவிடாது. ஒரு பொறுப்புள்ள மனிதன் இப்படித்தான் செய்யவேண்டும்.சமூக அக்கறை குறித்த இஸ்லாத்தின் கருத்து இந்த அளவு வரை நீண்டு செல்கிறது. விட்டேத்தியான அல்லது ஒரு மேம்போக்கான வெற்று உபதேசமோ அல்லது கருத்துரையோ ஒரு முஸ்லிமின் பொறுப்புணர்வை முழமையாக பிரதிபலிபதாகாது.நீங்கள் உங்கள் குடும்பத்தை மார்க்கத்திற்காக பக்குவப்படுத்துவதில் எந்த அளவு முயற்சி செய்கிறீர்கள்? உங்களது பணியாளர்களை நெறிப்படுத்துவதில் எவ்வளவு தூரம் உங்களது செல்வாக்கை செலுத்துகிறீர்கள்? தவறு செய்பவர்களை திருத்துவதில் எந்த அளவு அக்கறை செலத்துகிறீர்கள்? சமூகத் தீமைகளுக்கு எதிரான போராட்டத்தில் எந்த அளவு பங்கு செலுத்துகிறீர்கள்? ஒரு சிறந்த சமுதாயத்தை கட்டமைப்பதில் எவ்வளவு தூரம் ஆhவம் காட்டுகிறீர்கள்கள்? அர்ப்பணிக்கப் போகிறீர்கள்? உங்களது வாழ்வில் ஒளியேற்றிய மார்க்கத்ததை உலக மக்களுக்கு வெளிச்சப்படுத்த எந்த விளக்கை ஏற்றிவைத்தீர்கள்? காசு கொடுக்காமல் கட்டுப்படுத்தி வைத்து அல்லது வசதி வாய்ப்புக்களை முடக்கி வைத்து நம்குடும்பத்தை நாம் நெறிப்படுத்த முடியாதா? ஆந்த அளவுக்கு நாம் சென்றோமா? பணியளர்களோடு பழகி, பரிசுகள் வழங்கி, சௌகரியங்கள் செய்து கொடுத்து அவர்களை பக்குவப்படுத்த முடியாதா? ஆந்த அளவுக்கு நாம் இறங்கிச் சென்றோமா? உறவுகளோ நண்பர்களோ தவறு செய்கிற போது உறவு அல்லது நட்புப் பாலத்தை நெருக்கியும் இறுக்கியும் அவர்களை வழிதிரும்பச் செய்ய முடியாதா? அந்த அளவுக்கு நாம் நகர்ந்து சென்றோமா?இந்தக் கேள்வியை நான் கேட்கவில்லை. கைவிலங்கோடு சொர்க்த்தில் நுழைபவர்களை பாhத்து அல்லாஹ் ஆச்சரியப்படுவதாக வருகிற நபி மொழி நம்மிடம் கேட்கிறது.நல்லதை சொல்வதற்கு நாகரீகத்தின் பெயரால் தயக்கம் காட்டுகிற குணத்தை கலைந்து எறிந்து விட்டால் நம்மால் நேர்வழி பெற்றவர் ஒருவர் சொர்க்கத்துக்குள் பாதம் பதிக்கிற காட்சியைப் பார்க்கிற போது அல்லாஹ் மட்டுமல்ல நாமும் மகிழ்ச்சியடைலா.

2 comments:

alim-blog said...

wow very nice

Hudhansa said...

Masha Allah ........ wonderful research about social service ..... May Allah gives more and more