ஈதுல் அள்ஹா எனும் சொல்லை அப்படியே மொழிபெயர்ப்பதாக இருந்தால் இறைவனுக்காக அறுத்துப் பலியிடும் பெருநாள் என்று தான் சொல்ல வேண்டும்। ஆனால் அதை ஹஜ்ஜுப் பெருநாள் என்று அழைப்பது தான் தமிழ் மக்களின் மரபு. பக்ரீத் என்ற உருதுச் சொல் கிட்டதட்ட ஈதுல் அள்ஹா எனும் வார்த்தையின் மொழி பெயர்ப்பாக அமைந்துள்ளது.
இன்றைய தினங்களில் இந்தியாவிலிருந்து சென்ற ஒருலட்சத்து ஐம்பததி ஏழாயிரம் முஸ்லிம்கள் உட்பட உலகம் முழவதிலிருமிருந்து முப்பது லட்சம் முஸ்லிம்கள் தங்களது இலட்சியக் கடமையை நிறைவேற்றியிரக்கிறார்ள்। அதன் காரணமாக இந்தப் பெருநாள் ஹஜ்{ப் பெருநாள் என்ற பெயருக்கு உரியதாகியிருக்கிறது. ஹஜ்ஜு முடிந்தபின் வருகிற பெருநாள் என்பதால் ஹஜ்ஜுப் பெருநாள் என்றும் குர்பானி எனும் வணக்கம் நிறைவேற்றப்படுவதால் இதுல் அள்ஹா எனறும் இந்தப் பெருநாள் அழைக்கப்படுகிறது. ஹஜ் குர்பானி என்ற இரண்டு வணக்கங்களும் இறை நம்பிக்கையாளர்களின் தியாக உள்ளத்தை வெளிப்படுத்துவதால் இந்தப் பெருநாளை தியாகத் திருநாள் என்றும் சிறப்பித்துச் சொல்லப்படுவதுண்டு.
கீழக்கரையில் நடைபெற்ற தமிழ் இலக்கிய மாநாட்டில் பேசிய பெண் மருத்துவர் ஒருவர் ஒரு தகவலை சொன்னார். அவர் வட இந்தியாவின் பனாரஸ் நகரத்திலுள்ள மருத்துவ கல்லுலூpயில் மருத்துவர் பட்டம் பெற்றவர். பனாரஸ் நகரம் பட்டுத்துணி நெசவுக்கு பெயர் பெற்ற நகரம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அங்கு நெசவுத் தொழில் செய்வதில் கனிசமான அளவு முஸ்லிம்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்தப் பேச்சாளர் சொன்னார். ஒரு சமயம் முஸ்லிம்களின் நெசவுப் பேட்டையை சுற்றிப் பார்ப்பதற்காக சென்றிருந்தேன். இளம் பெண்களில் பலர் அந்த வேலையை செய்து கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒவ்வொருவருடைய பட்டுத் தறிகளுக்கு பக்கத்திலும் ஒரு உண்டியல் இருந்தது. திருமணத்திற்கு பணம் சேர்க்கிறார்கள் என்று நினைத்துக்கொண்ட நான், அதைப்பற்றி விசாரித்த போது ஆச்சரியமான ஒரு பதிலை அந்தப்பெண்கள் சொன்னார்கள். அவர்கள் திருமணத்திற்காக அதில் பணம் சேர்க்க வில்லையாம். புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக அந்த உணடியலில் சேமிக்கிறார்களாம். ஆதிலும் குறிப்பாக திருமணமாவததற்கு முன்பாகவே ஹஜ் கடமையை நிறைவேற்றிவிட வேண்டும் என்று அந்தப்பெண்கள் நினைக்கிறார்கள் என்று அந்தப் பெண் மருத்துவர் சொன்னார்.
இந்தச் செய்தியை கேட்டதும் ஒரு கணம் உள்ளம் நெகிழ்ந்து உடல் சிலிர்த்தது. ஆனாலும் அந்தச் செய்தி அதிக ஆச்சரியமானதாக தோன்றவில்லை. ஏனெனில் இப்போது புனித மக்கா நகரில் குழுமியிருக்கிற லட்சக்கணக்கான மக்களில் பெரும்பாலோரிடத்தில் இது போன்ற உணர்ச்சிவுமிகுந்த செய்திகள் ஏராளம் இருக்கும். ஏனெனில் ஹஜ் என்பது ஆசை முயற்சி அர்ப்பணிப்பு தியாகம் உள்ளத்துணிவு சகிப்புத்தன்மை பொறுமை பக்தி என ஏராளமமான மனித உணர்வுகNளூடு தொடர்புடையது. இந்த உணர்வுகள் ஒவ்வொன்றும் தனித்தனியாகவே மனிதர்களிடம் அலாதியான செயல்பாடுகளை உண்டுபண்ணக் கூடியவை. இந்த உணர்வுகளி;ன ஒட்டுமொத்த வடிவமமாக ஹஜ் அமைந்திருககிறது எனும் போது அதில் அதில் அற்புதமும் ஆச்சரியமுமமான பல செய்திகள் உள்ளடங்கியிருப்பதில் வியப்பதற்கு எதுவுமில்லை.
கி.மு. முன்றாம் நூற்றாண்ழல் வாழ்ந்த இறைத்தூதர் இபுறாகீம் (அலை) அவர்களது தியாகமயமான வாழ்வு தான் புனித ஹஜ் கடமைக்கான ஆதாரச்செய்தி. அவரது தியாகத்துக்கு நிகராக சொல்ல முழயாவிட்டாலும் புனித மக்காவில் வந்து கூடும் ஒவ்வொரு வரிடமும் ஒவ்வொரு வகையான தியாகமும் அர்ப்பணிப்பு உணர்வும் சுடர்விடுவதை காணலலம்.
மிகச்சிலர் இந்த கடமையை அதிகம் சிரமின்றி நிறைவேற்றினாலும் கூட பலர் வாழ் நாள் முழுவதும் சேர்த்துiவைத்த பணத்தை கொண்டு இந்தக்கடமையை நிறைவேற்றுகிறார்கள். இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் வசிக்கிற நண்பர் ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன்னாள் சொன்ன ஒரு செய்தி இன்றும் பசுமையாக நினைவிலிருக்கிறது.
ஜகார்த்தாவில் அவர் வழமையாக உணவருந்தச் செல்லும் உணவகத்தை ஒரு தம்பதியினர் நடத்திக் கொண்டிருந்தனர். இருவரில் ஒருவர் கல்லாவில் இருப்பார். மற்றவர் விருந்தினர்களை கவனித்துக் கொண்டிருப்பார். ஒரு முறை நண்பர் நீண்ட விடுமுறையில் இந்தியாவுக்கு வந்து விட்டு திரும்பிய போது மீண்டும் அந்தக்கடைக்கு சென்றுள்ளார்.அப்போது அவருக்கு ஒரு வித்தியாசம் தெரிந்தது. தம்பதியர் இருவரும் கடையில் வேலை செய்து கொண்டிருந்தனர். கல்லாவில் புதிதாக ஒருவர் உட்;கார்ந்திருந்தார். நண்பர் அந்தக் கணவரை அணுகி, கல்லாவில் உட்கார்ந்திருப்பவர் யார் என்று கேட்டிருக்கிறார். அவர் தான் இப்பொது இந்தக கடையின் முதலாளி என்று அவர் பதில் சொல்லியிருக்கிறார். நண்பர் அதிர்சியுற்று இரக்கததோடு ஏன்? என்வாயிற்று? என்று காரணம் விசாரித்த போது அந்த கணவர் மகிழ்ச்சியோடு, நானும் என் மனைவியும் ஹஜ்ஜு செய்ய வேண்டும் என்று நினைத்தோம் கடையை இவருக்கு விற்றுவிட்டு கடந்த வருடம் அல்லாஹ்வின் கிருபையால் ஹஜ் கடைமையை நிறைவேற்றினோம். திரும்பிய பிறகு இவரிடமே வந்து வேலை செய்கிறோம் என்று சொன்னார்களாம். இந்தச் செய்தி சொன்ன நண்பர் மேலும் சொனனார்.நான் அந்தக்கணவரின் முகத்தையும் அவரது மனைவியின் முகத்தையும் பார்த்தேன் அதில் ஹஜ்ஜை நிறைவேற்றி விட்டோம் என்ற பெருமிதமும் மகிழ்ச்சியமு; தெரிந்தததே தவிர தங்களது வாழ்வாதாரமாக திகழ்ந்த கடையை விற்றுவிட்டேடோமே என்ற கவலையின் ரேகைகள் அதில் அறவே தென்படவில்லை.
வசதியற்றவர்களுக்கு பணம் ஒரு பிரச்சினை. வசதி படைத்தவர்களுக்கு பணப்பிரச்சினை குறைவு தான் என்றாலும் வசதியானவர்களும் ஏழைகளும் பொதுவாக அனுபவிக்கும் உடல் ரீதியான சிரமங்களும் ஹஜ்ஜில நிறைய உண்டு. எது எப்பழ இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டு ஹஜ் நிறைவேறுகிற சமயத்தில் உள்ளங்கை நெல்லிக்கனி என தெரியவரும் ஒரு உண்மை இருக்கிறது.
பல மில்லியன் டாலர்கள் இந்தக் கடமைக்காக செலவு செய்யப்பட்டாலும் கூட ஹஜ்;{க்கு செலவு செய்ததனால் ஒருவர் ஏழையாகிவிட்டார் என்ற செய்தியை ஒரு போது;ம் உலகம் கேள்விப்பட்டதில்லை. மருத்துவத்திற்கு செலவு செய்து நொடிந்து போனவர்கள் உண்டு. மக்களின் திருமணத்திற்கு செலவு செய்து ஏழையானோர் உண்டு. வீண் கேளிக்கைகளுக்கு வாரியிறைத்து வறியவரானோர் உண்டு. ஆனால் பல ஆயிரங்களை ஓரே நேரத்தில் ஹஜ் கடைமை நிறைவேற்று வதவற்காக செலவு செய்த போதும் அதன் காரணமாக பொருளாரத்தில் வறுமையை சந்தித்தார் என ஒருவரை கூட வரலாறு சந்தித்ததில்லை.
அதே போல நீண்ட பயணம், தாங்கிக் கொள்ள முடியதா வேறுபட்ட பருவச்சூழ்நிலை, நெருக்கியடிக்கும் மக்கள் கூட்டம் என பல வகையான அசௌகரியங்களை மக்கள் அங்கே சந்திக்கிறார்கள் என்ற போதும் பெரிய அளவில் உடல் நலக்குறைவும் ஆபத்துகளும் ஏற்படுவதில்லை. எப்போதாவது நிகழ்கிற ஆபத்துக்கள் கூட மக்கள் தாங்களாகவே வரவழைத்துக் கொள்வதாகத்தான் பெரும்பாலும் அமைகின்றன.
இஸ்லாமிய கடமைகளில் உடலால் செய்யப்படுகிற கடமைகளாக தொழுகையும் நோன்பும் இருக்கின்றன. பொருளால் செய்யப்hடுகிற வணக்கங்களாக ஜகாத்தும் குர்பானியும் இருக்கின்றன. ஹஜ் கடமை மட்டும் உடலாலும் பொருளாலும் இணைத்துச் செய்யப்படுகிற கடமையாக இருக்கிறது. எனவே இதில் உடல் ரீதியாகவும் பொருள் ரீதியாகவும் பல அசௌகரியங்கள் ஏற்பட்டாலும் அதனால் மக்கள் நொந்து போவதில்லை. நொடிந்து போவதுமில்லை.
நபி இபுறாகீம் (அலை) அவர்கள் கஃபா எனும் அந்த முதல் இறையாலயத்தை கட்ழ முடித்த போது இறைவன் அவருக்கு ஒரு கட்டளையிட்டான். அந்தக் கட்டளையில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் கவனத்திற்குரியவை.
மக்களை ஹஜ் செய்வதற்காக இங்கு வரும்படி அழையுங்கள். அவர்கள் கால் நடையாகவும் மெலிந்த ஒட்டகைகளின் மீது சவாரி செய்து வெகு தூரத்திலிருந்தும் இங்கு வருவார்கள். தங்களுக்கு பயன்மிக்க பல நன்மைகளை இங்கு அவர்கள் பெற்றுக்கொள்வார்கள். என்பது அந்த வசணத்தின் கருத்து.
இங்கு வருவோர் நன்மைகளை பெறுவர் என்பது இறைவனின் வாக்குறதியாக இருக்கும் போது நஷ்டமோ கஷ்டமோ எப்படி நமது பக்கத்தில் வர முடியும் ஏன்பது தான் லட்சக்கணக்கான முஸ்லிம்களின் துணிவுக்கு காரணம்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒரு பொன்மொழி முஸ்லிம்களை மேலும் ஊக்கப்படுத்துகிறது.
நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிற ஒரு ஹதீஸ் நஸஈ என்ற தொகுப்பில் வருகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
ஹஜ்ஜையும் உம்ராவையும் ஒன்றை தொடர்ந்து ஒன்றை நிறைவு செயயுங்கள். தங்கம், வெள்ளி, இரும்பு ஆகிய உலோககங்களில் படிந்திருக்கும் கறையை நெருப்பு அகற்றுவது போல ஹஜ்ஜும் உம்ராவும் ஏழ்மையையும் பாவத்தையும் அழித்;து விடுகின்றன என்றார்கள்.
ஹஜ்ஜுக்காக செலவு செய்தால் நஷ்டம் ஏற்படாது என்ற செய்திக்குப்பினனே ஒரு ஆழிய தத்தவம் இருக்கிறது.
இறைவனுக்காக இறைவழியில் செய்யப்படுகிற எந்த அர்ப்பணிப்பும் அர்த்ம் அற்றுப் போய்விடுவதில்லை. அந்த அர்ப்பணிப்புகளால் இழப்புகள் ஏற்படுவதில்லை. நன்மைகள் தான் பெருகும். எதுவும் குறைந்து விடுவதில்லை மாற்றமாக எல்லாம் நிறைகிறது. அந்த நிறைவும் சாதாரண நிறைவல்ல சாதனை நிறைவாக இருக்கும் என்பது புனித ஹஜ் நமக்கு வழங்கும் அற்புதச் செய்தியாகும்.
இ;றை தினங்களில் மக்கா நகரில் கூடியிருக்கிற லட்சக்கணக்கான ஹாஜிகள் செய்கிற லப்பைக் அல்லாஹும்ம லப்பைக் என்கிற முழக்கம் அரபகத்தின் ஆகாய வெளியை அதிர வைத்துக்கொண்ழருக்கிறது. லப்பைக் என்ற இந்த கோஷம் வித்தியாசமான ஒரு முழக்கமாகும். இறைவா இதோ வந்து விட்டேன் என்பது அந்த வாசகத்தின் பொருள். இந்த வித்தியாசமா கோஷத்தின் பின்னணி என்ன என்பதை நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
நபி இபுறாகீம் (அலை) அவர்கள் கஃபாவை கட்டி முடித்ததும் இறைவன் அவருக்கு ஒரு உத்தரவை சொன்னான். மக்களை இங்;கு இறைவனை வணங்க வரும்பழ அழைப்புக்கொடுங்கள் என்று அல்லாஹ் சொன்னான். இபுறாகீம் (அலை) அவர்கள் யோசித்தார்கள. அல்லாஹ்விடம் கேட்டார்கள். இறைவா உரத்து சப்தமிட்டு அழைக்க இங்கு பக்கத்தில் யாரும் இல்லையே ஆள் ஆராவாரமே இல்லாத இந்தப் பாலைவனத்தில் நின்று கொண்டு அழைப்புக் கொடுத்தால் அது தூரத்தில் வாழ்வோர் காதுகளில் எப்பழ கேட்கும் என்று கேட்டார். அல்லாஹ் சொன்னான்.அழைப்பு விடுப்பது மட்டுமே உமது பொறுப்பு அதை சேர்க்க வேண்ழய இடத்தில் சேர்ப்பது என் வேலை என்று அவருக்கு சொன்னான். அதன் பிறகு அங்கிருந்த அபீ குபைஸ் என்ற மலைமீது ஏறி நின்று கொண்ட இபுறாகீம் (அலை) அவர்கள் உரத்த குரலில், மக்களே உங்களது இறைவன் தனக்கென ஒரு ஆலயத்தை அமைத்திருக்கிறான். இங்கு வந்து ஹஜ் செய்வதை உங்கள் மீது கடமையாக்கி இருக்கிறான். ஏல்லோரும் உங்கள் இறைவனின் கட்டளையை நிறைவேற்ற இங்கு வருகை தாருங்கள் 'என அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பின் ஒலி யை உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் கேட்டார்கள். அந்த நேரத்தில் உயிர் வார்;ந்தவர்கள் மட்டுமல்ல உலக இறுதி நாள் வரை வாழப்போகிற மக்களில் யாருடைய செவிகளுக்கு அந்தச் செதியை கொண்டு சேர்க்க நினைத்தானோ அவர்கள் அனைவரும் கேட்டனர். வாருங்கள் என இபுறாகீம் (அலை) அவர்கள் அழை;த்த போது வருகிறேன் என யாரெல்லாம் பதில் சொன்னார்களோ அவர்கள் தான் உலகில் ஹஜ் செய்கிற வாய்பை பெறுகிறார்கள். அந்த வாய்பை பெற்று கஃபாவை கண்ணால் பார்க்கிற பாக்கியத்தை பெறுகிற போது ஹாஜிகளின் நாவிலிருந்து அந்த பழைய பதில் வாக்கியத்தை மீண்டும் வெளிப்படுத்தகிறார்கள். லப்பைக் அல்லாஹும்ம லப்பைக் வந்து விட்டேன் இறைவா இதோ வந்து விட்டேன என்று முழுக்கம் செய்கிறார்கள்.
அன்றொரு நாள் யாருமற்ற பாலையில் அல்லாஹ்விற்காக நபி இபுறாகீம் (அலை) அவர்கள் விடுத்த அழைப்பிற்கு இன்று போல் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மக்கள் உலகின் மூலைமுடுக்குகளிலிருந்தெல்லாம் வந்து திரண்டு வான் அதிர முழங்குகிறார்கள்.
இறைவனுக்காக இறைவன் பாதையில் செலவிடப்படுவது அர்ப்பணிக்கப்டுவது ஒரு மூச்சுக்காற்றாக இருந்தாலும் அது எத்தகைய வலிமைமிக்க மரியாதையை பெற்று விடுகிறது என்பதை இந்த பேகாஷம் உணர்த்துகிறது.
இது போலவே புனித ஹஜ்ஜினுடைய ஒவ்வொரு செயல்களும் ஹாஜிகளுடைய ஒவ்வொரு அனுபவங்களும் இறைவனுக்காக அர்ப்பணித்தல் என்ற பக்தியுணாவை மீண்டும் மீண்டும் நமக்குள் பூக்கவைக்கின்றன. ஆந்த உணர்வு நமக்குத் தருகிற அல்லது தரவேண்டிய பக்குவம் எதுவென்றால் அல்லாஹ்விற்காக என்று நாம் செய்கிற எந்த நல்ல செயலும் நமக்கு இழப்பை ஏற்படுத்தாது வளத்தை தரும். அதே போல எந்த ஒரு செயலும் அது ஒரு சிறு செயலானாலும் கூட அல்லாஹிற்காக என்ற எண்ணத்தோடு செய்யப்படுமானால் அது நமது கற்பனை;கு கூட எட்டதாத அளவு வெற்றி பெறும். ஆந்த வெற்றி நமது வாழநாளில் மடடுமல்ல அதையும் கடந்து வரலாற்றில் வாழும் என்று செய்தி ஹஜ்ஜுப் பெருநாள் நமக்குத் தருகிற செய்தியாகும்.
இத்தைகய உயர்நத பண்பாட்டின் பாட்டையில் வார்த்தெடுக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயம் பல சந்தர்ப்பங்களில் ஆசாபாசங்களுக்கு அடிமைப்பட்டு பட்டத்தை புகழையும் பெரிதென்று கருதுகிற மனப் போக்கிற்கு ஆளாகிவிகிறது. அறிஞர்களில் தொடங்கி சாமாண்யன் வரை அனைவரும் இந்த ஆபாத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்.
பணம் பதவி புகழ் மயக்கத்தில் விழுந்து கிடக்கிற சமதாயத்திற்கு சரியான வெற்றியை சரியான வாழ்கையை அவ்வபபோது சுட்டடிக்காட்டு வேணடியிருக்கிறது. ஆதை சுட்டிக்காட்டவே ஆண்டு தோறும் ஹஜ்ஜுப் பெருநாள் வரகிறது.
ஈத் என்ற அரபி வார்த்தைக்கு திரும்ப திரும்ப வருதல் என்று பொருள். ஹஜ்ஜுப் பெருநாள் திரும்ப திருமப வந்து நமக்கு வாழ்கை வண்டி பயணிக்க வேண்டிய சரியான திசையை கைகாட்டிச் செல்கிறது.
அல்லாஹு அக்பர். ஆல்லாஹ் மிகப்பெரியவன். அல்லாஹு அக்பர். அல்லாஹ் மிகப்பெரியவன். இது நாவால் முழங்கப்படுவதோடு சிந்தித்தும் உணரப்படவேண்டும்.
1 comment:
தமிழ் பேசும் நிலமெல்லாம் பயன்பெற தரமான உரைகளை வழங்கும் தங்களுக்கு நன்றி எமது பதிவில் நனறியுடன் இணைத்திருக்கிறோம்
தமிழ் இஸ்லாம் அரங்கம்
Post a Comment