ரபீஉல் அவ்வல் என்ற வார்த்தைக்கு முதல் வசந்தம் என்று பொருள். ஹிஜ்ரீ ஆண்டின் மூன்றாம் மாதத்திற்கு ரபீஉல் அவ்வல் என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்கு பொருத்தமான காரணங்கள் கிடைக்காமல் போகலாம். ஆனால் முஸ்லிம்களை கேட்டால் இது போல ஒரு பொருத்தம் இன்னொன்னறில் இல்லை என்பார்கள். மானுட வசந்தத்தின் மாசுமறுவற்ற உதாரணமாக வாழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்; ரபீஉல் அவ்வல் மாதத்தில் பிறந்தார்கள் என்பதால், சுட்டெறிக்கும் கோடையில் வந்தாலும் சரி வாட்டிவதைக்கும் கூதலில் வந்தாலும் சரி முஸ்லிம்களைப் பொருத்ததவரை ரபீஉல் அவ்வல் பிறந்து விட்டால் அது வசந்த காலம் தான். வரலாறு ஆச்சரியத் தோரணம்கட்டி வரவேற்ற அந்தப் புனிதப்பிறப்பின் புகழ்பாடல்கள் பள்ளிகள் தோறும் ஓதப்படும். மேடைகள் தோறும் ஒலிக்கப்படும். மீலாது விழாக்களும் கந்தூரி வைபவங்களும் கணக்கின்றி நடைபெறும். சிக்கலான இன்றைய கால கட்டத்தில் அனைத்து வகையான மகிழ்ச்சிக்கும் நடுவே முஸ்லிம் சமுதாயம் ஒரு உண்மைய கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. முன்னெப்போதையும் விட அதிகமாக முஹம்மது என்பவர் யார் என்று அறிந்து கொள்ள உலகின் முக்கால் பங்கு மக்கள் இப்போது முயன்று கொண்டிருக்கிறார்கள். தினசரி வாசிக்கப்படும் பரபரப்பான பல செய்திகளுக்கும் பின்னே முஹம்மது என்ற மந்திரச்சொல் காரணமாக இருப்பதாக பலரும் நம்புகிறார்கள். அதன் விளைவாக யார் அந்த முஹம்மது என்ற கேள்வி எழுவது தவிர்க்க இயலாத விசயமாகிவிட்டது. எனவே முஹம்மது எனும் சொல் இன்றைய உலகின் பிரதான தேடலாகிவிட்டது. இணைய தளத்தில் விசயங்களை தேடி எடுத்துத்துத் தரும் தேடல் இயந்திரங்கள் சோர்ந்து போகும் அளவு அந்தத் தேடல் உலகின் தாகமாகியிருக்கிறது. அத்தைகயை பெருமானார் முஹம்மது(ஸல்) அவர்களை வரலாறு அறிமுகப்படுத்தும் விதம் ஒரு மாதிரி இருக்கிறது. முஸ்லிம் சமதாயம் அடையாளப்டுத்தும் விதம் வேறு மாதிரி இருக்கிறது. வரலாறு மிகச்சரியாக அறிமுகப்படுத்துகிறது. இந்த பூமயில் பாதம் பதித்;தவர்களில் முஹம்மது நபியைப்போல் இன்னொருவர் பிறக்கவில்லை. இனி பிறக்கப்போவதுமில்iலை. மனித சமூகத்தின் மீது மகத்தான செல்வாக்கை செலுத்தும் ஆற்றல் பெற்ற தலைவர் முஹம்மது (ஸல்) அவர்களைப் போல இன்னொhருவர் கிடையாது என்று வரலாறு அறிமுகப்படுத்துகிறது. ஜான் வில்லியம் தராப்பர் (துழாn றுடைடயைஅ னுசயிநச) அவருடைய புகழ் பெற்ற ஐரோப்பாவில் அறிவு வளர்ச்சியின் வரலாறு என்ற நூலில் முஹம்மது மனித இனத்தின் மீது மகத்தான ஆதிக்கத்தை செலுத்தும் அதிகாரம் படைத்தவராக இருந்தார் என்று குறிப்பட்டுகிறார். மிகப் புகழ் பெற்ற வரலாற்றாசிரியர் ஸ்டான்லீ லேன் பூல் வெற்றியாளர்களின் வரலாற்றுப் பதிவேடுகள் அனைத்திலும் இவருக்கு நிகராக பெருஞ்சாதனை படைத்தவர் வேறு எவுரும் இல்லை என்று குறிப்பிடுகிறாh . இன்றைய மனித சமூகத்தின் வளர்ச்சி எந்த அளவு பிரம்மாண்டமானதோ அதை விட முஹம்மது (ஸல்)அவர்களின் செல்வாக்கு புகழும் பிரம்மாண்டமானது. உலக வரலாற்றில் மனித குலத்தின் மீது அளப்பரிய செல்வாக்கு செலுத்தியவர்களில் 100 நபர்களை வரிசைப்படுத்திய மைக்கேல் ஹார்ட் என்ற அமெரிக்க அறிஞர் அதில் முதலிடத்தை பெருமானார் (ஸல்) அவர்களுக்கு வழங்கயிருக்கிறார் என்பது இன்றைக்கு பழைய செய்தியாக இருக்கலாம். அத்தொடரில் இரண்டாவது இடத்தை ஐசக் நியூட்டனுக்கு அவர் வழங்கியுள்ளார். அதற்கு அவர் கூறும் காரணம் கவனிக் கத்தக்கது. மனித குலத்தின் இன்றைய வியத்தகு முன்னேற்றங்கள் அனைத்துக்குமு; நியூட்டனின் கண்டுபிடிப்புகளே அடிப்படை காரணமாக அமைந்தது எனவே தான் அவருக்கு இரண்டாவது இடத்தை வழங்குகிறேன் என்று ஹார்ட் கூறுகிறார்.மனித குலத்தின் இன்றைய மகா பிரம்மாண்டமான அறிவியல் வளாச்சிக்கு காரணமாக அமைந்த நியூட்டனைவிட முஹம்மது (ஸல்) அவர்கள் முதன்மைமப்படுத்தப் பட்டிருக்கிறார்கள் என்றால் முஹம்மது (ஸல்) அவர்களின் செல்வாக்கு இந்த உலகின் பிரம்மாண்டமான வளர்ச்சியை விட உயர்ந்தது என்ற கருத்தோட்டம் அதில் ஊள்ளோடிக் கொண்டிருப்பது கவனிக்கத்தக்க ஒரு செய்தியாகும். நபிகள் நாயகத்தின் வரலாறு எவரையும் ஆச்சரியப்படுத்தக் கூடியது. சமய மதிப்புருவை கடந்து அவரது சாமாண்ய மனித அடையாளத்தை நெருங்கிப்பார்க்கும் எவரும் பிரம்மமிப்படையாமலிருக்க முடியாது. மைசூர் மகளிர் பல்கலையின் தத்துவத் துறை தலைவர் பேராசிரியர் ராமகிருஷ்னா ராவ் முஹம்மது (ஸல்) அவர்களின் ஆளுமையின் முழப்பரிமாணத்தை விளங்கிக் கொள்வது சிரமமானதே! ஏன்று கூறுகிறார்.வரலாற்று நாயகர்களாக அடையாளப்படுத்தப்படும் தலைவர்கள் பலர் அவர்களது வாழ்நாளிலே மதிப்பிழந்து போயிருக்கிறார்கள். சிலருக்கு இறந்த பிறகு தான் மதிப்பு கிடைத்திருக்கிறது. சிலர் கால வெள்ளத்தில் கரைந்து போய் விட்டார்கள். வாழும் போது புகழ் பெற்ற சிலர் காலப் போக்கில் புழதிவாரி தூற்றப்பட்டிருக்கிறார்கள். 25 ஆண்டகளுக்கு முன்பு ரஷ்ய சர்வாதிகாரி லெனினுக்கு கிடைத்த மரியாதை எத்தகையது? பகுத்தறிவ வாதிகளான கம்யூனிஸ்ட்டுகள் அவரது பிணத்தை கூட பாதுகாத்து வைத்தனர். ஆனால் பிற்கால வரலாற்றின் போக்கில் ஏற்பட்ட மாற்றம் தான் எவ்ளவு ஆச்சரியமானது? ஆதே ரஷ்யர்கள் அவரது சிலையை கூட ஆக்ரோஷத்தோடு சின்னாபின்னப்படுத்தினரே! ஹிட்லரும் முசொலினியும் தத்தமது வாழ்நாளில் பெற்ற செல்வாக்கு எத்தகையது? பின்னால் அவர்களுக்கு கிடைத்த மரியாதை எப்படியிருந்தது? சாக்ரடீஸ் அவர் வாழ்ந்த காலத்தில் என்ன மரியாதையை பெற்றார்? தன்னுடைய கடைசி காலத்தில் மிகப்பிரபலமாக இருந்த ரஷ்ய தத்துவ ஞானி லியோ டால்ஸ்டாய் மனைவிக்கு பயந்து வீட்டை விட்டு ஓடினார் எனபது தான் வரலாறு. முஹம்மது (ஸல்)அவர்கள் அவருடைய சமகாலத்து மக்களால் பெரிதும் போற்றப்பட்டார்கள்.அம்மக்களிடம் அளப்பெரிய செல்வாக்கைப் பெற்றிருந்தார்கள். ஹிஜ்ரீ ஆறாம் அண்டு ஹுதைபிய்யாவின் முற்றத்தில் அமர்ந்நதிருந்த பெருமானார் (ஸல்)அவர்களிடம் மக்கா குறைஷிகளின் தரப்பில் தூது பேசுவதற்காக வந்த பலரில் உர்வா பின் மஸ்வூது அத்தகபீயும் ஒருவர். பெருமானாரை சந்தித்து வெகு ராஜ தந்திரத்தோடு உரையாடிய அவர் குறைஷியரிடம் திரும்பச் சென்று கூறிய வார்த்தைகள் சத்திய ஆழம் மிகுந்தவை. என் சமுதாயத்தாரே! நான் பல அரசர்களிடம் தூதுக் குழுவில் ஒருவனாகச் சென்றுள்ளேன். (உரோம மன்னன்) சீசரிடமும் (பாரசீக மன்னன்) கிஸ்ராவிடமும் (அபிசீனிய மன்னன்) நஜ்ஜாசியிடமும் தூதுக் குழுவில் சென்றுள்ளேன். அல்லாஹ்வின் மீதாணையாக முஹம்மதின் தோழர்கள் முஹம்மதுக்கு அளிக்கின்ற கண்ணியத்தைப் போல் எந்த அரசருக்கும் அவரது தோழர்கள் கண்ணியம் அளிப்பதை நான் பார்த்ததே யில்லை. என்று உர்வா கூறினார். (ஸஹீஹுல் புகாரி - 2734)முஹம்மது (ஸல்) அவர்களது செல்வாக்கு சர்வாதி காரத்தன்மையின் எச்சமல்ல. அப்படி இருந்திருந்தால் ஹிட்லரைப் போல லெனினைப் போல அவரும் பின்னாட்களில் ஏச்சுக்கு ஆளாகி யிருந்திரப்பார்.அவரது செல்லாக்கு தத்துவார்த்தமானது மட்டுமல்ல. நடைமுறையில் செல்லுபடியாகக் கூடியது. அவரது வார்த்தைகள் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு மனித நடைமுறையில் என்ன செல்வாக்கை பெற்றிருந்தோ அதே செல்வாக்கை இன்றைக்கும் பெற்றிருக்கின்றன.முந்தைய இறைத்தூதர்கள் உட்பட வேறெந்த தலைவருக்கும் இத்தகைய பிரம்மிப்பூட்டுகிற செல்வாக்கு கிடையாது.அவரது செல்வாக்கு குறைவுடையது அல்ல முழு சமூகத்தையும் அது வியாபித்திருந்தது. இன்றும் வியாபித்திருக்கிறது. அவரது மனைவியரும் அவரது நெருங்கிய உறவுகளும் நண்பர்களும் ஏன் எதிரிகளும் கூட அவர் மீது பெரும் மரியாதையை வைத்திருந்தனர். இன்றளவும் அந்த மரியாதை பாதுகாhக்கப்பட்டு வருகிறது. ஒரு அனாதைச் சிறுவராக மக்காவில் தொடங்குகிற அவரது வாழ்கை மனித சமூகத்தின் சரித்திரத்தின் சிகரத்தை தொட்ட வரலாராக வடிவம் பெற்றதென்றால் அதன் பின்னணியில் உள்ள நிகழ்வுகள் விறுவிறுப்பும் உணர்வெழுச்சியும் மிகுந்தவை.பெருமானாரின் செல்வாக்கிற்கு ஆதிக்கமோ, படைபலமோ, பணபலமோ காரணம் அல்ல அவரது மனிதநேயப் பண்புகளே காரணம். அடிக்கோடிடிட்டு கவனிக்க வேண்டிய விசயம் இது. வரலாறும் இந்த உண்மைய புரிந்து தான் வைத்திருக்கிறது. தத்துவ இயல் அறிஞர் ராம கிருஷ்னா ராவ் மிக அருமையாக சொன்னார். வாள் முனையின் ஒரு சிறு அசைவு கூட இல்லாமல் முஹம்மதுவின் குணஇயல்பே அவரது வாழ்கை பெரும் வெற்றியடையக் காரணமாக அமைந்திருந்தது. வரலாற்று ஆய்வாளரைவிட ஒரு தத்துவ அறிஞர் தான் இதைச் சொல்வதற்கு மிகப் பொருத்தமானவர்.திருக்குர்ஆன் பெருமானாhரது ஆற்றலை பாராட்டுலதை விட அவரது பண்பையே பிரமாதப்படுத்தி கூறியிருக்கிறது. தாவூத் நபியின் ஆற்றல் சுலைமான் நபியின் ஆதிக்கம் மூஸா நபியின் துணிவு இபுறாகீம் நபியின் அர்ப்பணிப்பு ஆகியவை திருக்குர்ஆனில் பாராட்டப் பட்டிருக்கின்றன. முஹம்மது (ஸல்) அவர்களிடம் அனைத்து இறைத்தூதர்களின் அருங்ணங்களும் ஒருங்கே அமையப் பெற்றிருந்த போதும் இறைவன் அவரை அவரது பண்பாட்டை குறிப்பிட்டு பிரம்மாண்டப் படுத்துகிறான். நீர் மகத்தான குண இயல்பை கொண்டிருக்கிறீர் என அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன்68.4) இந்த வசனத்தில் கையாளப்பட்டள்ள அழீம் என்ற வார்த்தை குணம் என்ற பொருள் கொண்ட குல்கு என்ற சொல்லுடன் சாதாரணமாக இணைக்கப்டுவதில்லை. அல்குல்குல் மஹ்முத் புகழுக்குரிய குண இயல்பு என்று சொல்லப்டுவதுதான் இயல்பு. அந்த சொல்லாக்கத்தை விடுத்து மகத்தான என்ற பொருள் தரும் அழீம் எனும் சொல்லை இறைவன் பயன்படுத்திருப்பது நபிகள் நாயகத்தின் குணச்சிறப்பின் சிகரத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. என திருமறை விரிவுரையாளர் குர்துபி குறிப்பிடுகிறார். மானுடத்தின் உச்ச பட்சமான உயரிய குண நலன்கள் அவரிடம் வெளிப்பட்டன. அவர் குறித்து ஆதாரப்பூர்வமாக கிடைத்துள்ள பன்னூற்றுக்கணக்கான தகவல்களில் ஒரு சில தகவல்கள் மட்டுமே இந்த உண்மையை அறிந்து கொள்ள போதுமானவை. முஹம்மது (ஸல்) அவர்கள் தன்னுடைய கையால் எந்த ஒரு பெண்iணையும் பணியாளரையும் அடித்ததில்லை என்று அவருடைய மனைவி ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல் முஸ்லிம் 4296) இந்த ஒரு விசயத்தை மட்டுமே ஒரு ஐந்து நிமிடம் சிநத்தித்துப் பார்த்தால் ஒரு மகத்தான மனிதரின் தோற்றம் நம் மனக் கண்ணில் விரியும். எங்கிருந்தாலும் இறைவனை பயந்து கொள்ளுங்கள். தீமைக்கு பதிலாக நன்மையை செய்யுங்கள் அது தீiமைய அழித்துவிடும். மக்களிடம் நற்குணத்தோடு நடந்து கொள்ளுங்கள் என்று அவர் தன்னுடைய தோழர்களுக்கு சொன்னார் நபித்தோழர் அபூதர் (ரலி) அறிவிக்கிறார் (திர்மிதி -1910) இந்த அறிவுரை நபிகளாரது வாழ்வு முழவதிலும் அவர் கையாண்ட வாழ்வியல் கோட்பாடாகவே இருந்தது. இறைவன் மீது ஆணையாக. எவருடைய பக்கத்து வீட்டுக்காரார் பாதுகாப்பாக இல்லையோ அவர் இறைவிசுவாசியல்ல. அவர் இறைவிசுவாசியல்ல. அவர் இறைவிசுவாசியல்ல.என்று முஹம்மது (ஸல்) அவர்கள் பகக்த்து வீட்டக்காரருக்காக பரிந்து பேசிய சந்தர்பத்தில் சமய ரீதியில் அவர்களைப் பிரித்துப்பேசவில்லை. எவர் முஸ்லிம் அல்லாதவர்களுடைய பொருட்களை அபகரிக்கிறாரோ அவர் மறுமை நாளில் அநீதி இழைக்கப் பட்டவர்களுக்காக வாதிடும் வக்கீலாக என்னை காண்பார் என்ற முஹம்மது (ஸல்) அவர்கள் இந்த உலகில் நீதிக்கு புறம்பாக நடந்து கொள்பவர்களே மறுமை நாளில் பெருந்தோல்வியடைந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் நரகத்தில் தங்களது ஒதுங்குமிட்த்தை காண்பார்கள என்றும் கூறினார்கள்.சமூக நீதியை நிலை நாட்டுவதில் அவருக்கிருந்த பற்றுறுதி காரணமாக பிற சமயத்தவர்கள் விரும்பிச் சென்று தங்களது பிரச்சினைகளில் நீதி கேட்டுச் செல்வார்கள் என்பதற்கு அவரது வாழ்வில் நிறைய உதாரணங்கள் உண்டு. முஹம்மது (ஸல்) அவர்கள் தன்னுடைய வாழ்நாளில் சில போர்களை மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அப்போதும் கூட அவர் சண்டையை சச்சரவை விரும்பியவராக இருக்கவில்லை. அரபுகளிடையே தலைமுறை தலைமுறையாக நிலவி வந்த சண்டை சச்சரவுகளுக்கும் பூசல்களும் அவர் முடிவு கட்டிய விடிவெள்ளியாக இருந்தாரே தவிர மனிதர்களை காவு கேட்கும் போர்களுக்கு அவர் காரணமாக இருந்ததில்லை. நபிகளாரின் 35 வது வயதில் புதுப்பிதது கட்டப்பட்ட கஃபா ஆலயத்தின் சுவற்றில் அஸ்வத் கல்லை பதிப்பிக்கிற பெருமை தங்களுக்குத்தான் வேண்டும் என்று அரபுக் குலங்கள் சண்டையிட்டுக் கொண்டபோது எழுந்த பிரச்சினையை தீர்க்கிற பொறுப்பு பெருமானாhருக்கு ஏற்பட்டது. ஓரு போர்வையை விரித்து ஒவ்வவொரு குலத்தாரையுமும் போர்வையின் ஒரு நுனியை பற்றிக்கொள்ளச் செய்து அஸ்வத் கல்லை எடுத்து பதித்த விதம் பெருமானாரின் தத்தவார்த்த பார்வையின் விசாலத்தை புலப்படுத்துவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். நிலமெல்லாம் ரத்தம் நூலில் பா.ராகவன் எழுதுகிறார் முஹம்மது மூலம் உலகுக்கு வழங்கப்பட்ட இஸ்லாம் என்ற மார்க்கத்தின் ஆதாரப்புள்ளி இந்தச் சம்பவத்துக்குள் புதைந்திருக்கிறது. அரபியர்களிடையே ஒற்றுமை என்ற அவருடை பெருங்கனவின் தொடக்கப்புள்ளியும் இது தான் என்று அவர் எழுதியுள்ளார். இந்த வார்த்தைகளில் கூட ஒரு திருத்தம் தேவைப்படுகிறது. நபிகளாருடைய பெருங்கனவு அரபியர்களுடைய ஒற்றுமையை அல்ல மனித குல ஒற்றுமை என்று திருத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் தன்னுடைய வாழ்நாளில் அரபிய இனம் சார்ந்த பெருமைப் பேச்சு எதையும் அவர் ஒருபோதும் பேசியதில்லை.அரபி மொழி பேசாதவனை அஜமி ஊமையன் என்று விளித்த இன வெறி கோலோச்சிய ஒரு சமுதயத்தில் இனவாதத்தின் பெருமை தொனிக்கிற ஒரு சொல்லையேனும் அவர் உதிர்த்திதில்லை என்பதும் அப்படிப் பேசாமலே அரபுகளின தலைமையை அவர் பெற்றார் என்பதும் பேராச்சரியத்திற்குரிய விசயங்களே! மொழி அல்லது தேசியத்தின் செருக்கு பிடிக்காமல் வாழ்ந்த தலைவர்கள் யாரேனும் உண்டா என்று யோசித்துப் பாருங்கள். மானுடப் பொதுமையை போற்றிய முஹம்மது (ஸல்) அவர்களைததவிர வெறெவரையும் அந்தப்படடியலில் பார்க்க முடியாது. அனைத்து மக்களையும் சகோதர சகோதரிகளாகவே நடத்து மாறு தனது தோழர்களுக்கு அவர் கட்டளையிட்டார். நீங்கள் அனைவரும் ஆதமின் மக்களே! ஆதம் மண்ணால் படைக்கப்பட்வர் என்று கூறுவது பெருமானாரின் வழக்கமாக இருந்தது.போர்க் களத்திலும் கூட யுத்தத்தில் நேரடியாக தொடர்புடையவர்களைத்தவிர மற்றவர்களை கொலல் அவர் அனுமதித்ததில்லை. பெண்கள் குழந்தைகள் ஆலயங்களில் வழிபாடு செய்பவர்கள் எவரையும் கொல்லக் கூடாது என்று தன்னுடைய தளபதிகளுக்கு அவர் உத்தரவிட்டார். பின்னாட்களில் அவர் மக்காவை வெற்றி கொண்ட போது அவரோடு போரிட்டவர்களை போர் குற்றவாளிகளாகவே அடிமைகளாகவோ அவர் நடத்தவில்லை. அந்த எதிரிகள் அவரக்கு சொல்லெணாத் துயரங்களை வழங்கியவர்கள் என்ற போதும் அவர்களை மன்னித்து சுதந்திரமாக வாழ அனுமதித்தார் என்பது வரலாற்றாசிரியர்களை ஆச்சரியப்படுத்தும் செய்தியாகும். இன்றைய நாகரீக யுகத்தில் யுத்தத்தில் வென்று நாடுகளை ஆக்ரமித்து அங்குள்ள செலவ வளங்களை கபளீகரம் செய்துவிட்டு அதற்குப்பின்னரும் அந்த நாட்டுத தலைவர்களையும் வீரர்களையும் குற்றவாளிகளாக கூண்டிலடைத்து சித்தரவதை செய்வதை ஜனநாயத்தின் பேரால் நியாயப்படுத்துபவர்களையும், பத்ர் யுத்தத்தின் போது மஸஜிதுன்னபவீ பள்ளிவாசலில் கட்டப்படடிருந்த குறைஷிக் கைதிகளின் கட்டுக்களை அவிழ்த்துவிடுமாறு உத்தரவிட்ட முஹம்மது (ஸல்) அவர்களையும் ஒரு கணம் ஒப்பிட்டப்பார்த்தால் பெருமானாரின் நற்குணத்தை பிரம்மாண்டமானது என்று இறைவன் குறிப்பிட்டதின் நியயாயத்தை அறிந்து கொள்ளலாம். தீவிரவாதத்தை ஒழித்துக்; கட்டுவதாக உரத்துக் குரல் எழுப்பிக் கொண்டு மேலும் மேலும் தீவிரவாதததை வளர்த்துக் கொண்டிருக்கிற தலைவர்களிடையே முஹம்மது (ஸல்) அவர்கள் ஆச்சரியமான தலைவராக உயர்நது நிற்கிறார்கள். வன்முறையை நன்முறையால் தடுப்பது என்ற முஹம்மது (ஸல்) அவர்களது வழிமுறை தான் தீமையை அழிக்கிற சக்தி கொண்டது என்று அறிஞர்கள் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். பெர்னாட்ஷா சொன்னார் இன்றைய நவீன உலகின் சர்வாதிகாரத்தை அவரைப் போன்ற ஒரு மனிதர் ஏற்றுக் கொண்டால் அமைதியையும் மகிழ்ச்சியை தரக்கூடிய வகையில் இந்த உலகின் பிரச்சினைகளளை தீர்ப்பதில் அவர் வெற்றியடைவார். வரலாறு கூறும் இந்த நற்செய்திகளுக்கு இடையே முஸ்லிம் சமுதாயம் பெருமானாhரைப்பற்றி ஏற்படுத்தியிருக்கிற அடையாளம் எத்தகையது என்பது கேள்விககுரியதாகும். பெருமானார் கற்றுக் கொடுத்த தத்துவங்கள் பண்பாட்டுப் பொழிவுகளின் வழியே முன்னர் வாழ்ந்த சமதாயம் பெருமானாhரை மிகச்சிறப்பாக அடையாளப்படுத்தியருரந்தது. அதன் மூலம் பலர் முஹம்மது (ஸல்)அவர்களின் வழி பற்றி விழி பெற்றார்கள். வலிமை மிக்க ஒரு இளைஞனை ஒருவர் தேவையின்றி அடித்துவிட்டார். அந்த இளைஞன் அதை பொறுத்துக் கொண்டு சும்மா இருந்தான்.அந்தக்காட்சியை ஆச்சரியமாக பார்ததுக் கொண்டிருந்த மர்மடியூக் பிக்தால் ஏனெப்பா நீ அவரை ஒன்றும் செய்ய வில்லை என்று கேட்டார். பெரியவர்களை மதிக்காதவர் எம்மைச் சார்ந்தவரல்ல என்று எங்கள் நபி சொல்லியிருக்கிறார் என்று இந்த இளைஞன் பதில் சொன்னான். அந்த வார்ததைகள் ஏற்படுத்திய தாக்த்தின் விளைவாக பிக்தால் இஸ்லாமை தழுவினார். அந்த பிக்தால் தான் திருக்குர்ஆனுக்கு முதன் முதலாக ஆங்கில மொழிபெயர்ப்பை எழதினார் என்பது பழைய வரலாறு. இன்றைய முஸ்லிம் சமுதாயமான நாம் பெருமானாரை அடையாளப்படுத்தும் விதம் இத்தகைய தரத்தில் இல்லை என்பது கசப்பாக இருந்தாலும் ஒத்துக் கொள்ள வேண்டிய உண்மையே!ஒரு பத்ரிகை முஹம்மது (ஸல்)அவர்களை உடலில் வெடி குண்டை கட்டிக் கொண்டுள்ள தீவிரவாதியாக சித்தரிக்கத் தலைப்பட்டது என்றால் அதற்கு காரணம இன்றைக்கு வாழும் முஸ்லிம் சமுதாயம் முஹம்மது (ஸல்) அவர்களை அப்படி அடையாளப்படுத்தியது தான்; என்று ஒருவர் வாதிட்டால் அந்த வாதத்தை மறுப்பதற்கு நம்மிடம் வலுவான ஆதாரம் என்ன இருக்கிறது ? வன்முறை அல்லது பயங்கர வாதம் அல்லது மனித வெடிகுண்டு தாக்குதல்கள் போன்றவை இஸ்லாமின் பெயரோடு இணைத்து கொச்சைப்படுத்தப் படுகிறதென்றால் அதை இஸ்லாமின் எதிர்ப்பாளர்களுடைய கைங்கர்யம் என்றும் மீடியாக்களின் பயங்கரவாதம் என்றும் நாம் ஓதுக்கிவிடுகிறோம். ஆதே நேரத்தில் நமது நடவடிக்கைகளை கவனிக்கிற உலக சமுதாயம் எத்தகைய மனோ நிலைக்கு ஆளாகியிருக்கிறது என்று றாம் யோசித்துப்பார்ப்பதில்லை.உலகம் ஒரு சர்வதேச கிராமமாக சுருங்கி விட்ட நிலையில் உலகின் எந்த முளையில் ஒரு செயல் நடந்தாலும் அது சர்வதேச பார்வையை பெற்றுவிடுகிறது. உலகளாவிய முஸ்லிம் சமுதயம் யூத கிருத்துவ அமெரிக்க ஐரோப்பியச் சக்திகளால் மிகத்தீவிரமான வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு பதிலடியான நடவடிக்கைள் ஆதிக்க வெறித்தனத்தின் எதிர்விளைவாக கருதப்படாமல் இஸ்லாமிய பயங்கரவாதமாக முஹம்மதீய தீவரவாதமாக சித்தரிக்கப்படுகிறது. இதற்கு முஸ்லிம்களும் ஒரு காரணம் என்றே சொல்ல வேண்டும். இஸலாமின் அடிப்படைகளுக்கும் முஹம்மது (ஸல்)அவர்களின் போதனைகளுக்கும் எதிரான போரட்ட முறைமைகளை கொண்டவர்கள் அதற்கு இஸலாமிய ஜிஹாதியச் சாயம் பூசுவதால் அது தவறான விமர்ச்சனஙகளுக்கு காரணமாகிவிடுகிறது. பாகிஸ்தானும் இந்தியாவும் விளையாடுகிற கிரிக்கெட் போட்டிகளின் போது அநியாயத்திற்கு தேவையில்லாமல் லாயிலாக இல்லல்லாஹ் என்ற கோஷம் எழுப்பபடுகிறது. ஓரு விளையாட்டில் வெறியேற்றும் கோஷம் இஸ்லாமின கலிமாவாக அமையும் போது அது சர்வதேச பார்வையாளர்களிடம் தேவையற்ற முகச்சுளிப்பை ஏற்படுத்தும் என்பதை முஸ்லிம்கள் உணர்ந்து கொள்ளாமல் இருந்து விட்டால் அது முஹம்மது (ஸல்) அவர்கள் சமய மூர்க்கத்தனம் கொண்டதொரு சமதாயத்தை உருவாக்கிவிட்டதாக எதிர் விளைவு ஏற்படுவதை தவிர்க்க முடியாது.சமுதாய அளவிளான நமது நடவடிக்கைகள் முஹம்மது (ஸல்) அவர்கள் கற்பித்த உயரிய பண்பாடுகளின் அடிப்படையில் இருக்குமாறு பார்த்துக்கொள்வது இன்றைய நமது பிரதான கடமையாகும். குறைந்த பட்சம் எந்த ஒரு விசயத்திலும் நமது நடவடிக்கைகள் இஸ்லாமின் அந்தஸ்த்திற்கும் முஹம்மது (ஸல்) அவர்களின் நற்பெயருக்கும் பங்கம் விளைவிக்கும் என்றால் அதை இஸ்லாமியப்பெயரால் அடையாளப்படுத்தாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகயை மேற்கொள்ள வேண்டும்.பெருமானாரைப் பற்றி மற்றவர்கள் விளங்கி வைத்திருப்து தவறானதாகவும் உண்மையிலிருந்து வெகு தூரம் விலகிச் சென்றதாகவும் இருக்கிறது என்று முஸ்லிம்கள் அடிக்கடி சொல்கிறார்கள்.அடுத்த முறை அப்படிச் சொல்வதற்கு முன்னால் கண்ணாடியில் நம்முடைய முகத்தை பார்துக் கொள்வது நலம்.
No comments:
Post a Comment