Sunday, March 9, 2008

ஊர்வலங்களில்.. இஸ்லாம்..

முஹர்ரம் மாத்ததின் 10 நாள்ஆஸூரா நாள் என்று என்று அழைக்கப்படுகிற்து.

ஆஸூரா என்றால் பத்தாவது என்று பொருள். அணைத்து வகை பத்தாவதுகளையும் அது குறிக்கும். 10 வது குழந்தையை ஆஸூரா என்று சொல்லலாம் என்றாலும் முஸ்லிம்களின் வழக்கத்தில் ஆஸூரா என்றால் அது முஹர்ரம் 10 ம் நாளையே பிரதானமாக குறிக்கும்.

இந்தியாவில் அன்று தேசிய விடுமுறை விடபப்டுகிறது. அடுத்த நாள் செய்த்தித் தாள்களில் முஹர்ரம் ஊர்வலங்களைப் பற்றிய செய்திகள் பிரதானமாக இடம்பிடித்திருக்கும். கத்தி போடுதலும் நெஞ்சில் அடித்துக் கொள்ளுதலும் விஷேசமாக காட்டப் படும். இந்த ஆண்டு வித்தியாசமாக முஹர்ரம் தீ மிதியை காட்டினார்கள். காஷ்மீரில் முஹர்ரம் ஊர்வங்களுக்கு தடை விதிக்கப் பட்டிருப்பதையும், தடையை மீற முயன்றவர்களை ராணுவம் விரட்டுவதையும் கூட காட்டினார்கள்.

எனக்கு சிறு வயது முதல் ஒரு சந்தேகம் இருந்த்து. நமது நாட்டில் இஸ்லாமிய வருடப் பிறப்புக்கு விடுமுறை இல்லை. முஹர்ரம் 10 க்கு மட்டும் லீவு விடுகிறார்களே ஏன்? ஒரு வேளை அன்றைய தினம் நாம் நோன்பு வைப்பதாலா? அப்படியானால் 9 ம் நாளுக்கும் அல்லவா விடுமுறை தரவேண்டும்? என்ற கேள்விகளுக்கு விடை தெரிய சில வருடங்கள் பிடித்தது. இந்த விடுமுறை நம்மைப் போன்ற முஸ்லிம்களுக்காக அல்ல. ஷியாக்களுக்காக விடப்பட்ட விடுமுறை இது.

அதற்குப் பிறகு நீண்ட நாட்களாக இன்னொரு ஒரு கேள்வி இருந்த்து. ஷியா என்றால் யார்? இந்த ஊர்வலங்களும் கத்தி போடுதலும் எதற்காக? இந்தக் கேள்விக்கு அந்த வயதில் ஒரு விளக்கம் கிடைத்தது. ஷியா என்பவர்கள் அலியார் கூட்டத்தை சார்ந்தவர்கள். தங்களை முஸ்லிம் என்று நிரூபித்துக் கொள்வதற்காக இதை எல்லாம் செய்து காட்டுகிறார்கள் என்ற கருத்துக் கிடைத்தது. 

இது நக்கல் மிகுந்த ஒரு விமர்ச்சனம் என்பது எனக்கு பின்னாள் புரிந்த்தது. அப்போது அலி(ரலி)யாருக்கும் அவரது மகனும் பெருமானார்(ஸல்) அவர்களின் பேரருமான ஹுசைன் (ரலி) அவர்களுக்கு இந்தக் கூட்டத்திற்கும் எந்த ஒட்டோ உறவோ இல்லை என்பதும்,அவர்களது பெயைர்ச் சொல்லிக் கொண்டு அரசியல் நடத்திய ஒரு பிரிவினர்களே இவர்கள் என்பதும் பின்னர் தெளிவாகிய விசயங்கள்.

அலி (ரலி) அவர்களது குடும்பத்தோடு மாத்திரமல்ல இஸ்லாத்தோடும் கூட அவர்களது தொடர்பு மிக மெலிதானதே! அரசியல் சூழ்ச்சிக்காரர்களால் உருவாக்கப் பட்ட ஒரு அரசியல் பிரிவாக வளரத் தொடங்கிய இவர்கள் காலப் போக்கில் ஒரு சமயப் பிரிவாக அடையாளம் காணப் பட்டாலும் சில மெல்லிய இழைகளே அவர்களயும் இஸ்லாம் என்ற சொல்லையும் பிணத்து வைத்திருக்கிறது. இஸ்லாமிய சமய நம்பிக்கை களிலிருந்தும் அதன் வழிகாட்டுதல் களிலிர்ந்தும் வெகு தூரம் விலகிச் சென்று விட்டார்கள். முஹர்ரம் 10 ம் நாளன்று அவர்கள் செய்து காட்டுகிற வித்தைகளும் விபரீதங்களும் இதற்குச் சான்று

இஸ்லாத்தில் முதன் முதலாக தோன்றிய தீவிரவாதக் குழுவான காரிஜிய்யா எனப் படுவோரால் முஹம்மது (ஸல்) அவர்களின் மகளைத் திருமணம் செய்த அலி (ரலி) அவர்கள் படுகொலை செய்யப் பட்டார்கள் அப்போது ஏற்பட்டஅனுதாபத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட முற்பட்ட ஒரு குழுவினர் உருவாக்கிய தத்துவம் தான் ஷீஇய்யத் எனப்படும் ஷியா தத்துவம். அலி ரலி அவர்களைத் தொடர்ந்து அவரது மகன் ஹுசை (ரலி) அவர்கள் அரசியல் இடைத்தரகர்களின் கொடுஞ்செயலால் ஹிஜ்ரீ 61 ம் ஆண்டு முஹர்ரம் 10 ம் நாள் (கீ.பி .680 அக்டோபர் 10 ) இராக்கில் உள்ள கர்பலா எனும் இடத்தில் படுகொலை செய்யப் பட்டார்கள். அப்போது ஏற்பட்ட் குழ்ப்பத்தை பயன்படுத்தி பெருமளவில் தங்களுக்கு ஆதரவை திரட்டிக் கொண்டார்கள் ஷியா தத்துவத்தின் உற்பத்தியாளர்கள். அந்த ஆதரவை தக்கவைக்கவும் தங்களது கொள்கைய நியாயப் படுத்திக் கொள்ளவும் ஆண்டுதோர்றும் முஹர்ரம் 10 இந்த வேடிக்கை விநோதத்தை அரங்கேற்றி வருகிறார்கள். 

ஆனால் முஸ்லிம் சமுதாயத்தை அல்லாஹ் பாதுகாத்தான். நடந்து விட்ட சோக நிகழ்வுக்காக அவர்கள் வருந்தினாலும் கூட மார்க்கத்தில் ஒரு புதிய பாதையை உருவாக்கும் அரசியல் குறுமதியாளர்களின் சூழ்ச்சிக்குள் அவர்கள் பலியாக வில்லை. இத்தீய சக்திகளை அடையாளம் கண்டு ஒதுக்கினார்கள். இஸ்லாத்தின் தெளிவான வழிகாட்டுதல்கள் இவர்களை அடையாளம் கண்டுகொள்ள வர்களுக்கு உதவியது.

ஆனால் ஹுசைன் (ரலி) அவர்களை தங்களது பிரச்சினையில் இழுத்து விட்டு பிறகு அவரை நட்டாற்றில் சிக்க வைத்து விட்டு ஏமாற்றி விட்டுப் போனவர்கள் தங்களது போலியான பற்றை வெளிப்படுத்திக் கொள்ளவும் அரசிய்ல வளர்சிக்கும் இந்த வழிமுறையே சிறந்த்தது என்று இதை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். அதனால் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகளையு வழிகாட்டு தலையும் பறி கொடுத்தார்கள்.

முஹர்ரம் ஊர்வலங்களின் போதும் அதை தொடர்ந்து நடக்கிற நிகழ்சிகளின் போதும் நடக்கிற விசயங்கள் எதுவும் இஸ்லாமிய விழுமியங்களுக்கோ அதன் வழிகாட்டுத்லுக்கோ உடன்பாடனதோ ஒப்பானதோ அல்ல. மாறாக இஸ்லாம் என்ன சொல்கிறது என்று முழு உலக்மும் புரிந்து வைத்திருக்கிறதோ அதற்கு நேர் மாறானவை.

யாருடைய இறப்பிற்காகவும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் உத்திரவு என்பதும் அதே போல யாருடைய இறப்பிற்காக வும் ஓலமிட்டோ நெஞ்சில் அடித்துக் கொண்டோ சட்டையை கிழித்துக் கொண்டோ அழக்கூடது என்பது இஸ்லாமின் திட்டவட்டமான வழிகாட்டுதல் என்பதும் முழு உலகுக்கும் தெரிந்த உண்மை. எங்கள் தெருவில் உள்ள இந்துப் பாட்டிக்கு கூட யார் சாவுக்கும் முஸ்லிம்கள் ஒப்பாரி வைக்க மாட்டார்கள் என்பது தெரியும்.

இது விசயத்தில் முஹம்மது (ஸல்) அவர்களது வழிகாட்டுதல் தெளிவானது.
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும்(ஆணும்) ஒரு இறப்பிற்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கக் கூடாது. கணவனை இழந்த பெண்ணைத்தவிர அவள் நான்கு மாதம் 10 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்க வேண்டும். ( ஸஹீஹுல் புகாரி 5334)
(துக்கத்தில்) கன்னத்திஅடித்துக் கொள்பவனும், சட்டையை கிழித்துக் கொள்பவனும், அறியாமைக்காலத்து ஒப்பாரி வைப்பவனும் நம்மாச் சார்ந்தவன் அல்ல. (( ஸஹீஹுல் புகாரி 1294)

துக்கத்தில் மொட்டை அடித்துக் கொள்பவனும், ஒப்பாரி வைப்பவனும், சட்டையை கிழித்துக் கொள்பவனும் நம்மைச் சார்ந்தவன் அல்ல. (அபூதாவூது 2733)

இவர்கள் ஆண்டுதோரும் ஹுசைன் (ரலி) அவர்களுக்காக என்று சொல்லிக் கொண்டு அழுகிறார்கள், ஒப்பாரிப் பாட்டு பாடுகிறார்கள். கன்னத்திலும் நெஞ்சிலும் அடித்துக் கொள்கிறார்கள், உடலை கீறிக் கொள்கிறார்கள்.

ஹம்சா (ரலி) அவர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வும், மகன் இபுறாகீம் (ரலி) அவர்களின் இறப்பும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள பெரிதும் பாத்தித்தவை. ஆனால் அதற்காக பெருமானார் இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் எதையும் செய்யவில்லை. அதே போல நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது முஸ்லிம் சமுதாயத்திற்கு அதைவிட்ப் பெரிய துக்கம் எதுவும் இருக்கவில்லை. ஆனால் ஹஜ்ரத் அலி, ஹுசைன் (ரலி) போன்ற முஸ்லிம்கள் எவரும் ஒப்பாரி வைக்கவோ ஓலமிடவோ இல்லை. ஏன் இப்போது கூட ஷியாக்கள் பெருமானாருக்காக அழுவதில்லை. ஹுசைன் (ரலி) அவர்களுக்காக மட்டும் செய்யப்படுகிற இந்த ஆர்ப்பாட்டங்கள் எந்த வகையிலும் இஸ்லாத்தோடு தொடர்புடையது அல்ல. நண்பர் சொன்னது போல குற்ற உணர்ச்சியை மறைப்பதற்காக பரிகாரம் செய்கிறார்களோ என்னவோ! 

காலப் போக்கில் ஷியாக்களில் பல பிரிவிகள் ஏற்படத்தொடங்கியது ஒவ்வொரு பிரிவும் மற்றவர்களைவிட வேகமாக இஸ்லாத்திலிருந்து அன்னியப் பட்டனர்.

பத்ரிக்கைகளுக்கும் மீடியக்களுக்கும் ஷியாக்களின் முஹர்ரம் கூத்துகள் வேடிக்கையாக இருப்பதால் இது போல ஒரு வேடிக்கை முஸ்லிம்களின் மற்ற விஷேசங்களில் இல்லை என்பதால் இதை பெரிதாகக் காட்டுகின்றன. இதன் காரணமாக்வே முஹர்ரம் ஊர்வலங்கள் பிரபலமடைந்தன.

முஹர்ரம் 10 நாளை இஸ்லாம் சிறப்பித்துச் சொன்னதற்கும், அன்றைய தினத்தில் நோன்பு நோற்கச் சொன்னதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஹுசைன் (ரலி) அவர்கள் படுகொலை செய்யப் பட்டதற்கும் நோன்பிற்கும் கூட எந்த சம்பந்தமும் இல்லை. முஸ்லிம்களில் சிலர் அறியாமையினால் முஹர்ரம் 10 ஐ இஸ்லாம் சிறப்பித்துச் சொன்னதை ஹீசைன் (ரலி) அவர்களின் படுகொலையோடு தொடர்பு படுத்தி புரிந்துள்ளனர். குறிப்பாக பெண்கள் பலரும் முஹர்ரம் 10 என்றதும் ஹுசைன் (ரலி) அவர்களையே நினைவு கூறுகின்றனர்.

எதேட்சையாக ஆஷூரா நாளன்றோ அல்லது அதற்கு சமீபத்தில் வருகிற வெள்ளிக்கிழ்மை அன்றோ ஜுமா உரை நிகழ்த்துகிற இமாம்கள் பலரும் கர்பலாவைப் பற்றிப் பேசுகின்றனர். 

கர்பலாவின் சோக நிகழ்வுகளும், அததிலிருந்து சமுதாய்ம் பெற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களும் சொல்லப் பட வேண்டியவை தான் என்றாலும் அது ஆஷூராவின் சிறப்பு குறித்து தவறான புரிதலை ஏற்ப் படுத்துவதால் இந்த சமயத்தில் அதைப் பற்றி பேசுவதை தவிர்க்கலாம். அல்லது இரண்டு விசயத்திற்கும் இடையே எந்த தொடர்புமில்லை என்பதை புரிய வைத்து விட்டு கர்பலாவைப் பற்றிப் பேசலாம். 

அதன் மூலம் இஸ்லாம் ஆஷூரா நாளன்று நோன்புக்கு உத்தரவிடப்பட்ட  பிறகு அறுபது வருடங்கள் கழித்து அதே தினத்தில் ஏற்ப்பட்ட  ஒரு பெரும் விபத்து என்பதை சமுதாயம் புரிந்து கொள்ள வழி ஏற்படும்.

இஸ்லாம் ஆஷூர நாளை சிறப்பித்துச் சொன்னதற்கான காரணம் வேறு. அன்று தான் நபி மூஸா (அலை) அவர்களுக்கும் யூதர்களுக்கும் செங்கடல் பிளந்து வழிவிட்டது அந்த வழியாக அவர்கள் பிர் அவ்னிடமிருந்து தப்பித்தார்கள். மனித சமூகத்தின் பெரு மகிழ்ச்சிக்கும் ஆறுதலுக்கும் உரிய ஒரு விசயத்திற்கு இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே அன்றைய தினம் நோன்பு நோற்கும்படி முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்
முஹம்மது (ஸல்) அவ்ர்கள் மதீனாவுக்கு வந்த போது அங்கிருந்த யூதர்கள் ஆஷூரா நாளன்று நோன்பு வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அதன் காரணத்தை கேட்டார்கள். அதற்கு பதிலளித்த யூதர்கள் ஆஷூரா நாளில் தன் மூஸா (அலை) அவர்களுக்கும் யூதர்களுக்கும் பிர் அவ்னுக்கு எதிராக அல்லாஹ் வெற்றியை அளித்தான் அந்நாளை கண்ணியப் படுத்த்வே தாங்கள நோன்பு நோற்பதாக கூறினர். அப்போது பெருமானார் (ஸல்) அவர்கள் மூஸா (அலை) அவர்களுக்கு நாமே அதிக தகுதியுடையவர்கள் என்று கூறிவிட்டு முஸ்லிம்களையும் நோன்பு நோற்க உத்தரவிட்டார்கள்.

மூஸா (அலை) அவர்களை சொந்தம் கொண்டாட நாமே அதிக தகுதியுடையவர்கள் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியதற்கு அழுத்த்மான காரணம் இருந்த்து.
மூஸா (அலை) அவர்கள் ஒரு நபி. இலட்சியவாதி. கொள்கையாளர்.
லட்சியவாதிகளுக்கு வாரிசுகளாக அவர்களது கொள்கையை கடைபிடிப்பவர்களும் அதை முன்னெடுத்துச் செல்பர்களும் தான் இருக்க முடியுமோ தவிர அவருடைய பிள்ளைகளோ குடும்பத்தினர்களோ அல்ல. தேசத் தந்தை காந்தி, ஒரு இலட்சியவாதி இந்திய மக்களின் முன்னோடி என்றால் அவரது உண்மையான வாரிசுகள் அவரது கொள்கை வழியை பின்பற்றுவோறே தவிர அவருடைய குடும்பத்தினர் அல்ல.குடும்பத்தினருக்கு சொத்தில் பங்கு கிடைக்கலாம். அவரது கொள்கை வழியில் செல்லாமல் அவருக்கு அவர்கள் உரிமை கொண்டாட முடியாது. இந்த நாட்டில் காந்தீய வாதிகளுக்கு கிடைத்த் மரியாதை காந்தியின் சொந்தப் பிள்ளைகளுக்கு கிடைக்கவில்லை அல்லவா? அது போலத்தான் நபிமார்களுக்கும் அந்நபிமார்களது கொள்கையை பின்பற்றுபவர்கள் தான் வாரிசாக உரிமை கொண்டாட முடியும். (நபிமார்கள் சொத்துக்களுக்கு கூட அவர்களது சொந்தப் பிள்ளைகள் வாரிசுரிமை கோரமுடியாது. அது வேறு விசயம்.) அந்த அடிப்படையில் மூஸா (அலை) அவர்களது குடும்பத்தினர் என்ற அடிப்படயில் யூதர்கள் சொந்தம் கொண்டாடுகிறார்கள். ஆனல் மூஸா (அலை) அவர்கள் இறைவனிடமிருந்து பெற்றுக் கொண்டுவந்து கொடுத்த தவ்ராத்தின் நேரிய வழியிலிருந்து அவர்கள் வெகு தூரம் விலகிவந்து விட்டனர். முஹம்மது (ஸல்) அவர்களோ அந்த நபித்துவத்தின் தொடர்ச்சியாக அதே சத்திய நெறிய இன்னும் செறிவாகவும் தெளிவாகவும் போதித்து வந்தார்கள். முஸ்லிம்களோ அன்னாரது வழியை இழை பிசகாது கடைபிடித்து வந்தார்கள் என்வே தான் மூஸா (அலை) அவர்களை சொந்தம் கொண்டாட நாமே அதிக அருகதை உடையவர்கள் என்று கூறிய முஹம்மது (ஸல்)அவர்கள் ஆஷூரா தினத்தில் நோன்பு வைக்கும் படி உத்தர்விட்டார்கள். மற்றொரு சந்தர்ப்பத்தில் யூதர்களிடமிர்ந்து முஸ்லிம்களின் நட்வடிக்கைய வேற்படுத்திக் காட்டுவதற்காக முஹர்ரம் 9 ம் நாளும் நோன்பு வைக்கச் சொன்னார்கள்.

மூஸா (அலை) அவர்கள் பிர் அவ்னிடமிருந்து பாதுகாக்கப் பட்ட வரலாறு மனித வரலாற்றின் மிக முக்கியமான ஒரு அத்தியாய மாகும். ஆச்சரியங்கள் நிறைந்த உலக நடப்புக்களில் அது மகா ஆச்சரியாமான நிகழ்வு.

மூஸா (அலை) அவர்களை நம்பி அவரது சொல்லுக்கு கட்டுப்பட்டதற்காக மரணத்தின் விளிம்பில் நின்று கொண்டுருந்த 6 லட்சம் யூதர்கள் சில மணித்துளிகளில் இன்றுவரை வாழ்கிற மனிதர்கள் வாய் பிளந்து ஆச்சரியப் படும் வகையில் கடல் பிளந்து காப்பாற்றப் பட்டார்கள். அவர்கள் காப்பாற்றப் பட்ட அதே வேகத்தில் எகிப்து நாட்டு கொடுங்கோல் மன்னன் பிர அவ்னும் அவனது லட்சக்கணக்கான் படையினரும் கண்மூடித்திறப் பதற்குள் நீரல் மூழ்கடித்து அழிக்கப் பட்டார்கள்.

கீ.மு 1447 ம் ஆண்டு நடந்த்தாக ஆய்வாளர்கள் கனித்துச் சொல்கிற இந்நிகழ்சி , (ஜவாஹிருல் குரான் – தமிழ் தப்ஸீர். முதல் பாகம் பக்கம் 197. - வேலூர், அல் பாகியாதுஸ் ஸாலிஹாத் வெல்ளியீடு) 3500 வருடங்களுக்கு முந்தியதாக இருந்தாலும், இன்றளவும் வாழ்கிற இறை நம்பிக்கையாளர்களுக்கும், இனி யுக முடிவு நாள் வரைக்கும் பிறக்கப் போகிற அனைத்து இறை நம்பிக்கையாளர்களுக்கும், ஒடுக்கப் படுவோருக்கும், சிறுபான்மையினருக்கும் உறுதியையும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் மகிழ்சியையு தருகிற செய்தியாகும்.

இறைவனை நம்பக் கூடியவர்கள் சோதனையின் விளிம்பில் கூட எவ்வாரெல்லாம் காப்பாற்றப் படக்கூடும் என்ற பாடத்த தருகிற அதே சமயத்தில் அக்கிரமக்காரர்கள் எத்தகைய வலிமையாயிருக்கிற நிலையிலும் ஒரு நாள் வீழ்த்தப் படுவார்கள் என்ற எச்சரிக்கையையும் இந்த நிகழ்சி தருவது போல இன்னொரு நிகழ்சி தரமுடியாது.

மூஸா (அலை) காப்பாற்றப் பட்டார்கள் என்பத்தை மட்டுமல்ல் மனித வாழ்வின் செம்மையான போக்குக்கு மிகச் சிறந்த வழிகாட்டுதலை இந்நிகழ்சி தருகிறது என்பதையும் சேர்த்து எண்ணிப்பார்த்து நோன்பு வைத்தால் அந்த நோன்பின் அர்த்த பரிமாணம் கனமானதாக இருக்கும் கத்தி வீசும் காரியங்களை விட.