Saturday, July 26, 2008

கொஞ்சம் துறவு... जून 2008

“ஆடம்பரமாக வாழாதீர்கள். அதீத செலவினத்தை தவிருங்கள்’ என்று சொன்னவர் யார்?” ஓரு வார இதழில் இப்படி ஒரு புதிர் போடப் பட்டிருந்தது. பதிலை தேர்ந்தெடுக்க வசதியாக நான்கு பெயர்களை குறிப்பிடிருந்தார்கள். தாயுமானவர், புத்தர், நபிகள் நாயகம், மன்மோகன் சிங். என்ற அந்த நான்கு பெயர்களையும் படித்து விட்டு நான் நபிகள் நாயகம் என்பதை தேர்வு செய்தேன். அது சரிதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள அந்த பத்திரிகையை தலைகீழாக திருப்பி சரியான விடைகளை பார்வையிட்ட போது அங்கே, ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. விடை நான் நினைத்தது இல்லை. இதைச் சொன்னவர் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்.

ஒரு அரசியல் வாதி தேர்ந்த ஒரு மதகுருவைப் போல நாட்டு மக்களுக்கு உபதேசம் செய்வது, அதுவும் சமயம் மதம் என்பதெல்லாம் ஒரு அலங்காரத்திற்கு வைத்துக் கொள்ளத்தக்கது அவ்வளவுதான் என்ற எண்ணம் மோலோங்கியிருக்கிற காலத்தில் இப்படி ஒரு அறிவுறையை சொல்லியிருப்பது ஒரு ஆச்சரியம் தானே?

நமது பிரதமர், அதுவும் முதலாளித்துவ மனோபாவம் கொண்ட ஒரு பொருளாதார நிபுணர், திடீரென ஒரு மதகுருவின் குரலில் பேச வேண்டிய அவசியம் என்ன நேர்ந்த்தது? வேறோன்றும் இல்லை!

ஒரு பக்கம் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்திருக்கிறது. மற்றொருபுறம் அதன் வாங்கும் திறன் குறைந்த்திருக்கிறது. இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கும் நிதியமைச்சர் பா.சிதம்பரமும் தோழமைக் கட்சிகளுடையவும், எதிர்கட்சிகளுடையவும் கடுமையான கேள்விகளின் பிடியில் சிக்குண்டு கிடக்கின்றனர். இது உலகளாவிய பிரச்சினை உள்ளூர் பிரச்சினை அல்ல என்ற அவர்களுடைய குரல் எடுபடவில்லை. இவ்விருவரின் பொருளாத்தார மேதமை தொடர்ந்து கேலிசெய்யப் பட்டு வருகிறது.இதற்கிடையில் எரிகிற தீயில் எண்ணை வார்ப்பது போல அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொண்டலீஸா ரைஸும் அதிபர் மேன்மை தாங்கிய புஷ் அவர்களும் உணவுப் பொருட்களின் இந்த விலை ஏற்றத்திற்கு இந்தியர்களும் சீனர்களும் அதிகமாக சாப்பிடுவதுதான் என்று கூறித் தொலைத்தார். உள்ளூர் தலைவர்களிலிருந்து உலகத்தலைவர்கள் வரை அதிபர் புஷ்ஷை பிடிபிடியென்று பிடித்துக் கொண்டார்கள். ஆனால் மன்மோகன் அவர்களோ, சிதம்பரம் அவர்களோ வாய்திற்ககவில்லை. அதிபர் புஷ் சொன்னதில் ஏதோ ஒரு உண்மை இருக்கிறது என்பது போல பிரதமர் மன்மோகன் சிங் ஆடம்பரமாக வாழாதீர்கள்.அதீத செலவினத்தை தவிருங்கள் என்று இந்திய மக்களுக்கு அறிவுறுத்தியிர்க்கிறார். நாட்டு மக்கள் மிக நிதானமாக யோசிக்க வேண்டிய விசயம் இது. மதங்களின் வழிகாட்டுதல்கள் சாஸ்வதமானவை என்பது நிரூபணமான தருணமும் கூட.

இந்தியப் பொருளாதாரத்தில் இப்போது ஒரு வித்தியாசமான சூழல் நிலவுகிறது.

இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி நிலையில் இருக்கிறது. முன்பு ஒரு அமெரிக்க டாலரைப் பெருவதற்கு 50 ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தது. இப்போது 40 ரூபாயுக்கு ஒரு டாலரை வாங்க முடியும். அந்த வகையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்திருக்கிறது. இதன் பலன் நாட்டு மக்களுகுகு கிடைத்திருக்கும் என்றால் முன்னர் ஒரு ரூபாயுக்கு கிடைத்த சாக்லேட் 90 காசுக்கு கிடைக்க வேண்டும் ஆனால் நிலமை வேறு மாதியிருக்கிறது. ஒரு ரூபாய் சாக்லெட் இபோது ஒண்ணரை ரூபாயக ஆகிவிட்டது. 60 ரூபாயுக்கு கிடைத்த சமையல் எண்ணை 90 ரூபாயாகிவிட்டது. 36 ரூபாயுக்கு கிடைத்து வந்த துறையூர் அரிசி இப்போது 41 ரூபாயாகிவிட்டது. இரும்பு விலை 56 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

ரூபாயின் மதிப்பு உயர்ந்திருக்கிற அதே நேரத்தில் ருபாயின் வாங்கும் திறன் சரிந்திருக்கிறது. இதை பணவீக்கம் என்று பொருளாதாரம் குறிப்பிடுகிறது. இந்த பணவீக்கம் சமீப கால வரலாற்றில் இல்லாத அளவாக 7.83 சதவீதததை எட்டியிருக்கிறது. அதாவது அந்த அளவு விலைவாசி உயர்ந்திருக்கிறது.

கம்ப்யூட்டர் மற்றும் ஐ.டி துறையின் வளர்ச்சியால் கார் பங்களா என வாழ்கை வசதிகள் பெருகி.. இலட்சக் கணக்கினாலான பணம் சாமாண்ய நடுத்தர வர்கத்து மக்களிடம் புரள.. சிற்றூர்களிலும் கூட ஷாப்பிங் மால்களும் உயர் ரக காப்பி ஷாப்புகள் மிளிர…நாடு பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டுள்ளதை மக்கள் தங்களது வாழ்வியல் போங்கில் அனுபவித்து உணர்ந்து கொண்டிருந்த சூழலில் இந்த பணவீக்கம் ஒரு திடீர் அதிர்ச்சியையும் எச்சரிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது அந்த எச்சரிக்கைதான் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களை இப்படி பேச வைத்திருக்கிறது.

ஒரு துறவியை போல அவர் பேசுகிறார் என்று சிலர் நையாண்டி செய்கிறார்கள். உண்மை தான். ஆனால் இந்தத் துறவு இனறைய இந்திய தேசத்தின் தேவை என்பதை நாட்டு மக்கள் உணர வேண்டும்.


இந்தியாவிலும் சீனாவிலும் ஒரு புதிய வகை பணக்கார வர்க்கம் வேகமாக வளர்ந்து வருகிறது. அதிக சிரமம் அல்லது துணிச்சலான முயற்சி எதையும் மேற்கொள்ளாமலே ஒரு கனிசமான தொகையினர் பெரும் செல்வந்தர்களாகி வருகினறனர். குறிப்பாக இளைஞர்களும் இளைஞிகளும் கல்வித்தகுதி ஒன்றை மட்டுமே மூலதனமாக கொண்டு பெரும் பொருள் ஈட்டிவருகினறனர். அவர்களிடம் ஆடம்பர மோகம் அதிகமாக இருக்கிறது. 5 ரூபாயுக்கு கிடைக்கிற காப்பியை தவிர்த்துவிட்டு 50 ரூபாயுக்கு காப்பி குடிப்பதை தேர்வு செய்கின்றனர். ஒரு பகுதியில் இத்தகைய வாடிக்கையாளர்கள் பெருகுகிற போது அந்தப் பகுதியில் காப்பியின் விலை கனிசமாக உயர்ந்து விடுகிறது. சாதாரண பெட்டிக் கடை வைத்திருப்பவ்ர் கூட சில பிளக்ஸ் அட்டைகளையும் கண்ணாடி அலங்காரங்களையும் செய்வதன் மூலம் இரண்டைரை ரூபாய் டீயை 10 ரூபாயுக்கு விற்கிறார். அதைப் பற்றி யாரும் கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.

நான் துபாய் சென்றிருந்த போது ஒரு நாள் டீ கடைக் காரர் இன்று முதல் டீயின் விலை அரு திர்ஹம் என்றார். உடன் வந்த நண்பர் கடைக்காரரிடம் எதற்கப்பா இந்த விளையாட்டு இன்னும் ஓரிரு நாளில் நீயே விலையை குறைத்து விடுவாய் என்றார். இல்லை. இல்லை. இந்த முறை விலை குறைக்கப் படாது என்றார் கடைக்காரர். பார்க்கலாம் என்று சொல்லி விட்டு நண்பர் திரும்பினார். என்ன விசயம் என்று நான் நண்பரைக் கேட்டேன். இங்கு அவ்வப் போது டீ கடைக்காரர்கள் இப்படி டீ விலையை உயர்த்துவார்கள். இங்குள்ள உழைக்கும் மக்கள் தான் இது போன்ற கடைகளில் டீ குடிப்பார்கள். அவ்ர்களுக்கு டீ ஒரு திர்ஹம் என்பது பெரிய தொகை. அதனால் டீ விலையேற்றத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். டீ குடிப்பதை குறைத்து கொள்வார்கள். வியாபாரம் குறைவதைப் பார்த்து கடைக்காரர்கள் மீண்டும் பழைய விலைக்கே விற்க ஆரம்பித்து விடுவார்கள். இது இங்கு அவ்வப் போது நடக்கிற நாடகம் தான் என்று நண்பர் சொன்னார். துபாயின் டீ விலையை போல இல்லாமல் நமது நாட்டில் ஒரு பொருளுக்கு விலையேரிவிட்டால் பிறகு அது இறங்குவதே இல்லை, இந்தியாவில் பெருகி வரும் ஆடம்பர மோகத்தால் உயர்கிற பொருட்களின் விலை, ஆடம்பரக்கடைகளை தொடர்ந்து சாமாண்யக் கடைகளையும் தொற்றுகிறது.

சென்னையில் ஒரு சைவ ஹோட்டலில் மதிய சாப்பாடு 225 ரூபாய். இதற்கும் அது ஸ்டார் அந்தஸ்துள்ள ஹோட்டல் அல்ல. சற்று வித்தியாசமாக்கப்பட்டுள்ள ஒரு ரெஸ்ட்டாரெண்ட் அவ்வளவே! ஆனாலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. பெயரைப் பதிவு செய்துவிட்டு வரிசையில் காத்திருந்து சாப்பிடுகிறார்கள்.

இந்தப் புதிய ஆடம்பரக் கலாச்சாரம் ஒவோர் விசயத்திலும் தொடர்கிறது. அது பொருட்களின் விலை உயர்வுக்கு காரண்மாகிறது. இந்தியாவ்லும் சீனாவிலும் இத்தகை ஆடம்பரக் கலாச்சாரத்திற்கு புதிதாக ஆட்பட்டோரின் எண்ணிக்கை பெருகிவிட்ட காரணத்தினால் தான் உலக அளவில் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து விட்டதாக வெள்ளை மாளிகை உணவு அறிக்கையை வெளியிட்டது. ஒரு பெரிய பொருப்பில் இருக்கும் ஆட்சித் தலைவர் ஒருவர் சம்பந்தமில்லாமல் ஒரு காரணத்தை சொல்ல முடியாது. அதிலும் குறிப்பாக பொருளாத விசயத்தில். எனவே அமெரிக்க அதிபர் கூறும் காரணம் புறக்கணித்தக்க ஒன்றல்ல. அதனால் தான் டாக்டர் மன்மோகன் சிங் அமெரிக்க அதிபரின் குரலை, வெளியுலகம் சற்றென்று புரிந்து கொள்ள முடியாத வாறு சற்று மாற்றி, குற்ற்ம் சாட்டாமல் அறிவுரையாக கூறியுள்ளார். ஆடம்பரமாக வாழாதீர்கள்.

இந்த அறிவுரை முஸ்லிம்களுக்கு புதிதல்ல. இஸ்லாமின் பொருளாதார வழிகாட்டுதலில் இந்த இரண்டு அறிவுரைகளும் பிரதானமானவை.

இஸ்லாம் முஸ்லிம்களிக்கு கற்றுக் கொடுக்கிற பண்புகளில் ஜுஹ்து என்ற துறவு மனப்பான்மை பிரதானமானது. வீடுவாசலைத் துறந்து காட்டிலே கடுந்தவம் புரிபவர்களிடம் மட்டுமல்ல ஒவ்வொரு மனிதனிடமும் இந்த ஜிஹ்து துறவு மனப்பான்மை இருக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இறைவனும் மக்களும் என்னை நேசிக்க வேண்டுமெனில் நான் என்ன செய்ய வேண்டும் என்றுகேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். துறவு கொள் இறைவனும் மக்களும் உன்னை நேசிப்பார்கள் என்று பதிலளித்தார்கள். (இப்னுமாஜா)

துறவு என்ற வார்த்தைக்கு உலகில் பிரதானமாக அறியப் படுகிற பொருள் ஒன்று உண்டு.

பஞ்சு மெத்தையில் படுக்காமல் கட்டாந்தரையில் படுப்பது துறவு. வண்ணவண்ணமான ஆடைகளை அணியாமல் ஒரு குறிப்பிட்ட வகை ஆடை அணிவது துறவு. ருசி ருசியாண உணவுகளை உண்ணாமல் ருசிகளற்ற உணவை உணப்து துறவு. சம்பத்திக்கச் செல்லாமல் பிச்சை எடுத்து உண்பது துறவு,குடும்பமாக வாழமல் தனிமனிதனாக வாழ்வது துறவு என்று துறவுக்கு உலகம் ஒரு பொருளை கொண்டிருக்கிறது. அந்தப் பொருள் இறை வேதங்கள் எதுவும் கொடுத்த பொருள் அல்ல. சில போலி சம்ய வாதிகள் மக்களிடம் அனுதாபத்தையும் தனி மரியாதையையும் பெறுவதற்காக தாங்களே உருவாக்கிக் கொண்டதாகும். திருக்குரான் இந்த உண்மையை பிட்டு வைக்கிறது.

உன்மையில் வேதங்கள் கற்றுக் கொடுக்கும் துறவு இதுவல்ல. உண்மையன சமயத் தத்துவங்கள் கூறும் துறவு என்ன என்பதை இஸ்லாம் வெளிப்படுத்துகிறது. இந்த உலகில் காணப் படும் நல்ல இன்பங்களை அனுபவித்துக் கொண்டு அதில் எல்லை மீறாமல் நடந்து கொள்ள வேண்டும். இது தான் இஸ்லாம் கற்றுத்தருகிற துறவு மன்ப்பான்மையாகும். ஏ.சி அறையில் தண்ணீர்ப் படுக்கையில் படுத்திருக்கும் ஒருவர் இது இறைவன் தனக்கு கொடுத்திருக்கும் அருள். இறைவன் நாடிவிட்டால் இது என்னிடமிருந்து நாளைக்கே பறிக்கப் படலாம் என்ற உணர்வை உள்ளத்திலே கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்வாரானால் அவரும் துறவிதான். நபிகள் நாயகம் (ஸல்) வர்கள் சொன்னார்கள், இந்த உலகில் ஒரு வழிப்போக்கனைப் போல நடந்து கொள். காலையில் விடியும் போது மாலை நிச்சயம் வரும் என்று எதிர்பார்க்காதே! மாலை மங்கும் போது காலை புலரும் என்று எதிர்பார்க்காதே! ஆரோக்கியம் இருக்கிற போதே நோய்க்காலத்தின் தேவையை கருத்தில் கொண்டு நடந்து கொள். வாழ்கிற போது மரணத்தினை கருத்தில் கொண்டு வாழ்ந்து கொள். இந்த மனப்பான்மையை உள்ளத்தில் தகுந்த இடத்தில் உட்கார வைத்து விட்டால் பிறகு துறவுக்காக அவசியத் தேவைகள் எதையும் துறக்க வேண்டியிருக்காது. அதே நேரத்தில் அநாவசியமான, அத்துமீறிய செயல்கள் அனைத்தும் தானாக துறவுபூண்டுவிடும். ஒரு திருமணத்திற்காக 10 கோடி செலவழிக்க முடியும் என்ற நிலையில் உள்ள ஒரு செல்வந்தர் சில லட்சங்களில் விரயம் இன்றி அத்திருமணத்தை முடித்துவிடுவாரானால் அவரும் ஒரு துறவி தான்.

எந்த ஒரு இடத்திலும் தேவைக்கு அதிகமாக செலவ்ழிப்பது ஆடம்பரமாகும்.ஆடம்பரத்தை தவிர்த்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் துறவிதான். ஆடம்பரம் இஸ்லாம் பெரிதும் வெறுக்கிற விசயம். ஆற்றின் கரையிலிருந்து முகம் கழுவுகிற போது கூட தேவைக்கு அதிகமாக தண்ணீரை உபயோகிப்பதை இஸ்லாம் தடுக்கிறது. தேவயானதை தேவையான விதத்தில் சாப்பிடவும் பருகவும் அனுமதிக்கிற திருக்குரான் வீரயம் செய்துவிடாதீர்கள் என்று எச்சரிக்கிறது. விரையம் செய்பவர்களை இறைவன் விரும்புவதில்லை என்று திருக்குரான் பல இடத்திலும் திரும்பத்திரும்பக் கூறுகிறது. இறைவனது விருப்பம் சாரத எதிலும் நன்மை இருக்க முடியாது. ஒவ்வொரு தனிமனிதனும் யோசிக்க வேண்டிய விசயம் இது. தனிப்பட்ட வாழ்வில், விழாக்களில், பெருமைக்காக செய்யப் படுகிற ஆடம்பரங்களில் பெரிதாக எந்த நன்மையும் ஏற்படுவதில்லை. ஒரு திருமண விழாவில் வாரியிறைக்கப்படுக்ற ஆடம்பரச் செலவுகளால் அந்த மணமக்களின் வாழ்வில் மகிழ்சி கூடிவிடப் போவதில்லை. ஆடம்பரத்தால நல்ல வாழ்கை தந்துவிடமுடியுமென்றால் இங்கிலாந்தின் இளவரசர் சார்லஸூம் டயானாவும் பிரிந்திருக்கவே முடியாது, எனென்றால் 20 ம் நூற்றாண்டின் மிக ஆடம்பரமாக நடைபெற்ற திருமணம் அது,

ஆடம்பரமாக வாழாதீர்கள் அது இறைவனது விருப்பத்திற்குரியது அல்ல எனபது இதுவரை சமயவாதமாக இருந்தது. இப்போதோ ஆடம்பரமாக வாழாதீர்கள் ஆடம்பரத்தால் உலகில் விலைவாசி உயரும், ஒரு சிலர் செய்கிற ஆடமபரம் ஒட்டு மொத்த உலகின் நலனையும் பாதிப்புக்குள்ளாகும் என்பது பொருளாதார தத்துவமாக மாறியிருக்கிறது இருக்கிறது.

டாக்டர் மன்மோகன் சிங்கின் இரண்டாவது அறிவுரை அதீத செலவினத்தை தவிருங்கள் என்பது. அதாவது கண்ணில் கண்டதை எல்லாம் வாங்கிக் குவிக்காதீர்கள் என்கிறார். முன்பெல்லாம் குடும்பத்தலைவர்களும் தலைவிகளும் வீட்டுக்கு என்ன தேவை என்பதை எழுதி எடுத்துக் கொண்டு போய் கடைகளைஇல் வாங்கி வருவார்கள். இப்போதை ஷாப்பிங் மால் கலாச்சாரத்தில் கண்ணில் தெரிவதை எல்லாம் வாங்கிக் குவிக்கிற பழக்கம் ஏற்பட்டு விட்டது. ஒவ்வொரு ஷாப்பிங்கின் போதும் ஒரு புதிய பொருள் வீட்டுக்கு வருகிறது, இது தேவையானது தானா எனபது சரியாக யோசிக்கப் படுவதில்லை. கவர்ச்சியான விளம்பரங்கள் அல்லது இலவசங்களின் தாக்கம் அந்த யோசனையைத் தடுத்துவிடுகிறது. இதுவும் விலைவாசி உயர்வுக்கு ஒரு முக்கியக் காரணம் என்கிறார் மன்மோகன்சிங்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு வீட்டில் எத்தனை படுக்கைகள் இருக்கலாம் என்பதை சொல்லுகிற போது. குடும்பத் தலைவருக்கு ஒரு படுக்கை, அவரது மனைவிக்கு ஒரு படுக்கை. விருந்தாளிக்கு ஒரு படுக்கை இருக்காலம். (தேவையற்று இருக்கும்) நான்காவது படுக்கை சாத்தானுக்குரியது என்றார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம்)

தேவையற்றைத வாங்கிக் குவிப்பதை சாத்தானிய குணம் என சம்யங்கள் வர்ணித்தன. அதையே விலைவாசி உயர்வுக்கான மற்றொரு காரணம் என இப்போது டாக்டர் மன்மோகன் சிங் கூறுகிறார்.

ஒருவர் தேவையின்றி ஒரு பொருளை வாங்கினால் அது அவருடைய பர்ஸை மட்டும் பாதிக்கிற விசயமல்ல. நாட்டுப் பொருளாதாரத்தின் பல்ஸையும் பாதிக்கிறது என்று கவலைப் படுகிறார் டாக்டர் மன்மோகன் சிங்.

இப்போதைக்கு பிரதமர் துறவியாகியிருக்கிறார். நீங்களும் கொஞ்சம் துறவியாக முயறிசி செய்யுங்கள். இந்த தேசமும் “அந்த”தேசமும் வளம் பெறும்.

அடுத்த முறை உங்களது பர்ஸை திறக்கிற போது. இந்த ஈமானியத் துறவு முதலில் தலையை காட்டடும். பிறகு காந்தியின் தலை வெளியே சிரிக்கட்டும்.

Sunday, March 9, 2008

ஊர்வலங்களில்.. இஸ்லாம்..

முஹர்ரம் மாத்ததின் 10 நாள்ஆஸூரா நாள் என்று என்று அழைக்கப்படுகிற்து.

ஆஸூரா என்றால் பத்தாவது என்று பொருள். அணைத்து வகை பத்தாவதுகளையும் அது குறிக்கும். 10 வது குழந்தையை ஆஸூரா என்று சொல்லலாம் என்றாலும் முஸ்லிம்களின் வழக்கத்தில் ஆஸூரா என்றால் அது முஹர்ரம் 10 ம் நாளையே பிரதானமாக குறிக்கும்.

இந்தியாவில் அன்று தேசிய விடுமுறை விடபப்டுகிறது. அடுத்த நாள் செய்த்தித் தாள்களில் முஹர்ரம் ஊர்வலங்களைப் பற்றிய செய்திகள் பிரதானமாக இடம்பிடித்திருக்கும். கத்தி போடுதலும் நெஞ்சில் அடித்துக் கொள்ளுதலும் விஷேசமாக காட்டப் படும். இந்த ஆண்டு வித்தியாசமாக முஹர்ரம் தீ மிதியை காட்டினார்கள். காஷ்மீரில் முஹர்ரம் ஊர்வங்களுக்கு தடை விதிக்கப் பட்டிருப்பதையும், தடையை மீற முயன்றவர்களை ராணுவம் விரட்டுவதையும் கூட காட்டினார்கள்.

எனக்கு சிறு வயது முதல் ஒரு சந்தேகம் இருந்த்து. நமது நாட்டில் இஸ்லாமிய வருடப் பிறப்புக்கு விடுமுறை இல்லை. முஹர்ரம் 10 க்கு மட்டும் லீவு விடுகிறார்களே ஏன்? ஒரு வேளை அன்றைய தினம் நாம் நோன்பு வைப்பதாலா? அப்படியானால் 9 ம் நாளுக்கும் அல்லவா விடுமுறை தரவேண்டும்? என்ற கேள்விகளுக்கு விடை தெரிய சில வருடங்கள் பிடித்தது. இந்த விடுமுறை நம்மைப் போன்ற முஸ்லிம்களுக்காக அல்ல. ஷியாக்களுக்காக விடப்பட்ட விடுமுறை இது.

அதற்குப் பிறகு நீண்ட நாட்களாக இன்னொரு ஒரு கேள்வி இருந்த்து. ஷியா என்றால் யார்? இந்த ஊர்வலங்களும் கத்தி போடுதலும் எதற்காக? இந்தக் கேள்விக்கு அந்த வயதில் ஒரு விளக்கம் கிடைத்தது. ஷியா என்பவர்கள் அலியார் கூட்டத்தை சார்ந்தவர்கள். தங்களை முஸ்லிம் என்று நிரூபித்துக் கொள்வதற்காக இதை எல்லாம் செய்து காட்டுகிறார்கள் என்ற கருத்துக் கிடைத்தது. 

இது நக்கல் மிகுந்த ஒரு விமர்ச்சனம் என்பது எனக்கு பின்னாள் புரிந்த்தது. அப்போது அலி(ரலி)யாருக்கும் அவரது மகனும் பெருமானார்(ஸல்) அவர்களின் பேரருமான ஹுசைன் (ரலி) அவர்களுக்கு இந்தக் கூட்டத்திற்கும் எந்த ஒட்டோ உறவோ இல்லை என்பதும்,அவர்களது பெயைர்ச் சொல்லிக் கொண்டு அரசியல் நடத்திய ஒரு பிரிவினர்களே இவர்கள் என்பதும் பின்னர் தெளிவாகிய விசயங்கள்.

அலி (ரலி) அவர்களது குடும்பத்தோடு மாத்திரமல்ல இஸ்லாத்தோடும் கூட அவர்களது தொடர்பு மிக மெலிதானதே! அரசியல் சூழ்ச்சிக்காரர்களால் உருவாக்கப் பட்ட ஒரு அரசியல் பிரிவாக வளரத் தொடங்கிய இவர்கள் காலப் போக்கில் ஒரு சமயப் பிரிவாக அடையாளம் காணப் பட்டாலும் சில மெல்லிய இழைகளே அவர்களயும் இஸ்லாம் என்ற சொல்லையும் பிணத்து வைத்திருக்கிறது. இஸ்லாமிய சமய நம்பிக்கை களிலிருந்தும் அதன் வழிகாட்டுதல் களிலிர்ந்தும் வெகு தூரம் விலகிச் சென்று விட்டார்கள். முஹர்ரம் 10 ம் நாளன்று அவர்கள் செய்து காட்டுகிற வித்தைகளும் விபரீதங்களும் இதற்குச் சான்று

இஸ்லாத்தில் முதன் முதலாக தோன்றிய தீவிரவாதக் குழுவான காரிஜிய்யா எனப் படுவோரால் முஹம்மது (ஸல்) அவர்களின் மகளைத் திருமணம் செய்த அலி (ரலி) அவர்கள் படுகொலை செய்யப் பட்டார்கள் அப்போது ஏற்பட்டஅனுதாபத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட முற்பட்ட ஒரு குழுவினர் உருவாக்கிய தத்துவம் தான் ஷீஇய்யத் எனப்படும் ஷியா தத்துவம். அலி ரலி அவர்களைத் தொடர்ந்து அவரது மகன் ஹுசை (ரலி) அவர்கள் அரசியல் இடைத்தரகர்களின் கொடுஞ்செயலால் ஹிஜ்ரீ 61 ம் ஆண்டு முஹர்ரம் 10 ம் நாள் (கீ.பி .680 அக்டோபர் 10 ) இராக்கில் உள்ள கர்பலா எனும் இடத்தில் படுகொலை செய்யப் பட்டார்கள். அப்போது ஏற்பட்ட் குழ்ப்பத்தை பயன்படுத்தி பெருமளவில் தங்களுக்கு ஆதரவை திரட்டிக் கொண்டார்கள் ஷியா தத்துவத்தின் உற்பத்தியாளர்கள். அந்த ஆதரவை தக்கவைக்கவும் தங்களது கொள்கைய நியாயப் படுத்திக் கொள்ளவும் ஆண்டுதோர்றும் முஹர்ரம் 10 இந்த வேடிக்கை விநோதத்தை அரங்கேற்றி வருகிறார்கள். 

ஆனால் முஸ்லிம் சமுதாயத்தை அல்லாஹ் பாதுகாத்தான். நடந்து விட்ட சோக நிகழ்வுக்காக அவர்கள் வருந்தினாலும் கூட மார்க்கத்தில் ஒரு புதிய பாதையை உருவாக்கும் அரசியல் குறுமதியாளர்களின் சூழ்ச்சிக்குள் அவர்கள் பலியாக வில்லை. இத்தீய சக்திகளை அடையாளம் கண்டு ஒதுக்கினார்கள். இஸ்லாத்தின் தெளிவான வழிகாட்டுதல்கள் இவர்களை அடையாளம் கண்டுகொள்ள வர்களுக்கு உதவியது.

ஆனால் ஹுசைன் (ரலி) அவர்களை தங்களது பிரச்சினையில் இழுத்து விட்டு பிறகு அவரை நட்டாற்றில் சிக்க வைத்து விட்டு ஏமாற்றி விட்டுப் போனவர்கள் தங்களது போலியான பற்றை வெளிப்படுத்திக் கொள்ளவும் அரசிய்ல வளர்சிக்கும் இந்த வழிமுறையே சிறந்த்தது என்று இதை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். அதனால் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகளையு வழிகாட்டு தலையும் பறி கொடுத்தார்கள்.

முஹர்ரம் ஊர்வலங்களின் போதும் அதை தொடர்ந்து நடக்கிற நிகழ்சிகளின் போதும் நடக்கிற விசயங்கள் எதுவும் இஸ்லாமிய விழுமியங்களுக்கோ அதன் வழிகாட்டுத்லுக்கோ உடன்பாடனதோ ஒப்பானதோ அல்ல. மாறாக இஸ்லாம் என்ன சொல்கிறது என்று முழு உலக்மும் புரிந்து வைத்திருக்கிறதோ அதற்கு நேர் மாறானவை.

யாருடைய இறப்பிற்காகவும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் உத்திரவு என்பதும் அதே போல யாருடைய இறப்பிற்காக வும் ஓலமிட்டோ நெஞ்சில் அடித்துக் கொண்டோ சட்டையை கிழித்துக் கொண்டோ அழக்கூடது என்பது இஸ்லாமின் திட்டவட்டமான வழிகாட்டுதல் என்பதும் முழு உலகுக்கும் தெரிந்த உண்மை. எங்கள் தெருவில் உள்ள இந்துப் பாட்டிக்கு கூட யார் சாவுக்கும் முஸ்லிம்கள் ஒப்பாரி வைக்க மாட்டார்கள் என்பது தெரியும்.

இது விசயத்தில் முஹம்மது (ஸல்) அவர்களது வழிகாட்டுதல் தெளிவானது.
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும்(ஆணும்) ஒரு இறப்பிற்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கக் கூடாது. கணவனை இழந்த பெண்ணைத்தவிர அவள் நான்கு மாதம் 10 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்க வேண்டும். ( ஸஹீஹுல் புகாரி 5334)
(துக்கத்தில்) கன்னத்திஅடித்துக் கொள்பவனும், சட்டையை கிழித்துக் கொள்பவனும், அறியாமைக்காலத்து ஒப்பாரி வைப்பவனும் நம்மாச் சார்ந்தவன் அல்ல. (( ஸஹீஹுல் புகாரி 1294)

துக்கத்தில் மொட்டை அடித்துக் கொள்பவனும், ஒப்பாரி வைப்பவனும், சட்டையை கிழித்துக் கொள்பவனும் நம்மைச் சார்ந்தவன் அல்ல. (அபூதாவூது 2733)

இவர்கள் ஆண்டுதோரும் ஹுசைன் (ரலி) அவர்களுக்காக என்று சொல்லிக் கொண்டு அழுகிறார்கள், ஒப்பாரிப் பாட்டு பாடுகிறார்கள். கன்னத்திலும் நெஞ்சிலும் அடித்துக் கொள்கிறார்கள், உடலை கீறிக் கொள்கிறார்கள்.

ஹம்சா (ரலி) அவர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வும், மகன் இபுறாகீம் (ரலி) அவர்களின் இறப்பும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள பெரிதும் பாத்தித்தவை. ஆனால் அதற்காக பெருமானார் இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் எதையும் செய்யவில்லை. அதே போல நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது முஸ்லிம் சமுதாயத்திற்கு அதைவிட்ப் பெரிய துக்கம் எதுவும் இருக்கவில்லை. ஆனால் ஹஜ்ரத் அலி, ஹுசைன் (ரலி) போன்ற முஸ்லிம்கள் எவரும் ஒப்பாரி வைக்கவோ ஓலமிடவோ இல்லை. ஏன் இப்போது கூட ஷியாக்கள் பெருமானாருக்காக அழுவதில்லை. ஹுசைன் (ரலி) அவர்களுக்காக மட்டும் செய்யப்படுகிற இந்த ஆர்ப்பாட்டங்கள் எந்த வகையிலும் இஸ்லாத்தோடு தொடர்புடையது அல்ல. நண்பர் சொன்னது போல குற்ற உணர்ச்சியை மறைப்பதற்காக பரிகாரம் செய்கிறார்களோ என்னவோ! 

காலப் போக்கில் ஷியாக்களில் பல பிரிவிகள் ஏற்படத்தொடங்கியது ஒவ்வொரு பிரிவும் மற்றவர்களைவிட வேகமாக இஸ்லாத்திலிருந்து அன்னியப் பட்டனர்.

பத்ரிக்கைகளுக்கும் மீடியக்களுக்கும் ஷியாக்களின் முஹர்ரம் கூத்துகள் வேடிக்கையாக இருப்பதால் இது போல ஒரு வேடிக்கை முஸ்லிம்களின் மற்ற விஷேசங்களில் இல்லை என்பதால் இதை பெரிதாகக் காட்டுகின்றன. இதன் காரணமாக்வே முஹர்ரம் ஊர்வலங்கள் பிரபலமடைந்தன.

முஹர்ரம் 10 நாளை இஸ்லாம் சிறப்பித்துச் சொன்னதற்கும், அன்றைய தினத்தில் நோன்பு நோற்கச் சொன்னதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஹுசைன் (ரலி) அவர்கள் படுகொலை செய்யப் பட்டதற்கும் நோன்பிற்கும் கூட எந்த சம்பந்தமும் இல்லை. முஸ்லிம்களில் சிலர் அறியாமையினால் முஹர்ரம் 10 ஐ இஸ்லாம் சிறப்பித்துச் சொன்னதை ஹீசைன் (ரலி) அவர்களின் படுகொலையோடு தொடர்பு படுத்தி புரிந்துள்ளனர். குறிப்பாக பெண்கள் பலரும் முஹர்ரம் 10 என்றதும் ஹுசைன் (ரலி) அவர்களையே நினைவு கூறுகின்றனர்.

எதேட்சையாக ஆஷூரா நாளன்றோ அல்லது அதற்கு சமீபத்தில் வருகிற வெள்ளிக்கிழ்மை அன்றோ ஜுமா உரை நிகழ்த்துகிற இமாம்கள் பலரும் கர்பலாவைப் பற்றிப் பேசுகின்றனர். 

கர்பலாவின் சோக நிகழ்வுகளும், அததிலிருந்து சமுதாய்ம் பெற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களும் சொல்லப் பட வேண்டியவை தான் என்றாலும் அது ஆஷூராவின் சிறப்பு குறித்து தவறான புரிதலை ஏற்ப் படுத்துவதால் இந்த சமயத்தில் அதைப் பற்றி பேசுவதை தவிர்க்கலாம். அல்லது இரண்டு விசயத்திற்கும் இடையே எந்த தொடர்புமில்லை என்பதை புரிய வைத்து விட்டு கர்பலாவைப் பற்றிப் பேசலாம். 

அதன் மூலம் இஸ்லாம் ஆஷூரா நாளன்று நோன்புக்கு உத்தரவிடப்பட்ட  பிறகு அறுபது வருடங்கள் கழித்து அதே தினத்தில் ஏற்ப்பட்ட  ஒரு பெரும் விபத்து என்பதை சமுதாயம் புரிந்து கொள்ள வழி ஏற்படும்.

இஸ்லாம் ஆஷூர நாளை சிறப்பித்துச் சொன்னதற்கான காரணம் வேறு. அன்று தான் நபி மூஸா (அலை) அவர்களுக்கும் யூதர்களுக்கும் செங்கடல் பிளந்து வழிவிட்டது அந்த வழியாக அவர்கள் பிர் அவ்னிடமிருந்து தப்பித்தார்கள். மனித சமூகத்தின் பெரு மகிழ்ச்சிக்கும் ஆறுதலுக்கும் உரிய ஒரு விசயத்திற்கு இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே அன்றைய தினம் நோன்பு நோற்கும்படி முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்
முஹம்மது (ஸல்) அவ்ர்கள் மதீனாவுக்கு வந்த போது அங்கிருந்த யூதர்கள் ஆஷூரா நாளன்று நோன்பு வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அதன் காரணத்தை கேட்டார்கள். அதற்கு பதிலளித்த யூதர்கள் ஆஷூரா நாளில் தன் மூஸா (அலை) அவர்களுக்கும் யூதர்களுக்கும் பிர் அவ்னுக்கு எதிராக அல்லாஹ் வெற்றியை அளித்தான் அந்நாளை கண்ணியப் படுத்த்வே தாங்கள நோன்பு நோற்பதாக கூறினர். அப்போது பெருமானார் (ஸல்) அவர்கள் மூஸா (அலை) அவர்களுக்கு நாமே அதிக தகுதியுடையவர்கள் என்று கூறிவிட்டு முஸ்லிம்களையும் நோன்பு நோற்க உத்தரவிட்டார்கள்.

மூஸா (அலை) அவர்களை சொந்தம் கொண்டாட நாமே அதிக தகுதியுடையவர்கள் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியதற்கு அழுத்த்மான காரணம் இருந்த்து.
மூஸா (அலை) அவர்கள் ஒரு நபி. இலட்சியவாதி. கொள்கையாளர்.
லட்சியவாதிகளுக்கு வாரிசுகளாக அவர்களது கொள்கையை கடைபிடிப்பவர்களும் அதை முன்னெடுத்துச் செல்பர்களும் தான் இருக்க முடியுமோ தவிர அவருடைய பிள்ளைகளோ குடும்பத்தினர்களோ அல்ல. தேசத் தந்தை காந்தி, ஒரு இலட்சியவாதி இந்திய மக்களின் முன்னோடி என்றால் அவரது உண்மையான வாரிசுகள் அவரது கொள்கை வழியை பின்பற்றுவோறே தவிர அவருடைய குடும்பத்தினர் அல்ல.குடும்பத்தினருக்கு சொத்தில் பங்கு கிடைக்கலாம். அவரது கொள்கை வழியில் செல்லாமல் அவருக்கு அவர்கள் உரிமை கொண்டாட முடியாது. இந்த நாட்டில் காந்தீய வாதிகளுக்கு கிடைத்த் மரியாதை காந்தியின் சொந்தப் பிள்ளைகளுக்கு கிடைக்கவில்லை அல்லவா? அது போலத்தான் நபிமார்களுக்கும் அந்நபிமார்களது கொள்கையை பின்பற்றுபவர்கள் தான் வாரிசாக உரிமை கொண்டாட முடியும். (நபிமார்கள் சொத்துக்களுக்கு கூட அவர்களது சொந்தப் பிள்ளைகள் வாரிசுரிமை கோரமுடியாது. அது வேறு விசயம்.) அந்த அடிப்படையில் மூஸா (அலை) அவர்களது குடும்பத்தினர் என்ற அடிப்படயில் யூதர்கள் சொந்தம் கொண்டாடுகிறார்கள். ஆனல் மூஸா (அலை) அவர்கள் இறைவனிடமிருந்து பெற்றுக் கொண்டுவந்து கொடுத்த தவ்ராத்தின் நேரிய வழியிலிருந்து அவர்கள் வெகு தூரம் விலகிவந்து விட்டனர். முஹம்மது (ஸல்) அவர்களோ அந்த நபித்துவத்தின் தொடர்ச்சியாக அதே சத்திய நெறிய இன்னும் செறிவாகவும் தெளிவாகவும் போதித்து வந்தார்கள். முஸ்லிம்களோ அன்னாரது வழியை இழை பிசகாது கடைபிடித்து வந்தார்கள் என்வே தான் மூஸா (அலை) அவர்களை சொந்தம் கொண்டாட நாமே அதிக அருகதை உடையவர்கள் என்று கூறிய முஹம்மது (ஸல்)அவர்கள் ஆஷூரா தினத்தில் நோன்பு வைக்கும் படி உத்தர்விட்டார்கள். மற்றொரு சந்தர்ப்பத்தில் யூதர்களிடமிர்ந்து முஸ்லிம்களின் நட்வடிக்கைய வேற்படுத்திக் காட்டுவதற்காக முஹர்ரம் 9 ம் நாளும் நோன்பு வைக்கச் சொன்னார்கள்.

மூஸா (அலை) அவர்கள் பிர் அவ்னிடமிருந்து பாதுகாக்கப் பட்ட வரலாறு மனித வரலாற்றின் மிக முக்கியமான ஒரு அத்தியாய மாகும். ஆச்சரியங்கள் நிறைந்த உலக நடப்புக்களில் அது மகா ஆச்சரியாமான நிகழ்வு.

மூஸா (அலை) அவர்களை நம்பி அவரது சொல்லுக்கு கட்டுப்பட்டதற்காக மரணத்தின் விளிம்பில் நின்று கொண்டுருந்த 6 லட்சம் யூதர்கள் சில மணித்துளிகளில் இன்றுவரை வாழ்கிற மனிதர்கள் வாய் பிளந்து ஆச்சரியப் படும் வகையில் கடல் பிளந்து காப்பாற்றப் பட்டார்கள். அவர்கள் காப்பாற்றப் பட்ட அதே வேகத்தில் எகிப்து நாட்டு கொடுங்கோல் மன்னன் பிர அவ்னும் அவனது லட்சக்கணக்கான் படையினரும் கண்மூடித்திறப் பதற்குள் நீரல் மூழ்கடித்து அழிக்கப் பட்டார்கள்.

கீ.மு 1447 ம் ஆண்டு நடந்த்தாக ஆய்வாளர்கள் கனித்துச் சொல்கிற இந்நிகழ்சி , (ஜவாஹிருல் குரான் – தமிழ் தப்ஸீர். முதல் பாகம் பக்கம் 197. - வேலூர், அல் பாகியாதுஸ் ஸாலிஹாத் வெல்ளியீடு) 3500 வருடங்களுக்கு முந்தியதாக இருந்தாலும், இன்றளவும் வாழ்கிற இறை நம்பிக்கையாளர்களுக்கும், இனி யுக முடிவு நாள் வரைக்கும் பிறக்கப் போகிற அனைத்து இறை நம்பிக்கையாளர்களுக்கும், ஒடுக்கப் படுவோருக்கும், சிறுபான்மையினருக்கும் உறுதியையும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் மகிழ்சியையு தருகிற செய்தியாகும்.

இறைவனை நம்பக் கூடியவர்கள் சோதனையின் விளிம்பில் கூட எவ்வாரெல்லாம் காப்பாற்றப் படக்கூடும் என்ற பாடத்த தருகிற அதே சமயத்தில் அக்கிரமக்காரர்கள் எத்தகைய வலிமையாயிருக்கிற நிலையிலும் ஒரு நாள் வீழ்த்தப் படுவார்கள் என்ற எச்சரிக்கையையும் இந்த நிகழ்சி தருவது போல இன்னொரு நிகழ்சி தரமுடியாது.

மூஸா (அலை) காப்பாற்றப் பட்டார்கள் என்பத்தை மட்டுமல்ல் மனித வாழ்வின் செம்மையான போக்குக்கு மிகச் சிறந்த வழிகாட்டுதலை இந்நிகழ்சி தருகிறது என்பதையும் சேர்த்து எண்ணிப்பார்த்து நோன்பு வைத்தால் அந்த நோன்பின் அர்த்த பரிமாணம் கனமானதாக இருக்கும் கத்தி வீசும் காரியங்களை விட.

நல்லதொரு குடும்பம்

ஹஜ்ஜுப் பெருநாள் முடிந்துவிட்டால் கூட அதன் அடையாளங்கள் சட்டென்று மறைந்து விடுவதில்லை. மலர் வாடினாலும் மணம் வீசுவது போல அதன் வாசனை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள் என்ற திருக்குர் ஆனின் 2.203 வசனத்திற்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் தருகிற விளக்கத்தின்படி துல் ஹஜ் 10 ம் நாளாகிய பெருநாள் தினமும் அதை தொடர்ந்து வருகிற மூன்று நாட்களும் அய்யாமுத்தஷ்ரீக் எனப்படுகிறது. அந்நாட்களில், கூட்டுத்தொழுகைகளுக்குப் பின் தொடர்ந்து ஓதப்படிகிற தக்பீரின் ஒலியால் முஸ்லிம் மஹல்லாக்களில் உற்சாகமும் பக்திப்பரவசமும் படர்கிறது. அது மட்டுமல்ல முஸ்லிம்களின் வீடுகள் தோரும் குர்பானி இறைச்சி சுக்க வைப்பதற்காக தோரணங்கட்டி தொங்கவிடப் பட்டிருக்கும். அய்யாமுத்த்ஷ்ரீக் என்ற வார்த்தைக்கான பொருளே குர்பானி இறைச்சியை உலர வைக்கிற நாட்கள் என்பது தான். அந்த காய்ந்த இறைச்சி அடுத்த காலாண்டுகளுக்காவது ஹஜ்ஜுப் பெருநாளை நினைவு படுத்திக் கொண்டிருக்கும்.
சில பகுதிகளில் ஹஜ்ஜுப் பெருநாளை பெரிய பெருநாள் என்றும் குறிப்பிடுவதுண்டு. அது எதனால் என்பது ஒரு ஆராய்சிக்குரிய விசயம் தான். ஒரு நாளோடு முடியாமல் பல நாட்களுக்கு தொடரும் அதன் அடையாளங்களாலா? அல்லது பெருந்தகை ஹஜ்ரத் இபுராஹீம் (அலை) அவர்கள் நினைவு கூறப்படுகிற நாள் என்பதாலா? என்ற கேள்விகள் தொடர்ந்தால் அதில் பல சுவையான தகவல்கள் கிடைக்கலாம். எப்படி இருப்பினும் ஹஜ்ஜுப் பெருநாள் அந்தப் பெயருக்கு பொருத்தமான நாள்தான்.
ஈதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாளை விட ஈதுல் அள்ஹா எனும் ஹஜ்ஜுப் பெருநாள் தருகிற செய்திகளும் அது தருகிற சிலிர்ப்பூட்டும் உணர்வுகளும் பெரியது தான். பெரியது மாத்திரம் அல்ல, ஏராளமானதும் கூட. ஏராளமானது மாத்திரம் அல்ல தொடர்ச்சியானதும் கூட.
இன்றிலிருந்து சுமார் 4167 வருடங்களுக்கு முன்னாள் இராக்கிலிருந்து புலம் பெயர்ந்து சிரியாவிலும் பின்னர் மக்காவிலுமாக வாழ்ந்த ஒரு சிறு குடும்பத்தின் கதையை பன்னூறு தலைமுறைகளுக்கு அப்பாலும் வரலாற்றின் வேகமும் விசித்திரங்களும் நிறைந்த ஓட்டங்களை வென்று வாழும் படி செய்து கொண்டிருப்பதனால் சந்தேகத்திற்கிடமின்றி ஹஜ்ஜுப் பெருநாள் பெரிய பெருநாள் தான்.
அந்த்ச் சிறு குடும்பம் ஹஜ்ரத் இபுறாகீம்அவரது மனைவி ஹாஜரா குழ்ந்தை இஸ்மாயீல் (அலை) ஆகிய மூவரைக் கொண்டது. இந்தக் குடும்பத்தில் நடந்த எதேச்சையான விசயங்களும் அது சந்தித்த சிரமங்களும் வாழையடி வாழையாய் மனித சமூகம் அனுபவிக்க வேண்டிய கடமைகளாக மாறின.
ஒரு சிறு குடும்பத்தின் வாழ்க்கை தலைமுறைகளைத் தாண்டி நிலைக்கவும் பின்பற்றப்படவும் காரணமாக அமைந்த விசய்ங்களை மிகுந்த அக்கறையோடு கவனிக்க மனித சமூகம் கடமைப் பட்டிருக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் பெரும் பாலோருக்கு சிறு குடும்பம் தான். ஆனால் அச்சிறு குடும்பத்தின் தேவைகளுக்காகவும் சுக வாழ்வுக்காகவும் மனித சமூகம் இழக்கிற மனிதத்தன்மையும் நிகழ்கிற கொடுமைகளும் அதிகம். மிக அதிகம்.
ஒரு இன்ஷியல் மாற்றத்திற்காக வரும் மாணவரிடம் 50 ரூபாய் வசூலிக்கிற சாதாரண குமாஸ்தாவிலிருந்து பாராளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக 500000 லட்சம் வசூலிக்கிற மக்கள் பிரதிநிதி வரை லஞ்சம் வாங்குகிறார்கள். அது எதற்காக என்று கேட்டுப்பார்த்தால் எல்லாம் குடும்பத்திற்காகத்தான் என்று பதில் வரும்.
குடும்பத்தின் சுக வாழ்வுக்காகவே தேயிலையிலிருந்து தேன் வரை ஒவ்வொன்றிலும் கலப்படம் அல்லது எடை குறைவு செய்கிறார் வியாபாரி.
கொலை கொள்ளை போன்ற கொடுஞ் செயல்கள் செய்கிற குண்டர்களை விசாரித்தால் குடும்பத்தை காப்பாற்று வதற்காகவே இத்த்னையும் செய்வதாக கூறுகிறார்கள்.
ஆபாசமாக நடிக்கிற நடிகைகளை அல்லது மோசமான நடத்தை கொண்ட பெண்களிடம் கேட்டால் குடும்த்திற்காகவே இவ்வாறு வாழ்வதாக சத்தியம் செய்வார்கள்.
தேசத்தை கட்டிக் கொடுக்கிற ஈனச் செய்லில் ஈடுபடுபவர்களை பிடித்து விசாரித்தால் குடும்பத்தின் நன்மைக்காவே இந்த கொடுமையை செய்ய நேர்ந்தது என்று புலம்புவார்கள்.
அவர்களது குடும்பம் எவ்வளவு பெரிது என்று விசாரித்தால் எண்ணிக்கை 5 விரல்களை தாண்டாது. தனது சிறு குடும்பத்தின் தேவையை பெரிது என்று கருதுபவர்கள் பல சமயத்திலும் சமுதாயத்திற்கு மிகப் பெரும் தீமைகள இழைத்து விடுகிறார்கள்.
அத்தோடு அவர்களது மனிதப்பண்பையும், கண்ணியத்தையும், சுய கவுரவத்தையும் கூட இழந்து விடுகிறார்கள்.
இதற்கு அவர்களது குடும்பத்தினரும் உடந்தையாகவே உள்ளனர். அல்லது கண்டுகொள்வதில்லை.
குடும்ப வாழ்வில் நீதி, தர்மம், சுய மரியாதை ஆகிய பண்புகளை கவனத்தில் கொள்கிற மனைவி அல்லது குழ்ந்தைகளின் எண்ணிக்கையும் குறைவாக்வே இருக்கிறது.
கலீபா உமர் (ரலி) காலத்தில் நடந்த்தாக ஒரு செய்தி சொல்லப்படுவதுண்டு. ஒரு பால் வியாபாரியின் வீட்டில் ஒரு உரையாடல் நடக்கிறது. பாலில் தண்ணீரை கலக்குமாறு அந்த வீட்டின் தலைவி கூறுகிறார். அவர்களது மகளோ அதை மறுத்து, அம்மா கலீபா உமர் அவர்களுக்கு விசயம் தெரிந்தால் கடுமையாக கோபித்துக் கொள்வார்கள் கலப்படம் செய்யாதே என்கிறாள். உமர் இப்போது நம்மை பார்த்துக் கொண்டா இருக்கிறார்? என்று தாய் கேள்வி கேட்க, அம்மா உமர் பார்க்காவிட்டாலும், நம்முடைய இறைவன் பார்த்துக் கொண்டல்லவா இருக்கிறான் என்று மகள் சொன்னாராம்.
இப்படி ஒரு இல்லம் வரலாற்று பக்கங்களில் மட்டுமே வாசிக்கக் கிடைடக்கிறது. இன்றைய வாழ்வியல் போங்கிலோ, எப்படியாவது சம்பாதித்துக் கொடு என்று கேட்கிற மனைவி, என்ன செய்தாவது வசதிகளை செய்து கொடு என்று கேட்கிற பிள்ளைகள் இருக்கிற போது ஒரு சிறு குடும்பமே பெரும் சமுதாயச் சீரழிவிற்கு போதுமானதாக இருக்கிறது. கும்பகோணத்தில் ஒரு பள்ளிக் கூடத்தில் நூற்றுக் கணக்கான குழ்ந்தைகள் எரிந்து சாம்பலனதின் பின்னணியில் ஏதோ ஒரு அதிகாரி லஞ்சம் பெற்றுக் கொண்டு கொடுத்த அனுமதிதான் காரணம் என்பதை அறியும் போது ஒரு குடும்பத்தின் மதிப்பீடற்ற வாழ்க்கை காரணமாக நிகழக்கூடிய ஆபத்தின் கனபரிமாணத்தை உணர முடியும்.
இந்த சூழ்நிலையில் குடும்பத்திற்காக தனது உயர்தரமான பண்புகளை விட்டுக் கொடுக்காத இலட்சியத் தந்தையாக ஹஜ்ரத் இப்றாகீம் (அலை) அவர்கள் திகழ்ந்த வரலாற்றை ஹஜ்ஜுப் பெருநாள் மிக அழுத்தமாக நினைவூட்டுகிறது.
இபுறாகீம் (அலை) அவர்களது குடும்ப வாழ்வு ஒரு திட்டமிட்டநோக்கில் அமைந்த்தாகவும் உயர்ந்த எதிர்பார்பை கொண்டதாகவும் இருந்தது.
இறைவா! என்னையும் என்னுடைய குடும்பத்தையும் வணக்க வழிபாடுகளை நிலை நிறுத்துபவர்களக ஆக்கு! (அல்கு ஆன் 14:40) என்ற அவரது பிரார்த்தனை அவரது வாழ்கையின் இலட்சியத்தை எடுத்துக் கூறுகிறது என்றால், '',wtNd! eP vdf;F Qhdj;ij mspg;ghahf. NkYk;> ey;ytHfSld; vd;idr; NrHj;J itg;ghahf! ,d;Dk;> gpd; tUk; kf;fspy; vdf;F eP ew;ngaiu vw;gLj;Jthahf! (26:84>) என்ற அவரது பிரார்த்தனை அவரது குடும்பம் பிற்கால சமுதாயம் போற்றும் வண்ணம் புகழ்பூத்ததாக விளங்க வேண்டும் என்ற உன்னதமான எதிர்பார்ப்பை புலப்படுத்துகிறது.
ஒரு பார்வைக்கு ஒரு தந்தையாக அவரது சில நடவடிக்ககள் கருணைக் குறைவானதாக, நெகிழ்சி அற்றதாக தோன்றினாலும் கூட அது புறத்தோற்றமே தவிர எதார்த்தமல்ல. ஒரு இலட்சிய வேகம் கொண்ட மனிதரின் உறுதியின் கடுமை சில வேளைகளில் அவரது நடவடிக்கயில் வெளிப்படும். அந்த நடவடிக்கையை அந்த பின்புலத்தோடுதான் மதிப்பிட வேண்டும். ஒரு திரட்சியான வீரன் அவனது மனைவியை ஆசையோடு அணைக்கையில் சில வேளைகளில் அது அவளை நோகச் செய்யக் கூடும். ஆனால் அந்தக்கடுமை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படது அவனது ஆசைதான் கவமிக்கப் படும்.அது போலவே இபுறாகீம் அலை அவர்களின் கடுமயான நடவடிக்கை களை அவரது கொள்கை உறுதிப்பாட்டின் பின்னணியில் தான் கவனிக்க வேண்டும். ஒரு இறைவனை உணர்ந்து கொண்ட பிறகு, அந்த இறைவனுக்கு கட்டுப்படுகையில் ஏற்படுகிற எந்தச் சிரமமும் சுகமானதாக்வும் நன்மையானதாக்வும் மாறுவதை அனுபவித்து அறிந்த பிறகு ஒரு தெளிவான மனிதரின் செயல்பாடுகள் இப்படித்தான் இருக்க முடியும். இவ்வாரன்றி வேறெப்படி இருக்க முடியும்?
ஹாஜ்ரா அம்மையாரையும் குழ்ந்தை இஸ்மாயீலையும் பாலை வனப் பொட்டல் வெளியில் தனியாக விட்டு வரும்போதாகட்டும், மகனை அறுப்பதற்காக கத்தியை தீட்டிய போதாகட்டும் இபுறாகீம் அலை அவர்களிடமிருந்து வெளிப்படுவது நம்ரூதின் நெருப்புக்குண்டத்தில் வீசப்பட்ட போது தனது வாழ்வைப் பற்றிய எந்த உறுதிப்பாடு அவருக்கு இருந்ததோ அதே உறுதி தான்.
இறைவனின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்ட வாழ்கயில் எந்த அர்ப்பணிப்பும் வீணாவதில்லை. அது மேலும் நன்மையை கொண்டுவருகிறது. மேலும் மகிழ்ச்சியை தருகிறது என்பதை அனுபவித்து உணர்த மனிதர் சோதனை களங்களில் தயக்கமின்றி பங்காற்றுவார். அவர் கருணையற்றவரோ, நொகிழ்வுத்தன்மை இல்லாதவரோ அல்ல. அவர், தனது இறைவன் எந்த உத்தரவை சொன்னாலும் அது நன்மையானதாகத்தான் இருக்கும். அந்த உத்தரவிற்கான தூர நோக்கு உடனடியாக புரியாவிட்டாலும் கூட அதில் சம்பதப்பட்ட யாரும் நஷ்டத்திற்குள்ளாக மாட்டார்கள் என்பதை உள்ளம் நிறைய உறுதி கொண்டிருப்பவர் என்றே அவரது நடவடிக்ககளுக்கு பொருள் கொள்ள வேண்டும்.
முஸ்லிம் குடும்பத்தலைவர்களுக்கு ஹஜ்ஜுப் பெருநாள் தருகிற அழுத்தமான செய்தி இது. ஏதோ குடும்பம் அமைந்து விட்டது எப்படியாவது நாமும் வாழ்ந்து நமது குடும்பத்தையும் மகிழ்சியாக வாழவைத் விட்டு போய்ச் சேருவோம் என்று நினைப்பவர்கள் தங்களது வாழ்க்கையை மதிக்கத் தெரியாதவர்கள். தமது குடும்பத்தின் மரியாதையை பற்றி அக்கறையற்றவர்கள் என்று பொருள். ஒரு முஸ்லிம் குடும்பத்தலைவர் இப்படி இருக்கமாட்டார். அவரிடம் குடும்பத்தின் மகிழ்சி குறித்த அக்கறை இருக்கிற அளவு இறைவனுக்கு கட்டுப்படுதல் குறித்து தெளிவும் உறுதிப்பாடு இருக்கும்.
ஒரு குடும்பத்தலைவனிடத்தில் இத்தகைய உறுதி எத்தனை சதவீதம் இருக்கிறதோ அந்த அளவு அவரது குடும்பம் நல்ல குடும்பமாக இருக்கும். அந்த குடும்பத்தின் பயணப் பாதையில் இடையில் சில சிரமங்கள் இடறினாலும் கூட சுகமான ஒரு எதிர்காலம் கட்டாயம் கிடைக்கும். வாழும் சமூகத்தில் அந்தக் குடும்பம் ஒரு வெளிச்சமான இடத்தை பெரும்.
ஒரு குடும்பத்தலைவனிம் உறுதியும் கண்டிப்பும் வெளிப்படையாகவும் பாசம் அவனது நெஞ்சுக்கள்ளேயும் இருக்க வேண்டும். ஒரு லட்சியக் குடும் பத்தை வழி நடத்த அது உத்வும்.
நபி இபுறாகீம் (அலை) அவர்களிடம் உற்தியும் கண்டிப்பும் வெளிப்படையாக இருந்தது.பாசம் மனதுக்குள் இருந்த்து. அதனாலேயே மனைவி ஹாஜரா அம்மையாரையும் குழந்தை இஸ்மாயீல் அலை அவர்களையும் பாலைவனத்தில் விட்டு விட்டு நகர்ந்த்தும் அந்தப் பாசம் அவரை இறைவன நோக்கி கையேந்த வைத்தது.
எங்கள் இறைவனே! நான் எனது குடும்பத்தை விவசாயமற்ற ஒரு பள்ளத்தாக்கில், கண்ணியம் மிகுந்த உன் வீட்டின் அருகே வசித்திருக்கச் செய்து விட்டேன். வணக்க வழிபாட்டை நிலை நிறுத்துவதற்காக அவ்வாறு செய்தேன். மக்களின் ஒரு சாராரின் இதயத்தை அவர்களை நோக்கி நீ திருப்பி விடு! கனி வகைகளை அவர்களுக்கு உணவாக வழங்குவாயாக! அவர்கள் உனக்கு நன்றி செலுத்துவார்கள். (அல்குர் ஆன் 14:37)
பிரம்மிப்பூட்டும் வகையில் இறைவன் அவரது பிரார்த்தனை அங்கீகரித்தான். பாலை வனத்தில் விடப்பட்ட அவரது அந்தக் குடும்பம் மாத்திரமல்ல ஆயிரமாயிரம் வருடங்களுக்கு அப்பாலும் அங்கு வந்து சேர்கிற லட்சக்கணக்கான குடும்பத்தினரை பலைவனத்தில் தாகத்தல் தவித்துப் போய்விடத வாரும், பசியால் வாடிப் போய்விடாத வாரும் பாதுகாத்து வருகிறான். ஆண்டு தோரும் லட்ச்க்கணக்கானோரை அந்த இடத்தை நோக்கி திருப்பி விடுகிறான்.
ஒரு குடும்பத் தலைவனின் உன்னதமான லட்சியமும் அந்த லட்சியத்தை முன்னெடுத்துச் செல்வதில் அவர் காட்டுகிற உறுதிப்பாடும் அவர் வென்றெடுக்கிற சோதனைகளும் அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் எத்தகைய இரவா புகழைத் தேடித்தரக் கூடியது என்படற்கு இபுறாகீம் (அலை) அவர்களது குடும்பம் மிகச்சிறந்த உதாரணம்.
மனைவியை துணைவி என்றும் சொல்வதுண்டு. காதல் ஒருவனை கைப்பிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து அவள் வாழ்வதால் இந்தப் பெயர் வந்தது. இந்தப் பெயர் இபுறாகீம் நபியின் இரண்டாவது மனைவி அன்னை ஹாஜரா அம்மையார் அவர்களுக்கு பொருந்துவது போல மற்றெவருக்கும் பொருந்த்துவது அரிது. தனது கணவரின் எண்ணவோட்டத்தை மிகச் சரியாக புரிந்து கொண்டு அதற்கேற்ப வாழ்ந்த மிக அற்புதமான குடும்பத் தலவியாக அன்னை ஹாஜரா அவார்கள் திகழ்கிறார்கள். ஆள் ஆரவாரம்ற்ற பாலை வனத்தில் கொண்டு வந்து, பச்சைக் குழந்தையோடு தனியே விட்டு விட்டு, வந்த வழியே புறப்படுகிற கணவரைப் பார்த்து இது இறைவனின் திட்டமா என்று கேட்ட ஒரு கேள்வியில் ஹாஜர அன்னையின் அறிவாற்றல், பக்தி, துணிச்சல், தெளிவு, உடன்பாடு, ஆகிய அனைது அம்சங்களும் வெளிப்பட்டன.
மனைவி என்றால் மிக அதிகமாக பேசுபவர் என்பது தான் மனித அகராதி சொல்லுகிற பொருள்.ஆனால் அன்னை ஹாஜராவோ மிக குறைவாக பேசிய அந்த ஒரு கேள்வியில் மனித வரலாற்றில் மிக ஆழமாக தனது தடத்தை பதிவு செய்து விட்டார்கள்.அந்த அன்னையின் மொத்தப் பண்புகளும் அந்த ஒரு கேள்வியில் உருவம் பெற்றுவிட்டது.
இறைபக்தியும் அறிவும் துணிச்சலும் ஒரு சிறந்த குடும்பத்த்லைவிக்கான இலக்கணங்கள் என்ற செய்தியையும் ஹஜ்ஜுப் பெருநாள் சுமந்து வருகிறது. அன்னை ஹாஜரா அம்மையாரைப் பற்றிய நினைவுகள் இந்தபப் பாடத்தை தருகின்றன. முஸ்லிம் குடும்பத்தலைவிகள் இந்த மூன்று அம்சங்களிலும் தங்களது தரத்தை பரிசீலனை செய்து கொண்டால் இன்றைய முஸ்லிம் குடும்பங்களில் இருக்கிற ஏராளமான சீர்கேடுகளை கலைந்து விட முடியும்.
உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல. அவை இறைவன் உங்களுக்கு வழங்கிய கொடைகள் என தத்துவ அறிஞர்கள் கூறுவதுண்டு. தனக்கு கொடையாகத் தருமாறு இபுறாகீம் (அலை) இறைவனிடம் கேட்டுப் பெற்ற பிள்ளை தான் ஹஜ்ரத் இஸ்மாயீல் (அலை) அவர்கள்.அவர் தான் இந்தப் புனிதக் குடும்பத்தின் மூன்றாவது பிரஜை.
உனக்காக நான் என் தலையையே தருவேன் என்று பேசுபவர்களப் பார்த்திருப்போம். பத்து ரூபாய் கடன் கேட்டு விட்டால் பிறகு தலையையே காட்டமாட்டார்கள். செந்தப் பிள்ளகள் கூட அப்படி அமைந்து விடுவதுண்டு. காலில் தூசி படாதவாறு தோளில் சுமந்து சென்ற தந்தையை அவர் கண்ணில் பூ விழுந்திருக்க்கிற போது அவரது விரல் பிடித்துச் செல்லத் தயங்குகிற காட்சிககள் ஒன்றும் அரிதானதல்ல.
ஆனால் நபி இபுறாகீம் (அலை) அவர்களது அன்புப் பிள்ளையோ தந்தையின் கனவை - பெற்ற பிள்ளையையே அறுத்துப் பலியிடும் கனவை - நனவாக்குவதற்காக உண்மையிலேயே தலையை தரிக்கக் கொடுத்தார். தந்தையே! உங்களது கனவு மெய்ப்பட நான் ஒத்துழைப்பேன். அறுங்கள்! நான் குப்புறப் படுத்துக் கொள்கிறேன்.என்றார்.அல்குர் ஆன் :37:102,1030)
ஒரு நல்ல மகனது இலட்சணத்தை இஸ்மாயீல் (அலை) அவர்கள் வழியாக ஹஜ்ஜுப் பெருநாள் சமுதாயத்திற்கு அடையாளப் படுத்துகிறது. பெற்றோரை புரிந்து கொண்டு அவர்களுக்கு கட்டுபடுவதும் அவர்களது பணிகளில் அவர்களுக்குத் துணை நிற்பதும் அவர்களது பெருமையை பாதுகாக்க தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வதே நல்ல குழந்தையின் இலக்கணம் என்பதை தனது ஒவ்வொரு செயலிலும் நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.
இஸ்மாயீல் (அலை) அவர்களின் கட்டுப்பாடு மெச்சப்படுகிற அதே நேரத்தில் அவரது அம்மாவின் வளர்ப்பும் கவனிக்கப் பட வேண்டும். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதை தாயின் வளர்ப்புதான் தனயனிடம் ஏற்படுத்தும். ஹாஜரா அம்மையாரின் வளர்ப்பின் வாலிப்பான அனுபவமாகவே இஸ்மாயீல் (அலை) திகழ்கிறார்கள். தந்தை ஒன்றை சொல்லும் போது, அது கிடக்குது போ! நீ போய் உன் வேலையை பாரு! என்று சொல்லுகிற அனனையாக ஹாஜரா அம்மைமயார் இருக்கவில்லை என்பதையே வரலாறு காட்டுகிறது.
ஏதாவது நல்ல குழந்தைகளை பார்த்துவிட்டால் தாய்க்குலம் பெருமுற ஒரு வார்த்தையுண்டு. இது வல்லவோ பிள்ளை? எனக்கும் இருக்கிறதே நான்கு நாரப்பிள்ளைகள்!
இப்படிப் பேசிவோர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கைய ஒரு முறை யோசித்து விட்டுப் பேசுவது நல்லது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான மார்க்கத்தில் தான் பிறக்கின்றன.பெற்றோர்கள் தாம் அவற்றை யூதர்களாக்வோ கிருத்துவர்களாகவோ திருப்பிவிடுகிறார்கள். (ஸஹீஹுல் புஹாரி 1385)
ஒரு பெற்றோரின் பிரதான கடமை தங்களது பிள்ளைகள் தங்களால் சீர்கெட்டுப் போய்விடாதவாறு பார்த்துக் கொள்வது என்ற எச்சரிக்கையை இது தருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஹஜ்ஜுப் பெருநாள் ஒரு நல்ல குடும்பத்தின் வரலற்றை நினவூட்டி உலக மக்கள் அனைவரும் தமது குடும்பத்தை சீர்தூக்கிப் பார்த்துக கொள்ளும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. குடும்பத்தலைவனிடத்தில் உறுதி, குடும்பத்தலவியிடத்தில் தெளிவு, குழந்தைகளிடம் கட்டுப்பாடு என்ற மூன்று அம்சங்களும் ஒரு நல்ல குடும்பத்திற்கான இலக்கணங்கள் என்பதை ஹஜ்ஜுப் பெருநாள் தனக்கே உரிய சிலிர்ப்போடு சொல்லிச் சொல்கிறது.
ஹஜ்ஜுப் பெருநாள் நினைவூட்டுகிற இபுறாகீம் நபியின் குடும்பத்தின் வரலாற்றை படித்து விட்டு, எனக்கும் இப்படி ஒரு குடும்பம் அமையாதா? என்று ஏக்கப் பெருமூச்சு விடுபவர்களுக்கும் ஒரு வழியை ஹஜ்ஜுப் பெருநாள் காட்டுகிறது. அல்லாஹ்வை முன்னிருத்துவோருக்கு, அவனையே பெரிதென்று நினப்போருக்கு, நல்ல லட்சியமும் அதில் உறுதிப்பாடும் உள்ளோருக்கு நல்ல குடும்பத்தை அல்லாஹ் அமைத்துத் தருவான்.
உங்களுக்கு?

இந்தத் தலைமுறையோடு

1998 ம் ஆண்டு சிந்தனைச் சரம் ஏப்ரல் மாத இதழில் கோவையில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவங்கள், அதன்பிறகு நிகழ்ந்த கலவரங்கள் தொடர்பாக விரிவாக ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது. அன்றைய கால கட்டத்தில் சீலிடப்பட்ட ஒரு நகராக இருந்த கோவையை பற்றியும், அங்கிருந்த முஸ்லிம்களின் வாழ்கையை சீரழித்ததில் காவல் துறைக்கு நிகராக முஸ்லிம் அமைப்புக்கள் குறிப்பாக த.மு.மு.க அமைப்பின் பங்கு குறித்தும் விரிவான பல தகவல்கள் அதில் வெளியிடப்பட்டிருந்தன. தமிழகத்தில் மட்டுமல்லாது உலகம் முழவதிலும் அக்கட்டுரை குறித்து பரவலாக விவாதிக்கப்பட்டது.கோவை நகரம் சந்தித்த முந்தய கலவரங்களுக்கும் இக்கலவரங்களுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருந்தது. இக்கலவரங்களில் முஸ்லிம்களின் சொத்துக்கள் பரவலாக நிர்மூலப்படுத்தப்பட்டன. அதில் இந்துப் பொது மக்கள் பலரும் பங்கேற்னர். அத்தோடு முஸ்லிம்களின் மீது அனுதாபப்படுவோர் குiறாவகவும் ஆத்திரப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாகவும் மாறியிருந்தது.குண்டு வெடிப்பிற்காக அல்உம்மா அமைப்பின் மீது குற்றம் சாட்டப்பட்டது என்றால் கோவை நகரத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான பரவலான ஒரு வன்மம் பிற சமூக மக்களிடத்தில் பரவு வதற்கு த.மு.மு.க வினரின் அடாவடிப் போக்கும் பக்குவமற்ற நடவடிக்கைககளும் தான் காரணம் என்பதை அக்கட்டுரையில் விவரித்திருந்தேன். அது எனக்கேற்பட்ட அனுபவத்தின் வெளிப்பாடு.நான் இமாமாக பணியாற்றிக் கொண்டிருந்த பீளமேடு பகுதியில் பிரபலமான பல கல்லூரிகள் அப்பகுதியில் இருப்பதால் கனிசமானோர் தொழுகை;கு வந்தாலும் கூட முஸ்லிம் குடும்பங்கள் மிகவும் குறைவு. பள்ளிவாசலை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள் 10 க்கும் குறைவான குடும்பங்களே இருந்தன. அவர்கள் பாரம்பரியமாக இந்துக்களுடன் சகஜ உறவை பேணி வந்தனர். நடைபாதையில் பழவண்டி வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்த இரண்டு த.மு.மு.க வினரால் அந்தப் பகுதியில் நிலவிவந்த அந்த சௌஜன்யம் குலைந்து வந்ததை நான் அன்றாடம் உணர்ந்து வந்தேன். உச்சகட்டமாக டிசம்பர் 6 சென்னையில் தொழுகை என்ற விளம்பரத்தை மிகப் பெரிய அளவில் அங்குள்ள ஒரு மில் சுவற்றில் எழதி வைத்தனர். அங்குள்ள மரங்களில் எல்லாம் விளம்பர வாசகங்களை தொங்க விட்டிருந்தனர். அந்தத் தெருக்களில் ஒரு நூறுபேர் நடந்து சென்றார்கள் என்றல் அதில் இரண்டுபெராவது முஸ்லிமாக இருப்பார்களா என்பது சந்தேகம். அப்பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு அது பெரும் மன சஞ்சலத்தை ஏற்படுத்தி இருந்தது. அவர்களோ மற்றவர்களோ கூட எதையும் வெளிப்படுத்த வில்லை. அப்போதைய காவல் துறையும் அரசாங்கமும் த.மு.மு.க வினரை கண்டு கொள்ளாமல் இருந்தது. ஏனெனில் முஸ்லிம்கள் கணிசமாக வாழ்கிற பகுதிகளிலிருந்து ஒரு கூட்டமாக திரண்டுவந்து ஆக்ரோஷமாக பிரச்சினை செய்வது அவர்களது வாடிக்கையாக இருந்தது. பீளமேட்டிலிருந்த அந்த இரண்டு இளைஞர்களும் தஙர்கள் மட்டுமே இந்த உலகில் இஸ்லாமை காப்பாற்றுவதற்காக பிறந்தவர்கள் என்பது போல நடந்து கொண்டனர். ஆவர்களுடைய மொத்த துணிச்சலுக்கும் காரணம் அவர்களுக்குப்பின்னால் முஸ்லிம் பகுதியில் இருசக்கர வாகண வசதி கொண்ட ஒரு கூட்டம் மின்னல் வேகத்தில் வந்து செர்ந்த விடும் காவல் துறை கடுமையாக நடந்து கொள்ளாது என்ற எண்ணம் தான.1998 பிப்ரவரி 14 ம் தேதி குண்டு வெடித்த போது அங்கிருந்த பள்ளிவசால் உடைக்கப்பட்டது முஸ்லிம்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. சொத்தக்கள் சூறையாடப்பட்டன. அந்த இரண்டு இளைஞர்களும் அன்று அங்கிருந்து ஓடியவர்கள் தான். பிறகு அந்தப் பகக்ம் தலைகாட்டவில்லை. கோவை நகரம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவே இரண்டு வாரம் பிடித்தது.முஸ்லிம்கள் கனிசமாக வாழந்து காலி செய்த ஒரு பகுதியிலலே கூட நான்கு வாரங்கள் ஜும்அ தொழுகை நடக்கவில்லை. ஆனால் பீளமேடு பகுதி பொது மக்கள் மிக விரைவாக செயல்பட்டு சுற்றியிருந்த இந்துக்களுடன் நல்லுறவை பலப்படுத்தி மிக விரைவாக பள்ளவிhசலில் தொழுகையை தொடர்ந்தனர். சனிக்கிழமை இஷா தொழுகை நிறுத்தப்பட்ட பள்ளிவாசலில் செவ்வாய் கிழமை லுஹர் தொழுகையிலிருந்து தொழுகை தொடர்நதது. எனக்கு அன்று ஏற்பட்ட வெறுப்புத்தான். மிகக்குறைந்த எண்ணிக்கையிலிருந்த எளிய முஸ்லிம்கள் சிரமப்பட்டு ஒரு பள்ளவாசலை உருவாக்கி வைத்திருந்தால் அதை அடிப்படையாகக்க கொண்டு வாழ்கையை அமைத்துக் கொண்டு அங்கேயே குழப்பங்களை விளைவித்து ஆபத்துகளை ஏற்படுத்தி விட்டு ஓடிவிடுகிற அந்த சாத்தானிய குணம் என்மனதில் நீங்காது இடம் பெற்றதன் விiளாவகவே இன்று வரை த.மு.மு.க என்ற அமைப்பின் மீது ஒரு கடுகளவிலான மரியாதை கூட ஏற்படவில்லை. வெளிப்பூச்சுக்கு பெருந்தலைவர்களைப்பொல அவர்கள் தோன்றினாலும் என்னைப் பொருத்தவரை நாகரீகமாக சொல்வதானால் குறும்புக்காரர்ககளின் கூட்டம் என்று மட்டுமே சொல்வேன். இரத்த தானம் ஆம்புலன்ஸ் சேவை என்தெல்லாம் கூட அவர்களது சேவைக்காக அடையானமாக என்னால் பார்க்க முடிந்ததில்லை. எப்படியயாவது ஒரு வகையில் முஸ்லிம் சமூகத்தின் மீது ஆதிக்கம் பெறுகிற வழிகள் என்று தான் என்னால் கருத முடியகிறது. இந்தப் பத்து வருடங்களில் என்னுடைய கருத்தோட்டத்தை மறுபரிசீலனை செய்கிற ஓரிரு சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன என்றாலும் கூட எங்கள் நகரததிலிருந்த அவ்வமைப்பைச் சாhந்தவர்களின் போக்கு அவர்கள் விசயத்தில் ஒரு நல்ல எண்ணத்திற்கு என்னை கொண்டு சேர்க்கவே இல்லை.குண்டு வெடிப்பிற்குப்பின்னால் முத்துக்குளிப்பவர்கள் போல மூச்சடக்கி முடங்கியிருந்தார்கள். ஜெயலலிதா ஆட்சியிலும் ஆள்ஆரவாரம் காட்டாமல் இருந்தார்கள். நல்ல பிள்ளைகளாக ரத்ததானம் புத்தக அன்பளிப்பு ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு என மூச்சுவிட்டுக் கொண்டிருந்தனர். மீண்டும் கலைஞர் ஆட்சியில் அமர்ந்த பிறகு அவர்களுக்குள் பழைய குறுகுறுப்பு மெல்லத் துளிர்விடத் தொடங்கியது. அவர்களவர் வக்போர்டின் தலைவராகியவுடன் பழைய குறும்புத்தனத்திற்கு கூட்டம் சேர்க்க ஆரம்பித்து விட்டனர். புஞ்சாயத்துக்கள் ரகளைகளுக்கு தலைமையேற்கத் தொடங்கினர். ஜமாத்துகளை மிரட்டத் தொடங்கிவிட்டனர்.கடந்த ஓரு ஆண்டுக்கு மேலாக த.மு.மு.க.வினரின் பஞ்சாயத்து அரசியல் பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்தகொண்டிருந்தது. ஓரு பிரபலமான பொறுப்பான மருத்துவரை இயக்கப்பேர் சொல்லி கும்பலாக வருவோம் எச்சரித்து விட்டு வந்திருக்கிறார்கள் என்ற செ;யதி என்கு நேரடியாக வந்தது.ஒரு பள்ளவிசால் ஜமாத்தார், விபச்சாரக் குற்றச்சாட்டின் பேரில் கொலை செய்யப்பட்ட ஒரு பெணு;ணுடயை சர்ச்சைக்குரிய ஜனாஸாவை தங்களுடைய புதிய கபருஸ்தானில் அடக்க முடியாது, இன்னும் முறையான அங்கீகாரம் அதற்குக் கிடைக்கவில்லை மேலும் இந்தப் பெண் எங்கள் மஹல்லாவின் கட்டப்பாட்டை மதித்து வாழ்ந்தவர் அல்ல அதனால் முஸ்லிம்களின் பொது கபரஸ்தானில் அடக்க எற்பாடு செய்வதாக சொன்ன போது த.மு.மு.க கும்பல் அங்கு போய் ரகளை செ;யதிரக்கிறது. எங்களுயைட வக்பு வாரியத்தலைவர் இருக்கிறார். அதைஎல்லாம் நீ பயப்படத்தேவையில்லை இங்குதான் அடக்கம் செ;யய வேண்டும் என்று அந்த ஜமாத்தின் விருப்பத்தை மீறி அந்த ஜனாஸாவை அங்கேயே அடக்கம் செய்திருக்கிறார்கள். நாங்கள் படாத பாடுபட்டு பள்ளிவசல் கட்டி கபரஸ்தானை உருவாக்கி வைத்தால் எங்கிருந்தோ இவர்கள் நாட்டாமை செய்ய வந்து விடுகிறார்களே இந்த அக்கிரமத்தை தடுப்பதற்கு யாரும் இல்லையா என்று அந்தப்பள்ளிவாசலின் செயலாளர் பலரிடம் புலம்பியது போல என்னிடமும் புலம்பினார்.த.மு.மு.கவினரின் இது போன்ற கொட்டங்கள் பெருகிவருவைத ஜமாததுககள் கவலையோடு கவனித்து வந்தன. ஆயினும் இப்போது அவர்கள் அரசாங்கத்திற்கு நெருக்கமானர்களாக இருப்பதால் அவர்களை பகிரங்கமாக எதிர்ப்பதற்கு தயக்கம் காட்டினர். சிங்கா நல்லூர் என்ற இடத்திலுள்ள பள்ளிவாசல் ஜமாத் விசயத்தில் த.மு.மு.கவினர் தலையிட்டு குழப்பம் செய்த போது அதை எதிர்த்து ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என்ற அளவிற்கு கொவை மாவட்ட ஜக்கிய ஜமாத் யோசித்தது.பல ஆண்டுகால பிரச்சினைகளுக்ப்பிறகு கோவை நகரத்தின் அமைதி முற்றிலுமாக மீட்டெடுக்கப்பட்ட சூழ்நிலையில் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு நீண்ட சிறைவாசம் அனுபவித்து விட்டவர்கள் ஜாமீனில் வெளிவரக் கூடும் என்ற எதிர்பார்க்கபட்டுக் கொண்டிருந்த நிலையில் தம.மு.முக. 1997 ஞாபகப்படுத்தும் வiகில் ஒரு ரவுடி ராஜாங்கத்தை நடத்திக் கொண்டிருந்தது.இந்த சூழலில்தான் அவர்களது சமீபத்திய நடவடிக்கை கோவை நகரிலுள்ள ஆலிம்கள்அனைவரையுமு; பொதுமக்களையும் பெரிதும் கவலைகட்குளடளாக்கிய அரபுக்கல்லூர்ச் சம்பவம் நடைபெற்றது. கோவை போததனுஸர் ரோட்டல் அமைந்தள்ள அந்த அரபுக்கல்லூரியின் மாணவர்கள் மொத்தம் 18 பேர். சுமர் 60 பேர் கொண்ட த.மு.மு.க கும்பல் காலை 6.30 மணயளவில் அந்தக் கல்லூரிக்குள் நுழைந்தது. இரவே திடம்மிடடிருந்தால் ஒழிய அந்த இடத்திற்கு அவ்வளவு பேர் திரள்வது சாத்தியமல்ல. தொடாந்து சிறு சிறு குழக்கலாக நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்த இடத்தை சுற்றியிருந்தததாக பகத்தில் இருந்து பார்த்தவர்கள் சொல்கிறார்கள். உள்ளே நுழைந்த கும்பலை பாhத்ததும் முதல்வர் என்ன ஏது என்று புரியாமல் அதிர்சிசியடநை;திருக்கிறார். உடல் நலமில்லை என்று சொல்லி விடுப்பு எடுத்தச் சென்ற ஒர மாணவனின் உறவனர்கள் அவர்களோடு இரந்திருக்கிறார். இந்தப் பையனுடன் தவறான உறவு கோண்டதாக சில பேர் மீது குற்றம் நீருபிக்கப்பட்டால் என்ன செய்வீர்? ஏன்பது தான் அந்தக் கும்பல் முதல்வரைப் பார்த்து கேட்ட முதல் கேள்வி. அவர் ஒரு வழியாக விசயத்தை புரிந்து கொண்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவாட்களை உடனடியாக நீக்கி விடுவேன் என்று சொல்யிருக்கிறார். இவ்வளவு தானா வேறு நடவடிக்கை எதுவும் கிடையாதா என்று கேட்டிருக்கிறார்கள். நிர்வாகத்தை கலந்து பேசி முடிவு செய்வதாக கூறியிருக்கிறார்.அப்படியானால் நிர்வாகிகளை உடனே கூப்பிடுங்கள் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள. நிர்வாகிகளை தொடர்பு கொள்ளப்பட்டிருக்கிறது. சில பிரமுகர்களும் கல்லூரிப் பொறுப்பில் இருந்தார்கள். அவர்கள் வெளியூரில் இருப்பதாகவும் வந்து விடுவதாகவும் கூறியிருக்கின்றனர். ஆந்தச் சந்தர்ப்பத்தில் த.மு.மு.க.வின் மாநிலச் செயலாளர் இ.உம்மர் என்பவர் முதல்வரிடம் எந்த அனுமதியும் பெறாமல் உளளே நுழைந்திருக்கிறார். அப்போது அங்கிருநத ஓரிரு நிர்வாகிகளும் முதல்வரும் அவரை மரியாதையாக வரவேற்றுள்ளனர். சிறிது நேரம் உட்காhந்து விட்டு நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு அவர் சென்று விட்டார். அப்போது காலை 7.30 மணி. ஓரு சில நிமிடங்கள் கழித்து என்ன நிர்வாகிககள் ஒருவரையும் கானோம் என்று பக்கத்து வீ;டில் குடியிருந்து கொண்டு வராமல் இருப்பது போல பெசியிருக்கிறார்கள். எதார்தத்தில் மரியாதையான எந்த நபரும் அந்தக் கூட்த்துடன் பேச்சு நடத்த வரமாட்டார் என்பது தான் நிஜம். இது பொன்ற சந்தர்ப்பங்களை உரவாக்கி பெரிய மனிதர்களை வரவழதை;து பிளாக் மெயில் செய்வது என்பது இவர்களுடைய பழைய வரலாறு அதை அறிந்திருந்தத்தனாலேNலுயே கூட கல்லூரியின் கௌரவ நிர்வாகிகளாக இருந்த சில பிரபலங்கள் வராமல் இருந்திருக்கலாம். கல்லூரியின் செயலாளர் திருப்பூருக்கு அருகில் ஒரு ஊரில் வசிக்கிறார். அவர்கள் வருவதற்கு சில மணிநேரங்கள் பிடிக்கும் 15 நிமிடத்தில் பக்கத்திலிருக்கிற நிர்வாகிகள் அங்கு வந்திரக்கிறார்கள். பாவம் அவர்கள் சாமாண்யர்கள். உங்களில் இரண்டு பேர் இங்கேயே இருக்கட்டும் எங்களின் மற்ற நிர்வாகிகள் வந்தவுடன் நாம் அனைவரும் கலந்து பேசி முடிவெடுக்கலாம் என்று கெஞ்சியிரக்கிறார்கள். அந்த த.மு.மு.க வின் ரவுடிக் கும்பல் எதையும் கேட்பதாக இல்லை. கையில் வைத்திருநத ஒரு சீட்டில் எழுதி வைத்திருந்த மாணவர்களின் பெயர்களைப் படித்து அவர்களை அழைத்திருக்கிறார்கள். மாணவர்கள் முதல்வரின் முதுகுக்குப்பின் பதுங்கியிருக்கிறார்கள். முதல்வரை தள்ளி விட்டு அக்கும்பல் அந்த மாணவர்களை மிருகத்தனமான தாக்கியிருக்கிறது. மாணவர்களின் ஓலம் அந்த பகுதி முழக்க எதிரொலித்திருக்கிறது. வலிபொறுக்க முடியாமல் ஓடிய மாணவனை துரத்திதுரத்தி அடிததிருக்கிறார்கள்.த.மு.மு.வின் ஆத்துப்பாலம் பகுதி தலைவரின் தலைமையில் அக்கிளையினர் பெரும்பான்மையாக இத்தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்று நேரில் பார்த்தவர்கள் பலரும் சொன்னார்கள். பூட்ஸ் காலால் ஒரு மாணவனின் மர்மப் பகுதியை உதைத்திருக்கிறார்கள். கல்லூரி நிர்வாகிகளில் ஒருவர் அழுதுகொண்டே அவர்களின் கைகளைப்பிடித்து அடிக்காதீர்கள். வெளயூர் பிள்ளைகள் அடிக்காதீர்கள் என்று கெஞ்சியிருக்கிறார். தன் கண்முன்னே நடந்தேறிய இக்கொலை வெறித்தாக்குதலை கண்டு விக்கித்துப் போன முதல்வர் தன்வாழ்நாளில் இப்படிப்பட்ட ஒரு கொடூரமான தாக்குதலை பார்த்தத்தில்லை என்று சொல்லும் போதெல்லாம் கண்கலங்குகிறார். நீங்கள் யார் இதையெல்லாம் விசாரிப்பதற்கு என்று கூட நான் கேட்க வில்லை. நான் நடவடிக்கை எடுக்கிறேன் என்று சொன்ன பிறகும் கூட மிருகத்தனமாக தாக்கினார்கள். தாக்கியது மட்டுமல்ல வெளியே சொல்ல மடியாத வார்த்தகைளால் அரபுக்கல்லூரிகளையும் அங்கு பயிலும் மாணவர்களையும் ஏசனார்கள் என்கிறார். ஒரு கும்பல் அடித்துக் கொண்டிருக்க மற்றொரு கும்பல் உள்ளூர் தொலைக்காட்சியினரை அழைத்திருக்கிறது. அந்தக் காலை காலை 7.30 மணிக்கு உள்ளூர் சானல்காரர் வருவது என்றால் அதுவும் ஒரு முன்னேற்படாகத்தான் நடந்திருக்கிறது. அவர்களையும் முதல்வரின் அனுமதியன்றி கல்லூக்குள் அனுமதித்த த.மு.மு.க கும்பல் கல்லூரி அறை;ககுள் வைத்தே அவர்களை படம் எடுக்க வைத்திருக்கிறது. தாடி நிறை;த ஒரு மாணவன் தன் முகத்தை காட்ட வெட்கப்பட்ட போது ஒரு கை அந்த மாணவனின் முடியை பிடித்து தலையை உயர்த்துவதை தொலைக்காட்சி காட்டியது. 18 பேர் கொண்ட ஒரு கல்லூhக்குள் நூற்றுக்கணக்கானோருடன் உள்ளே நுழைந்த பூஞ்சையான அந்த மாணவர்களிடம் தங்களின் விரத்தை காட்டிய த.மு.மு.கும்பல, அடுத்து சமுதாயத்தின் மானம் காகக் ப்புற்ப்பட்ட தங்களது லட்சனத்தை தொலைக்காட்சி அழைத்து வந்து பதிவு செய்து ஒலிபரப்ப வைத்தனர். அந்தக் காலை நேரத்திலேயே தங்களது தற்பொதைய செல்வாக்கை பயன்படுத்தி அவர்களுக்கு கடமைப்பட்ட ஒரு இன்ஸ்பெக்டரை வரழைத்து குறிப்பிட்ட செக்ஸன்களில் வழக்குப்பதிவு செய்யச் சொல்லி மாணவர்களை ஒப்படைத்திருக்கின்றனர். மாணவர்கள் அடிக்கப்பட்டிருப்பதை அவரும் பாhத்திருக்கிறார். காலை 10.15 மணிக்குள் இது அத்தனையும் நிகழ்ந்து மாணவர்கள் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விட்டார்கள். அப்போது கல்லூர்க்குள் இருந்த அக்கும்பல் இனி எல்ல அரபிக்கல்லுஸரிகளுக்கும் இதுதான் கதி என்று கொக்கரித்திருக்கிறது. தங்களது வக்பு வரியத் தலைவர் இதற்காக ஒரு ஸ்குவார்ட் அமைக்ப் போவதாக சொல்லியிருக்கிறது. அத்தோடு நிற்காமல் உங்களால் என்னடா செய்ய முடியும் இந்தாங்கடா என்னுடைய விசிட்டிங் கார்ட் என்று த.மு.மு.க விலாசமிட்ட விசட்டிங்க் காhட்டை வீசிவிட்டு வந்திருக்கின்றனர்.அன்று மதியம் சுமார் 12 மணியளவில் காவல் நிலையம் சென்ற அக்கல்லூரி நிர்வாகம் மாணவர்களை தாக்கிய த.மு.மு.கவின் ஆத்துப்பாலம் கிளைத்தலைவர் உள்ளிட்ட கும்பல் மீது புகார்ப்பதிவு செய்துனர். நிமிட நேரத்தில் மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்த காவல் துறை அவர்கள் மீது தாக்குதல் நடத்திய குண்டர்களை இன்று வரை கைது செய்யவில்லை. ஆட்சியின் தலைமைய அலங்கரிக்கப்போகும் தலைவரின் மூலம் த.மு.மு.க நடவடிக்கையை நிறுத்தி வைத்திரப்பதாகவும் அரபுக்கல்லூரி மாணவர்களின் ஜாமீன் விவகாரத்தை தாமதப்படுத்துவதாகவும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழக வரலாற்றில் அரபுக்கல்லூரிக்குள் நுழைந்து வரலாறு கண்டிராத, இந்துத்தவ சக்திகள் கூட செய்யத் துணியாத காhதியத்தை த.மு.மு,வினர் செய்தததை அறிந்து தமிழ்மாதநில ஜமாஅத்துல் உலமாவின் தலைவர் ஓ.எம் அப்துல் காதிர் ஹஜ்ரத் செயலாளர் காசிம் ஹஜ்ரத் மாநில அரபுக்கல்லூரிகள் கூட்டமைப்பின் செயலாளர் எஸ்.எஸ்.அஹ்மது ஹஜ்ரத் பீஏ.காஜா முயீனுத்தீன் ஹஜ்ரத் ஆகியோர் விரைந்து கோவை வந்தனர். தாக்குதலுக்குள்ளான அரபுக்கல்லூரிக்கு சென்று விசாரித்தனர். அரபுக்கல்லூரி முதல்வரும் நிர்வாகிகளும் நடந்த நிலவரத்தை விசாரித்தததை நேரில் கூறியவற்றை அறிந்து வெகுவாக விசனமுற்ற அவர்கள் இத்தனைக்கும் பிறகு த.மு.மு.கவினர் தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தை தொலை பேசியில் மிரட்டி வந்ததை நேரில் அறிந்தனர். மரியாதைக் குறைவான தொலைபேசி அழைப்புக்கள் அவர்களுக்கும் கூட வந்தது. ஒரு கட்டத்தில் த.மு.மு.கவின் மவாட்ட தலைவர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் ஆலிம்கள் காவல் ஆணையாளரைச் சந்தித்தால் தங்களது வக்பு வாரியத்தலைவரை வைத்து மதரஸாவுக்கு சீல் வைத்து விடுவோம் என்றும் மிரட்டினார். ஆனால் அதைப் பொருட்படுத்தாத ஆலிம்கள் காவல் துறை அணையாளரை நேரில் சென்று சந்தித்து மதரஸாவுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனுக் கொடுக்க முடிவு செய்தனர். கோவை நகரிலள்ள அனைத்து ஆலிமக்ளும் அவர்களுடன் திரண்டு சென்று மாநகர காவல் ஆணையாளரைச் சந்தித்து மனுக் கொடுத்தனர். இந்தச் செய்தியை நகரிலுள்ள அனைத்து பத்ரிகைகளும் தொலைக்காட்சி சானல்களும் ஒளிபரப்பின. துணை ஆணையாளரை வைத்து உடனடியாhக விசாரணை செய்து ந்வடிக்கை எடுப்பதாக கூறியபோதும் த.மு.மு.க தரப்புக்கு ஆளும் கட்சியின் ஆதரவு இருந்தத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் நிர்வாகத்தில் அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் பொறுப்பில் இருப்பதால் அவர் அரசுக்கு எதிராக ஆலிம்களைது; தூண்டிவிடுவதாக கீழ்த்தரமான பிரச்சாரத்தை பரப்பினர். ஆரசாங்கத்தின் மேலிடத்திற்கும் அப்படியே செய்தியை அனுப்பினர். ஆ.தி.மு.க.வினர் இவர்கள் என்று சொல்லி விட்டால் இந்த அரசம் காவல் துறையும் எதையும் கண்டு கொள்ளாது என்ற யுத்தியை சாதுர்யமாக பயன்படுத்திக் கொண்டதால் தப்பித்துக் கொண்டதை பெருமையாக பேசிவருகிறார்கள். . தமு.மு.க.வின் பொறுப்பாளர்கள் கைது செய்யப்படக் கூடும் என்பதால் தொடர்ந்து அவர்களைக் காப்பாற்றும் முயற்சயில் த.மு.மு.க தரக்குறைவான பல வேளைகளை தொடாந்து செய்து வருகிறது. ஆரபிக் கல்லூரி நிர்வாகத்தை எந்த வiகியலாவது நிர்பந்தப்படுத்தி அவர்கள் மீதான புகாரை வாபஸ் வாங்கச் செய்து விடும் நோக்கத் தோடு பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் அந்த மானவனை மூன்று கேமராக்களை வைத்து படம்பிடித்துள்ளனர்.மிகச் சாதரணமாக செல்லும் இடத்திற்கெல்லாம் அச்சிறுவனை இழுத்துச் சென்ற இவர்கள் அவனை மருத்துவமனiயில் அனுமதிக்ச் செய்து பிரச்சினை சீரியஸ் என்று காட்டுவோம் என்றெல்லாம் மிரடடிப்பார்த்தவர்கள், கோவையில் விழுந்த ஜனாஸாக்களின் சீ டி இனி பயனளிக்காது என்று கருதியோ என்னவோ இப்பொது இந்தச் சிறுவனின் சீடி தங்களிடம் இருப்பதாக பேசுவோரிடமெல்லாம் கதைவிட்டு வருகின்றனர்.ஒரு கட்டத்தில் இதைச் செய்தது த.மு.மு.கு அல்ல அச்சிறுவனின் குடுமு;பத்தினர் தான் என்று குரல் மாறிறிப்பேசினர். ஆனால் மாணவர்களத்தாக்கியவர்கள் விசயத்தில் காவல்துறை நடவடிக்கை எடுத்தால் த.மு.மு.க. களத்தில் இறங்கும் என்று பகிரங்கமாக தங்களது பத்ரிகையின் வாயிலாக எச்சரிக்கை விடுத்தனர். அந்த எச்சரிக்கை ஒன்றே இந்த விசயத்தில் த.மு.மு.கவின் கபடநாடகத்தை அமபலப்படுத்தப் பொதுமானது.மக்கள் உரிமை பத்ரிகையின் சார்பில் என்னிடம் தொடர்பு கொண்டவரிடம், இத்தாக்குதலை செய்தது த.மு.மு.க தான் என்பதற்கு நான மூன்று காரணங்களைத் தெரிவித்திருந்தேன். முதலாவது இன்றைய கோவை நகரின் சூழலில் ஜம்பது நர்களை திரடடிக் கொண்டு போய் பிரச்சினை செய்கிற ஒரே அமைப்பு த.மு.மு.க.தான். இரண்டாவது அவர்களது மாநிலச் செயலாளர் கல்லூரிக்குளளும் முதல்வர் அறைக்குள்ளும் அனுமதி இன்றிச் சென்றது. மூன்றாவது ஆத்தப்பாலம் கிளைத் தலைவர் உங்களால் என்னஙகடா செய்ய முடியும் இந்தாங்கடா என்று அந்த அப்பிராணிகளை மிரட்டிய போது த.மு.மு.க.வின் அடையாளமிட்ட விசிட்டிங் கார்டை விசிரிவிட்டு வந்தது. இதை எல்லாம் மறைத்துவிட்டு அவர்களுடைய பத்ரிகை செய்தி வெளியிட்டு இதழியல் தர்மத்தை தழைத்தூங்கச் சொய்திருந்தது,அவர் கேட்டது போலவே சுன்னத் ஜமாத் அமைப்பை சார்ந்தவர்களால் எதையும் செய்ய முடியவில்லை. குற்றவாளிகள் இன்று வரை சுதந்திரமாக சுற்றித்திரிகிறார்கள். கோவை மாநகிலுள்ள உலமாக்கள் வரலாறறில் முதன்முறையாக வெகுண்டெழுந்து மேற்கொண்ட பகீரத முயற்சிக்கு இதுவரை கிடைத்துள்ள ஒரே வெற்றி த.மு.மு.க. அலுவலகத்திலிருந்து வருகிற மிரட்டல்கள் நின்றுவிட்டது என்பதுதான்.கோவை அலுவலகத்திலிருந்து வந்து கொண்டிருந்த மிரட்டல்கள் நின்று விட்ட சூழலில் அவர்கiளுடைய சென்னை அலுவலகத்திலிருந்து வழக்கப்படி துணிந்து கூறப்படும் அவதூறுகளும் பெய்த்தகவல்களும் வெளிவர ஆரம்பித்திரக்கின்றன. சென்னையிலிருக்கிற த.மு.மு.க அலவலகம் வசூல் செய்வதற்கும் ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் செலவளித்த நேரம் போக மீதியு;ளள நேரத்தை அசிங்கமான அவதூறுகளை யாரைப்பற்றி பற்றியாவது ஆட்கள் வழியாகவும் பத்ரிகை வழியாகவும் இணையம் வழியாகவும் பரப்புவதற்கும் தலைவர்கள் பிரபலங்களிடையே வத்திவைக்கிற வேளையை செய்வதற்குமே பயன்பட்டு வருகிறது என்பது அந்த அலுவலகத்தைப் பற்றி அறிந்த அனைவருக்கும் தெரியும்.இராமநாதபுரம் மாவட்ட ஜமாத்துல் உலமாவைச் சாhந்தவர்கள் த.மு.மு.கவின் மாநிலத் தலைமையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஏன் இப்படி உங்களது ஆட்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதிலும் இந்த ரகத்தை சேர்நததே! ஜமாத்துல் உலமாவின் மாநிலத்தலைவர் அப்துல் காதிர் பாகவி வழுத்தூரில் முதல்வராக இருக்கிற அரபுக் கல்லூரி Nதிசய லீக் கட்சியை சாhர்ந்த பஷீர் அவர்களால் நடத்தப்படுகிறது. அவருக்கும் எங்களுக்கும் ஒரு பகை இரக்கிறதது. ஆதனால்தான் எங்களுக்கு எதழிராக அப்துல் காதிர் பாகவி பேசுகிறார் என்று அவர் சொல்லியிருக்கிறார். எப்டியிருக்கிறது பாருங்கள் அவர்கள் கட்டி விடுகிற கதை. கோவையின் முஸ்லிம்களைப் பொறுத்த வரை த.மு.மு.க எந்த வகையிலும் செல்வாக்குப் பெற்ற மரியாதையான அமைப்பல்ல. சுன்னத் ஜமாத்துக்கள அது சார்ந்த மக்களைப் பொறுத்த வரை அவர்கள் செல்லாக் காசுகளே. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்கிற கோவை நகரில் அதிக பட்சமாக ஆயிரத்து ஐநூறு நபர்களைத் திரட்டி பொதுப் பெயர்களில் ஆர்ப்பாட்டம் செய்வது அதிலும் பெண்களை முன்னிறுத்தி தப்பித்துக் கொள்ளப்ப பார்ப்பதை தவிர அவர்களால் ஆன காரியம் எதுவும் இல்லை. இப்பொதைய அரசயில் பவுசு அவர்களை ஆட்டம் போட வைத்துக் கொண்டிருக்கிறது.இப்படி ஆட்டம் போட்டவர்கள் சமுதயாத்ததை சிக்கலில் சிக்க வைத்த விட்டு வெகு சிக்கரமே காணாமல் போனார்கள் என்பது தான் கோவை நகரத்தின் கடந்த கால வரலாறு. தங்களுடைய புராதான தலைவர்கள் பற்றிய அந்த வரலாற்றை த.மு.மு.க ஒரு முறை நினைவு படுத்திப்பார்த்துக் கொள்வது நல்லது. இந்தத் தலைமுறையோடு அதன் வரலாறு முடிந்து போகாமல் இருக்க அது உதவும்.

Saturday, January 12, 2008

ஹஜ் பயணிகள் கவனிக்கவும்!


ஹஜ் என்ற வார்த்தைக்கு மக்கா நகரிலுள்ள கஃபா ஆலயத்திலும் அதனை சுற்றியுள்ள சில பகுதிகளிலும் குறிப்பிட்ட சில நாட்களில் தங்கி சிறப்பு வழிபாடுகளை நிறைவேற்றுவதற்காக பயணித்தல் என்பது பொருள். இதை முஸ்லிம்களின் இறுதிக்கடமை என்று சிலர் குறிப்பிடுவதுண்டு. அது தவறானது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாம் மாhக்கத்தின் தனிநபர் கடமைகளில் பிரதானமான ஜந்து கடமையை குறிப்பிடுகிற போது ஹஜ்iஐ இறுதியாக குpறப்பிட்டார்கள் என்பதனால் ஹஜ் இறுதிக் கடமை என்னும் சொல் வழக்கில் வந்தவிட்டதே அன்றி ஒரு முஸ்லிம் நிiவேற்ற வேண்டிய கடமைகளில் ஹஜ் இறுதியானதுமல்ல. அவர் தனது வாழ்வின் இறுதிககட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய கடமை என்றும் அதற்கு அர்த்தமில்லை. ஹஜ்ஜுக்கு அப்பாலும் ஒரு முஸ்லிம் நிறைவேற்றியாக வேண்டிய கடமைகள் ஏராளம் உண்டு. அது போல ஹஜ் கடமையை நிறைவேற்றும் வசதி வந்தவிட்டால் வாழ்நாளின் இறுதி கட்டத்திற்கு என்று அதை ஒத்திவைக்கக் கூடாது உடனே நிறைவேற்றி விடவேண்டும்
ஹஜ் இஸ்லாம் மார்க்கதின் பிரதான கடமைகளில் ஒன்று தான் எனினும் முஸ்லிம்கள் அனைவரின் மீதும் கட்டாயமானதல்ல. பொருளாதார வளம், உடல் ஆரோக்கியம், பயணம் செய்வதற்கேற்ற அமைதியான சூழல் வாய்க்கபட்ட முஸ்லிம்கள் மீது மட்டுமே இது கடமையாகும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்நிபந்தனைகள் பொருந்தும். பெண்கள்களை பொருததவரை பயணம் செய்வதற்கேற்ற அமைதியான சூழல் என்பதோடு பாதுகாப்பான சூழல் என்பதும் கவனிக்கப்படும். அதனால் தகுந்த ஒரு பாதகாவலர் கிடைத்hல் மட்டுமே அவர் மீது ஹஜ் கடமையாகும்.
பல்லாயிரக்கணக்கான வருடங்களாக கஃபா ஆலயத்iயொட்டி ஹஜ் உம்ரா ஆகிய கடமைகள் நிறைவேற்றப்பட்டு வந்தது என்றாலும் காலப்போக்கில் அதன் அடிப்படை அம்சங்களில் தூய்மையும் வாய்மையும் அற்ற சில மாற்றங்கள் ஏற்பட்டிருந்தது. ஹீஜ்ர்p ஒண்பதாம் ஆண்டில் முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதில் தகுந்த சீhத்திருத்தங்களை செய்து இஸ்லாமிய உம்ரா இஸ்லாமிய ஹஜ் என்பதற்கான வரையரைகளை ஏற்படுத்தினார்கள். அன்றிலிருந்து இடைவெளியில்லாது ஹஜ் கடமையை முஸ்லிம்கள் மிகுந்த உற்காசத்தோடும் பக்தியுணர்வோடும் நிறைவேற்றி வருகிறார்கள்.
ஹிஜ்ரீ 1428 ம் ஆண்டின் ஹஜ் தொடங்கிவிட்டது. தென்னாப்pக்காவிலிருந்து உலகின் முதல் ஹஜ் குழு நவம்பர் 12 ம் தேதி ஜித்தாவின் மன்னர் அப்தல் அஜீஜ் விமானநிலையத்தில் வந்து இறங்கியிரக்கிறது.
ஆஜர்பைஜான் நாட்டிலிருந்து இருவர் கால்நடையாகவே இந்த ஆண்டு ஹஜ்ஐஜ நிறைவேற்ற வந்தள்ளதாக சவூதியின் ஹஜ் அமைச்சக நெய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. ஷாகித் கோர்பத்தோவ், சாகிப் கெஜிமோவ் என்ற அந்த இருவரும் 3 மாதங்களுக்கு முன் தங்களத பயணத்தை தொடங்கி இரான் துர்க்கி சிரியா ஜோர்டான் வழியாக ஹஜ் கடமையை நிறைவேற்ற வந்தள்ளனர். இந்த ஆண்டு சுமார் 10.700 பேர் சினாவிலிருந்து ஹஜ் செய்ய உள்ளனர். சீனாவின் சமீபத்திய வரலாற்றில் இதுவே மிக அதிகம் என்று அஸோஸியேடட் பிரஸ்ஸின் செய்தி குறிப்பிடுகிறது.
இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து ஒருலட்சத்து 57 ஆயரம் பேர் புனிதப்பயணத்தை மேற்கொள்ள உள்ளனர். 1990 ம் ஆண்டு 24 அயிரத்து 200 பேர் என்ற அளவிலிருந்த ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை 15 வருடங்களில் 5 மடங்கு அதிகரித்திருக்கிறது. பொருளாதாரா வளம் பரவலாகியதும் பயணம் செய்யும் வசதிகள் பெரகியதும் தொலை தொடர்பு வசதிகளின் பெரக்கமும் இதற்கு காரணங்களாகும். ஹஜ்கமிட்டி மூலமாக 55,278 ஆண்களும் 47,181 பெண்கள் உட்பட 1,02,459 பேரும் மற்றவர்கள் தனியார் ஹஜ் நிறுவனங்கள் மூலமாகவும் பயணமாகவுள்ளனர். இந்தியாவிலிருந்து இதுவரை ஹஜ்ஜீக்கு சென்றவர்களில் இதுவே அதிக பட்ச அளவு என்று செய்திகள் தெரிவிக்கின்றன. உலக நாடுகளில் இந்தோனேசியாவிற்கு அடுத்த படியாக ஹாஜிகள் பெருமளவில் கலந்து கொள்ளும் இரண்டாவது நாடாக இந்தியா இருக்கிறது.
இந்தியாவிலிருந்து ஹஜ் கமிட்டியின் மூலமாக ஹஜ்ஜுக்கு செல்வோரின் முதல் குழு 259 இந்தியப் பயணிகளுடன் நவம்பர் 11 ம் தேதி லக்னோவிலிருந்து புறப்பட்டது விட்டது என்றாலும் தமிழ்நாட்டிலிரந்து ஹஜ்கமிட்டி மூலம் பயணமாகின்ற சுமார் 4 ஆயிரம் பேர் நவம்பர் 29 ம் தேதி முதல் தங்கள் பயணத்தை துவங்க உள்ளனர். டிசம்பர் 5 ம் தேதி வரை 9 விமானங்களில் அவர்கள் பயணம் செய்ய உள்ளார்;கள். இது தவிர ஏராளமானோர் தனியார் நிறுவனங்கள் மூலமாக தங்களது கடமையை நிறைவேற்றவள்ளனர்.
ஹாஜிகளுக்கான பயிற்சி முகாம்களும் வழியனுப்ப விழாக்களும நாடு முழவதும்; நடந்து வருகின்றன. ஹஜ் வியனுபபு விழாக்களில் ஹஜ் பயணம் செல்வோர் மட்டுமல்ல வழியனுப்புவோர் கூட ஒரு வித கிளாச்சியோடும் உற்சாகத்தோடும் பங்கே;றபது இந்த விழாக்களின் சிறப்பம்சம். புக்தியுமு; மகஜழ்சியும் கண்ணீராக பெருக்கெடுக்கிற தருணம் அது.
ஹாஜியை வழியனுப்புகையில் அவரிடம் எ;களுக்காக துஆ செய்யுங்கள் என்று கேட்பது பெரமானாரின் வழிமுறை. ஊமர் (ரல) அவர்கள் தான் அறியாமைக்காலத்தில் நேர்ச்சை செய்திருந்த ஒரு உம்ராவை நிறைவேற்ற அனுமதி தருமாறு பெருமானார் (ஸல்) அவர்களிடத்தில் கேட்ட போது அவருக்கு அனுமதி வழங்கிங பெருமானார் உங்களுடைய பிரார்த்தனையில் எங்களை மறந்துவீடாதீர் சகோதரரே என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
வழியனுப்புவோர் பல்வேறுபட்ட கோரிக்கைகளுக்காக பிரார்த்தன செய்ய கேட்டுக்கொள்வார்கள். ஆனால் ஹாஜிகள் அத்தனைபேரும் ஒரே ஒரு கோரிக்கை முன்வைத்து மற்றவர்களை தங்களுக்காக பிராhத்திக்ச் சொல்வார்கள். எங்களது ஹஜ் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக அமைய வேண்டும் அதற்காக துஆ செய்யுங்கள் என்றே கேட்பார்கள்.
இது ஈமானிய குணம். உன்னதமான மனிதர்களின் வழிமுறை. நபி இபுறாகீம் (அலை) கஃபாவை கட்டி முடித்தபிறகு இப்படித்தான் பிரார்த்தனை செய்தார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
இப்ராஹீமும், இஸ்மாயீலும் கஃபாவின் அஸ்திவாரத்தை உயர்த்திக்கட்டிய போது, ''எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்'' (என்று கூறினர்). (2:127)
இந்த கோரிக்கை உள்ளப்பூர்வமானதாக இருக்க வேண்டும்.இது பற்றிய கவலை ஒரு ஹாஜியின் சிந்தனையை எந்த நேரமும் ஆக்ரமித்து கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் ஓரு முஸ்லிம் ஹஜ்கடமை நிறைவேற்றுவதற்காக வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் செலவழித்து செய்யப்படுவதாக இருந்தாலும் சரி அந்தச் செலவு பிரதானமல்ல. என்னுடைய நண்பர் ஒருவர் இந்தோனேஷியால் கல் வியாபாரம் செய்பவர்;;. ஜகார்த்தாவில் தங்களது வியாபார நிறுவனத்தை விற்றுவிட்டு அதில் கிடைத்த பணத்தை கொண்டு ஹஜ் செய்ததை தான் நேரில் பார்த்ததாக கூறினார். ஏங்களுரில் இந்த ஆண்டு ஹஜ்கடமை நிறைவேற்ற இருக்கிறவர்களில் ஒரு தம்பதியினர் தங்களது பெரிய வீட்டை விற்று ஹஜ்ஜுக்கு செல்கின்றர். ஓரு பெண்மணி தன்னிடமிருந்த நகைகளை விற்று ஹஜ்ஜுக்கு செல்கிறார். ஆயினும் இநத்தகைய செலவுகளால் ஒரு ஹாஜி மகிமை அடைந்துவிடுவதில்லை.
அதுபோலவே பாலைவனத்தின் வெயிலும் குளிரும் அச்சம் தருகிற அளவு ஆபத்தானவை. அத்Nதூடு அந்தக் கூட்டமும் சாமாண்யர்களை மிரள வைக்கக் கூடிய அளவு நெருக்கடி தரக்கூடியது அதனால் ஹாஜி அனுபவிக்கிற சிரமங்கள் ஏரளமானவை என்றாலும் அந்தச் சிரமம் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. இத்தகைய சிரமங்களை தாங்கிக் கொள்வதால் ஒரு ஹாஜி சிறப்புற்று விடுவதில்லை.
ஹஜ்ஜுக்காக எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதோ எத்தகைய சிரமங்களை ஏற்கிநோம் எக்பதோ பெரிதல்ல. அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே பிரதானம் என்பதை ஒவ்வொரு ஹாஜியும் உணர்ந்திருக்கிறார் அதனால் தான் எந்த ஒரு மனிதரைச் சந்தித்தாலும் அவர் சிறியவரோ பெரியவரோ அங்கீகரிக்ப்பட்ட ஹஜ்ஜுக்காக பிரார்த்தியுங்கள் என்று கேட்க அவர் தயங்குவதில்லை. இந்தச் செலவுகளும் சிரமங்களும் அப்பொது தான் அர்த்தம் உடையதாக அமையும் என்பதை அவர் புரிந்து கொண்டிருக்கிறார்.
ஆனால் ஹஜ் அங்கீகரிக்ப்படுவது என்பது இரண்டாம் மனிதரின் பிராhத்தனையோடு சம்பந்தப்பட்டிருப்பதை விட ஹஜ்ஜுக்கு செல்வோரின் சிந்தனையோடும் செயலோடும் தான் அதிக தொடர்பு கொண்டிருக்கிறது என்பதை ஹாஜி புரிந்து கோள்ள வேண்டும். எனவே ஒரு நற்செயல் இறைவனது அங்கீகாரத்தை பெறவேண்டுமானால் அதைற்கு தேவையான அம்சங்கள் என்ன? என்பது குறித்து மழு விழிப்புணர்வும் அவரிடம் இருக்க வேண்டும். அத்தோடு ஹஜ்ஜின் போது கைகொள்ள வேண்டிய விஷேசமான கட்டுப்பாடுகள் குறித்தும் அவர் எச்சரிக்கை அடைய வேண்டும். இந்த விழிப்புணர்வும் எச்சரிக்கையும் தான்; அதிக செலவு பிடிக்கிற சிரமமான ஹஜ் என்கிற கடமையை ஹஜ்ஜன் மக்பூலன் வ மப்ரூரன் அங்கீகரிக்ப்பட்ட நல்ல ஹஜ் என்ற அந்தஸத்திற்கு எடுத்துச் செல்லக் கூடியவை.
ஹாஜி அன்று பிறந்த குழந்தை போல வீட்டுக்கு திரும்புகிறார் என்ற நபிமொழியை கவனித்தப் பாhருங்கள்.
ஹஜ்ஜை மாசுபடுத்தகிற செயல்கள் மற்றும் பாவச் செயல்களில் ஈடுபடாமல் ஒருவர் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவர் அவருடைய தாய் அவரைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாப் பாலகராகத்) திரும்புவார் என்று தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள (அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல புகாரி -1521)
இந்நபி மொழியில் கூறப்பட்டுள்ள இரண்டு அம்சங்கள் எந்த நிலையிலும் ஹாஜி நினைவில் வைக்க வேண்டியவை.
முதலாவது, ஹஜ் அல்லாஹ்வுக்காகவே நிறைவேற்றப்பட வேண்டும்.
இந்த வாசகம் ஒரு முஸ்லிம் அடிக்கபடி கேள்விப் படுகிற அல்லது உபயோகப்படுத்தகிற வாசகம் எனினும் அவர் அதிகமாக ஏமுhறுகிற விசயமும் இது தான் என விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
ஹாஜி இந்த ஏமாற்றுத்திற்கு ஒரு போதும் ஆளாகிவிடக் கூடாது. நான் அல்லாஹ்விற்காhக இந்தக் கடமையை நிiவேற்றுகிறேன் என்பதை திரும்பத்திரும்ப அவருக்கே கேட்கிற வகையில் அவர் சொல்லிக் கொள்வது நல்லது. இஹ்லாஸ் என்ற எண்ணத்தூய்மை பெற அது உதவும்.
நீண்ட நாள் கனவு நிறைவேறப் போகிறது என்பதோ, பணவசதி இருப்பதால் கிடைத்த வாய்ப்பு என்றோ, ஒரு சுற்றுலா அனுபவம் என்றோ, ஹாஜி என்ற பட்டம் கிடைக்கும் என்றோ அல்லது எந்தச் சிந்தனையும் அற்ற ஒரு கிளாச்சியூட்டும் பயணமாகவோ ஒரு ஹாஜி தன் பயணத்தை அமைத்துக் கொண்டு விடக் கூடாது. இது அல்லாஹ்வுக்கான பயணம். மனிதர்களிடமிருந்து கிடைக்கிற எந்தப் புகழும் மரியாதையும் என்கு பிரதானமல்ல. இதன் நற்கூலியை நான் மறுமையில் எதிர்பார்க்கிறேன் என்கிற விசயத்தை அறிவும் மனதும் தெளிவடையும் வண்ணம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது தன்னுடைய ஹஜ் அங்கீகரிகப்பட வேண்டும் என்று நினைக்கிற ஒரு ஹாஜியின் முதல் கடமையாகும். ஏகிப்து நாட்டைச் சார்ந்த துன்னூன் (இறப்பு ஹி 245) என்ற பெருந்தகை உள்ளத்துஸய்மையோடு ஒரு காரியம் நிறைவேற்றப்பட்டதா என்பதை அறிந்து கொள்ள மூன்று அடையாளங்களைச் சொல்கிறார்.
மக்களிடமிருந்து கிடைக்கிற மரியாதை அவமரியதை இரண்டையும் சமமமாக கருதுதல்நான் நற்செயல் ஒன்று செய்தேன் என்ற எண்ணத்தை மறந்தவிடுதல் நற்செயலுக்கான பிரதிபலனை மறுமையில் எதிர்பார்த்தல்.
ஓரு ஹாஜி இந்த அளவுகளில் தனது உள்ளத்த}ய்மையை அளவிட்டுக் கொள்ளலாம். தேவயானால் சீர்செய்தும் கொள்ளலாம். ஒரு உன்னதமான வணக்கம் வெறும் பகட்டாக இல்லாமல் உரிய உயரிய அந்தஸ்த்தை பெற இது உதவும்.
நபிமொழி தருகிற இரண்டாவது எச்சரிக்கை ஹாஜி, ஹஜ்ஜை மாசுபடுத்துகிற செயல்களை செய்யக் கூடாது.
ஹாஜி அவர் செல்லும் இடத்தின் புனிதத்தனமையை எல்லா நிலையிலும் மனதில் நிறுத்த வேண்டும். மக்காவும் மதீனாவும் சட்பூர்மாக புனித இடங்களாக அறிவிக்கப்பட்டவை. அங்கு செய்யப்படகிற நற்செயல்களுக்கு அதிக மரியாதை உண்டு.
''இந்த ஊரை எவன் கண்ணியப் படுத்தியுள்ளானோ அந்த இறைவனை வணங்குமாறு நான் கட்டளையிடப் பட்டுள்ளேன். எல்லாப் பொருட்களும் அவனுக்கே உரியன் அன்றியும் அவனுக்கே முற்றிலும் வழிபட்டவானக இருக்கும்படியும் நாhன் ஏவப்பட்டுள்ளேன்'' (என்று நபியே! நீர் கூறுவீராக). (27:91) என்று திருக்குர்ஆன் கூறுகிறது
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வே மக்கா நகருக்குப் புனிதத்தை வழங்கியவன். அதற்கு புனிதத்தை வழங்கியவர்கள் மனிதர்கள் அல்லர். ஏனவே, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூழய எவருக்கும் இங்கே (சண்டையிட்டு) இரத்தத்தை சிந்தவதோ இங்குள்ள மரம், செடி கொடிகளை வெட்டுவதொ அனுமதிக்கப்படவில்லை.
மற்றொரு நபிமொழி பின்வரமாறு கூறுகிறது
அல்லாஹ் மக்காவைப் புனிதப்படுத்தியிருக்கிறான் எனக்கு முன்னர் எவருக்கும் (அதில் போர் செய்வது) அனுமதிக்கப்படவில்லை. எனக்குப் பின் எவருக்கும் அனுமதிக்கப்படாது. எனக்குக்கூட பகலில் சிறிது நேரமே அனுமதிக்கப்பட்டது. எனவே, இங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது. இங்குள்ள மரங்களை வெட்டக்கூடாது. இங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டக்கூடாது. யாரெனும் தவறவிட்ட பொருட்களை அது பற்றி அறிவிப்புச் செய்பவரைத் தவிர மற்றவர்கள் எடுக்கக்வுடாது. என்று நபி (!ல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே, எங்;கள் அடக்கக் குழிகளுக்கும் கொல்லத் தொழிலாளர்களுக்கும் பயன்படுகின்ற இத்கிர் வாசனைப் புல்லைத் தவிரவா, என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இத்கிர் எனும் புல்லைத் தவிர என்று கூறினார்கள்.
வேட்டைப் பிராணியை விரட்டக் கூடாது என்பதன் பொருள் நிழலில் படுத்திருக்கும் அதை எழுப்பிவிட்டு அந்த இடத்தில் தங்குவதுதான் என்று அறிவிப்பாளர் இக்ரிமா (ரஹ்) அவர்கள்; விளக்கம் கூறினார்கள். (புகாரி 1833)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மற்றொரு சமயம் மக்காவை பார்த்து பின்வருமாறு கூறினார்கள்.இது பூமியிலுள்ள சிறந்த இடமாகும். அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமான இடமாகும். நூன் நிர்பந்மாக வெளியேற்றப்படடிருக்காவிட்டால் இந்த இடத்திலிரந்து வெளியேறியிருக்க மாட்டேன் (அஹ்மது)
மக்காவைப் போலவே மதீனாவும் புனித பூமி என்ற சிறப்புத் தகுதியை சட்டரீதியாக பெற்றுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(ஒரு பயணத்திலிருந்து திரும்பி வரும் போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு உஹத் மலை தென்பட்டது. உடனே, இந்த மலை நம்மை நேசிக்கின்றது நாமும் இதை நேசிக்கின்றோம். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்கா நகரைப் புனிதமானதென அறிவித்தார்கள். நான் இரு மலைகளுக்கு இடையில் இருக்கும் மதீனா நகரை புனிதமானதென அறிவிக்கிறேன் என்று சொன்னார்கள். (புகாரி 7333)
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் அதன் மரம் (எதுவும்) வெட்டப்படக் கூடாது. அதில் யார் புதிதாக (மார்க்கத்தில் இல்லாத செயல்) ஒன்றை உருவாக்குகின்றானோ அவன் மீது அல்லாஹ் வின் சாபமும் வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் உண்டாகட்டும் என்று கூறினார்கள்.
மதீனாவின் ஒரு பகுதியை சொர்க்கத் தோட்டம் என்று பெருமானார் (ஸல்)அவர்கள் அறிவித்துள்ளார்கள். என் வீட்டிற்கும் என் சொற்பொழிவு மேடை(மிம்பரு)க்கும் இடையே சொர்க்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்;கா உள்ளது. என் சொற்பொழிவு மேடை (மிம்பர்) எனது (கவ்ஸர்) தடாகத்தின் மீதுள்ளது. என்று அல்லாஹவின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் (புகாரி 7335)
எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளியில் தொழுவது ஏனைய பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தெழுகைகளைவிடச் சிறந்ததாகும். ஆனால் (மக்காவிலுள்ள) மஸ்ஜதுல் ஹராம் பள்ளிவாசலைத் தவிர. ஏன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி 1190)
இது போல இன்னும் ஏராளமான நபிமெழிகள் மக்கா மதீனா நகரின் புனிதத்தன்மையை பற்றியும் அங்குநடற்து கொள்ள வேண்டிய ஒழுங்குகள் குறித்தும் பேசுகின்றன. எனவே ஒரு ஹாஜி இது அல்லாஹ்வினாலும் அல்லாஹ்வின் தூதராலும் புனிதப்படுத்தப்பட்ட இடம் என்ற மரியாதையை மனதில் இருத்திச் செயல்பட்டால் அவரது ஹஜ் அங்கீகாரம் பெறத்தேவையான அம்சங்கள் அனைத்தும் அவரிடம் தானவே வந்துவிடு;ம்.
புனிதமான இடங்களில் நற்காரியங்களுக்கு அதிக நன்மை கிடைப்பது போலவே தீயசெயல்கள் பெருங்குற்றங்களாக ஆகிவிடும் ஆகவே ஹாஜி ஹஜ்ஜுக்கு ஊறுவிளைவிக்கும் செயலையம் செய்யக் கூடாது. பிற ஹாஜிகளுக்கு ஊறுவிளைவிக்கும் செயலையும் செய்யக் கூடாது.
இதிலும் எச்சரிக்கை மிகவும் அவசியம். சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் சாஹிப் சமீபத்தில் தான் ஹஜ்ஜீக்கு சென்ற போது முதல் நாளில் நடற்த அதிர்சிசியான தொரு அனுபவத்தை சொன்னார். அவர் உணவருந்துவதற்காக ஹஜ் சேவை நிறுவனத்தினர் ஏற்பாடு செய்திருந்த இடத்திற்கு சென்ற போது அங்கு கூட்டம் நிறைந்து காணப்பட்டிருக்கிறது. ஒரு பெரியவர் தனக்குப் பக்கத்தில் உள்ள இடத்தை வேறு யாரும் உட்கார்ந்து விடாதபடி துண்டை போட்டு ஒதுக்கீடு செய்து வைத்துள்ளார். அருகில் போய் யாரும் இங்கு வருகிறார்களா என்று கேட்டிருக்கிறார். அது தான் விவகாரமாகிவிட்டது. அந்தப் பெரியவர் வாயில்வந்தபடி கெட்ட வார்த்தைகள் பேச ஆரம்பித்திருக்கிறார். அவ்வார்த்தைகளை கேட்டு அந்த சாப்பாட்டு அரங்கமே அதிர்ச்சியல் உறைந்துவிட்டது என்று அவர் சொன்னார்.
பெருமானாரின் தோழர்கள் எப்படி நடந்த கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனிப்பது ஹாஜிகளுக்கு போதுமான எச்சரிக்கை தரும்.
அப்துல்லாஹ்பின உமர் (ரலி) அவர்கள் மக்காவிற்கு வருகிற பொது ஹரமுடைய எல்லைக்கு வெளியே ஒரு கூடாரம் அடித்து வைத்திருப்பார்கள். தனது பணியாளர்களுக்கு உத்தரவிடுவதானால் அந்த இடத்திற்கு வந்தவிடுவார்கள். பணியாளர்களை கண்டிக்கிற பொது தடிப்பமான வார்த்ததைகள் வந்துவிடக்கூடும். அவ்வார்த்தைகள் ஹரமின் புனிதன்மைக்கு புறம்பானதாகி தனது குற்றம் பெரிதாகிவிடக்கூடும் என்பதற்காக இவ்வாறு செய்வார்கள் என வரலாற்றுக் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.
எனவே ஹாஜி இஹ்ராமுடைய நிலையில் மனைவியோடு சல்லாபிப்பதையும் தவிர்க்க வேண்டும் என்பது போலவே சக ஹாஜிகளுக்கு சங்கடம் தருவதையும் தவிர்கக வேண்டும். வார்த்தகைளால் வழக்ககாடுவதை தவிர்க்க வேண்டும்.
அந்தப்புனித பூமியில் நிறைந்து காணக்கிடைக்கிற அல்லாஹ்வின் அற்புதங்களை ஹாஜி எண்ணிப்பார்ப்பது அவரது அந்த பகுதியின் கனபெருமானத்தை அவர் நினைவில் நிறுத்த உதவும்.
கஃபாவே ஒரு அதிசயம். அதைப் பார்த்தவர் பார்த்துக் கெர்ண்டே இருக்கிறார். சலிப்பே ஏறபடுவதில்லை. கஃபாவை மக்கள் திரும்கத்திரும்ப வரும் இடமாக தான் ஆக்கியிருப்பதாக அல்லாஹ் கூறுகிறான். (2.125)
இபுறாகீம் (அலை) அவர்கள் கஃபாவை கட்டுகிற போது ஏறி நின்ற ஒரு கல்லில் அவரது பாதச் சுவடுகளை பதிய வைத்த இறைவள் அந்தக்கல்லை இன்று வரை அங்கு பாதுகாத்து வைத்திரக்கிறான்.
லட்சக்கணக்கான மக்கள் மக்காகவில் ஆண்டுதோறும் கூடுகிறார்கள். அங்கே அமைதி கொலுவிருக்கிறது. உடலுக்கும் உள்ளத்திற்கும் அது அமைதியையும் பாதுகாப்பையும் தருகிறது.
உலகின் பல பாகத்திலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் அங்கு வந்து கூடுகிறார்கள்.அவர்களுக்குததேவையான உணவு தண்ணீர் உறைவிட வசதிகளுக்கு எந்தக குறைவும் எற்படுவதில்லை. அவரவர் கலாச்சாரத்திற்கேற்ற உணவையும் வசதியைiயும் அங்கு பெற்றுக் கொள்கிறார்கள். மனித நெருக்கடியை தவிர வேறு எதற்கும் அங்கு நெரக்கடி இல்லை. போக்குவரத்து வசதிக்கும் குறை இல்லை. செல்போன் சிக்னலில் கூட நெரக்கடி இல்லை. இதற்காககவெல்லாம் சவூதி அரசாங்கம் பெரும் முயற்சி எடுக்கிறது என்ற போதும் அந்த அரசாங்கமே கூட இது அத்தனையும் தனது முயற்சியால் நடக்கிறது என்று நம்பாது.
இத்தனை அதிசயங்களையும் கண்ணால் பார்க்கிற ஹாஜி தான் அல்லாஹ்வின் புனித பூமிக்கு தோந்தெடுத்து அழைத்துவரப்பட்டுள்ள பாக்கியசாலி என்ற எண்ணத்தை நினைவில் நிறுத்தி தனக்கான நேரத்தையும் வாய்பபையும் பயன்படுத்திக் கொள்வாரானால் அவர் மினா மைதானத்தில் சைத்தானை நோக்கி எறிகிற சிறுகற்களை மலக்குகள் எடுத்துச் செல்வார்கள். அது அவரது ஹஜ் அங்கீகரிக்ப்பட்டது என்பதற்கான அடையாளம்.
லட்சக்கணக்கானோர் கோடிக்கணக்கான பொடிக்கற்களை ஜம்ராவிலுள்ள தூனை நோக்கி எறிகிறார்கள். அங்கு வீசப்படுகிற கற்கள் என்னவாகின்ற என்று நபித்தோழர் அபூஸஈதில் குத்ரீ (ரலி)அவர்கள் பொருமானாரிடம் கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். யாருடைய ஹஜ்ஜை அல்லாஹ் ஏற்றுக் கொண்டானோ அவர் வீசும் கற்களை மலக்குகள் எடுத்துச் சென்றுவிடுகிறார்கள். (மஆரிபுல்குர்ஆன். பாகம் 1 பக்கம் 88)
தான் வீசிய கல் எங்கே சென்றது என்பதை ஹாஜி தன் கண்ணால் பார்க்க முடியாது என்றாலும் அது எங்கெ சென்றிருக்கக் கூடும் என்பதை தனது நடைமுறைகளை வைத்து அவர் யூகித்துக் கொள்ள முடியும்.

தேவை ஒரு பக்தி மார்க்கம்.

அவர் ஒரு முஸ்லிம் அதிகாரி. வணிக வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றுகிறார். மார்க்கப்பற்று மிக்கவர். ஓரு பள்ளிவாசலின் தலைமைப் பதவிக்கு அவருடைய பெயரை பலரும் பிரேரனை செய்த போது அப்பொறுப்பை ஏற்க அவர் மறுத்துவிட்டார். ஏன் மறுக்கிறீர்கள் என்று கேட்டேன். நான் செய்யும் நற்செயல்களே குறைவுதான். அதையும் வீணடித்து விடக் கூடாதே என்ற கவலைதான் காரணம் என்று அவர் சொன்னார்.
அந்த பதில் பலத்த யோசனையை கிளறி விட்டது. சமுதயாத்திற்காக பணியாற்றும் ஒரு வாய்ப்பு அதிக நன்மையை பெற்றுதருவதாக அமைய வேண்டும். நம் மார்க்கம் அப்படித்தான சொல்லித்தருகிறது.
ஓரு நபித்தோழர் ஜமாத்துடன் தொழுவதற்காக வேகமாக வந்த கொண்டிருந்தார். வழியில் ஒரு மரக்கிளை முறிந்து விழுந்து கிடந்தது. அதை அப்புறப்படுத்திவிட்டு வருவதற்குள் தாமதமாகிவிட்டது. பெருமானார் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுகைகைய நிறைவு செய்தார். உள்ளுர ஒரு பயம் இருந்தது. தாமதமாக வந்ததற்காக பெருமானார் (ஸல்) கோபித்துக் கொள்வார்களோ என அவர் அஞ்சிக் கொண்டிருந்தார். அவர் பயந்ததது போலவே பெருமானார்(ஸல்) அவர்கள் அவரை அழைத்தார்கள். ஆனால் பெருமானார்(ஸல்) அவர்கள் கேட்ட கேள்வி வித்தியாசமாக இருந்தது. நண்பரே நீங்கள் என்ன நற்செயலை செய்து விட்டு வந்தீர்கள்! நீங்கள் செய்த காரியம் அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்துவிட்டதே! நீங்கள் செய்த காரியத்திற்காக அல்லாஹ் உங்களுக்கு நன்றி செலுத்துகிறான். அப்படி என்ன நற்செயலை செய்தீர்கள் என்று கேட்டார்கள். ஆந்த வார்த்தைககளை கேட்டு அந்த நபித்தோழர் அளவிலாத ஆனந்தம் அடைந்திருப்பார் என்று சொல்லத் தேவையில்லை.
அவர் மட்டுமல்ல அவரைப் போலவே மக்களுக்கு பயன்படுகிற சமூகத்தொண்டாற்றுகிற எவருக்கும் பெரும் மகிழ்ச்சியயை தருகிற வார்த்தைகள் தான் அவை.
இவ்வாறு மக்களுக்கு ஆற்றிய சிறு தொண்டு ஒரு மனிதருக்கு இறைவனின் நேசத்தை பெற்றுத் தந்துவிட்டது என்று சொல்லுகிற மார்க்கத்தை பின்பற்றுவதாக சொல்லகிற முஸ்லிம் சமுதாயத்pல், பள்ளிவாசலின் தலைமை பெறுப்பேற்றால், அதுவே இருக்கிற கொஞ்ச நஞச நன்மைகளையும் அழித்து விடும் என்று ஒருவர் அச்சப்படுகிறார் என்றால், முஸ்லிம் சமூகத்தில் தனிமனிதனுடையவும் சமூகத்தினடையவும் மதிப்பு எந்த நிலையில் இருக்கிறது? என்ற பலத்த கேள்வியை அது எழப்புகிறது.
மீண்டும் ஓரு புதிய ரமலானுக்காக ஆயத்தமாகி கொண்டிருக்கிறோம். மக்கள் பள்ளிவசலை நோக்கி படையெடுக்கப் போகிறர்கள். தொழுகை நோன்பு ஈகைகளின் வழியாக தங்கள் பக்தியுணர்வை பெருக்கிக் கொள்ள ஒவ்வொரு முஸ்லிமும் ஆர்வத்தேடு அணி தரள்கிற இந்த சந்தர்ப்த்தில் முஸ்லிம் தனி மனிதருடையவும் சமுதாயத்தினுடயவும் நிலையை மதிப்பீட செய்ய வேண்டிய தேவை எற்பட்டிருக்கிறது.
ரமலானுக்கும் இந்த பரிசோதனைக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழலாம். அதற்கான பதில் மிக முக்கியமானது. ரமலான் மாதமுமு; அதில் நிறைவேற்றபடுகிற நற்கரமங்களும் அவை உண்டு பண்ணவேண்டிய தாக்கத்தை தனிமனிதனிடத்திலும் சமுகத்திலும் ஏற்படுத்துகின்றதா என்ற முக்கியமான கேள்விக்hன விடை அதில் ஒளிந்து கிடக்கிறது.
ஒவ்வொரு தனிமனிதருடைய வாழ்விலும் ரமலானும், அது ஏற்படுத்துகிற நல்லுணர்வும் மிகுந்த மரியாதைக்குரியவை. அளவிடற்கரிய தொரு அருட்கொடை அது.
நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் ரஜப் மாதத்தின் பிறை தென்பட்டுவிட்டால் அல்லாஹ்விடம் ரமலானுக்காக பிரார்த்திக்க ஆரம்பித்துவிடுவார்கள். அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள் : ரஜப் மாதம் வந்து விட்டால் பெருமானார்(ஸல்) அவர்கள் இறைவா! ரஜப் மாதத்திலும் ஷஃபான் மாதத்திலும் எங்களுக்கு அருட்செய்வாயாக! ரமலானை பெற்றுக் கொள்ள வாய்ப் பளிப்பாயாக! ஏன்று பிரார்த்தனை செய்வார்கள்.(அஹ்மது 2228)
இத்தகையதொரு ரமலானை நாம் பெற்றுக் கொள்கிற போது அது எப்படிப்பட்ட பாதிப்பை நமக்குள் ஏற்படுத்த வேண்டுமோ அந்த பாதிப்பை ஏற்படுத்த வில்லை என்றால் சர்கை;கரை வியாதிக்காரரரை போல உலகின் சரிபாதி இன்பத்தை நாம் அனுபவிக்க கொடுத்து வைக்காதவர்களாகி விடுவோம்.
ரமலான் ஏறு;படுத்த வேண்டிய தாக்கம் குறித்து ரமலானுக்கு பிறகு பார்ததுகு; கொள்ளலாமே என்றும் ஒரு கேள்வி எழும். ஆதற்கான பதில் மிகச் சாதரணமானது. ஓரு ரயில் வண்டி புற்பபடுவதற்கு முன்னரே பயணி அவருயை பயணப்பாதையை தீர்மாணித்துக் கொள்ள வேண்டுமே தவிர ரயில் அதனுடைய கடைசி எல்லையை தொட்டுவிட்ட பிறகு அல்ல. அதே போல ரமலானில் சஞ்சரிப்பதற்கு முன்னதாகவே அதன் விளைவாக ஏறு;பட வேண்டிய தாக்கம் குறித்து சிந்தனை செய்து விடவேண்டும்.
பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு பிரார்த்தனை கற்றுத்தந்து, அதை ரமலான் வருவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே கேட்பதை தனது வழிமுறையாக விட்டுச் சென்றிருக்கிறார்கள் என்றால் ரலானைப்பற்றி முன்னதாக வே சிந்தித்து விட வேண்டும் என்ற வழிகாட்டுதலை தருகிறது.
ரமலான் நமது பக்தி உணர்வை மலர்ச்சியடைச் செய்வதற்காக வருகிறது. தொழுகை நோன்பு ஜகாத் என்ற கடமைகள் அனைத்தும் இந்த நோக்கத்தையே கருவாக கொண்டிருக்கின்றன. நோன்பை பற்றிய திருக்குர்ஆன் வசனம் இந்த நோக்கத்தை சிறப்பாக வெளிப்படுத்துவதை காணலாம். உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமூகத்தார் மீது விதிக்கப்பட்டது போலவே உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்ட்டிருக்கிறது என்று பேசுகிற 2.183 இறைவசனம், இதன் மூலம் நீங்கள் பக்தியாளர்களாக ஆகக்கூடும் என்று கூறுகிறது.
இந்த வசனம் நினைவூட்டுகிற பக்தி என்கிற செய்தி தான் இன்றைய சுழலில் ரமலானை எதிர்கொள்ளவும் அது ஏற்படுத்த வேண்டிய தாக்கத்தை நினைவு கூறவும் மிகவும் தேவைப்படுகிறது.
இன்றைய முஸ்லிம் சமுகத்தில் இஸ்லாம் என்கிற பெயரும் தூய இஸ்லாம் என்ற கோசமும் சமுதாயத்திற்காக என்ற முழக்கங்களும் முன்னெப்போதையும் விட அதிகமாக பேசப்படுகிறது. கடற்த 10 ஆண்டுகளாக இது பற்றி தமிழ் முஸ்லிம் உலகில் மிக நிறைய பேசப்பட்டு விட்டது. இவை ஏற்படுத்திய விளைவுகளை சீர் தூக்கிப்பார்த்தால் சமுதயத்தில் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுவதன் பின்னணியில் பக்தியுணர்வு என்பது அருகிப்போய்விட்டதை வெள்ளிடை மலயென அறியலாம்.
இதற்கான உதாரணங்களைப் பேசப் புகுந்தால் அத பற்றி எழுதப்படகிற காகிதங்கள் கூட நற்றமடிக்கும் என்ற அளவுக்கு கசப்பான செய்திகள் நிறைய உண்டு என்பது, சமதாயத்தை கவனித்துவருகிற அனைவருக்கும் தெரியும்.
முஸ்லிம் சமூகத்திலே பெரிய அளவிலே பேசப்படுகிற ஈமான் இஸ்லாம் என்ற வார்த்தைகள் வெறும் வார்த்தகைளாக உச்சரிக்கப்படகிறதே அன்றி அவற்றின் முழப்பரிமாணமும் புரிந்து கொள்ளப்பட வில்லை என்பதை எதார்த்த நிகழ்வுகள் பிரதி பலிக்கின்றன.
ஒவ்வொரு முஸ்லிமிமிடமும் ஈமான் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. இஸ்லாம் என்ற நடைமுறையும் இருக்கிறது.
ஈமான் என்பது சரியான நம்பிக்கையை குறிக்கிறது. ஈமான் என்பது இறைவனை பற்றிய சரியான நம்பிகை;கை மட்டுமல்ல. அது வாழ்வை பற்றிய சரியான நம்பிக்கையும் கூட. வாழ்கை, மரணம், மரணத்திற்குப் பிந்தைய நிலைகள் என விரியும் ஈமானிய அம்சங்கள் முழு மனித வாழ்வையும் சரியான நம்பிக்கையுpன் அடித்தளத்தில் கட்டி எழுப்புகின்றன. இந்த விசயங்களில் எது சரியாக நம்புதலுக்கு உரியதோ அதை நம்பு வதே ஈமான் ஆகும்.
இஸ்லாம் என்பது சரியான செயல்பாட்டை குறிக்கிறது. வணக்க வழிபாடுகள் சமுதாய தொடர்புகள் சமூக உறவுகள் அனைத்திலும் சரியான நடவடிக்கையை மேற்கொள்வதே இஸ்லாம் ஆகும்.
இவ்விரண்டு விசயங்களும் மக்களின் நாளைய சொர்க்க வாழ்வை நிச்சயிக்கின்றன. அதில் சந்தேகம் எதுவுமில்லை. ஆனால் இவற்றால் இந்த உலகில் ஒருவர் பெறுகிற நன்மை என்ன என்ற கேள்வி பிரதானமானது.
ஈமான் என்கிற சரியான நம்பிக்கையும் இஸ்லாம் என்கிற சரியான நடவடிக்கைகளும் மரணத்திற்குப்பின்னால் மட்டுமல்ல இந்த உலக வாழ்கையையும் அழகுபடுத்துகிற இரண்டு முக்கியமான நன்மைகளை கொண்டுள்ளன. அந்த நன்மைகள் தான் ஒரு முஸ்லிமிடம் ஈமான் இருக்கிற இஸ்லாம் இருக்கிறது என்பதற்கான அடையாளங்களாகும்.
ஈமான் என்பது வாழும் முஸ்லிமுக்கு சிந்தனை தெளிவை வழங்ககுகிறது. வழங்க வேண்டும். இஸ்லாம் என்பது நல்ல பண்பாட்டை நற்குணங்களை தருகிறது. தரவேண்டும். இந்த நன்மைகள் ஏற்படாத பட்சத்தில் அவரிடம் ஈமானும் இஸ்லாமும் இருப்பதாக முழுமனதாக ஏற்றுக் கொள்வது இயலாது.
திருக்குர்ஆனின் அல்மாவூன் அத்தியாயம் மிக் முக்கியமாக ஒரு விளக்த்தை சமுதயத்pற்கு முன்னானள் எடுத்து வை;தக்கிறது. தன்னுடைய வாழவு இஸ்லாமிய வாழ்வாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிற எவரும் தவறாமல் ஞாபகத்தில் பதித்தருக்க வேண்டிய ஒரு அத்தியாயம் அது.
மாவூன் அத்தியாhத்தின் தொடக்கத்தில், மார்க்கத்தை(அல்லது மறுமை நாளை) நிராகரிப்பவர் யார் தெரியுமா என்று இறைவன் கேட்கிறான்.
இந்தக் கேள்விக்கு பதில் நாம் சொல்லுவதாக இருந்தால் என்ன சொல்வோம்? அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளாதவன். முஹம்மது நபி (ஸல்) அவர்களை ஒத்துக் கொள்ளாதவன். மறுமை உண்டு என்பதை, சொர்க்கம் நரகம் உண்டு என்பதை நம்பாதவன் தான் காபிர் நிராகரிப்பவன் என்று பதில் சொல்வோம். ஆனால் அல்லாஹ் தருகிற பதில் ஆச்சரியமானது.
அநாதைகளை வெருட்டுபவர்களும் ஏழைகளுக்கு உணவளிக்கத் தூண்டாதவர்களும் தான் மறுமை நாளை பொய் என்று நினைக்கிறார்கள் என அல்லாஹ் பதில் கூறுpகிறான்.
ஆநாதைகளை விரட்டுவதும் ஏழைகளுக்கு உதவி செய்ய என்ற எண்ணமில்லாமல் வாழ்வதும், இதயம் இறுகி, சிந்தனை களங்கப்பட்டிருப்பதின் அடையாளங்களாகும். இவர்களது சிந்தனை எப்படி இருக்கும் என்பதை யாசீன் அத்தியாயத்தில் அல்லாஹ் இன்னும் விளக்கமாக கூறுகிறான். இத்தைகய நபர்களிடம் ஏழைகளுக்கு உணவளியுங்கள் என்று சொல்லப்பட்டால் அல்லாஹ் பட்டினி போட்டவனுக்கு நாங்கள் ஏன் உணவளிக்க வேண்டும் என்று கேட்பார்க்ள் என்று கூறுகிறான்
அடுத்த வசனம் இன்னுமு; அதிர்ச்சியளிக்கிறது. இத்தகைய நபர்கள் தொழுவார்கள் என்றால் அந்த தொழுகையாளிகளுக்கு கேடுதூன் என்கிறது அந்த வசனம். ஏனெனில் அவர்கள் தொழுகையில் கவனமில்லமல் இருப்பார்கள் முகஸ்துதிக் காக பெயர் பெறுவதற்காக தொழுவார்கள். ஒர ஊசியை கூட இரவலாக வழங்கமாட்டார்கள் என்று தொடர்ந்து அல்லாஹ் கூறுpகிறான்.
மிக விரிவாக பேசுவதற்குரிய கருத்தாழம் மிகுந்த இந்த அத்தியாயத்தை கவனித்துப்பாருங்கள் நல்ல சிந்தைன இன்றி இருப்பதும் பண்பாடில்லாமல் வாழ்வதும் ஈமான் இஸ்லாம் இன்மையின் அடையாளங்கள் என்பதை புலப்படுத்துவதை காணலாம்.
ஈமானுக்கும் இஸ்லாமுக்கும் பெருமானார் (ஸல்) அவர்கள் பல் வேறு சமயத்தில் கொடுத்துள்ள பலதரப்பட்ட விளக்கங்கள் இதே கருத்தை பலப்படுததுவதாக உள்ளன.
ஈமான் என்பது 63 சொச்சம் கிளைகளை கொண்டதாகும். வெட்கம் என்பது ஈமானின் ஒரு கிளை என்றார்கள் பெருமானார்(ஸல்) அவர்கள். (அபூஹுரைரா-புகாரி) மனிதனுடைய ஒரு உயர்தர உணர்ச்சி ஈமானிய நம்பிக்கையின் ஒரு அம்சமாகி அதன் அங்கமாகி விடுவதை இந்நபி மொழி புலப்படுத்துகிறது. வெட்கப்படுபவனை ஈமானிய வட்டத்திற்குள் கொண்டு வருகிறது.
பெரியவர்களை மதிக்காதவர் சிறுவர்கள் மீது அன்பு காட்டாதவர் நம்மைச் சார்ந்தவர் அல்ல என்றும் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அனஸ் (ரலி) திர்மிதி) பண்படில்லாமல் வாழ்பவரை ஒரு வகையில் இந்நபி மொழி இஸ்லாமிய சமூக மட்டத்திலிருந்து வெளியேற்றுவதை பார்க்கிறோம்.
இதுவெல்லாம் மிக அழுத்தமாக நமக்கு போதிக்கிற செய்தி என்ன? ஒரு கலிமாவை மொழிந்து விடுவது அல்லது அடையாளப்பூர்வமாக சில வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவது என்பதை தாண்டி இஸ்லாமும் ஈமானுமு; ஒரு மனிதரிடம் இன்னும் அதிகமான எதிர்பார்ப்பை கொண்டிருக்கின்றன என்பது தானே!
அந்த எதிர்பார்ப்பை ஒவ்வொரு முஸ்லிம் தனிமனிதரும் சரியாக புரிந்து வைத்திருக்கிறாரா என்பது தான் இன்றுள்ள பிரதான கேள்வி. ஒரு முஸ்லிமுக்கு அவரது தனி வாழ்வையும் சமூக வாழ்iயும் கட்டமைக்கத் தேவையான சிந்தனை தெளிவை ஈமான் வழங்கியிருக்கிறதா? தனி வாழ்விலும் சமூக வாழ்விலும் மானுட மரியாதையோடு வாழ்கிற பண்பாட்டை இஸ்லாம் பழக்கப்படுத்தியிருக்கிறதா? என்பதை ரமலானை வரவேற்பதற்கு முன்னாள் நாம் தெளிவு படுத்திக கொள்ள வேண்டும்.
பொய் தெய்வங்களை கண்டறிந்து அவற்றை நிராகரிக்க கற்றுக் கொடுத்த ஈமான் மோசடித் தலைவர்களையும் போலிப் புரட்சியாளர்களையும் வேஷம் போடும் சமூக ஆர்வலர்களையும் கணடறிய துணை செய்ததா?
கட்டுப்பாட்டையும் ஒழுங்கமைப்பையும் ஒற்றுமை உணர்வையும் உருவாக கொண்ட வணக்கவழிபாடுகள் இஸ்லாமிய நடைமுறைகள், நகரீகக் குறைபாட்டையும் சண்டை சச்சரவுகளை அழித்துவிட்டதா?
மில்லியன் டாலர் பெருமானமுள்ள இந்தக் கௌ;விகளுக்கு விடை தேடிப் பார்த்தால் தனிமனிதனுடையவும் சமூகத்தினுடையவும் மதிப்பை அளந்துவிட முடியும்.
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறாக சொல்லப்பட்ட செய்தியை பரப்பினார் என்பதற்hக நபித்தோழர் ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களுக்கு 80 கசையடிகள் வழங்கப்பட்டன. அதே ஹஸ்ஸான் (ரலி) அவர்கயள் பிற்காலத்தில் ஆயிஷா (ரலி) அவர்களுடைய வீட்டு முற்றத்தில் உட்கார்ந்திருப்பதை பார்த்துவிட்டு ஒருவர் அன்னை அவர்களே உங்கள் மீதான அவதூறு வழக்கில் ஈடுபட்டபவரை உங்கள் அருகே அனுமதித்திருக்கிறீர்களே என்று கேட்ட போது, ஆயிஷா (ரலி)அவர்கள் அளித்த பதில் மிகுந்த கவனத்திற்குரியது. ஹஸ்ஸான் பத்ரு யுத்தத்தில் கலந்து கொண்டவர் அல்லவா அவரை குறை சொல்லாதீர்கள் என்று ஹஸ்ஸான் (ரலி) அவர்களின் பெருமை நினைவு கூர்ந்தார் என்பது இஸ்லாமிய வரலாறு. ஈமானும் இஸ்லாமும் உருவாக்கிய தெளிவையும் பண்பையும் பறைசாற்றும் இந்த வரலாறு, ஒரு கால கட்டத்தில் இஸ்லாமிய சமூகத்தில் தனிமனிதர்களுடையவும் சமூனத்தினுடையவும் மதிப்பு எப்படி இரந்தது என்பதை வெளிச்சப்படுத்துகிறது.
ஒரு ரமலானை எதிர் கொள்ள ஆயத்தமாகிக் கொண்டிருக்கிற இந்த தருணத்தில் ஒவ்வொரு முஸ்லிமும் தனது தனிப்பட்ட பக்தியுணர்வை இந்த அளவீடகளில் பெருக்கிக் கொண்டு சமதாயம் தூய்மை அடைய உதவ வேண்டும். அப்படி ஒரு காலம் வரம் போது நல்லவர்கள் சமுதயப் பொறுப்பிற்கு வருவதற்கு அச்சப்பட மாட்டார்கள்.