Saturday, December 1, 2007

சீர்திருத்தம் என்பது எதுவரை?

தினமும் சுபுஹ் தொழுகைக்குப்பிறகு ஒரு நபி மொழியை சொல்லி, அது பற்றி மட்டுமே உள்ள கருத்துக்களை ஒரு சொற்பொழிவு போல் இல்லாமல் சாதாரண பாணியல், 5 லிருந்து 7 நிமிடங்களுக்குள்ளாக சொல்லி முடித்து விடுவது எங்களது பள்ளிவாசலில் வழக்கம். நேற்றைய தினம் ஒரு நபிமொழியை வாசித்தேன். அதன் பொருளை கேட்டவுடன் தொழுகையாளிகளின் முகத்தில் ஒரு ஆச்சரியக் கேள்விக் குறி படர்ந்தது. அது படர்கிறதா என்பதை நான் கவனித்து காத்திருந்தேன். அப்படியே நடந்தது. தூக்கக் கலக்கத்திலோ, ஒரு சம்பிரதாயத்திற்காகவோ இவர்கள் இங்கு உட்கார்ந்திருக்கவில்லை என்ற திருப்தி எனக்கு. என்ன இது கொஞ்சம் குழப்பமாக இருக்கிறதே என்ற கேள்வி அவர்களுக்கு.அந்த நபி மொழி இது தான். ஆபூஹுரைiரா (ரலி) அறிவிக்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். ஓரு மக்கள் கூட்டத்தைப் பார்த்து அல்லாஹ் ஆச்சரியம (மகிழ்ச்சிய) டைகிறான். விலங்குகளோடு அவர்கள் சுவர்கத்துக்குள் நுழைவார்கள். (புகாரி 3010)முதல் பார்வையில் இந்நபி மொழி நம்முடைய புருவங்களை உயரவைக்கும். செர்க்கம் என்பதே எல்லா சிரமங்களிருந்தும் விடுதலை தருகிற சுகமல்லமா? அந்த சொர்கத்துக்குள்ளேயே கைவிலங்கோடு செல்வதா? பிறகும் அது சொக்கமாக இருக்குமா? ஒரு வேளை திருமணம் செய்து கொள்கிற ஆண்களை அல்லாஹ் ஒருவரியில் விமாச்சிக்கிறானா? அல்லது சில ஜும்ஆ உரைகளை கேட்கும் நிர்பந்தத்திற்குள்ளான மக்களுக்காக சொல்லப்பட்ட நற்செய்தியா? அல்லது சிறைக் கூடங்களை நிரப்புவதை சமயக் கடைமையாக்கிய தலைவர்களை நம்பி ஏமாந்து போன மக்களுக்கான ஆறுதலா? ஏது பற்றி இந்நபிமொழி பேசுகிறது எனபதை சட்டடென்று புரிந்து கொள்ள முடியாத ஒரு சந்தேக வினாவை இந்நபி மொழி எழப்புகிறது.ஊண்மையில் இந்த அசம்பாவிதங்களைப் பற்றி எல்லாம் இல்லாமல் மிக மக்கியமான ஒரு வழிகாட்டுதலை அதுவம் இன்றைய நகரீகரிக உலகிற்கு தேவையான ஒரு தெளிவை இந்நபிமொழி தருகிறது.விலங்கிடப்பட்ட நிலையில் சொர்க்கத்தில் நுழைபவர்கள் என்ற வார்த்தை, வேறு வழியில்லாத நிர்பந்த சூழ்நிலையில் இஸ்லாத்தை ஏற்பவர்களை குறிக்கிறது.முஸ்லிம்களோடு சண்டையிட்டு தோற்றுப் போனவர்கள் கைதிகளாக பிடிக்கபட்டு கைவிலங்கிட்டு அழைத்துச் செல்லப்படுகிற போது அந்த தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக இஸ்லாமை தழுவினால் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள். அத்தகையோர் நிர்பந்த சூழ்நிலையில் இஸ்லாமை தழுவினாலும் இஸ்லாம் என்கிற அபரிமிதமாகன நன்மையின் விளைவாக சொர்க்கத்திற்குள்ளே நுழையும் வாய்ப்பை பெற்றுவிடுகிறார்கள். அதை கண்டு அல்லாஹ் ஆச்சரியமடைவதாக பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.அல்லாஹ் ஆச்சரியமடைகிறான் என்ற வார்ததை அல்லாஹ் திருப்தியடைகிறான் என்ற பொருள் கொண்டது என ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். குறும்புக்கார மாணவர் ஒருவர் ஆசிரியரிமிருந்து தண்டனை பெற்ற பிறகு சரியாக நடந்து கொண்டால் அதைப்பார்த்து ஆசிரியருக்கு ஏற்படுமே ஒரு திருப்தி கலந்த ஆச்சரியம் அத்ததைகய திருப்தி, நிர்பந்த சூழ்நிலையில் இஸ்லாமை ஏற்றுக் கொண்டு சொhக்கத்திற்கு சொந்தக்காரர்களாகிறவர்களைப் பார்த்து அல்லாஹ்வுக்கு ஏற்படுகிறது என்பது இந்நபி மொழியின் கருத்து.நிர்பந்த சூழ்நிலையில்தான் இஸ்லாத்திற்கு வந்தார்கள் மனம் விழும்பி வரவில்லை என்றாலும் இஸ்லாமின் நன்மையை, அதன் பலாபலன்களை அவர்கள் பெறுக்கொள்வார்கள்.மக்கா வெற்றியடைந்தவுடன் இஸ்லாமைத் தழுவியோர் பலரும், தாயிப் நகரிலிருந்து இஸ்லாமைத் தழுவியோர் பலரும் இத்தைகய மனோ நிலையில் தான் இஸ்லாமைத் தழுவினார்கள். ஆயினும் இஸ்லாமின் பலாபலன்களை உணர்ந்த பிறகு, அதன் கனிகளைச் சுவைத்த பிறகு சொhக்கத்திற்குரிய வாழ்கை அவர்களிடம் வந்தது.கொஞ்சம் எச்சரிக்கையோடு அணுகப்பட வேண்டிய விசயம் இது. இழை பிசகினாலும் இஸ்லாம் சமய நிர்பந்தம் செய்கிறது அல்லது வாள் முனையில் மக்களை மதம் மாற்றுகிறது என்ற கருத்தோட்டம் வந்தவிடுகிற வாய்ப்பிருக்கிறது. ஆனால் நிர்பந்தப்படுத்தி எவரையும் தன்வயம் ஈர்ப்பதில் இஸ்லாத்திற்கு துளியும் விருப்பம் கிடையாது. இந்த மாhக்கத்தை தழுவும் விசயத்தில் எந்த நிர்பந்தமும் இல்லை என்று திருக்குர்ஆன் பகிரங்கப் பிரகடணம் செய்துள்ளது.இஸ்லாம் கொள்கைப் பிடிப்பை அழத்தந் திருத்தமாக வலியுறுத்துகிற மார்க்கம். கொள்கை விசயத்தில் துளியும் சமரசம் செ;யது கொள்ளாத சமயம். அத்தகைய ஒரு சமயம் வேண்டா வெருப்பாகவோ, அலட்சிய மனோபாவத்துடனோ எவரும் தம் மார்க்கத்திற்கு வருவதை ஏற்காது. ஏற்கவும் இல்லை. ஒரு அடையாளத்திற்காவோ ஆட்களை காட்டுவதற்காகவோ நூறு பேரை குல்லா போடவைக்க வேண்டிய எந்த அரசியல் தேவையும் இஸ்லத்திற்கு இல்லை. எனவே நிர்பந்தப்படுத்தி எவரையும் இஸ்லாத்திற்கு கொண்டு வருவது குறித்து இந்நபி மொழியில் பேசப்படவில்லை. நிர்பந்த சூழ்நிலையில் இஸ்லாத்தை ஏற்றவர்களைப் பற்றியே இது பேசுகிறது. நிர்பந்தப்படுத்தி இஸ்லாத்திற்கு கொண்டு வருதல் என்பதற்கும் நிர்பந்த சூழ்நிலையில் இஸ்லாத்தை ஏற்குதல் என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.குழந்தையை அடித்து மிரட்டி மருந்து சாப்பிட வைப்பது நிர்பந்தம். அதே குழந்தைக்கு மிட்டாய் தருவதாய்ச் சொல்லி அக்குழந்தை தானே மருந்தை உண்ணும் சூழ்நிலையை ஏற்படுத்தினால் அதை நிர்பந்த சூழ்நிலை என்று சொல்லலாம்.நிர்பந்தப்படுத்தப் படும் போது மறுப்தற்கு வாய்ப்பிரக்காது, நிர்பந்த சூழ்நிலையில் மறுப்பதற்கு வாய்ப்ப்புக்கிடைக்கும். ஆனால் ஏற்பதனால் கிடைக்கிற நன்மைகள் மறுக்கவிடாமல் செய்து விடும்.இத்தகைய நிர்பந்தச் சூழலில் ஒருவர் இஸ்லாமைத் தழுவினாலும் அது வரவேற்கத்தக்கதே! நிர்பந்தத்திற்கு வந்தவர் தானே என்று ஏளனமாக கருதுவதற்குரிய விசயமல்ல அது. மாறாக அல்லாஹ்வை ஆச்சரியப்படவைக்கிற விசயம் அது என்ற கருத்தை முதல் பொருளாக இந்நபிமொழி வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில் இலக்கிய பாணியில் குறியீட்டு முறையில் சொல்லப்பட்டுள்ள இந்நபி மொழி, சீர்திருத்தத்திற்கான முயற்சியை எந்த எல்லை வரை கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் சாடையாக உணர்த்துகிறது.சீர்திருத்தவாதிகள், கொள்கை கோட்பாடுகளில் பற்றுக் கொண்டோர், தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வகையகம் என்ற சித்தாந்தத்தில் உறுதி கொண்டோர் மிக அக்கறையோடு கவனிக்க வேண்டிய விசயம் இது.ஓரு சீர்திருத்வாதி நிர்பந்தப்படுத்தி எவரையும் தன்வயப்படுத்தக் கூடாது தான் என்றாலும் நிர்பந்த சூழ்நிலையை உருவாக்கி அவரை தன் தன்பக்கத்திற்கு ஈர்ப்பது தவறாகாது. என்பது மாத்திரமல்ல அத்தகைய நிர்பந்த சூழ்நிலைகளை உருவாக்க்குவதில் அவர் அக்கறை எடுத்தக் கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டுதலை இந்பிமொழி தருகிறது.இன்றைய நாகரீக உலகம் ஒரு மனிதர் அடுத்தவர் மீது அக்கறை கொள்வதற்கு மிகக்குறுகிய எல்லைகளை வைத்திருக்கிறது. மதுவினால் சமுதாயம் சகதியில் கிடக்கிறதா? பரவாயில்லை அது கிடந்துவிட்டு போகட்டும். ஆதற்காக மதுக்குடிக்காதே என்று நீ சட்டம் போடாதே! ஏன் சத்தம் கூட போடாதே! சக மனிதனின் மதி கெட்டு மிதிபட்டுச் சீரழிந்தாலும் சரி அது அவனது உரிமை. அந்த உரிமையில் தலையிடுவது அநாகரீகம். போதி மரத்தடி புத்தனாக மாறி எதையாவது ஒன்றை செய்தாக வேண்டும் என்று நீ விரும்பினால் ஒன்று செய்! மதுக்கடைகளை விளம்பரப்படுத்தும் வானளாவிய போர்டுகளின் ஒரு மூளையில் கண்ணுக்கு தெரிhயத சிறிய எழுத்தில் குடி குடியை கெடுக்கும் என்று போட்டு வை! என்பது தான் இன்றைய நகரீகம் சமூக அக்கறையை வெளிப்படுத்துவதற்கு வைத்திருக்கிற அளவுகோல். இந்த அளவுகோலை நாச10க்கானது என்றும் நாகரிகமானது என்றும் நிறுவுவதில் மேற்குலகும் அது சார்ந்த ஊடகங்களும் வெற்றியடைந்துவிட்டன.அதன் விளைவாக மேற்குலக மோகம் சூழ்ந்த மக்களிடம் அறிவுரை எனப்தோ சீர்திருத்தம் என்பதோ ஒரு நன்மை பெறுவதற்கான வழி என்ற மரியாதையை இழந்து விட்டன. ஒரு கட்டத்தில் அது மனித உரிமை மீறலாகவும் பிற்போகுத்தனமாகவும் காட்டுமிராண்டித்தனமாகவும் கூட சித்திரிக்கப்படுகிறது. அதனால், நல்லுரைகளும் நன்னெறி நூற்களும் கண்ணாடிப் பெட்டிக்குள் கவனமாக பாதுகாக்கப்டுகின்றன. நீங்கள் விரும்பினால் படித்துக் கொள்ளலாம்.இந்த சூழ்நிலையில் ஓருவர்மீது ஒருவர் சாய்நதபடி அந்தப் பெட்டிக்குள் இருக்கிற அறபோதனைகளை வாசிக்கிற இளைஞனும் யுவதியும் ஸோ! இட்ஸ் ஸவீட் யா! ஏன்று ஐஸ்கீரிமை சப்பியபடி நகர்ந்து வீடுகிறார்கள்.இந்தக் கோட்பாட்டின் விளைவாக தமது சொந்தக் குழந்தைகளை கூட வழிப்படுத்த முடியாத சூழ்நிலை மேற்குலகு சார்ந்த பெற்றோர்களுக்கு சட்ட ரீதியாக ஏற்பட்டது. ஒரு தந்தை தவறான பாதையில் செல்லத் தொடங்கிய தன்னுடைய பெண் மகளை கண்டித்தார். ஆவள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்நது தனியாக வாழ அனுமதி பெற்றேதோடு தந்தையிடமிருந்தே மாதச் செலவுக்கான தொகையும் பெற்றுக் கொள்ள தகுதியும் பெற்றாள். இத்தகைய தீர்ப்புகள், இன்றைய மேற்குலகின் கலாச்சாரத்தில் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி விட்டன. கண்ணுக்கு நேர போதைப் பொருளை உபயோகிக்கிற பிள்ளைகளைக் கூட கண்டித்து தடுக்கிற சக்தியற்றவர்களாக பெறறோர்கள் ஆனார்கள். காலப்பொக்கில் அதை தடக்க வேண்டும் என்ற எண்ணம் கூட தேவையறற்றது மனோ நிலைக்கு ஆளாகிவிட்டார்கள். கல்விக் கூடங்கள், அலுவலகங்கள், சமூக சமய மையங்கள் அனைத்திலும் இந்த எண்ணம் மேலோங்கி இதுவே மேற்குலகின் மனசாட்சியாகவும் பண்பாடாகவும் மாறிவிட்டது. ஒரு சமூக அக்கறை, அல்லது சீhதிருத்த முயற்சிக்கான எல்லை இது தான் என்ற இந்த வரையரை இஸ்லாத்தின் இயல்புக்கு எதிரானது. இந்த எல்லையை இஸ்லாம் ஏற்கவில்லை.ஓரு சீர்திருதத்திற்கான முயற்சி என்பது அடுத்தவரின் உரிமை என்ற அளவீட்டை தாண்டி அவரது நலன் என்ற எல்லைக் கோட்டை தொடவேண்டும் என்று இஸ்லாம் கருதுகிறது. அதையும் தாண்டி சமுதாய நலன் என்ற சிகரத்தையும் எட்டிப்பிடிக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் விருப்பமாகும். அதே நேரத்தில் இத்தகைய நலம் நாடுதல் என்பது சாத்வீகமான அல்லது சாத்தியப்பட்ட வழிமுறைகளின் அடிப்படையில் மட்டுமே அமைய வேண்டுமேயன்றி வன்மமான நிர்பந்திக்கிற வழிவகைகளின் அடிப்படையில் அமையக் கூடாது என்றும் தெளிவாக இஸ்லாம் உத்திரவிட்டுள்ளது.இஸ்லாமின் இரண்டாம் கலிபா உமர் (ரலி) அவர்கள் தமது ஆட்சிக்காலத்தில் ஒர வயதான பெண்மணியை அணுகி இஸ்லாமை எடுத்துச் சொன்னார்கள். அந்தப் பெண்;மணி மறுத்துவிட்டார். (அன அஜுஸுன் கபீரத்துன் வல் மவ்து இலைய்ய கரீபுன்) நானோ முதிhந்தவள்.மரணத்தின் பக்கத்திலிருப்பவள். இந்த சமயத்தில் என்னை விட்டு விடுங்கள் என்று சொன்னார். அந்த மக்கள் தலைவர் மார்க்கத்தில் நிர்பந்தம் அல்லை என்ற குர்ஆனிய வசனங்களை முனுமுனுத்தபடி அந்த இடத்தை விட்டு அகன்று விட்டார்.இந்த நிகழ்வில் ஒரு சீர்திருத்த வாதியின் அக்கறைக்கான அளவும் அதன் எல்லையும் மிகத்துல்லியமாக வரையரைக்கு உட்பட்டிருப்பதை காணலாம். ஒரு ஜனாதிபதி தனது சமூக கடமையை எந்த நிலையிலும் மறக்கவில்லை. ஓரு கிழவியொடு பேசுகிற அளவுக்கு கீழே இறங்கி வரவும் அவர் தயங்கவில்லை. ஓரு ஆட்சித் தலைவர் இறங்கி வந்து ஒரு குடியானவனிடம் பேசினால் அது ஒருவகை நிர்பந்தமாகி விடாதா என்று அவர் கவலைப் படவும் இல்லை. ஆனால் அந்த பெண் மறுத்த போது அவளை அவர் நிர்பந்தப்படுத்தவும் இல்லை.ருஷ்யாவில் லெனின் ஸ்டாலின் போன்றோர் கம்யூனிஸத்தை பரப்பியதற்கும், முஸ்லிம்கள் வெற்றி கண்ட நாடுகளில் கலீபாக்கள் இஸ்லாமைப் பரவச் செய்தத்தற்கும் இடையே உள்ள மிக முக்கியமான வேறுபாடு இது.ஓரு தத்துவம் தோற்றுப் போனதற்கும் ஒரு சமயம் வெற்றியடைந்தததற்குமான காரணத்தை கூட இந்தப் பின்னணியல் அறிந்து கொள்ளலாம்.ஓரு நிர்பந்த சூழ்நிலைக்கு உட்படுத்துவது வரை சீர்திருத்தவாதி கவனம் செலுத்த வேண்டும். ஆனால் நியாயம் இன்றி எவரையும் நிர்பந்தப்படுத்தக் கூடாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்கு எடுபிடி வேலைகள் செய்து கொண்டிருந்த ஒரு யூதச் சிறுவனுக்கு உடல்நலமில்லை என்று அறிந்தார்கள். நலம் விசாரிப்பதற்காக சிறுவனுயைட வீட்டிற்குச் சென்றார்கள். குசல விசாரிப்புகள் முடிந்த பிறகு அந்தச் சிறுவனுக்கு இஸ்லாமிய கோட்பாடுகளின் சாரம்சமாக திகழ்கிற கலிமா வாசகத்தை சொல்லிக் கொடுத்து அதைச் சொல்லும்படி சொன்னார்கள். என்ன செய்வதென்று புரியாமல் சிறுவர் திகைத்தார். தன் வீடு தேடி வந்து சுகம் விசாரித்த இஸ்லாமியத் தலைவரின் அன்புக் கட்டளைக்கு அடிபணியாமல் இருப்பது எப்படி? அப்படி அடிபணிந்து விட்டால் தந்தை என்ன சொல்வாரோ? ஏன்ற பரிதவிப்பில் தந்தையை பாhக்கிறார். தந்தை சொன்னார் மகனே! அபுல்காஸிமின் (முஹம்மதின்) வார்த்தகை;கு கட்டுப்படு! ஆச்சிறுவர் இஸ்லாமைத் தழுவினார். நுரகிலிருந்து இவரை காப்பாற்றிய இறைவனு;ககே எல்லா புகழும் என்று கூறியபடி முஹம்மது (ஸல்)அவர்கள் அங்கிருந்து திரும்பினார்கள். (புகாரி 1268)இந்தச் செய்தியும் ஒரு நல்ல விசயத்தை ஏற்றுக் கொள்ள வைப்பதில் நிர்பந்த சூழ்நிலையை உருவாக்க தயங்கத் தேவை இல்லை என்பதை உணர்ததுகிறது.ஓரு கொள்கை வாதி இப்படித்தான் இருக்க முடியும். அது தான் கொள்கை வாதிக்கான அடையாளமும் கூட. நம்மில் பலபேர் மது அருந்துவதில்லை. அதனாலேயே நாம் மதுவுக்கு எதிரான கொள்கையுள்ளவர்கள் என்று அர்த்தம் ஆகிவிடாது. காசில்லாததால், அல்லது வாய்ப்பில்லாதததால், அல்லது சமூகம் தூற்றுமே என்று பயப்படுவதால் நாம் குடிக்காதவர்களாக இருக்க வாயப்புண்டு. மது அருந்துகிற ஒருவரை நாம் தடுத்து திருத்துகிற போது அல்லது கிடைக்கிற சமயத்தை பயன்படுத்திக் கொண்டு அதைப்பறிறி பிரச்சாரம் செய்கிற போது தான் நாம் அந்தக் கொள்கையுடைவர் என்பது நிஜப்படும்.ஓரு கொள்கைவாதி அல்லது சீர்திருத்த வாதியின் அடையாளம் அந்தக் கொள்கையை நடைமுறைப் படுத்துவதற்காக ஒரு சூழ்நிலையை உருவாக்குவதில் அவர் எவ்வளவு தூரம் ஈடுபடுகிறார் என்பதை பொறுத்தும்.அதில் எந்த அளவு வெற்றி பெறுகிறார் என்பதை பொறுத்துமே அமைகிறது.என் கடமையை நான் சொல்லி விட்டேன். மற்றது உன் பாடு என்ற வாசகத்தை ஒரு சீர்திருத்தவாதி அவரது முன்னுரையின் முடிவில் சொல்லக் கூடாது. முடிவுரையின் கடைசி வரியில்தான் சொல்ல வேண்டும். ஆதுவரை அவர் முயற்சி செய்ய வேண்டும்.திருக்குர்ஆன் குடும்பத்தை சீர்திருத்துவது குறித்து பேசுகிற போது நீங்கள் உங்களையும் உங்களைச் சார்ந்தவர்களையும் நெருப்பிலிரு;து காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்ற ஒரு வாசகத்தை சொல்கிறது. (66:6)திருக்குர்ஆனிய விரிவுரையாளர்களால் மிக விரிவாக விவரிக்கப்பட்டுள்ள இந்த வசனத்தின் அமைப்பும் கருத்தும் சீர்திருத்தம் செய்ய முயற்சித்தல் என்ற களத்தின் கணபரிமாணத்தை மிகச் சரியாகவும் பக்குவமாகவும் விண்டுரைத்து விடுகிறது.ஓருவரை நெருப்பிலிருந்து காப்பாற்றுதல் என்றால் அவர் விழுந்த பிறகு காப்பாற்றுதல் என்று அதற்கு பொருளாகாது. விழுவதற்கு முன்னரே தடுத்துவிடவேண்டும். அதே போல நெருப்பில் விழப் போகிறவரைப் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு, விழாதே ! இறந்துவிடுவாய் என்று ஊதுகுழல் வைத்து உபதேசித்துக் கொண்டிருப்பது அவரைக் காப்பாற்றுவதாகாது. இதையே ஒரு பதாகையில் எழதிக் காட்டி எச்சரிக்கை செய்வதும அவரை காப்பாற்றியதாகாது. அவரது கையைப் பிடித்துத் தடுக்க முயற்சி செய்ய வேண்டும். அப்படித் தடுக்கிற போது தன்சக்தி முழவதையுமு; பிரயோகித்தால் கூட அது தவறாகிவிடாது. ஒரு பொறுப்புள்ள மனிதன் இப்படித்தான் செய்யவேண்டும்.சமூக அக்கறை குறித்த இஸ்லாத்தின் கருத்து இந்த அளவு வரை நீண்டு செல்கிறது. விட்டேத்தியான அல்லது ஒரு மேம்போக்கான வெற்று உபதேசமோ அல்லது கருத்துரையோ ஒரு முஸ்லிமின் பொறுப்புணர்வை முழமையாக பிரதிபலிபதாகாது.நீங்கள் உங்கள் குடும்பத்தை மார்க்கத்திற்காக பக்குவப்படுத்துவதில் எந்த அளவு முயற்சி செய்கிறீர்கள்? உங்களது பணியாளர்களை நெறிப்படுத்துவதில் எவ்வளவு தூரம் உங்களது செல்வாக்கை செலுத்துகிறீர்கள்? தவறு செய்பவர்களை திருத்துவதில் எந்த அளவு அக்கறை செலத்துகிறீர்கள்? சமூகத் தீமைகளுக்கு எதிரான போராட்டத்தில் எந்த அளவு பங்கு செலுத்துகிறீர்கள்? ஒரு சிறந்த சமுதாயத்தை கட்டமைப்பதில் எவ்வளவு தூரம் ஆhவம் காட்டுகிறீர்கள்கள்? அர்ப்பணிக்கப் போகிறீர்கள்? உங்களது வாழ்வில் ஒளியேற்றிய மார்க்கத்ததை உலக மக்களுக்கு வெளிச்சப்படுத்த எந்த விளக்கை ஏற்றிவைத்தீர்கள்? காசு கொடுக்காமல் கட்டுப்படுத்தி வைத்து அல்லது வசதி வாய்ப்புக்களை முடக்கி வைத்து நம்குடும்பத்தை நாம் நெறிப்படுத்த முடியாதா? ஆந்த அளவுக்கு நாம் சென்றோமா? பணியளர்களோடு பழகி, பரிசுகள் வழங்கி, சௌகரியங்கள் செய்து கொடுத்து அவர்களை பக்குவப்படுத்த முடியாதா? ஆந்த அளவுக்கு நாம் இறங்கிச் சென்றோமா? உறவுகளோ நண்பர்களோ தவறு செய்கிற போது உறவு அல்லது நட்புப் பாலத்தை நெருக்கியும் இறுக்கியும் அவர்களை வழிதிரும்பச் செய்ய முடியாதா? அந்த அளவுக்கு நாம் நகர்ந்து சென்றோமா?இந்தக் கேள்வியை நான் கேட்கவில்லை. கைவிலங்கோடு சொர்க்த்தில் நுழைபவர்களை பாhத்து அல்லாஹ் ஆச்சரியப்படுவதாக வருகிற நபி மொழி நம்மிடம் கேட்கிறது.நல்லதை சொல்வதற்கு நாகரீகத்தின் பெயரால் தயக்கம் காட்டுகிற குணத்தை கலைந்து எறிந்து விட்டால் நம்மால் நேர்வழி பெற்றவர் ஒருவர் சொர்க்கத்துக்குள் பாதம் பதிக்கிற காட்சியைப் பார்க்கிற போது அல்லாஹ் மட்டுமல்ல நாமும் மகிழ்ச்சியடைலா.

தீராத விளையாட்டுப் பிள்ளைகள்

ஒரு நபித்தோழர் வீட்டு வாசலில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்। தொருவில் மாடு ஒன்று இடையனோடு செல்லாமல் அடம்பிடித்துக் கொண்டிருந்தது. அவன் சாட்டடயால் ஒரு அடி அடித்தான் மாடு நடக்கத் தொடங்கியது. இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்த நபித்தோழர் அந்தச் சாட்டையடி தன்மேல் விழுந்தது போல் துள்ளி எழுந்தார். நான் பாடம் பெற்றுக் கொண்டேன் நான் பாடம் பெற்றுக் கொண்டேன நான் பாடம் பெற்றுக் கொண்டேன், எஜமானன் சொல்லுக்கு கட்டுப்படாத யாரும் தண்டனை பெற்றே தீருவர் என்று முனகிக் கொண்டே அவர் எழந்த சென்றார்.இது முஃமின்களின் குணம். தன்னை சுற்றி நடைபெறுகிற எந்த ஒரு சிறு நிகழ்விலிரந்தும் பாடம் பெற்று விழிப்படைந்த கொள்ள வேண்டியது அவரது இயல்பாக இருக்க வேண்டும் என்பது குர்ஆனுடைய எதிர்பார்ப்பு.கடந்த மாதம் மதுரையில்; மிக மோசமான வன்முறைகள் நடந்தன. சுயநலத்தோடு பொய் செய்திகளை பரப்பி வரகிற தினகரன் நாளேடு வெளியிட்ட கருத்தக் கணிப்பால் கொடூரமமான வன்முறைகள் அரங்கேறின. குண்டர்களின் வெறியாட்டங்களுக்கு மூன்ற அப்பாவி மனித உயிர்கள் பலியாயின. அரசு சொத்துக்கள் நாசப்படுத்தப்பட்டன.பொதுமக்கள் அச்சத்தின் பிடிக்குள் தள்ளப்பட் பட்டார்கள். ஒரு பெரிய நாட்டில் அங்காங்கே ஏதாவது கலவரம் நடப்பது, வன்முறை வெடிப்பதும் சகஜம் தான் என்றாலும் இந்த வன்முறை சராசரியானது அல்ல. பொருளாதாரத்திலும் தொழில் நுட்பத்திலும் வளர்ச்சியடைந்து, கல்வி விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள ஒரு மாநிலத்தில் ஆளும் தரப்பை சார்ந்தவர்களின் நாற்றம் பிடித்த குடும்பச் சண்டையால் சட்ட ஒழுங்கு சீர்குலைந்த அப்பாவி மனித உயிhகள் பலியாகயிருக்கிறார்கள். காவல் துறையின் மேற்பார்வையில் இத்தனை அராஜகங்களும் அரங்கேறியிரக்கின்றன. பசுவின் கன்றுக்காக தன் மகனையே தேர் காலடிக்கு காணிக்கையாக்கிய மனு நீதிச் சோழனின் கதைகளை சொல்லிச் சொல்லியே ஓட்டு வாங்கிய தலைவர்கள் தங்கள் வாரிசுகளின் வாலாட்டல் குறித்து வாய் மூடிய மௌனச்சாமிகளாக மோனத்தவம் இருக்கிறார்கள். தானைத் தலைவர்கள் தமிழ் சமுதாயத்திற்கு செய்யும் கைமாறுகளில் இதுவும் ஒன்று என்று என மக்களும் எடுத்துக் கொண்டு விட்டார்கள். என்ன பெரிதாக நடந்துவிட்டது போல அரசாங்கம் அமைதியாக இருக்கிறது. தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிகட்டும் என்பது பொல மதுரை கலவரங்களுக்கு தில்லியில் தீர்வு காணப்பட்டு விட்டது. குடுமப பிரச்சினைக்கு முடிவு கட்டப்பட்ட விதத்தில் ஆளும் கட்சி ஆசுவாசம் அடைந்து விட்டிருக்கலாம். ஆனால் மக்கள் ஆசுவாசம் அடைந்து விட முடியாது. ஏனெனல் அவர்களது பாதுகாப்பு குண்டர்களின் கைகளில் இருக்கிறது. அந்த குண்டர்கள் அரச பாதுகாப்பில் இருக்கிறார்கள். இது சமூக ஆர்வலர்களை பெரிதும் கவலை கொள்ளச் செய்திரக்கிறது. காமராசரின் கல்வித் திட்டத்தால் வளமடைந்து வரும் தமிழ்நாடு திராவிட இயக்கங்களின் அரசியல் பண்பாட்டால் இன்னும் எத்தனை சீர்குலைவுக்கு ஆளாகப் போகிறதோ என்ற அவர்கள் அங்கலாய்த்துக் கொண்டிக்கிறார்கள். இந்தக் கவலைகள், அங்கலாய்ப்புக்களைத் தாண்டி, இந்த நிகழ்ச்சிகளிலிருந்து நாட்டில் உள்ள நல்லவர்களும் முஸ்லிம்களும் பெற்றுக் கொள்ள வேண்டிய சில முக்கியமான பாடங்கள் இருக்கின்றன. இஸ்லாமிய அந்தப்பாடங்களை கற்றுத்தருகிறது.குண்டர்களை மதிக்கக் கூடாது சட்டத்தை மீறீ நடக்கிற குண்டர்களை மதிக்கக் கூடாது என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. அவர்களுக்கு கட்டுப்படுவதையும், பொதுச் சபைகளில் அவர்கள் கண்ணியப்படுத்தப்படுவதையும் இஸ்லாம் வன்மiயாக கண்டிக்கிறது. ஏன்? அத்தகையவர்களை புகழ்ந்து பேசுவது கூட பெருந்தவறு என்பது இஸ்லாமின் அறிவுரையாகும். வரம்பு மீறிச் செல்லும் ஒருவன் பகழப்படும் போது அல்லாஹ் கோபமடைகிறான்.அவனது அர்ஷ் கிடுகிடுக்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பாளர் அனஸ்(ரலி) நூல் மிஷ்காத்)நபிகள் நாயகத்தின் இந்த வார்த்தைகளில் தொனிக்கிற கடுமையை சமுதாயம் கவனத்தில் கொள்ள வேண்டும். சமயத்திலும் சமூகத்திலும் வரம்பு மீறிச் செல்பவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டும். ஆவர்களது ஆளுமைக்கு உடன்படுவது மாத்திரமல்ல அவர்களது பராக்கிரமங்களை புகழ்வதே கூட பாவம் என்பதை இந்த நபி மொழி புலப்படுத்துகிறது. குணடர்கள் சமயச்சாயம் பூசிக் கொண்டாலும் சரி சமூக ஆர்வலர்களாக தங்களை காட்டிக் கொண்டாலும் சரி அவர்களை ஒவ்வாமையோடு தான் சமதாயம் பார்க்க வேண்டும். பொதுச் சேவை செய்கிறார்கள் நமக்குச் சார்பாக பஞ்சாயத்து செய்கிறார்கள் என்ற காரணங்களுக்காக குண்டர்களுக்கு முக்கியத்துவம் தருவது சமுதயா நலனுக்கு எதிரான நடவடிக்கையாகும். குண்டர்களை மதிப்பது தனிமனிம மதிப்பீடுகளையும் பாதிக்கும். சுமதாயத்தின் பண்பாட்டு செழமையையும் பாதிக்கும். என்றைக்காவது ஒரு நாள் தங்களது ஆசை புறக்கிணிக்கப்படுகிற போது அவர்கள் இப்படித்தான் சமூக விரோதச் செயல்களை கட்டவிழ்த்து விடுவார்கள். அது தனிப்பட்டவர்களின் குடும்பத்தையும் நாட்டையும் சேர்ததே பாதிப்புக்கு உள்ளாக்கும். துரதிஷ்ட வசமாக இன்றைய உலகில் குண்டாயிசம் ஹீரோயிசம மாகிவிட்டது. அவர்கள் மதிக்கப்டுவதும் போற்ப்படுவதும் அரசயில் அதிகாரத்திற்கு உயர்த்தப்படுவதும் அன்றாட நடவடிக்கைகளாகிவிட்டன வளமடைந்து வருகிற இந்தியாவின் எதிர்காலத்துpற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கிளில் பிரதானமானது சமூகத்தில் குணடர்களின் ஆதிக்கம் பரவிவரவது தான் என்று ஆய்வாளர்களும் சமூக ஆர்வலர்களும் பயப்படுகிறார்கள். அரசியலில் அவர்களத பங்களிப்பு சட்த்தின் ஆட்சியை பள்ளிலிளிக்கச் செய்து கொண்டிருக்கிறத. தற்பொதைய இந்தியப் பாராளுமன்ற உறுப்பிளனர்களில் 16 சதவீதம் பேர் குற்றப் பின்னணி உடையவர்கள் என்று சோஷியல்வாட்ச்.ஆர்க் என்ற இணைய தளம் சொல்கிறது. பொறுப்புள்ள குடிமக்கள் குண்டர்களையும் குண்டாயிசத்தையும் முடிந்தசரை தடுக்க கடைமைப்படடுள்ளார்கள். குண்டாயிசத்திற்கு எதிராக பலத்தை பிரயோகிக் இயலுமென்றால் பலத்தை பிரயோகிக்க வேண்டும். அல்லது எழுத்தால் பேச்சால் எதிர்க்க வேண்டும் குறைந்த பட்சம் அஐத வெறுத்து ஒதுக்கவாவது செய்ய வேண்டும். இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த வழிமுறை. முஸ்லிம்கள் குறிப்பாக முஸ்லிம் இளைஞர்கள், இயக்கங்களின் பின்னணியில் குண்டாயிசத்தை தங்களது ஆயுதமமவும் பயன்படுத்திக் கொள்ளக் சுடாது. குண்டாயிசத்திற்கு ஆதராவாகவும் நடந்து கொள்ளக் கூடாது. அது சமூக விரோதம் என்பது மாத்திரமல்ல சமயத்திற்கும் விரோதமானது என்பது தான் இங்கு உணர்ந்து கொள்ள வேண்டிய பிரதான பாடமாகும்.தவறான பிள்ளைகளால் தொடரும் துயரம் ஒரு மனிதரின் அந்தஸ்தும் மரியாதையும், ஏன் மன அமைதியும் கூட அவரது நடவடிக்கைகளை மட்டுமே சார்ந்த விசயம் அல்ல அவரது சந்ததிககளின் நடவடிக்களையும் பொறுத்த விசயமாகும். ஓரு இறைநம்பிக்கையாளரின் பக்திகரமான வாழ்வு கூட அவரை மட்டுமே பொறுத்த விசயமல்ல. அவரது சந்ததிகளின் நடவடி;கைகளையும் பொறுத்த விசயமாகும். புல புகழ் பெற்ற மனிதர்கள் அவர்களது சந்ததிகளால் மிகுந்த மனசஞ்சலத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள். நம்மை சுற்றிக்கூட சற்றே பார்வையை சுழற்றினால் தந்தை பாடுபட்டுச் சேர்த்த செல்வத்தை ஊதாரித்தனமாக செலவழித்து குடும்பத்தை அலங்கோலப்படுத்திய பிள்ளைகள் பலர் நம் கண்களுக்கு தட்டுப்படுவார்கள். தந்தை உருவாக்கி வைத்த நிறுவனத்தை தரமற்றதாக்கிய பிள்ளைகள் பலரையும் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். மானத்தோடும் மரியாதையோடும் வாழ்ந்து கொண்டிருந்த பெற்றோரை அவமமானச் சகதியில் தள்ளிவிட்ட வாரிசுகள் பலரையும் பற்றி வரலாறு உண்டு. காந்தி என்ற பெயருக்கு இந்த தேசத்தில் கிடைக்கிற மரியாதை எத்தகையது? ஆனால் அந்த பெருந்தகையின் புகழ் வாழ்விவில் கூட ஹரிலால் என்ற அவருடய குடிகார மகனால் கறைபடிந்தது உண்டு. இத்தகைய விபத்துக்கள் நிகழும் போது ஏன்தான் இப்படி ஒரு பிள்ளையை பெற்றோமே என்று ஆதங்க்பட்டு நிற்பது அறிவுடைமை ஆகாது. இத்ததகைய ஒரு நிலை நமது பிள்ளைகளின் வழியாக வந்து விடக் கூடாது என்று எச்சரிக்கையாக நடந்து கோள்வதும் அதற்கேற்ற வகையில் பிள்ளைகளை வளர்ப்பதில் கவனம் செலத்துவதும பெற்றோரது கடமையாகும். முஸ்லிம் பெற்றோர்கள் இது விசயயத்தில் மிகுந்து கவனம் செலுத்த கடமைப்பட்டிருக்கிறார்கள். ஏனென்றால் மற்ற எல்லவற்றையும் விட ஒரு பெரிய ஆபத்தை பற்றி அவர்களை திருக்குர்ஆன் எச்சரிக்கிறது. ஒருவர் நல்லவராக இருந்து அவரது மக்கள் தவறானவர்களாக இருந்துவிட்டால் அது அவரது புழழ்வாழ்வை மட்டுமல்ல பக்தி வாழ்வை கூட பாhதித்து விடும் என்று குர்ஆன் கூறுகிறது. நபி மூஸா (அலை) அவர்கள், நபி கிழ்ரு (அலை) அவர்களோடு ஒரு ஞானப்பயணம் சென்ற வரலாற்றை பேசுகிற திருக்குர்ஆன் ஒரு நிகழ்வை பதிவு செய்திருக்கிறது. அவ்விரு நபிமார்களின் பயணப் பாதையில் சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். நபி கிழ்ரு அலை அவர்கள் ஒரு சிறுவனுக்கு அருகே சென்று சட்டென்று அவனை கொலை செய்துவிட்டார்கள். அதிர்ந்து போன மூஸா (அலை) அவர்கள்; என்ன காரியம் செய்து விட்டீர்? ஏதனால் இப்படிச் செய்தீர்? என்று விளக்கம் கேட்ட போது நபி கிழ்ர் (அலை) சொன்னார்கள். இந்தச் சிறுவனின் பெற்றோர்கள் இருவரும் பக்தி மிக்கவர்வர்கள். இவன் (வளர்ந்து) அவர்களை அக்கிரமம் செய்யுமாறும், அல்லாஹ்வை நிராகரிக்குமாறும் செய்துவிடுவான் என்று பயந்து அப்படிச் செய்தோம் (18:80)திருக்குர் ஆன் கூறும் கடந்த கால வரலாற்றுத்தகவல்கள் எதுவும் கதைக்காக மட்டுமே சொல்லப்படுவதில்லை.அதையும் தாண்டிய சில பரிய நோக்கங்கள் அந்தச் செய்திகளில் உண்டு. அந்த வரலாறுகளில் இருந்து வாழும் மனிதர்கள் எடுத்தக் கொள்ள வேண்டிய பாடங்களுக்காகவே அவை பேசப்பட்டுயள்ளன. இந்த வரலாற்றுச் செய்தியும் அப்படித்தான். தவறான பிள்ளைகள் காரணமாக பெற்றோர் அக்கிரமம் செய்கிற சூழ்நிலை ஏற்படலாம் என்ற செய்தியும் நல்ல பெற்றோர்கள் இறை நிராகரிபட்பிற்கு செல்வதற்கு கூட அந்தப்பிள்ளைகள் காரணமாகக் கூடும் என்ற செய்தியும் இந்த வரலாறு கற்றுத்தருகிற அச்சம் தருகிற பாடங்களாகும். முஸ்லிம் பெற்றோர் அதிக கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய செய்தி இது. நம்முடைய பிள்ளைகளுக்கு தேவையான வசதி வாய்;ப்புக்களை நாம் உருவாக்கி தந்திரக்கிறோம். அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறோம். அவர்கள் மீது அலாதியான அன்பு கொண்டிருக்கிறோம் என்பது தவறானது அல்ல. ஆனால் நமது பாசம் தவறான செயல்களை செய்கிற துணிவை அவர்களுக்கு தந்துவிடக் கூடாது. அப்படி ஒரு துணிச்சலை அவர்கள் பெற்று விடுவார்களானால் அது பெற்றோர்களின் அர்ப்பணிப்புகளை அர்த்தமற்றதாக்கி விடுவது மாத்திரமல்ல அவர்களுக்கே ஆபத்தாக அமைந்து விடக் கூடும். நாம் எதிர்பார்க்காத தருணத்தில் எதிர்பாராத விதத்தில் மனசஞ்சலம் அடைவதற்கும் அது காரணமாகிவிடும். பாசம் எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதற்கும் ஒரு இலக்கணம் இருக்கிறது. வீட்லிருக்கிற பாத்திரத்தை உடைத்து விட்டால் அம்மா மன்னித்து விடுவார்கள் என்று நினைக்கிற குழந்தைகள், பக்கத்து வீட்டு கண்ணடியை உடைத்து விட்டால் அடித்து பின்னி விடுவார்கள். அடைக்கலமோ ஆதரவோ தரமாட்டார்கள் என்று பயப்பட வேண்டும். இந்த எண்ணம் பிள்ளைகளின் மனதில் உறுதிப்படும் வண்ணம் பாசம் இருக்க வேண்டும். இன்றை சூழ்நிலையில் முஸ்லிம் பெற்றொர்றோர்கள் இந்த அளவு கோலை போனுகிறார்களா என்பது இன்றைய பிரதான கேள்வியாகும்? கல்விக் கூடங்களுக்கு வாகனத்தோடும் வசதியோடும் அந்தஸ்த்தாக அனுப்பிவைக்கப்படுகிற நம்முயை பிள்ளைகள் அறிவுத் தாகத்தோடும் மரியாதையோடும் நடந்து கொள்கிறார்களா என்பதில் பெரும்பாலும் முஸ்லிம் பெற்றோர்கள் கவனம் செலத்துவதில்லை. அதனால் பல கல்வி நிறுவனங்களிலும் முஸ்லிம் மாணவர்கள் அடங்காத சக்திகளாக இருக்கிறார்கள். கல்வியின் தரத்தையும் நிறுவனங்களின் சிறப்பையும் சீர்குலைப்பவர்களாக இருக்கிறார்கள். அசிரியை கண்டித்தார் என்பதற்காக ஓரு ஏழாம் வகுப்பு முஸ்லிம் மாணவன் அவரின் கழுத்தை நெறிக்க முயற்சி செய்தான் என்ற அதிர்ச்சி தகவலும், ஒன்பதாவது படிக்கும் மற்றொரு மாணவன் வகுப்பில் விளையாடியதை கண்டித்ததற்காக ஆசிரியரின் இருசக்கர வாகனத்தின் பிளக்கை பிடுங்கி விட்டான் என்ற செய்தியும் முஸ்லிம் மஹல்லாக்களில் நடந்த சில நிகழ்வுகாளகும். பிள்ளைகள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்தால் வீட்டிற்கு வெளியே பையன் செய்கிற அக்கிரமங்கள் குறித்து கண்டு கொள்ளாத பெற்றோர்களின் தயவு தான் காரணம் என்பது புலப்படும். பெற்றோர்கள் எச்சரிக்கை அடைய வேண்டும். நமது செல்வங்களின் செயல்பாடுகள் நமது மரியாதையை மேம்படுத்தாவிட்டால் கூட பரவாயில்லை. நம்மையே குற்றவாளிகளாக்கி விடாமல் இருக்க வேண்டும் என்பதில் மிக கண்டிப்பான கவனம் செலுத்த வேண்டும். அது அவரது சமூக அக்கறை மட்டுமல்ல சமய அக்கறை சார்ந்த விசயமுமகும். பொறுப்பேற்பது பெற்றோர் கடமை தமது வாரிசுகள் பெரியவர்களான பிறகு நடந்து கொள்ளும் தீய செயல்களுக்காகவும் பெற்றோர்கள் பொறுப்பேற்க வெண்டும். அது தூன் சிறந்த பெற்றோரின் பொறுப்புணர்வாகும். அப்படிப் பொறுப்பேற்காதவர்கள் தங்கயளது கடமையிலிருந்து நழவுகிறார்கள் என்றே பொருள். அரசியல் அதிகார பீடங்களில் இருப்பவர்கள் தங்களது செல்வாக்கால் அந்த பொறுப்புணர்வை வேறு வகைகளில் மொழுகி வைக்கலாம். சாமணியர்களுக்கு அது சாத்தியமானதல்ல. குறிப்பாக முஸ்லிம்கள் அப்படித் தப்பித்தக் கொள்ள முடியாது. வளர்நத பிள்ளைகளின் செயலுக்கு அப்பாவிப் பெற்றோர்கள் எப்படி பொறுப்பெற் முடியும் என்று ஒரு கேள்வி வருவதற்கு நியாயமுண்டு. அதற்கான பதிலை இஸ்லாம் தெளிவு படுத்தகிறது. வளர்ந்த பிள்ளைகள் பெற்றோரின் தயவின் காரணத்தால் அல்லது பெற்றொரின் பாசப்பரிவின் காரணத்தால் அல்லது அதிகார பலத்தின் காரணத்தால் தவறு செய்தால் அதற்கு பெறறோரும் பொறுப்பெற்க வேண்டும். ஹஜ்ரத் (உமர்) அவர்கள் காலத்தில் எகிப்தின் ஆளுநராக அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஒரு முறை எகிப்தில் ஒட்டகப் பந்தயம் நடந்தது. அதில் கவர்னர் அம்ரின் மகன் முஹம்மதுவும் கலந்து கொண்டார். அவரது ஒட்டகை முதலில் ஒடிக் கொண்டிருந்தது. திடீரென எகிப்தை பூர்வீகமாக கொண்ட ஒரு கிப்தி இன இளைஞன் அவரை முந்திச் சென்றான். அப்படி முந்திச் செல்லும் போது அவனது வாயிலிருந்து ஒரு ஆவேச வாக்கியம் வெளிப்பட்டது. அது முஹம்மதை கோபப்படுத்தி விட்டது. அவர் அந்த இளைஞனை நோக்கி இந்தா பிடி! நான் பிரமுகரின் மகனாக்கும்! (குத்ஹா! வ அன இப்னுல் முக்ரமீன்) என்று சொல்லி ஓங்கி ஒரு குத்து விட்டார். கவர்னரின் மகன் தன்னை தாக்கியிருப்தால் இங்கு முறையிட்டால் நீதி கிடைக்காது என்று கருதிய அந்த எகிப்திய இiளுஞன் நேரே மதீனாவுக்கு வந்து ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களிடம் முறையிட்டான். உடனடியாக உமர் (ரலி) அவர்கள் ஆளுநர் அம்ரையும் அவரது மகனையும் தலைநகருக்கு வரும்படி உத்தரவிட்டார்கள். அவர்கள் வந்ததும், அரசாங்க மண்டபத்தில் வைத்து விசாரித்துவிட்டு எகிப்திய இளைஞனிள் கையில் சவுக்கை கொடுத்து உன்னை தாக்கிய முஹம்மதை அடி என்றார்கள். அவ்விளைஞன் அப்படியே செய்தான். அவன் அவரை அடித்து முடித்ததும் ஆளுநர் அம்ரை சுட்டிக்காட்டி இவரையும் அடி என்றார்கள். அந்த இளைஞன் அதிர்ந்து போனான். இவர் என்னை ஒன்றும் செய்ய வில்லையே என்று கூறினான். அப்போது உமர் (ரலி) அவர்கள் பேசிய வார்த்தைகள் வெறும் வார்தகைள் அல்ல பெரும் தத்துவங்களாகும். அதுவும் சாமாணிய தத்தவங்கள் அல்ல பெற்றோர்கள், குறிப்பாக அதிகார பொறுப்பில் இருக்கிற பெற்றோர்கள் என்றென்றும் நினைவில் வைத்திருக்க வேண்டிய தத்துவங்களாகும்.உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள். ஆளுநர் உன்னை நேரடியாக ஒன்றும் செய்யாதிருந்திருக்கலாம், ஆயினும் அவருடைய மகன் உன்னை அடிப்பதற்கு அவரது தந்தை ஆளுநர் என்ற எண்ணம்தான் காரணம். அத்தகைய எண்ணத்தை மகனுக்கு கெடுத்தததற்கு இவரையும் நீ அடிக்கலாம் என்றார்கள். (மாலரப இப்னுஹுஇல்லா பி ஸுல்தானி அபீஹி). பெற்றொர்கள் கொடுத்த துணிச்சலால் அல்லது பெற்றோர்களபை; பற்றிய பயமின்மைனயால் தவறு நடக்கு மென்றால் அதில் பெற்றொருக்கும் பங்கு உண்டு. முஸ்லிம் பெற்றொர்கள் இந்த வழிகாட்டுதலை கடை பிடித்தால், இந்த வழிகாட்டுதல் தருகிற மனோ நிலைக்கு தங்களை பண்படுத்திக் கொள்வார்கள் என்றால் அவர்களது பிள்ளைகள் நல்லவர்களாக வளர்வார்கள். பெற்றோhரின் அந்தஸ்திற்கும் மரியாதைக்கும் மெருகேற்றுபவர்களாக திகழ்வார்கள். இல்லை எனில் உன்னைப் பெற்றதற்கு ஒரு அம்மிக் குலவியை பெற்றிருக்கலாமே என்று புலம்பும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். குறைந்த பட்சம் பத்ரிக்ககைள் தொலைக்காட்சிகள் மீதோ சூழ்நிலைகள் மீதோ பழியை திருப்பிப் போட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாவார்கள். சுமீபத்தில் முஸ்லிம்கள் கனிசமமாக வசிக்கும் ஒரு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியரோடு பேசிக் கொண்டிருந்த போது அவர் ஒரு விசயம் சொன்னார் மிக வேதனையாக இருந்தது. அவரது பள்ளிக் கூடத்தில் 10 ம்வகுப்பு படிக்கும் ஒரு குறும்புக்கார மாணவன் கம்ப்யூட்டர் அறையிலிருந்த மின்சார கம்பிகளை சேதப்படுத்திவிட்டான். அவர் அவனை மிரட்டிய உனக்கு ஹால் டிக்கட் தரமாட்டேன் என்று கூறியுள்ளார். மறு நாள் அவன் வந்து மன்னிப்புக் கேட்பான் என்று எதிர்பார்ததுக் கொண்டிருந்த தலைமையாசிரிக்கு ஆதிர்ச்சி காத்திருந்தது. அவன் அவனது அம்மாவோடு தைரியமாக அவரது அறைக்குள் நுழைந்தான். அவனது தாய் கோபாவேசம் கொண்டு கத்தியிருக்கிறார். நீ யார் என் மகனுக்கு ஹால் டிக்கட் தர முடியாது என்று சொல்வதற்கு? நான் மகளிர் அணித் தலைவியாக இருக்கிறேன். எனக்கு ஆட்சித்தலைவரை தெரியும். காவல் ஆணையாளரை தெரியும். கல்வி அதிகாரியை தெரியும். நான் நினைத்தால் நீ என் மகனை ஒரு நாள் முழவதும் சித்தரவதை செய்தாய் என்று புகார் செய்து இப்போதே கல்வி அதிகாரியை இங்கு வரவைக்க முடியும் என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்திரக்கிறார். தலைமையாசிரியர் சொன்னார். அந்த பையனின் நாளைய எதிர்காலத்திற்கு இந்தப்பெண்தான் பொறுப்பு என்று நினைத்துக் கொண்டு அவரை சமாதானப்படுத்தி ஹால் கொடுத்து விடுகிறேன் என்று சொல்லியனுப்பினேன் என்று சொன்னார். பிள்ளைகளின் தவறுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளாமல் அவர்களை காப்பாற்றுகிற மனப்பபான்மை தாய்ப்பாசம் சார்ந்த விசயமல்ல. நீதியையும் நேர்iயையும் அலங்கோலப்படுத்தும் முயற்சியாகும். இதனால் பிள்ளைகள் மட்டுமல்ல பெற்றோர்களும் அக்கிரமக்காரர்களாகி விடுகிறார்கள். துணிந்து அக்கிரமம் செய்கிற மனப்பான்மை அவிசுவாசத்தில் தான் பிறக்கிறது. எனவே தான் கிழ்ர் அலை அவர்கள் இந்தச் சிறுவன் அவனது பெற்றோர்களை அக்கிரமத்திற்கும் இறை நிராகரிப்பிற்கும் கொண்டு செர்த்து விடுவான் என்று பயந்ததாக குறிப்பிடுகிறார்கள். கீழ்ரு (அலை) அவர்களின் அந்த அச்சம் சரியானது தான் என்பதை நம்மை சற்றி நடக்கிற நிகழ்வுகள் நிதர்சனமாக புரிய வைக்கிகற போது எங்கோ விழுந்த சாட்யைடியை தன் மீது விழுந்துது போல கருதிக் கொள்வது நபித்தோழர்களின் மனோ நிலைக்கு நம்மை உயர்த்தும். நமது பிள்ளைகள் குண்டர்களாகி நாம் குற்றவாளிகளாக மாறமால் இருக்க அது உதவும்.

மானுட வசந்தம்

ரபீஉல் அவ்வல் என்ற வார்த்தைக்கு முதல் வசந்தம் என்று பொருள். ஹிஜ்ரீ ஆண்டின் மூன்றாம் மாதத்திற்கு ரபீஉல் அவ்வல் என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்கு பொருத்தமான காரணங்கள் கிடைக்காமல் போகலாம். ஆனால் முஸ்லிம்களை கேட்டால் இது போல ஒரு பொருத்தம் இன்னொன்னறில் இல்லை என்பார்கள். மானுட வசந்தத்தின் மாசுமறுவற்ற உதாரணமாக வாழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்; ரபீஉல் அவ்வல் மாதத்தில் பிறந்தார்கள் என்பதால், சுட்டெறிக்கும் கோடையில் வந்தாலும் சரி வாட்டிவதைக்கும் கூதலில் வந்தாலும் சரி முஸ்லிம்களைப் பொருத்ததவரை ரபீஉல் அவ்வல் பிறந்து விட்டால் அது வசந்த காலம் தான். வரலாறு ஆச்சரியத் தோரணம்கட்டி வரவேற்ற அந்தப் புனிதப்பிறப்பின் புகழ்பாடல்கள் பள்ளிகள் தோறும் ஓதப்படும். மேடைகள் தோறும் ஒலிக்கப்படும். மீலாது விழாக்களும் கந்தூரி வைபவங்களும் கணக்கின்றி நடைபெறும். சிக்கலான இன்றைய கால கட்டத்தில் அனைத்து வகையான மகிழ்ச்சிக்கும் நடுவே முஸ்லிம் சமுதாயம் ஒரு உண்மைய கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. முன்னெப்போதையும் விட அதிகமாக முஹம்மது என்பவர் யார் என்று அறிந்து கொள்ள உலகின் முக்கால் பங்கு மக்கள் இப்போது முயன்று கொண்டிருக்கிறார்கள். தினசரி வாசிக்கப்படும் பரபரப்பான பல செய்திகளுக்கும் பின்னே முஹம்மது என்ற மந்திரச்சொல் காரணமாக இருப்பதாக பலரும் நம்புகிறார்கள். அதன் விளைவாக யார் அந்த முஹம்மது என்ற கேள்வி எழுவது தவிர்க்க இயலாத விசயமாகிவிட்டது. எனவே முஹம்மது எனும் சொல் இன்றைய உலகின் பிரதான தேடலாகிவிட்டது. இணைய தளத்தில் விசயங்களை தேடி எடுத்துத்துத் தரும் தேடல் இயந்திரங்கள் சோர்ந்து போகும் அளவு அந்தத் தேடல் உலகின் தாகமாகியிருக்கிறது. அத்தைகயை பெருமானார் முஹம்மது(ஸல்) அவர்களை வரலாறு அறிமுகப்படுத்தும் விதம் ஒரு மாதிரி இருக்கிறது. முஸ்லிம் சமதாயம் அடையாளப்டுத்தும் விதம் வேறு மாதிரி இருக்கிறது. வரலாறு மிகச்சரியாக அறிமுகப்படுத்துகிறது. இந்த பூமயில் பாதம் பதித்;தவர்களில் முஹம்மது நபியைப்போல் இன்னொருவர் பிறக்கவில்லை. இனி பிறக்கப்போவதுமில்iலை. மனித சமூகத்தின் மீது மகத்தான செல்வாக்கை செலுத்தும் ஆற்றல் பெற்ற தலைவர் முஹம்மது (ஸல்) அவர்களைப் போல இன்னொhருவர் கிடையாது என்று வரலாறு அறிமுகப்படுத்துகிறது. ஜான் வில்லியம் தராப்பர் (துழாn றுடைடயைஅ னுசயிநச) அவருடைய புகழ் பெற்ற ஐரோப்பாவில் அறிவு வளர்ச்சியின் வரலாறு என்ற நூலில் முஹம்மது மனித இனத்தின் மீது மகத்தான ஆதிக்கத்தை செலுத்தும் அதிகாரம் படைத்தவராக இருந்தார் என்று குறிப்பட்டுகிறார். மிகப் புகழ் பெற்ற வரலாற்றாசிரியர் ஸ்டான்லீ லேன் பூல் வெற்றியாளர்களின் வரலாற்றுப் பதிவேடுகள் அனைத்திலும் இவருக்கு நிகராக பெருஞ்சாதனை படைத்தவர் வேறு எவுரும் இல்லை என்று குறிப்பிடுகிறாh . இன்றைய மனித சமூகத்தின் வளர்ச்சி எந்த அளவு பிரம்மாண்டமானதோ அதை விட முஹம்மது (ஸல்)அவர்களின் செல்வாக்கு புகழும் பிரம்மாண்டமானது. உலக வரலாற்றில் மனித குலத்தின் மீது அளப்பரிய செல்வாக்கு செலுத்தியவர்களில் 100 நபர்களை வரிசைப்படுத்திய மைக்கேல் ஹார்ட் என்ற அமெரிக்க அறிஞர் அதில் முதலிடத்தை பெருமானார் (ஸல்) அவர்களுக்கு வழங்கயிருக்கிறார் என்பது இன்றைக்கு பழைய செய்தியாக இருக்கலாம். அத்தொடரில் இரண்டாவது இடத்தை ஐசக் நியூட்டனுக்கு அவர் வழங்கியுள்ளார். அதற்கு அவர் கூறும் காரணம் கவனிக் கத்தக்கது. மனித குலத்தின் இன்றைய வியத்தகு முன்னேற்றங்கள் அனைத்துக்குமு; நியூட்டனின் கண்டுபிடிப்புகளே அடிப்படை காரணமாக அமைந்தது எனவே தான் அவருக்கு இரண்டாவது இடத்தை வழங்குகிறேன் என்று ஹார்ட் கூறுகிறார்.மனித குலத்தின் இன்றைய மகா பிரம்மாண்டமான அறிவியல் வளாச்சிக்கு காரணமாக அமைந்த நியூட்டனைவிட முஹம்மது (ஸல்) அவர்கள் முதன்மைமப்படுத்தப் பட்டிருக்கிறார்கள் என்றால் முஹம்மது (ஸல்) அவர்களின் செல்வாக்கு இந்த உலகின் பிரம்மாண்டமான வளர்ச்சியை விட உயர்ந்தது என்ற கருத்தோட்டம் அதில் ஊள்ளோடிக் கொண்டிருப்பது கவனிக்கத்தக்க ஒரு செய்தியாகும். நபிகள் நாயகத்தின் வரலாறு எவரையும் ஆச்சரியப்படுத்தக் கூடியது. சமய மதிப்புருவை கடந்து அவரது சாமாண்ய மனித அடையாளத்தை நெருங்கிப்பார்க்கும் எவரும் பிரம்மமிப்படையாமலிருக்க முடியாது. மைசூர் மகளிர் பல்கலையின் தத்துவத் துறை தலைவர் பேராசிரியர் ராமகிருஷ்னா ராவ் முஹம்மது (ஸல்) அவர்களின் ஆளுமையின் முழப்பரிமாணத்தை விளங்கிக் கொள்வது சிரமமானதே! ஏன்று கூறுகிறார்.வரலாற்று நாயகர்களாக அடையாளப்படுத்தப்படும் தலைவர்கள் பலர் அவர்களது வாழ்நாளிலே மதிப்பிழந்து போயிருக்கிறார்கள். சிலருக்கு இறந்த பிறகு தான் மதிப்பு கிடைத்திருக்கிறது. சிலர் கால வெள்ளத்தில் கரைந்து போய் விட்டார்கள். வாழும் போது புகழ் பெற்ற சிலர் காலப் போக்கில் புழதிவாரி தூற்றப்பட்டிருக்கிறார்கள். 25 ஆண்டகளுக்கு முன்பு ரஷ்ய சர்வாதிகாரி லெனினுக்கு கிடைத்த மரியாதை எத்தகையது? பகுத்தறிவ வாதிகளான கம்யூனிஸ்ட்டுகள் அவரது பிணத்தை கூட பாதுகாத்து வைத்தனர். ஆனால் பிற்கால வரலாற்றின் போக்கில் ஏற்பட்ட மாற்றம் தான் எவ்ளவு ஆச்சரியமானது? ஆதே ரஷ்யர்கள் அவரது சிலையை கூட ஆக்ரோஷத்தோடு சின்னாபின்னப்படுத்தினரே! ஹிட்லரும் முசொலினியும் தத்தமது வாழ்நாளில் பெற்ற செல்வாக்கு எத்தகையது? பின்னால் அவர்களுக்கு கிடைத்த மரியாதை எப்படியிருந்தது? சாக்ரடீஸ் அவர் வாழ்ந்த காலத்தில் என்ன மரியாதையை பெற்றார்? தன்னுடைய கடைசி காலத்தில் மிகப்பிரபலமாக இருந்த ரஷ்ய தத்துவ ஞானி லியோ டால்ஸ்டாய் மனைவிக்கு பயந்து வீட்டை விட்டு ஓடினார் எனபது தான் வரலாறு. முஹம்மது (ஸல்)அவர்கள் அவருடைய சமகாலத்து மக்களால் பெரிதும் போற்றப்பட்டார்கள்.அம்மக்களிடம் அளப்பெரிய செல்வாக்கைப் பெற்றிருந்தார்கள். ஹிஜ்ரீ ஆறாம் அண்டு ஹுதைபிய்யாவின் முற்றத்தில் அமர்ந்நதிருந்த பெருமானார் (ஸல்)அவர்களிடம் மக்கா குறைஷிகளின் தரப்பில் தூது பேசுவதற்காக வந்த பலரில் உர்வா பின் மஸ்வூது அத்தகபீயும் ஒருவர். பெருமானாரை சந்தித்து வெகு ராஜ தந்திரத்தோடு உரையாடிய அவர் குறைஷியரிடம் திரும்பச் சென்று கூறிய வார்த்தைகள் சத்திய ஆழம் மிகுந்தவை. என் சமுதாயத்தாரே! நான் பல அரசர்களிடம் தூதுக் குழுவில் ஒருவனாகச் சென்றுள்ளேன். (உரோம மன்னன்) சீசரிடமும் (பாரசீக மன்னன்) கிஸ்ராவிடமும் (அபிசீனிய மன்னன்) நஜ்ஜாசியிடமும் தூதுக் குழுவில் சென்றுள்ளேன். அல்லாஹ்வின் மீதாணையாக முஹம்மதின் தோழர்கள் முஹம்மதுக்கு அளிக்கின்ற கண்ணியத்தைப் போல் எந்த அரசருக்கும் அவரது தோழர்கள் கண்ணியம் அளிப்பதை நான் பார்த்ததே யில்லை. என்று உர்வா கூறினார். (ஸஹீஹுல் புகாரி - 2734)முஹம்மது (ஸல்) அவர்களது செல்வாக்கு சர்வாதி காரத்தன்மையின் எச்சமல்ல. அப்படி இருந்திருந்தால் ஹிட்லரைப் போல லெனினைப் போல அவரும் பின்னாட்களில் ஏச்சுக்கு ஆளாகி யிருந்திரப்பார்.அவரது செல்லாக்கு தத்துவார்த்தமானது மட்டுமல்ல. நடைமுறையில் செல்லுபடியாகக் கூடியது. அவரது வார்த்தைகள் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு மனித நடைமுறையில் என்ன செல்வாக்கை பெற்றிருந்தோ அதே செல்வாக்கை இன்றைக்கும் பெற்றிருக்கின்றன.முந்தைய இறைத்தூதர்கள் உட்பட வேறெந்த தலைவருக்கும் இத்தகைய பிரம்மிப்பூட்டுகிற செல்வாக்கு கிடையாது.அவரது செல்வாக்கு குறைவுடையது அல்ல முழு சமூகத்தையும் அது வியாபித்திருந்தது. இன்றும் வியாபித்திருக்கிறது. அவரது மனைவியரும் அவரது நெருங்கிய உறவுகளும் நண்பர்களும் ஏன் எதிரிகளும் கூட அவர் மீது பெரும் மரியாதையை வைத்திருந்தனர். இன்றளவும் அந்த மரியாதை பாதுகாhக்கப்பட்டு வருகிறது. ஒரு அனாதைச் சிறுவராக மக்காவில் தொடங்குகிற அவரது வாழ்கை மனித சமூகத்தின் சரித்திரத்தின் சிகரத்தை தொட்ட வரலாராக வடிவம் பெற்றதென்றால் அதன் பின்னணியில் உள்ள நிகழ்வுகள் விறுவிறுப்பும் உணர்வெழுச்சியும் மிகுந்தவை.பெருமானாரின் செல்வாக்கிற்கு ஆதிக்கமோ, படைபலமோ, பணபலமோ காரணம் அல்ல அவரது மனிதநேயப் பண்புகளே காரணம். அடிக்கோடிடிட்டு கவனிக்க வேண்டிய விசயம் இது. வரலாறும் இந்த உண்மைய புரிந்து தான் வைத்திருக்கிறது. தத்துவ இயல் அறிஞர் ராம கிருஷ்னா ராவ் மிக அருமையாக சொன்னார். வாள் முனையின் ஒரு சிறு அசைவு கூட இல்லாமல் முஹம்மதுவின் குணஇயல்பே அவரது வாழ்கை பெரும் வெற்றியடையக் காரணமாக அமைந்திருந்தது. வரலாற்று ஆய்வாளரைவிட ஒரு தத்துவ அறிஞர் தான் இதைச் சொல்வதற்கு மிகப் பொருத்தமானவர்.திருக்குர்ஆன் பெருமானாhரது ஆற்றலை பாராட்டுலதை விட அவரது பண்பையே பிரமாதப்படுத்தி கூறியிருக்கிறது. தாவூத் நபியின் ஆற்றல் சுலைமான் நபியின் ஆதிக்கம் மூஸா நபியின் துணிவு இபுறாகீம் நபியின் அர்ப்பணிப்பு ஆகியவை திருக்குர்ஆனில் பாராட்டப் பட்டிருக்கின்றன. முஹம்மது (ஸல்) அவர்களிடம் அனைத்து இறைத்தூதர்களின் அருங்ணங்களும் ஒருங்கே அமையப் பெற்றிருந்த போதும் இறைவன் அவரை அவரது பண்பாட்டை குறிப்பிட்டு பிரம்மாண்டப் படுத்துகிறான். நீர் மகத்தான குண இயல்பை கொண்டிருக்கிறீர் என அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன்68.4) இந்த வசனத்தில் கையாளப்பட்டள்ள அழீம் என்ற வார்த்தை குணம் என்ற பொருள் கொண்ட குல்கு என்ற சொல்லுடன் சாதாரணமாக இணைக்கப்டுவதில்லை. அல்குல்குல் மஹ்முத் புகழுக்குரிய குண இயல்பு என்று சொல்லப்டுவதுதான் இயல்பு. அந்த சொல்லாக்கத்தை விடுத்து மகத்தான என்ற பொருள் தரும் அழீம் எனும் சொல்லை இறைவன் பயன்படுத்திருப்பது நபிகள் நாயகத்தின் குணச்சிறப்பின் சிகரத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. என திருமறை விரிவுரையாளர் குர்துபி குறிப்பிடுகிறார். மானுடத்தின் உச்ச பட்சமான உயரிய குண நலன்கள் அவரிடம் வெளிப்பட்டன. அவர் குறித்து ஆதாரப்பூர்வமாக கிடைத்துள்ள பன்னூற்றுக்கணக்கான தகவல்களில் ஒரு சில தகவல்கள் மட்டுமே இந்த உண்மையை அறிந்து கொள்ள போதுமானவை. முஹம்மது (ஸல்) அவர்கள் தன்னுடைய கையால் எந்த ஒரு பெண்iணையும் பணியாளரையும் அடித்ததில்லை என்று அவருடைய மனைவி ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல் முஸ்லிம் 4296) இந்த ஒரு விசயத்தை மட்டுமே ஒரு ஐந்து நிமிடம் சிநத்தித்துப் பார்த்தால் ஒரு மகத்தான மனிதரின் தோற்றம் நம் மனக் கண்ணில் விரியும். எங்கிருந்தாலும் இறைவனை பயந்து கொள்ளுங்கள். தீமைக்கு பதிலாக நன்மையை செய்யுங்கள் அது தீiமைய அழித்துவிடும். மக்களிடம் நற்குணத்தோடு நடந்து கொள்ளுங்கள் என்று அவர் தன்னுடைய தோழர்களுக்கு சொன்னார் நபித்தோழர் அபூதர் (ரலி) அறிவிக்கிறார் (திர்மிதி -1910) இந்த அறிவுரை நபிகளாரது வாழ்வு முழவதிலும் அவர் கையாண்ட வாழ்வியல் கோட்பாடாகவே இருந்தது. இறைவன் மீது ஆணையாக. எவருடைய பக்கத்து வீட்டுக்காரார் பாதுகாப்பாக இல்லையோ அவர் இறைவிசுவாசியல்ல. அவர் இறைவிசுவாசியல்ல. அவர் இறைவிசுவாசியல்ல.என்று முஹம்மது (ஸல்) அவர்கள் பகக்த்து வீட்டக்காரருக்காக பரிந்து பேசிய சந்தர்பத்தில் சமய ரீதியில் அவர்களைப் பிரித்துப்பேசவில்லை. எவர் முஸ்லிம் அல்லாதவர்களுடைய பொருட்களை அபகரிக்கிறாரோ அவர் மறுமை நாளில் அநீதி இழைக்கப் பட்டவர்களுக்காக வாதிடும் வக்கீலாக என்னை காண்பார் என்ற முஹம்மது (ஸல்) அவர்கள் இந்த உலகில் நீதிக்கு புறம்பாக நடந்து கொள்பவர்களே மறுமை நாளில் பெருந்தோல்வியடைந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் நரகத்தில் தங்களது ஒதுங்குமிட்த்தை காண்பார்கள என்றும் கூறினார்கள்.சமூக நீதியை நிலை நாட்டுவதில் அவருக்கிருந்த பற்றுறுதி காரணமாக பிற சமயத்தவர்கள் விரும்பிச் சென்று தங்களது பிரச்சினைகளில் நீதி கேட்டுச் செல்வார்கள் என்பதற்கு அவரது வாழ்வில் நிறைய உதாரணங்கள் உண்டு. முஹம்மது (ஸல்) அவர்கள் தன்னுடைய வாழ்நாளில் சில போர்களை மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அப்போதும் கூட அவர் சண்டையை சச்சரவை விரும்பியவராக இருக்கவில்லை. அரபுகளிடையே தலைமுறை தலைமுறையாக நிலவி வந்த சண்டை சச்சரவுகளுக்கும் பூசல்களும் அவர் முடிவு கட்டிய விடிவெள்ளியாக இருந்தாரே தவிர மனிதர்களை காவு கேட்கும் போர்களுக்கு அவர் காரணமாக இருந்ததில்லை. நபிகளாரின் 35 வது வயதில் புதுப்பிதது கட்டப்பட்ட கஃபா ஆலயத்தின் சுவற்றில் அஸ்வத் கல்லை பதிப்பிக்கிற பெருமை தங்களுக்குத்தான் வேண்டும் என்று அரபுக் குலங்கள் சண்டையிட்டுக் கொண்டபோது எழுந்த பிரச்சினையை தீர்க்கிற பொறுப்பு பெருமானாhருக்கு ஏற்பட்டது. ஓரு போர்வையை விரித்து ஒவ்வவொரு குலத்தாரையுமும் போர்வையின் ஒரு நுனியை பற்றிக்கொள்ளச் செய்து அஸ்வத் கல்லை எடுத்து பதித்த விதம் பெருமானாரின் தத்தவார்த்த பார்வையின் விசாலத்தை புலப்படுத்துவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். நிலமெல்லாம் ரத்தம் நூலில் பா.ராகவன் எழுதுகிறார் முஹம்மது மூலம் உலகுக்கு வழங்கப்பட்ட இஸ்லாம் என்ற மார்க்கத்தின் ஆதாரப்புள்ளி இந்தச் சம்பவத்துக்குள் புதைந்திருக்கிறது. அரபியர்களிடையே ஒற்றுமை என்ற அவருடை பெருங்கனவின் தொடக்கப்புள்ளியும் இது தான் என்று அவர் எழுதியுள்ளார். இந்த வார்த்தைகளில் கூட ஒரு திருத்தம் தேவைப்படுகிறது. நபிகளாருடைய பெருங்கனவு அரபியர்களுடைய ஒற்றுமையை அல்ல மனித குல ஒற்றுமை என்று திருத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் தன்னுடைய வாழ்நாளில் அரபிய இனம் சார்ந்த பெருமைப் பேச்சு எதையும் அவர் ஒருபோதும் பேசியதில்லை.அரபி மொழி பேசாதவனை அஜமி ஊமையன் என்று விளித்த இன வெறி கோலோச்சிய ஒரு சமுதயத்தில் இனவாதத்தின் பெருமை தொனிக்கிற ஒரு சொல்லையேனும் அவர் உதிர்த்திதில்லை என்பதும் அப்படிப் பேசாமலே அரபுகளின தலைமையை அவர் பெற்றார் என்பதும் பேராச்சரியத்திற்குரிய விசயங்களே! மொழி அல்லது தேசியத்தின் செருக்கு பிடிக்காமல் வாழ்ந்த தலைவர்கள் யாரேனும் உண்டா என்று யோசித்துப் பாருங்கள். மானுடப் பொதுமையை போற்றிய முஹம்மது (ஸல்) அவர்களைததவிர வெறெவரையும் அந்தப்படடியலில் பார்க்க முடியாது. அனைத்து மக்களையும் சகோதர சகோதரிகளாகவே நடத்து மாறு தனது தோழர்களுக்கு அவர் கட்டளையிட்டார். நீங்கள் அனைவரும் ஆதமின் மக்களே! ஆதம் மண்ணால் படைக்கப்பட்வர் என்று கூறுவது பெருமானாரின் வழக்கமாக இருந்தது.போர்க் களத்திலும் கூட யுத்தத்தில் நேரடியாக தொடர்புடையவர்களைத்தவிர மற்றவர்களை கொலல் அவர் அனுமதித்ததில்லை. பெண்கள் குழந்தைகள் ஆலயங்களில் வழிபாடு செய்பவர்கள் எவரையும் கொல்லக் கூடாது என்று தன்னுடைய தளபதிகளுக்கு அவர் உத்தரவிட்டார். பின்னாட்களில் அவர் மக்காவை வெற்றி கொண்ட போது அவரோடு போரிட்டவர்களை போர் குற்றவாளிகளாகவே அடிமைகளாகவோ அவர் நடத்தவில்லை. அந்த எதிரிகள் அவரக்கு சொல்லெணாத் துயரங்களை வழங்கியவர்கள் என்ற போதும் அவர்களை மன்னித்து சுதந்திரமாக வாழ அனுமதித்தார் என்பது வரலாற்றாசிரியர்களை ஆச்சரியப்படுத்தும் செய்தியாகும். இன்றைய நாகரீக யுகத்தில் யுத்தத்தில் வென்று நாடுகளை ஆக்ரமித்து அங்குள்ள செலவ வளங்களை கபளீகரம் செய்துவிட்டு அதற்குப்பின்னரும் அந்த நாட்டுத தலைவர்களையும் வீரர்களையும் குற்றவாளிகளாக கூண்டிலடைத்து சித்தரவதை செய்வதை ஜனநாயத்தின் பேரால் நியாயப்படுத்துபவர்களையும், பத்ர் யுத்தத்தின் போது மஸஜிதுன்னபவீ பள்ளிவாசலில் கட்டப்படடிருந்த குறைஷிக் கைதிகளின் கட்டுக்களை அவிழ்த்துவிடுமாறு உத்தரவிட்ட முஹம்மது (ஸல்) அவர்களையும் ஒரு கணம் ஒப்பிட்டப்பார்த்தால் பெருமானாரின் நற்குணத்தை பிரம்மாண்டமானது என்று இறைவன் குறிப்பிட்டதின் நியயாயத்தை அறிந்து கொள்ளலாம். தீவிரவாதத்தை ஒழித்துக்; கட்டுவதாக உரத்துக் குரல் எழுப்பிக் கொண்டு மேலும் மேலும் தீவிரவாதததை வளர்த்துக் கொண்டிருக்கிற தலைவர்களிடையே முஹம்மது (ஸல்) அவர்கள் ஆச்சரியமான தலைவராக உயர்நது நிற்கிறார்கள். வன்முறையை நன்முறையால் தடுப்பது என்ற முஹம்மது (ஸல்) அவர்களது வழிமுறை தான் தீமையை அழிக்கிற சக்தி கொண்டது என்று அறிஞர்கள் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். பெர்னாட்ஷா சொன்னார் இன்றைய நவீன உலகின் சர்வாதிகாரத்தை அவரைப் போன்ற ஒரு மனிதர் ஏற்றுக் கொண்டால் அமைதியையும் மகிழ்ச்சியை தரக்கூடிய வகையில் இந்த உலகின் பிரச்சினைகளளை தீர்ப்பதில் அவர் வெற்றியடைவார். வரலாறு கூறும் இந்த நற்செய்திகளுக்கு இடையே முஸ்லிம் சமுதாயம் பெருமானாhரைப்பற்றி ஏற்படுத்தியிருக்கிற அடையாளம் எத்தகையது என்பது கேள்விககுரியதாகும். பெருமானார் கற்றுக் கொடுத்த தத்துவங்கள் பண்பாட்டுப் பொழிவுகளின் வழியே முன்னர் வாழ்ந்த சமதாயம் பெருமானாhரை மிகச்சிறப்பாக அடையாளப்படுத்தியருரந்தது. அதன் மூலம் பலர் முஹம்மது (ஸல்)அவர்களின் வழி பற்றி விழி பெற்றார்கள். வலிமை மிக்க ஒரு இளைஞனை ஒருவர் தேவையின்றி அடித்துவிட்டார். அந்த இளைஞன் அதை பொறுத்துக் கொண்டு சும்மா இருந்தான்.அந்தக்காட்சியை ஆச்சரியமாக பார்ததுக் கொண்டிருந்த மர்மடியூக் பிக்தால் ஏனெப்பா நீ அவரை ஒன்றும் செய்ய வில்லை என்று கேட்டார். பெரியவர்களை மதிக்காதவர் எம்மைச் சார்ந்தவரல்ல என்று எங்கள் நபி சொல்லியிருக்கிறார் என்று இந்த இளைஞன் பதில் சொன்னான். அந்த வார்ததைகள் ஏற்படுத்திய தாக்த்தின் விளைவாக பிக்தால் இஸ்லாமை தழுவினார். அந்த பிக்தால் தான் திருக்குர்ஆனுக்கு முதன் முதலாக ஆங்கில மொழிபெயர்ப்பை எழதினார் என்பது பழைய வரலாறு. இன்றைய முஸ்லிம் சமுதாயமான நாம் பெருமானாரை அடையாளப்படுத்தும் விதம் இத்தகைய தரத்தில் இல்லை என்பது கசப்பாக இருந்தாலும் ஒத்துக் கொள்ள வேண்டிய உண்மையே!ஒரு பத்ரிகை முஹம்மது (ஸல்)அவர்களை உடலில் வெடி குண்டை கட்டிக் கொண்டுள்ள தீவிரவாதியாக சித்தரிக்கத் தலைப்பட்டது என்றால் அதற்கு காரணம இன்றைக்கு வாழும் முஸ்லிம் சமுதாயம் முஹம்மது (ஸல்) அவர்களை அப்படி அடையாளப்படுத்தியது தான்; என்று ஒருவர் வாதிட்டால் அந்த வாதத்தை மறுப்பதற்கு நம்மிடம் வலுவான ஆதாரம் என்ன இருக்கிறது ? வன்முறை அல்லது பயங்கர வாதம் அல்லது மனித வெடிகுண்டு தாக்குதல்கள் போன்றவை இஸ்லாமின் பெயரோடு இணைத்து கொச்சைப்படுத்தப் படுகிறதென்றால் அதை இஸ்லாமின் எதிர்ப்பாளர்களுடைய கைங்கர்யம் என்றும் மீடியாக்களின் பயங்கரவாதம் என்றும் நாம் ஓதுக்கிவிடுகிறோம். ஆதே நேரத்தில் நமது நடவடிக்கைகளை கவனிக்கிற உலக சமுதாயம் எத்தகைய மனோ நிலைக்கு ஆளாகியிருக்கிறது என்று றாம் யோசித்துப்பார்ப்பதில்லை.உலகம் ஒரு சர்வதேச கிராமமாக சுருங்கி விட்ட நிலையில் உலகின் எந்த முளையில் ஒரு செயல் நடந்தாலும் அது சர்வதேச பார்வையை பெற்றுவிடுகிறது. உலகளாவிய முஸ்லிம் சமுதயம் யூத கிருத்துவ அமெரிக்க ஐரோப்பியச் சக்திகளால் மிகத்தீவிரமான வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு பதிலடியான நடவடிக்கைள் ஆதிக்க வெறித்தனத்தின் எதிர்விளைவாக கருதப்படாமல் இஸ்லாமிய பயங்கரவாதமாக முஹம்மதீய தீவரவாதமாக சித்தரிக்கப்படுகிறது. இதற்கு முஸ்லிம்களும் ஒரு காரணம் என்றே சொல்ல வேண்டும். இஸலாமின் அடிப்படைகளுக்கும் முஹம்மது (ஸல்)அவர்களின் போதனைகளுக்கும் எதிரான போரட்ட முறைமைகளை கொண்டவர்கள் அதற்கு இஸலாமிய ஜிஹாதியச் சாயம் பூசுவதால் அது தவறான விமர்ச்சனஙகளுக்கு காரணமாகிவிடுகிறது. பாகிஸ்தானும் இந்தியாவும் விளையாடுகிற கிரிக்கெட் போட்டிகளின் போது அநியாயத்திற்கு தேவையில்லாமல் லாயிலாக இல்லல்லாஹ் என்ற கோஷம் எழுப்பபடுகிறது. ஓரு விளையாட்டில் வெறியேற்றும் கோஷம் இஸ்லாமின கலிமாவாக அமையும் போது அது சர்வதேச பார்வையாளர்களிடம் தேவையற்ற முகச்சுளிப்பை ஏற்படுத்தும் என்பதை முஸ்லிம்கள் உணர்ந்து கொள்ளாமல் இருந்து விட்டால் அது முஹம்மது (ஸல்) அவர்கள் சமய மூர்க்கத்தனம் கொண்டதொரு சமதாயத்தை உருவாக்கிவிட்டதாக எதிர் விளைவு ஏற்படுவதை தவிர்க்க முடியாது.சமுதாய அளவிளான நமது நடவடிக்கைகள் முஹம்மது (ஸல்) அவர்கள் கற்பித்த உயரிய பண்பாடுகளின் அடிப்படையில் இருக்குமாறு பார்த்துக்கொள்வது இன்றைய நமது பிரதான கடமையாகும். குறைந்த பட்சம் எந்த ஒரு விசயத்திலும் நமது நடவடிக்கைகள் இஸ்லாமின் அந்தஸ்த்திற்கும் முஹம்மது (ஸல்) அவர்களின் நற்பெயருக்கும் பங்கம் விளைவிக்கும் என்றால் அதை இஸ்லாமியப்பெயரால் அடையாளப்படுத்தாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகயை மேற்கொள்ள வேண்டும்.பெருமானாரைப் பற்றி மற்றவர்கள் விளங்கி வைத்திருப்து தவறானதாகவும் உண்மையிலிருந்து வெகு தூரம் விலகிச் சென்றதாகவும் இருக்கிறது என்று முஸ்லிம்கள் அடிக்கடி சொல்கிறார்கள்.அடுத்த முறை அப்படிச் சொல்வதற்கு முன்னால் கண்ணாடியில் நம்முடைய முகத்தை பார்துக் கொள்வது நலம்.

நம்பினோர் கெடுவதில்லை

ஏப்ரல் மாதத்தின் முதல் தேதியை முட்டாள்கள் தினம் என்பார்கள். பிரஞ்சுக்காரர்களிடமிரு;நது உலகிற்கு பரவிய இந்தப்பழக்கம் தேவையா? தேவைற்றதா? என்ற விவாதம் அறிவுலகத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்றாலும் அந்த நாள் நமக்குத் தருகிற ஒரு எச்சரிக்கை முக்கியமானது. யாரும் நம்மை ஏமாற்றி விடக்சுடாது, நாம் ஏமாந்து விடக் கூடாது என்ற என்ற எச்சரிக்கை அந்த நாள் முழுவதும் நரம்புகளில் ஓடிக்கொண்டிருக்கும்.அந்த எச்சரிக்iயுணர்வை காலம் முழுவதும் கைகொண்டால் மட்டுமதான் ஒரு மனிதர் அவர் பெற்ற வெற்றியை தக்கவைக்க முடியும். இந்த எச்சரிகை;கை உணர்வு முஸ்லிம்களுக்கு மிக அவசியமானது. பெருமானார்(ஸல்) அவர்கள் 'ஒரு முஸ்லிம் ஒரே பொந்திலிலிருந்த இரு முறை தீண்டப்படக்கூடாது என்று சொன்னார்கள். அந்த வார்த்தைகள் ஒரு விழிப்புணர்வுள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்கும் நோக்கமாக கொண்டவை. ஒரு முறை விபத்து ஏற்பட்டால் அது எதார்த்தம். ஆதே விபத்து இரண்டாம் முறை ஏற்பட்டால் அது ஏமாளித்தனம். இந்த ஏமாளித்தனம் நமது வெற்றியை பறித்து விடக்கூடியது. எனவே ஏமாந்து விடக்கூடாது என்பதில் எப்பொதும் எச்சரிக்கையாக இலக்க வேண்டும். குறிப்பாக மார்க்க விசயத்தில் ஏமாந்துவிடக்கூடாது. மற்ற விசயங்களில் ஏமாந்துவிட்டால் ஏற்படக்கூடிய பாதிப்பைவிட மார்க்க விசயத்தில் ஏற்படுகிற ஏமாளித்தனம் அதிக பாதிப்பை தரக்கூடியது. எந்த ஒரு சிறுவிசயத்திலும் ஏமாற்த்திற்குள்ளாகதவாறு பாததுகாத்துக்கொள்ளத் தேவையான அறிவையும் அறிவுரைககளையும் இறைவனும் இறைத்தூதரும் முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ளார்கள். தெளிவான மார்க்க அறிவை பெறுவதன்; மூலம் முஸ்லிம்கள் மார்க்கத்தல் ஏமாந்துவிடாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். மதங்களுக்கும் அறிவு சார்ந்த நடவடிக்கைகளுக்கும் இடையே உள்ள உறவு தூரத்து உறவு தான் என்ற சிந்தனை சமூகத்தில் நிலவிவருகிறது. அது மற்ற சமயங்களுக்கு பொருந்துமோ என்னவோ இஸ்லாத்திற்கு அறவே பொருந்தாது. இஸ்லாம் அறிவின் தளத்தில் இயங்கக் கூடிய சமயம். இஸ்லாம் கட்டளையிடும் வணக்கவழிபாடுகள் கூட அறிவு பெறுவதின் அடிப்படையிலேயே கடமையாகின்றன. ஒரு ஹிந்துவோ கிருத்துவரோ எந்த அறிவும் தெளிவும் பெறாமல் கோயிலக்கோ தேவாலயத்திற்கோ சென்று அவருடைய சமய வழிபாட்டை நிறைவேற்றிவிட முடியுமும். ஆனால் ஒரு முஸ்லிம் மார்க்கத்தின் எந்த ஒரு கடமையையும் அதைப் பற்றிய அறிவைப் பெறாமல் நிறைவேற்ற முடியாது. தொழுகை பல வகைப்பட்ட பாடங்களை கொண்டது. நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற மற்ற கடமைகளும் அப்படியே! ஓரு புத்தகம் நிநை;த விசயங்களை அறிந்து வைத்திருந்தால் தான் இஸ்லாத்தின் அடிப்படை கடமைகளை நிறைவேற்ற முடியும். ஒருவர் இறைவணை வணங்கி வாழ்வதை மட்டுமே வாழ்கையாக கொண்டிருந்தால் அவரும் கூட அதற்கான பாடங்களைப்படித்து அறிவு பெற்றாக வேண்டும். எனவே அறிவு பெறுதல் என்பது இஸ்லாத்தில் தவிர்க்க முடியாத ஒரு அம்சமாகும். தண்ணீரின் தரமும், காலஅளவும், தொழுகையின் ஒழுங்கும், தொழுகைக்கு முந்தைய ஒழுங்குகளப்பற்றிய தொளிவும் இருந்தால் மட்டுமே ஐவெளை தொழுகையை ஒரு முஸ்லிட் நிறைவேற்ற முடியும். ஜகாத்தை நிறைவேற்றுவதற்கு ஓரளவேனும் கணக்கு தெரிந்திருக்க வேண்டும். ஒருவர் இஸ்லாத்தில் இணைய விரும்பினால் அதற்கு சடங்குகள் எதுவும் இஸ்லாத்தில் இல்லை. எவரையும் அணுகி ஞானஸ்நானம் பெறவேண்டும் என்ற அவசியமில்லை. எந்த அடையாளத்தையும் போட்டுக் கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. லாயிலாக இலல்லாஹு முஹம்மது ரஸுலுல்லாஹி என்ற கலிமாவை மனதால் நம்பி அதை நாவால் கூறி உறுதி செய்தால் போதுமானது. இஸ்லாத்தின் முதல் கடமையான கலிமாவை மொழிவது என்ற இந்த விசயம் கூட கலிமாவை பற்றிய விபரங்களை அறிந்து கொண்டபின்னரோ அர்த்தம் பெறும். எனவே தான் திருமறை அல்குர்ஆன் கலிமா சொல்லுங்கள் என்று சொல்லவில்லை. லாயிலாஹ இல்லல்ஹுவை அறிந்து கொள்ளுங்கள் என்று கூறுகிறது. ஒருவர் இஸ்லாத்தின் வாசலில் அடியெடுத்து வைக்கிற போதே அது அறிவு பெறுதலின் அடிப்படையில் அமைகிறது என்பதை இது புலப்படுத்துகிறது. அறிவு பெறுதல் அல்லது அறிவுவழி சாhந்து நடப்பது என்பது இறை நம்பிக்கைகு அடுத்த அம்சமாகும். மார்க்க நூல்கள் பலவற்றிலும் ஈமான் இநைவிசுவாசம் என்ற பாடத்திற்கு அடுத்தபடியாக இல்ம் கல்வியறிவு எனும் தலைப்பில் பாடம் அமைந்திருப்பதை காணலாம். திருக்குர்ஆனுக்கு அடுத்த மரியதைக்குரியதாக கருதப்படம் ஸஹீஹுல் புகாரி என்ற நபிமொழித் தொகுப்பிலும் மற்ற பல மார்க்க நூல்களிலும் இந்த நடைமுறை கையாளப்பட்டிருக்கிறது. இஸ்லாத்தில் அறிவுக்கும் சிந்தனைக்கும் தரப்பட்ட இந்த முக்கியத்துவம் தான் முஸ்லிமகளை அறிவியலின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. சகல துறைகளிலம் அவர்கள் சாதனை கொடிகளை நாட்டினார்கள். அறிவியலின் மூலக்கூறுகளை உலகிற்கு அவர்களால் அடையாளம் காட்ட முடிந்தது. ஈமானுக்கு அடுத்து அறிவுபெறுவதற்கு முக்கியத்துவம் தரப்படடிருப்பதற்கு மிக முக்கியமான ஒரு காரணம் ஒன்று உண்டு. ஒருவர் அவரக்கு கிடைத்த அரிய செல்வமான ஈமானை சரியான அறிவு பெறுவதன் மூலமே பாதுகாக்க முடியும். ஓரு முஸ்லிம் போதுமான அறிவை பெற்றிராவிட்டால் சில சந்தாப்பங்களில் அவரை அறியாமலே அவரக்கு கிடைத்த ஈமானியச் செல்வத்தை இழக்க நேரிடும். ஓரு முஸ்லிம் மார்க்கத்தின் அடிப்படையில் எந்தக் காரியத்தை செய்தாலும் அதைப்பற்றிய அறிவை அவர் வைத்திருப்பது அவசியம். ஆந்த அறிவை அவர் பெற்றுக் கொள்ளத் தவறிவிட்டால் அவரது செயல்கள் வெற்றுச் சடங்குகளாகவும் சம்பிரதாயமாகவும் மதிப்பிழந்துவிடும். முஸ்லிம்கள் பாத்திஹாவுக்கு ஊதுபத்தி பற்ற வைப்பதற்கு எதற்காக என்ற விபரத்தை பலர் அறிந்து கொள்ளாததனால் அது சடங்காகிவிட்டது. ஒரு சிலர் அதையே வணக்கமாக தவறாக அர்தப்படுத்திக் கொள்கிற விபரீதம் ஏற்பட்டது. கடையை திறந்து வைத்ததும் நாகூர் தர்காவின் படத்திற்கு ஊதுபத்தி ஆராத்தி எடுக்கிற பழக்கம் சில முஸ்லிம்கள் செய்கிறார்கள் என்றால் அந்த மாபாதகத்திற்கான முதல் காரணம் பாத்திஹாவுக்கு ஊதுபத்தி பற்றவைக்கப்படவதின் காரணத்தை அறியாததே ஆகும். ஒரு நல்ல சபையில் வாசணையாக இருக்கட்டுமே என்ற அர்தத்திலே ஊதுபத்தி பற்றவைக்கப்படுகிறது. அதை தவிர அதற்கு மார்க்கத்தில் வேறு எந்த பொருளும் இல்லை என்பதை ஒரு முஸ்லிம் அறிந்து வைத்தால் கடையை திறந்ததும் ஊதுபத்தி பற்றவைப்பார். அது வாசணைக்காக. சாம்பிராணி புகை காட்டுவார் அது வாசணைக்காகவும் சுகாதாரத்திற்காகவுமாக இருக்கும். எந்த ஒரு காரியத்தை செய்ய முற்படும்போதும் இது பற்றி மார்க்கம் என்ன சொல்கிறது என்ற விபரத்தை அறிந்து கொண்டால் மார்க்க விசயத்தில் ஏமாந்து போகாமல் இருக்கவும் கடமைககைள சரிவர நிறைவேற்றவும் முடியும். இஸ்லாம் அறிவுவழி சார்ந்த சமயம் எனும் போது அதில் மூடநம்பிக்கைளுக்கு இடமில்லை. எந்த ஒரு செயலும் அதற்குரிய நியாயம் அறிந்து செய்யப்படவேண்டும். மார்க்கத்தில் அடிப்படை ஆதாரம் இல்லாத செய்திகளை ஒரு முஸ்லிம் நம்பினாலோ அல்லது மார்க்க அடிப்படையற்ற ஒரு செயலைச் செய்தாலோ அது முடநம்பிக்கையாகவும் மூடச்செயலாகவும் கருதப்படும். அப்படிச் செயல்படுவது ஈமானிய நம்பிக்கைகளை சிதைப்பதாகவும் இஸ்லாமிய விழுமியங்களை சீரழிப்பதாகவும் ஆகிவிடும். அதுமட்டுமல்ல நாம் ஏமாளியாகவும் நேரிடும். பெருமானார்(ஸல்)அவர்கள் மிகச்சரியான எச்சரிக்கைகளை தந்து சமதாயம் அர்த்தமற்ற கருத்துக்களிலும் பயனற்ற செயலகளிலும் ஏமாந்துவிடாமல் இருக்க தகுந்த எச்சரிக்கை களை செய்துள்ளார்கள். பெருமானார் (ஸல்)அவர்களுக்கு அவர்களுடைய 60 வது வயதில் ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு இபுறாகீம் என்று பெயரிட்டார்கள். அந்தக்குழந்தை தோற்றத்தில் பெருமானாரைப்போலவே இருந்தது. நீண்ட காலததிற்குப்பிறகு பிறந்த அந்தக்குழந்த தன்னனைப்பெலவே இருந்ததில் பெருமானார் அதிகம் மகிழ்சியடைந்தார்கள். அல்லாஹ்வின் நாட்டம் அந்தக்குழந்தையை அல்லாஹ் அழைத்துக் கொண்டான். அது அவர்களுக்கு மிகுந்த வேதனையை தந்தது. கண்ணீர் கன்னத்தில் வழிந்தோடும் அளவு அழுதார்கள். மதீனா நகரம் சேகததிலிருந்தது. அந்த நாளன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. மக்கள் சிலர் பெருமனாரின் குழந்தை இறந்துவிட்ட துக்கத்தின் காரணமாகவே கிரகணம் ஏறபட்டது என்று பேசிக் கொண்டார்கள். இந்தச் செய்தி பெரமனாரின் காதுகளுக்கு எட்டியது. தனது சோகம் பெரிது தான் என்றாலும் சமுதாயம் தவறான நம்பிக்கையில் விழுந்துவிடுவது அதைவிடப் பெரிய சேகமாகிவடும் என்று கருதிய பெருமானாhர்(ஸல்)அவர்கள் தனது சோகத்தை ஒருபக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு எந்த ஒரு மனிதரின் இறபபுக்கு துக்கம் அனுஷ்டிப்பதற்காகவும் கிரகணங்கள் பிடிப்பதில்லை. அவை அல்லாஹ்வின் வல்லமைக் கான சான்றுகள் என்று சொல்லி மக்களின் சிந்தனையை மூடியிஐந்த திரையை அகற்றினார்கள். எத்தகைய ஒரு சிறந்த தலைவர் நமக்கு கிடைத்திருக்கிறார் என்பதை எண்ணிப்பார்த்து எண்ணிப்பார்த்து முஸ்லிம்கள் பெறுமையடையத்தகுந்த நிகழ்சி இது. அதே ரேத்தில் தனது புத்திர சோகத்தை மறந்து விட்டு நம்மை நலவழிப்படுத்தியவரின் தொண்டாக்ள என்ற வகையில் அந்த வழிகாட்டுதலை இறுக்கமாக பற்றிக்கொள்கிற கடமை முஸ்லிம்களுக்கு உணர்த்தும் நிகழ்சியாகவும் இது அமைகிறது. பெருமானாரின் வழி வந்த நபித்தோழர்களும் இத்தகைய விழிப்பணர்வை தேவைப்பட்ட சமயங்களில் எல்லாம் முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ளார்கள். உமர்(ரல) அவர்களின் காலத்தில் ஹுதைபிய்யாவின் பள்ளத்தாக்கில் ஒரு மரத்தை முஸ்லிம்கள் அங்கு செல்வதையும் தொழுவதையும் புனிதமாக கருதினார்கள். ஹ}தைபிய்யா உடன்படிக்கையின் காலத்தில் அந்த மரத்தினடியில் தான் பெரமானார்(ஸல்)அவர்கள் சஙாபாக்களிடம் பைஅத் பெற்றார்கள். அப்பொது தான் அம்மக்கள் குறித்து தான் திரபதியடைவதாக அல்லாஹ் ஒரு வசனத்தை அருளினான். அந்த மரம் இதுதான் என்று நினைத்து மக்கள் அங்கு சென்று கொண்nருந்தார்கள். உண்மையில் ஹுதைபிய்யாவில் கலந்து கொண்ட சஙாபாக்களால் கூட அந்த மரத்தை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. இதை கேள்விப்பட்டதும் உமர் (ரலி) அந்த மரத்தை வெட்டி எறிந்தார்கள். மார்க்கத்தின் அறிவுரைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு விசயத்தை மக்கள் புனிதம் என்று கருதியது மிகவும் தவறானது என்பதை உணர்த்துவதற்காகவே அந்த மரத்தை வெட்டி வீசினார்கள். ஹாபிழ் இப்னுகதீர் அவர்கள் தனது அல்பிதாயா வன்னிஹாயாவில் குறிப்பிடுகிற இன்னொரு செய்தியும் இங்கு நினைவு கூறத்தக்கது தான். அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் எகிப்தை வெற்றி கொண்டு அந்த அன்னிய மக்களின் நகரங்களின் ஒன்றான புஃனா நகருக்குள் நுழைந்த போது அந்நகர மக்கள் அவரிடம் கூறினார்கள்:விசுhவாசிகளின் தலைவரே! இந்த நைல் நதிக்கு நாங்கள் வழக்கமாக செய்யும் ஒரு சடங்கு உண்டு! அது என்ன என்று அம்ர்(ரலி) கேட்ட போது அம்மக்கள் கூறினார்கள்: இம்மாதத்தின் பதினெட்டாம் இரவில் நாங்கள் ஒரு கன்னிப்பெண்ணை அணுகி அவளது பெற்றோரை சம்மதிக்க வைத்த பிறகு அவளுக்கு இருப்பதிலேயே மிகச் சிறந்த ஆடைகளையும் நகைகளையும் அணிவிப்போம் பிறகு அவளை இந்த நதியில் வீசி விடுவோம் என்றனர்.அதற்கு அம்ர்(ரலி) அவர்கள் இதற்கு இஸ்லாத்தில் இடமில்லை. முந்தைய கலாச்சாரத்தை இஸ்லாம் தகர்த்து விட்டது என்று கூறி அதை அதை மறுத்துவிட்டார். தொடர்ந்து அவர்கள் புஃனாவில் தங்கியிருந்தார்கள். நைல்நதி குறையவுமில்லை கூடவுமில்லை. ஒரு சமயம் நைல் நதியில் தண்ணீர் ஒடவில்லை. அதனால் அவர்கள் அங்கிருந்து கிளம்ப நினைத்ததார்கள் அப்போது அம்ர் (ரலி)உமர்(ரலி)அவர்களுக்கு இதுபற்றி கடிதம் எழதினார்;. அதற்கு உமர் (ரலி) நீர் சரியாகவே செயல்பட்டுள்ளீர். இந்தக்கடிதத்துடன் ஒரு ஓலையை வைத்துள்ளேன். அதை நைல்நதியில் போட்டு விடுவீர் என்று பதில் எழுதினார்கள்.அந்த ஓலையை அம்ர் (ரலி) திறந்து பார்த்த போது அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது. இறைவனின் அடிமையும் விசுhவசிகளின் தலைவருமான உமரிடமிருந்து நைல்நதிக்கு.நீ உனது விருப்பப்படி ஓடுவதாக இருந்தல் ஓட வேண்டாம். அடக்கியாளும் சக்தி மிக்க ஏகனான அல்லாஹ்தான் உன்னை ஓட்டுவதானால் நாங்கள் அல்லாஹ்விடம் உன்னை ஓடச் செய்யுமாறு கோருகிறோம். அம்ர் (ரலி) அந்த ஓலையை நைல்நதியில் போட்டார். ஒரே இரவுக்குள்ளாக அந்த சனிக்கிழமை காலை நைல்நதியில் 16 முழம் நீரை அல்லாஹ் ஓடச் செய்தான். எகிப்து மக்களின் அப்பழக்கத்தை அல்லாஹ் இன்று வரை தடுத்துவிட்டான். இப்னு கதீர் (ரஹ்) குறிப்பிடும் இந்த வரலாறு பெருமானார்(ஸல்)அவர்கள் கட்டமைத்துத தந்த பாதையில் முஸ்லிம் சமுதாயம் தௌவிhன சிந்தனையோடும் வலுவான செயல்திட்டத்தோடும் செயல்பட்டதற்குமான ஒரு அடையாளமாகும். ஏந்த ஒரு செயலையும் மார்ககத்தின் கருத்தற்ந்து செயல்படும் போது செயல்படுகிற போது கிடைக்கிற நன்மையையும் நேர்வழியையும் இந்த வரலாறு மிகத்தெளிவாக எடுத்துரைககிற அதே சமயத்தில் அந்த தெளிவான இறைவிசுவாசத்தால் ஒரு வரலாற்றுத்தவறு தடுத்து நிறுத்தப்பட்ட நன்மையையும் படம்பிடிக்கிறது.மார்க்கத்தின் அடிப்படைகளைப்பற்றி தெளிவில்லாத நம்பிக்கைகளுக்கு சமுதாயம் ஆளாகிற போது அது சந்திக்கிற இழப்புகளும் நட்டங்களும் அதிகமாகிறது. ஓரு நண்பர் புதிய விடு கட்டினார். திறப்பு விழாவிற்கு எங்கிருந்தோ பச்சையும் பச்சையும் அணிந்திருக்ந ஒருவரை அழைத்துவந்தார். அவர் விடு முழுவதும் சாம்பிராணி புகையை படரவிட்டு ஏதேதோ பாட்டுக்களை பாடியபடி தன் இரண்டு கைகளையும் சந்தணக்கிண்ணத்தில் தோய்த்து சுவற்றில் ஆங்காகாங்கே தனது கை அடையாளத்தை பதித்தார் என்ற செய்தி என் காதுக்கு வந்தத. நான் சொன்னேன் அந்த நபரை அழைத்துவருவதற்கு செலவழித்த காசும் வீண். சுவற்றுக்கு அடித்த டிஸ்டெம்hரும் வீண். இவை எல்லாவற்றையும் விட பெரிய நஷ்டம் எது தெரியுமா? இப்படி செய்தால் அல்லாஹ் நனமையை தருவான் என்று அந்த நண்பர் நினைத்தால் அது தான் மிகப்பெரிய நஷ்டம்.மார்க்கத்தின் அடிப்படையில் நன்மை அல்லாததை நன்மையாக நினைப்பதும் தீமை அல்லாததை தீமையாக நினைப்பதும் மார்க்க விசயத்தில் ஏமாந்துபோவதாகவே அமையும்.முஸ்லிம் சமூகத்தில் அப்படி ஏமாந்து போனவர்களின் செய்திகளை தொகுந்தால் வலிமிகுந்த சுவையான ஒரு பெரிய புத்தகம் கிடைக்கும். பல அறிவாளிகளும் செல்வாக்குமிக்கவர்களும் கூட அந்த வலையில் அகப்படுவார்கள். இந்த முறை ஏப்ரல் மாதம் வரும் போது அந்தப் பட்டியலில் நம்முடைய பெயரும் இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்வோம். ஓரு எச்சரிக்கைக்காகத்தன். நம்பினோர் கெடுவதில்லை.இது நான்கு மறை தீர்ப்பு என்பது நல்ல நம்பிக்ககைளுக்குத்தான். வானொலியில் ஒரு முறை கேட்ட கவிதை ஞாபகத்திற்கு வருகிறது.கடைவீதியில் ஒருவன் கூவினான் நம்பினோர் கெடுவதில்லை இது நான்கு மறைத் தீர்ப்பு நான்குமறை இதையே திருமப்த்திரும்ச் சொல்லி விட்டு ஐந்தாவவதாய் சொன்னாளன் நம்பினோர் கெடுவதில்லை இது நான்கு மறைத் தீர்ப்பு நாளைக்கே லட்சம் நமக்கு நிச்சயம். இந்த நம்பிக்கைக்கு யாரும் பொறுப்பல்ல.இறுதியாக இந்த இறைவசனத்தையும் நினைவில் வையுங்கள்.எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 2:256)

பள்ளித்தலமனைத்தும்...

ஜுன் 2 ம் தேதி அன்று தமிழகம் முழவதும் பள்ளிக்கூடங்கள் ஆண்டு விடுமுறைக்குப் பின் திறக்கின்றன. மேல்வகுப்பில் அடியெடுத்து வகிக்கிற மகிழ்ச்சியில் சிறுவர்களும், அவர்களுக்கு தேவையான வற்றை பார்த்துப்பார்த்து செய்கிற அக்கறையில் பெற்றோர்களும், அவற்றைப் பயன்படுத்திக் கொள்கிற முயற்சியில் கல்வி நிறுவனங்களுமாய் தமிழகம் கலைகட்டிக் கொண்டிருக்கிறது. அதிகாலையில் பூக்கள் மலர்வதாக கேள்விப்படுகிறோம். நகரியச் சூழலில் அதைப் பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. நாம் பார்க்கக் கிடைக்கிற மலர்ந்த பூக்கள் பள்ளி செல்லும் குழந்தைகள் தான். ஏதேனும் ஒரு பள்ளிக்கூடத்திற்கு அருகே நின்று பள்ளிக்கூடம் தொடங்கும் அந்த அழகை ரசித்துப் பாருங்கள். அன்றைய நாள் முழுதுக்கும் மனதுக்குள் சந்தோஷ மழைச் சாரல் அடித்துக் கொண்டிருக்கும். அந்த மகிழ்ச்சியை மிகுந்த அக்கறையோடு உள்வாங்கிக் கொண்டு செயல்படுகிற கடமை முஸ்லிம் சமுதாயத்திற்கு இருக்கிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசு பொறுப்பேற்றுள்ளதால் நமது பிரச்சினைகள் அனைத்தும் நாளை மாலைக்குள் தீர்ந்து விடும் என்று பிரச்சாரம் செய்ய நிறைய முஸ்லிம் தலைவர்கள் தயாராக இருக்கிறார்கள். உண்மையில் நம்மை வாட்டுகிற பல பிரச்சினைகளுக்குமான தீர்வு, நமது முன்னேற்றத்திற்கும் கவுரவத்திற்குமான விடிவு, பள்ளிக்கூடங்களின் தலைவாசலில்தான் இருக்கிறது. எந்த ஒரு அரசியல்வாதியின் விரலிடுக்கிலுமில்லை. திட்டவட்டமாக நாம் புரிந்து கொண்டு செயல்பட வேண்டிய உண்மை இது.முஸலிம் சமுhயம் இப்பொதெல்லாம் எதற்கெடுத்தாலும் சலுகைகளையும் அனுதாபத்தையும் எதிர்பார்ததுக் கொண்டிருக்கிற சமுதாயமாக இருக்கிறது. அடுத்தவர்களின கரிசனத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற சமுதாயம் என்ற நிலை மாற வேண்டுமாhல் நாம் நாடிச் செல்ல வேண்டிய இடம் உறுதியாக கல்விக் கூடங்கள் தான். ஊனமுற்றவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் அனுதாபத்திpற்குரியவர்கள். சரியான அக்கறையின்மையiயும் வழிகாட்டுதல் இனமையையும் தவிர நம் சமுதாயத்திற்கு வேறு எந்தக் குறையுமில்லை சலுகைகள் கிடைத்தால் அது தற்காலிக சிரமப்பரிகாரமாக அமையுமே தவிர சமுதாயத்தின் ஆற்றலையும் திறனையும் மேம்படுத்தக் கூடியதாக ஒரு போதும் அமையாது. நமது ஆற்லையும் செயலூக்கத்தையும் தரமாக உயர்த்திக் கொள்ளாதவரை உலக சமுதாயத்Nதூடு நம்மால் ஒரு போதும் போட்டி போட முடியாது. திருக்குர்ஆனின் 2.249 வசனம் உலகிலே வாழும் சிறுபான்மை சமுதாயங்கள் அனைத்தும் எப்போதும்நினைவில் வைத்திருக்க வேண்டிய வசனமாகும். ஆனால் பெறும்பாலும் அது பத்ருப்போர் நினைவு நிகழ்சிகளின் போது மட்டுமே அதிகமாக பேசப்படுகிறது. பாலஸ்தீனத்தை ஆக்ரமித்திருந்திருந்த ஜாலூத் (கோலியாத்) தின் பெரும் படையினரை தாலூத்தின் சிறு படை வெற்றி கண்ட விதத்தை பறைசாற்றும் போது அல்லாஹ் கூறுகிறான் :அல்லாஹ்வின் நாட்டப்படி பல சிறுபான்மைக் குழக்கள் பெரும்பான்மையினரை வெற்றி கொண்டுள்ளனர். இந்த வசன அமைப்பபை கவனித்துப்பார்த்தால் இது ஒரு நிகழ்சியை மட்டுNமு குறிப்பிடுகிற தத்துவமல்ல என்பதும் உலகில் பொதுவாக நடைபெற்றுவருகிற நிகழ்வைத்தான் இது வெளிப்படுத்துகிறது என்பதும் புலனாகும். உலகிலே யார் எங்கு சிறுபான்மையினராக வாழ்ந்தாலும் அவர்களுக்கு ஆறுதலையுமு; நம்பிகை;கை வெளிச்த்தையும் தருகிற வார்த்தைகள் இவை. சுpறுபான்மை பெரும்பான்iமினரை வெற்றி கொள்வதற்கு அல்லாஹ் சில வழிகளை வைத்திருக்கிறான். எந்த ஓரு சிறுபானமைச் சமுதாயமும் அது வாழ்கிற சூழ்நிலையில் சில பிரச்சினைகளை சந்தித்துத் தான் ஆக வேண்டியிரக்கும். அது யாராக இருந்தாலும் சரி. அத்தகைய சந்தர்ப்பங்களில் தனது முன்னேற்றத்திற்கான சரியான வழிகளை கண்டறிந்து திட்டவட்டடமான சில கோட்பாடுகளை பிடிவாதமாக பின்பற்றினால் அந்த சமுதாயம் நிச்சயமாக மரியாதையை பெற முடியும். ஏன் அப்பொது தான் அந்தச் சமுதாயம் வாழவே முடியும். இந்த உண்மையை விளங்கிக் கொள்வதற்கு சிறந்த உதாரணம் யூதர்கள் தான். ஒரு அறுபது எழுபது வருடங்களுக்கு முன்னால் எத்தகைய கேவலமான வாழ்கை அவர்களுடையது? நாடுநாடாக துறத்தப் பட்டார்கள். கூட்டம் கூட்டமாக வேட்டையாடப்பட்டார்கள். அவர்களோடு கைகுலுக்குவதற்கு உலகில் எவரும் தயாராக இருக்கவில்லை. ஆனால் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம் எத்தகையது? பாரம்பரிய விவசாய தேசமமான இந்தியாவிற்கு அவர்கள் விவசாய வழிமுறைகளைச் சொல்லிக் கொடுக்கிறார்கள். பாதுகாப்பிலும் ரானுவத்திற்கும் வழிகாட்டுகிறார்கள். அவர்கள் தயாரித்த பொருட்களை முஸ்லிம் நாடுகள் நேரடியாக இறக்குமதி செய்யாவிட்டாலும் இன்னொரு நாட்டின் வழியாக இறக்குமதி செய்கின்றன என்று பத்ரிகை தகவல் தெரிவிக்கிறது. மிகக்குட்டியான ஆக்கரமிக்கப்பட்ட தொரு தேசத்தில் வாழ்கிற அவர்களது கருத்து மதிப்பாக எடுத்துக் காட்டப் படுகிறது. இதற்குக் காரணம் என்ன? வெளிப்படையாக பேசும் போது அமெரிக்காவும் இங்கிலாந்தும் காட்டுகிற கரிசனம்தான் இத்தனைக்கும் காரணம் என்று நாம் சொல்லிவிடலாம் தான். உண்மையில் அந்தக் கிருத்துவ நாடுகளிடம் கூட அத்ததகைய மரியாதையை அவர்கள் பெறுவதற்கு காரணம் கல்வித்துறையில் யூதர்கள் காட்டிய அக்கறையுமு; அவர்கள் அடைந்த முன்னேற்றமுமே காரணமாகும். ஆமரிக்காவில் யூதர்ச் சிறுபான்மையினர் நடத்துகிற பள்ளிக்கூடங்கள் பல உண்டு. அவற்றில் யூதரல்லாத ஒரு மாணவன் வெற்றியடைய 35 சதவீத மதிப்பெண்கள் போதுமானது என்றால் ஓரு யூதன் வெற்றியடைவதற்கு 50 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்ற கடுமையான நிபந்தனையை அவர்கள் வைத்திருப்பதாக மௌலானா வஹீதுத்தீன்கான் ஒரு நூலில் குறிப்பிட்டிருந்தார். இத்தகைய கடுமையான பயிற்சிகளின் விளைவாகவே யுதர்களில் பெரும் அறிஞர்களளும் விஞ்ஞானிகளும் தோன்றினார்கள். அதன் விளைவாகவே அவர்களை மதித்தாக வேண்டிய நிர்பந்தத்திற்கு மற்றவர்கள் ஆட்பட்டார்கள். நம்முடைய நாட்டிலே கூட கிருத்துவர்களுக்கு தனி மரியாதை கிடைக்கிறதென்றால் அதற்கு என்ன காரணம்? கிருத்துவ சமுதாயம் கல்வியறிவு பெறுவதில் முன்னிலையில் இருக்கிறது என்பது தான். நமது நாட்டின் சில பகுதிகளில் முஸ்லிம்களின் வாழ்வு அச்சுறுத்தலுக்கும் ஆபத்துகளுக்கும் உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்தான் அப்துல் கலாம் இந்தியாவின் ஜனாதிபதியாக பெருவாரியான மக்களால் முன்மொழியப்பட்டார். அரசியல் பாரம்பரியமோ எப்படியாவது பெரும் பதவியை பிடித்துவிடவேண்டும் என்ற ஆவலோ இல்லாத ஒருவர் நாடடின் உயர்ந்த பொறுப்புக்கு மிகப்பெரிய மக்கள் ஆதரவோடு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது கல்வியறிவு தானே அதற்கு காரணம்? சிறுபான்மை பெரும்பான்மைய வெற்றி கொள்வதற்கான வழியை அல்லாஹ் எப்படி அமைத்திருக்கிறான் பாருங்கள்? லாயிலாக இல்லல்லாஹ் கலிமாவை மொழிந்து விட்டால் முஸ்லிம்களுக்கு மறுமையில் வெற்றி கிட்டும் என்பது நிச்சயம் தான். ஆனால் இந்த உலகில் வெற்றி பெறுலதற்கான காரணிகளை அல்லாஹ் எல்லோருக்கும் பொதுவாகவே வைத்திருக்கிறான். ஒரு கிருத்துவனோ யூதவனோ வெற்றியடைவதற்கு என்ன காரணிகள் தேவையோ அதே காரணிகள் முஸ்லிம்கள் வெற்றி பெறவும் பொதுவாக தேவைப்படும். அந்தக்காரணிகள் சரியாக இல்லையெனில் முஸலிம்களுக்கு வெற்றி என்பது ஒரு அதிசயமான பொருளாக ஆகிவிடும். ஆதிகாலம் தொட்டு இன்று வரை எந்த ஒரு தனிமனிதனுடையவும் சமுதாயத்தினுடையவும் மலர்ச்சிக்கு கல்விதான் பிரதான காரணமாக இருக்கிறது. கல்வி பெற்ற சமுதாயமே நிறைந்த நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை திருக்குர்ஆன் மிக அழுத்தமாக போதித்துள்ளது. குர்ஆனைப்போல இவ்வளவு அழுத்தமாக இன்னொரு வேதம் போதித்திருககிறதா என்பது சந்தேகத்திற்குரியதாகும். எவர் கல்வியறிவு கொடுக்கப் பெற்றாரோ அவர் நிறைவான நன்மைனகள் கொடுக்கப்பட்டவிட்டார் என்று திருக்குர்ஆன் (2.269) கூறுகிறது.நம்மிடம் கைகட்டி சேவகம் செய்தவர்களெல்லாம் இன்று டை கட்டி ஏவல் செய்யும் நிலைக்கு உயர்ந்திருக்கிறார்கள். வியாபாரிகள் என்ற நிலையிலிருந்த முஸலிம் சமதாயம் சிறுவியாhபாரிகள் என்று நிலைக்கு சிறுத்துவிட்டது. உணர்ச்சி வசப்படுவதற்கு மட்டுமே நமது இளைய தலைமுறை பயிற்று விக்கப்பட்டிருக்கிறது. அதனால் கல்வியறிவின் தீட்சணயமும் தெளிவும் அதற்கு விலக்கப்பட்டவிட்டது. அதன் விளையாக இழிச் சொற்களையும் கடும் தண்டனைகளையும் அது அனுபவித்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஒரு நாள் சில முஸ்லிம் இளைஞர்கள் ஒரு வியாபாரத்திறகு சென்று விட்டு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தார்கள். பேருந்தில்; மூன்று பேர் அமரும் இருக்கையில் ஒரு இளைஞர் தினசரிப்பத்ரிகையை வரித்து வைத்தபடி கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறார். முஸ்லிம் இளைஞர் அவருக்கு அருகே உட்கார்ந்தார்கள். அதில் சிரமம் ஏற்பட்டது. சற்று தள்ளி அமருங்கள் என்று அவரிடம் கேட்டுக் கொண்டார்கள். அவர் கொஞ்சமாக நகர்ந்தார். இன்னும் சற்று தள்ளி அமருங்கள் என்று கேட்டனர். துலுக்கப் பயல்களுக்கு... என்று முனுமுனுத்தபடி அவர் நகர மறுத்தார். பிரச்சினை பெரிதாகிவிட்டது. அவர் சட்டையை பிடித்தார். முஸ்லிம் இளைஞர்கள் அவரை அடித்துவிட்டார்கள். உடனே கைத்தொலைபேசியில் காவல் நிலையத்தை தொடர்பு கொண்ட அவர் அந்த இளைஞர்களை போலீஸில் சிக்கவைத்தார். சமாதானம் செய்து கொண்டிருந்தவுரும் போலீஸில் சிக்கினார். அவருடைய மனைவிக்கு மறு நாள் வளைகாப்பு நடக்க இருந்தது. போலீஸிற்கு சென்ற பிறகு தான் அடிபட்டவர் ஒரு வக்கில் என்பது தெரிந்தது. பொது இடத்தில் தகறாறு என்பது சாதாரணமான ஒரு 75 கேஸ் தான். காவல் நிலையத்திNலுயே ஜாமீன் பெற்று விட முடியும். மறு நாள் கோர்ட்டில் பைனை கட்டி விட்டால் போதுமானது. ஆனால் அந்த முஸ்லிம் இளைஞர்களுக்கு நீதிபதி ஜாமீன் தர மறுத்துவிட்டார். எந்த விசேஷத்தை எடுத்துக் கூறிய போதும் அவர் செவி சாய்க்கவில்லை. 5 நாட்களுக்குப் பிறகு தான் ஜாமீன் கிடைத்தது. வக்கீலை அடித்துவிட்டார்கள் என்பது பெரிய விசயமாகிவிட்டது. வக்கீல் திட்டியதோ சச்ரவு செய்ததோ அரங்கிற்கே வரவில்லை.ஏனப்பா! போலீஸ் உங்களைப் பிடித்த போது அந்த ஆள் எங்களை ஜாதிப் பெயர் சொல்லித் திட்டினாhன் என்று நீங்களும் அவாருக் எதிராக ஒரு குற்றச்சாட்டை பதிவு செய்திருக்கலாம் தானே என்று கேட்டேன். எங்களுக்கு அதுவெல்லாம் தோன்ற வில்லை என்று அந்த இளைஞர்கள் பதில் சொன்னார்கள். ஒரு சிறு தகறாறை 5 நாள் சிறையில் வைக்கும் ஒரு வழக்காக மர்றுவதற்கு அந்த வக்கீலுக்கு அவரயை கல்வி உதவியது. முஸ்லிம்களின் கலவியறிவின்மை வழக்கிற்கு காரணமானவன் நழுவிச்செல்வதற்கு வாய்ப்பளித்து விட்டது. நமது உரிமைகளை கேட்டுப்பெறுவதற்கும் நமக்கு ஏற்படுகிற தீமைகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கும் கூட உரிய கல்வியறிவு இருந்தால் மட்டுNமு முடியும்.இல்nலை எனில் நமக்கேற்படுகிற சோதனைகள் தொடர்கதையாகிவிடும். நமது தலைமுறை தான் கல்விபெறுவதில் பின் தங்கிவிட்டது. நமக்கு அடுத்த தலைமுறை அந்த பாதிப்புக்கு ஆளாகக் கூடாது என்றால் கல்pயறிவு விசயத்தில் நமது கவனிப்பு தீவிரமடைய வேண்டும். எத்தகைய தீpவிர கவனத்தை செலத்த வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம் உண்டு. முஸ்லிம்கள் நிறைந்த பகுதியில் ஒரு கிருத்துக் குடும்பம் டியூஷன் நடத்திக் கொண்டிருந்தது. முஸ்லம் மாணவர்களோடு அந்த வீட்டுப் பையனும் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தான். அந்த வாhத்தியாரின் மனைவி தன்னுடைய மகனை கண்டிக்கிறார். டேய் ஒழுங்கா படி. முஸ்லிம் பசங்க ஏதாவது தொழில் செஞ்சு பொழுச்சுக்குவாங்க! நீ நல்லா படிச்சாத்தான் உனக்கு சாப்பாடு என்று கண்டித்ததாக அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவர் என்னிடம் சொன்னார். எப்படி ஆர்வம் ஊட்டுகிறார்கள் பாருங்கள் என்று அவர் ஆச்சரியப்பட்டார். ஆச்சரியப்படத்தகுந்த அந்த ஆர்வம் தான் இப்பொது நமக்கு தேவைப்படுவது. புடிப்பு ஒன்று தான் தங்களை மேம்படுத்த முடியும் என்ற அந்த தீவிரச்சிந்தனை முஸ்லிம் சமுதாயத்திற்கு வர வேண்டும். முஸ்லிம் மாணவர்களுக்கு அந்த உணர்வு ஊட்டப்பட பட வேண்டும்.நம்முயை வழிகாட்டி அருமைப் பெருமானார்(ஸல்) அவர்கள் கல்விப்பயணத்தை சொர்க்கத்திற்கான பயனம் என்று சிறப்பித்துச் சொல்லியுள்ளார்கள். கல்லிவயை தேடிய பாதையில் நடைபோடுபவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தின் பாதையை இலேசாக்குகிறான் என்று பெருமானார்(ஸல்) அவர்கள் சொன்னார்கள். புதிது புதிதாக அறிவுத்துறைகள் வளர்ச்சியடைகிற போது அதை பாய்ந்துதோடிப் கற்றுக்கொள்ள வேண்டியது முஸ்லிம்களது பொறுப்பு என இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது. ஞானம்மிகுந்த சொற்கள் முஃமினகளிடமிருந்து தவறிப்போன பொருளாகும் அதை காணும் இடத்தில் எடுத்துக் கொள்ள அதிக உரிமை படைத்தவர்கள் அவர்களே! என பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் ( அறிவிப்பாளர் அபூஹுரைரா - நூல் திhமிதி 2611)கல்விக்கு இவ்வளவு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிற சமயத்தின் சொந்தக்காரர்கள் கல்வி பெறுவதில் சுணங்கி நிற்பது எந்தவகையிலும் பொருத்தமாகாகது. மார்க்கத்தின் வழிகாட்டுதலை முறையாகப் பயன்படுத்திய காரணத்தால் தான் நமது முன்னோர்கள் அறிவுத்துறைகள் அத்தனையிலும் உலகிற்கு ஆசிரியர்களாக இருந்தார்கள். வானியல் தொடங்கி வரலாறு வரைக்கும் அனைத்து துறைகளிலும் முன்னோடிகள் மூல ஆசிரியர்களாகவும் திகழ்ந்தார்கள். அவர்களது கண்டுபிடிப்புகளே இன்iறைய நாகரீக உலகத்திற்கு அடித்தளமிட்டது என்பது கலப்படமற்ற உண்மையாகும். இன்று வாழ்கிற முஸ்லிம் மாணவச் சமுதாயம் தனது முன்னோடிகளை நினைவில் நிறுத்திக் கொண்டு நாம் எத்தகைய உயர்ந்த பாரம்பரியத்தின சொந்தக்காரர்கள் என்ற பெருமிதத்தோடு நாளைய எதிர்காலததிற்கான உயர்ந்த இலட்சியங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும்;. அதை உருவாக்கும் முயற்சியில் பெற்றோர்கள் ஈடுபட வேண்டும்.பள்ளிக் கூடத்திற்கு பிள்ளைகளை அனுப்பும் போது ஏதோ நான்கு எழுத்து படித்துவிட்டு வரட்டும் என்ற அலட்சிய பாவத்தில் பெற்றோர்கள் பிள்ளைகளை அனுப்பக் கூடாது. ஒரு கட்டிடத்திற்கான அடித்தளத்தை அமைக்கும அக்கறையை அதில் காட்டவேண்டும். பிள்ளைகளை அவர்களது தகுதிக்கு மீறி சிரமப்படுத்தக் கூடாது என்கிற அதே நேரத்தில் கல்வித் தகுதியை வளர்த்துக் கொண்டால் மட்டுமே உலகில் சிறக்க முடியும் என்ற மனோபவாத்தை நமது சிறுவர்களிடம் பதிக்க வேண்டும்.முஸ்லிம் ஜமாத்ததுக்கள் தங்களது மஹல்லாவிற்குட்பட்ட மக்களில் கல்வி இடை முறிவு ஏற்படாதவாறு பாhத்துக்கொள்வது இன்றைய சூழ்நிலையில் சமுதாயத்திற்கு செய்கிற பேருதுவியாக இருககும். அதே போல வசதிவாய்பபு படைத்தவர்கள் ஒவ்வொரு வரும் தமது குடும்பத்தில் அத்தகைய இடை முறிப்புகள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வது காலம் கருதிச் செய்த சிறந்த தர்மமாக அமையும். அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நட்டல் அன்னயாவினும் புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல் எனும் செய்யுளுக் கேற்பச் செயல்படுவது இன்றைய சூழலில் பொருத்தமானது. பள்ளிவாசல் ஜமாத்துகள் மக்தப் மதரஸாக்களுடன் சேர்த்து ஆங்கிலம் ஆறிவியல் ஆகிய இரு பாடப்பிரிவுகளுக்கு டுயூசன் ஏற்பாடு செய்வது அடுதத தலைமுறைக்கு மிகப் பயனள்ளதாக இருக்கும். மாநகராட்சி பள்ளிகளில் மட்டுமே படிக்க முடிந்த மாணவர்களை கைதூக்கி விடுவதாக அமையும். இப்போது சுறுசுறுப்பாக வியாபாரம் செய்துகொண்டிருக்கிற இளைஞர்கள் பலர் கொஞ்சமாவது ஆங்கிலம் படித்திருந்தால் இன்னும் சிறப்பாக முன்னேறியிருக்கலாமே என்று ஆதங்கப்படுவதை அனுபவத்தில் பார்க்கிறோம். தலைவராவதற்கு முன்னால் கற்றுக்கொள்ளுங்கள் (த அல்லமூ கப்ல அன் தஸவ்வதூ) என்ற ஹஜ்ரத் உமர் (ரல) அவர்களின் எச்சரிக்கையை (புகாரீ) நாம் மறந்து விட்டது அந்தச் சமயங்களில் நினைவுக்கு வருகிறது.பெண்களுக்கு உயர்கல்வி கற்பிப்பதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் கிடையாது. அவர்களையும் உயர் கல்வி பெற வைப்பது மிக அத்தியாவசியமான ஒரு தேவையபகும்.கல்வி யறிவு பெறுவதில் பெண்களை தடை செய்வது குழந்தைகளுக்கிடையே போதம் பாராட்டுகிற பாவமான காரியமாகும். அவ்வாறு பேதம் பாராட்டுலதை மார்க்கம் தடை செய்துள்ளது என்பதை பெற்றோர்கள் கவனித்தில் கொள்ள வேண்டும். இப்போதுள்ள சூழலில் திருமணத்திற்கு பெண்பார்க்கும் போது படித்த பெண்கள் வேண்டும் என்று கேட்கப்படுகிறது. வேலைக்கு செல்லத் தேவையில்லை என்றாலும் தாம் பெற்ற குழந்தகளுக்கு டியூசன் சொல்லிக் கொடுப்பதற்காகவேனும் பெண்கள் படித்திருக்கிற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் இன்னொரு முக்கிய விசயமுமு; கவனிக்கத்தக்கதாகும்.நமது மாணவர்களுக்கு சலுகைகளை காட்டி நம்பிக்கைகயூட்டுவதை விட அவர்கள் பொதுவில் போட்டி போடத்தக்க முயற்சியயை மேற்கொள்ள ஊக்கம் தருவதும் உற்சாகப்படுத்த வேண்டும் கல்வித்துறையிலும் வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்பது நமது உரிமைக் கோரிக்கையாக இருக்கலாம் ஆனால் பொதுவில் போட்டி போடத் தேவையான அளவு நமது மாணவர்களின் கல்வித்தறனை வளர்ச்சியயடைய வைப்பது தான் நமது சரியான வெற்றியை உறுதி செய்யும்.பள்ளிக் கூடங்களின் திறப்பை செர்க்கவாசலின் திறப்பாக கருத வேண்டிய கடமை முஸ்லிம்களுடையது. அது அவர்களுடைய மறுமை பேற்றை மட்டுமல்ல இம்மைப் பேற்றையும் வளப்படுத்தும். கல்வித்துறையில் காட்டுகிற ஈடபாடுதான் நாளைய நமது எதிர்காலத்தின் மரியாதையை திர்;மாணிக்கப்போகிறது.

எம் தந்தையர் ..

கவிக்கோ அப்துல் ரகுமான் அமெரிக்காவுக்கு போய்விட்டு வந்த பிறகு தனக்கு அதிhச்சியளித்த ஒரு அனுபவத்தை சொன்னார்: ஒரு தமிழ் இலக்கிய சொற்பொழிவுக்கு அவரை அழைத்திருக்கிறார்கள். அந்த அரங்கிற்;குப் போன போது அது ஒரு சர்ச்சின் தோற்றத்தில் இருந்திருக்கிறது. இது என்ன கட்டடம் என்று கேட்டிருக்கிறார். முன்னாள் சர்ச்சாக இருந்தது இப்போது அதை வாடகைக்கு விடுகிறார்கள் என்று பதில் கிடைத்திருக்கிறது. இன்னொரு முறை ஒரு கோயிலில் நிகழ்ச்சிக்கு அழைத்திருக்கிறார்கள் அங்கு போனபோது அதுவும் ஒரு சர்ச்சினுடைய தோற்றத்தில் இருந்திருக்கிறது. சர்ச்சிலேயே கோயிலா என வியந்து கேட்டிருக்கிறார் ஆமாம் சர்ச்சை விலைக்கு விற்றார்கள் நாங்கள் வாங்கி அதை கோயிலாக மாற்றி விட்டோம் என்று அங்குள்ளவர்கள் கூறியிருக்கிறார்கள். சர்ச்சுகளுக்கு வருவோர் இல்லாத காரணத்தால் நிறைய சர்ச்சுகள் வாடகைக்கு விடப்படவும் விற்பனை செய்யப்படவுமான ஒரு சூழ்நிலை அஙகு நிலவுவதாக அவர் குறிப்ப்ட்டார். புதிய அறிவியல் தத்துவங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போது கிருத்து மதகுருமார்கள் மதத்தின பெயரால் அவற்றை நிராகரித்தார்கள்;. விஞ்ஞானிகளுக்கு தண்டனை கூறி தீர்ப்பளித்தார்கள். கிருத்துவ திருச்சபைகள் தாங்களாக ஏற்படுத்திக் கொண்ட கருத்துக்களுக்காக அறிவியவோடு முரண்பட்டதனால் தான் இப்படி ஒரு நிலமை ஏற்படடது என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆரம்ப காலத்தில் சூரியன் பூமியை சுற்றிவருகிறது என்ற தாலமியின் கருத்துக்ககளையே உலக மக்கள் நம்பிக்கொண்டிருந்தனர். கோபர் நிகஸ் (1473 - 1543) என்ற வான் ஆய்வாளர் முதன் முதலாக இதை மறுத்து பூமிதான் சூரியனை சுற்றி வருகிறது. அது மட்டுமல்ல பூமியும் சுழன்று கொண்டிருக்கிறது என்ற கருத்தை ழn வாந சநஎநடயவழைn ழக வாந hநயஎநடெல டிழனநைள என்ற தலைப்பில் ஒரு நூலாக எழுதினார். திருச்சபை அதை எதிர்த்தது. தேவ குமாரனான இயேசு பிறந்த இடம் தான் உலகின் மையப்புள்ளியாக இருக்க முடியும் சூரியனும் மற்ற கோள்களும் பூமியை சுற்றி வருவதுதான் பொருத்தமானது பூமி இன்னொன்றை சுற்றுவதாக கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர்கள் மறுத்தார்கள். அது மட்டுமல்ல பூமக்கு மேலே சொர்க்கம் இருப்பதாகவும் பூமிக்கு கீழே நரகம் இருப்பதாகவும் சொர்க்கத்தில் தான் நட்சத்திரங்கள் பதிக்கப் பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறிவந்திருந்தனர். கோபர் நிகஸின்; தத்துவம் அதற்கு முரண்படவே புதிய அறிவியல் கண்டுபிடிப்பை அவர்கள் நிராகரித்தனர். அதனால் அந்தப் புத்தகம் வெளியிடப்படவில்லை. வான் ஆய்வாளர் கலீலீயோ இன்னும் சில ஆய்வுகளின் அடிப்படையில் அந்தத்தத்துவத்தை திரும்பக் கூறிய போது அவருக்கு திருச்சபை மரண தண்டனை விதித்தது. ஒரு உண்மையை சொன்னதற்காக ஏன் உயிரை விட வேண்டும் என்ற சிந்தனையில் அப்போது கலீலியோ மன்னிப்கேட்டு தப்பித்தார்.நீ வேதனையில் குழந்தையை பெற்றெடுப்பாய் என்ற பைபளின் வாசகத்தை மேற்கோள் காட்டி பிரசவ சமயத்தில் வலியை குறைக்க மருந்து தருவதற்கு திருச்சபை எதிர்ப்பு தெரிவித்தது. அறுவை சிகிட்சை முறை அமல்படுத்தப்பட்ட போது அதையும் திருச்சபை எதிர்த்தது.இவ்வாறு திருச்சபை அறிவியலுக்கு முரண்படும்போது ஆரம்பத்தில் திருச்சபையின் கருத்துக்களுக்கு கட்டுப்பட்டிருந்த மக்கள் விஞ்ஞான ஆய்வுகள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க்படட்ட சூழ்நிலையில் மதத்தை ஒதுக்கி வைத்து விட்டு விஞ்ஞானத்தின் வாசலை சரனனடைந்தனர். அதன் பிறகு அறிவியலே அங்கு மதமாகிவிட்டது. சமயம் என்பது வெறும் அடையாளமாகிப் போனது. சமயத்தின் தீவிரப் பற்றாளர் கூட அறிவியலுக்கு அடுத்தபடியாகததான் மத நம்பிக்கைகக்கு இடமளிக்கிறார். சற்று அழுத்தமாக சொல்வதானால் ஐரோப்பாவில் ஏற்பட்ட நவீன அறிவியல் வளர்ச்சி என்பது என்பது நடைமுறையில் இருந்த கிருத்துவத்தை உடைத்த பின்னரே தலை நிமிர்ந்தது.இந்த விபத்து முஸ்லிம்களில் ஏற்படவில்லை. காரணம் முஸ்லிம்கள் இஸ்லாத்தின வழியாகவே அறிவியலைப் பெற்றனர். இஸ்லாமும் முஸ்லிம் அறிஞர்;களும் விஞ்ஞானத்தின் வரவேற்பாளர்களாக இருந்தார்களே அன்றி எதிர்பார்ப்பாளர்களாக இருக்க வில்லை. ராஜி போன்ற பல முஸ்லிம் சமய அறிஞர்களே விஞ்ஞானிகளாகவும் திகழ்ந்தார்கள். முஸ்லிம்களின் வேதமே புதிய கண்டுபிடிப்புகளுக்கான வாசலை திறந்து விட்டது. சமயங்களும் வேதங்களும் பொதுவாக நம்பிக்கையை பற்றியும் இறைவழி பாட்டை பற்றியுமே பேசுபவை என்றால் இஸ்லாமும் திருக்குர்ஆனும் அதிலிருந்து வேறுபட்டு மனிதனை சிந்திக்கவும் ஆய்வு செய்யவும் தூண்டின. அதற்கு காரணம் இருந்தது. ஏனெனில் சரியான சிந்தனை தான் மனிதனுக்கு தெளிவான உறுதியான பகத்தயை தர முடியும் என்று இஸ்லாம் கருதகிறது. அண்டங்களை ஆராய்ச்சி செய்து முதிர்ந்து தெளிந்த ஒருவர் இவை அத்தனைக்கும் பிறகு இவற்றை ஒழுங்காக அமைத்த ஒரு இறைவன் இருக்கிறான் என்று முடிவுக்கு வருகிற போது அவரது இறை நம்பிகை;ககை வலுவானதாகவும் தெளிவானதாகவும் இருக்கும். அவருடய பணிதல் அர்த்தமுள்ளதாகவும் அழுத்தமானதாகவும் இருக்கும். இத்தைகயை பணிதலையும் இத்தகைய கட்டுப்பாட்டையுமே இஸ்லாம் எதிர்பார்க்கிறது. இஸ்லாத்தின் இந்த எண்ண ஓட்டத்தை திருக்குர்ஆpன் 3:191 வசனம் புலப்படுத்துகிறது. வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்திக்கும் அவர்கள் ''எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை, நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!'' என்று கூறுவர். (3:191)இறைவனை வழிபடுவதோ இறை மார்க்கத்தை பின்பற்றுவதோ எந்த யோசனையும் இன்றி கன்மூடித்தனமாக நடைபெறுவதை இஸ்லாம் விரும்பவில்லை. திருக்குர் ஆன் கூறுகிறது. அவர்களிடம் இறைவனுடைய வசனங்கள் கூறப்பட்டால்;, செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவி சாய்ப்பர்கள்.) 25:73 எனவே சகலத்தையும் பற்றி சிநத்திக்க குர்ஆன் உத்தரவிட்டது. வானம் பூமி இரவு பகல் ஒட்டகம் மலை மணற்பரப்பு கடல் கப்பல் காற்று என அரபியாரின் வாழ்வுக்கு மிக நெருக்கமான அனைத்து விசயங்களையும் எடத்துக் கூறி அவை பற்றிச் சிந்திக்குமாறு இறைவன் உத்தரவிட்டான். அதன் பயனாக அறிவுலகத்திலிருந்து வெகுதூரம் விலகி இருந்த அரபுகள் சிந்திக்கவும் ஆய்வு செய்யவும் ஆரம்பித்தார்கள். இறை நம்பிக்கையில் தெளிவும் உறுதியும் பெற்றார்கள். நிறைய புதிய விசயங்களை கண்டு பிடித்தார்கள். நல்ல அறிவுக்கு கருத்துக்கள் உலகில் எங்கு கிடைத்த போதும் அதை தங்கள் இடத்திற்கு கொண்டு தங்களது மொழியில் அதற்கு உருக்கொடுத்தார்கள். அதில் தங்களுடைய பங்களிப்பை இணைத்து அவர்கள் கடந்து சென்ற உலகுக்கெல்லாம் அவற்றை காணிக்கையாக வழங்கினார்கள். திருக்குர்ஆனின் வெளிச்சப்பாதையில் நடைபோட்ட முஸ்லிம் சமுதாயம் அறிவுலகில் சுடர்விட்டு பிரகாசித்தது. நவீன உலகை கட்டமைத்த சிற்பிகள் முஸ்லிம்களின் முன்னோர்கள். அவர்களின் அறிவுக் கொடைகளின் விளைவாகவே உலகம் வெளிச்சம் பெற்றது. அன்றை விஞ்ஞானத்தின் அத்துனை துறைகளிலும் அவர்களே உலகின் ஞான ஆசியரிர்களாக திகழ்ந்தார்கள். இன்றைய இளைய சமுதாயம் முஸ்லிம் முன்னோடிகளின் அரிய சாதனைகளை கேள்விப்படுகிற போது அது அவர்களுக்கு கற்பனையோ என்று தோன்றலாம். ஆனால் அவை கலப்படமற்ற சத்தியங்கள். சுpறந்த கல்வியை தேடுவோர் இன்று வேண்டுமானால் ஆஸ்திரேலியாவுக்கும் அமெரிக்காவிற்கும் படைஎடுக்கலாம். ஒரு காலம் இருந்தது. சிறந்த கல்வி வேண்டும் என்போர் முஸ்லிம்களின் பக்தாதுக்கும் கார்டோவாவுக்கும் தான் பயணம் சென்றார்கள். அங்கு தான் அவர்கள் நிபுணர்களாக முடியும் என்ற நிலமை இருந்தது. இன்று ஐரோப்பாவும் அங்குள்ள கிருத்துவர்களும் மருத்துவத்துறையில் கொடிகட்டிப்பறக்கிறார்கள். ஒரு காலம் இருந்தது. அப்பொது ஐரோப்பிய கிருத்துவர்கள் மருத்துவம் படிப்பபதையும் மருத்தவம் பார்ப்பதையும் கடவுளோடு போட்டியிடும் செயலாக கருதி அதை வெறுத்தார்கள். யயெவழஅல உடலியல் ஆய்வு இழிவானதாக கருதப்பட்டது. அப்போது பெரும்பாலும் யூதர்களே ஐரோப்பாவின் மருத்துவர்களாக இருந்தார்கள். அவர்களில் அதிகமானோர் முஸ்லிம்களின் மருத்துவ்கல்லூரிகளில் கல்வி பயின்றவர்களே! இங்கிலாந்து மன்னர் முதலாம் ஹென்றின் தனி மருத்துவராக இருந்த புட்ரஸ் அல் போன்ஸி ஸ்பொயின் முஸ்லிம்களிடம் மருத்துவம் பயின்றவராவார். அவிசென்னா என்று மருவிப்போன அலி பின் சீனா தான் மருத்துவ உலகின் பிதாமகராக கரதப்படுகிறார். ஆவர் எழுதிய அல் கானூன் பித் திப்பு என்று நூல் 15 ம் நூற்றாண்டிலேடீய 16 பதிப்புகள் வெளியிடப்பட்டடிருக்கிறது. வைசூரி மற்றும் தட்டம்மை நோய் பற்றி ஆராய்ந்து முதலில் நூல் எழுதியவர் அர் ராஜி ஆவர். அவர் எழுதிய அல் ஜுத்ரி வர் ஹஸ்பா என்ற அரபு நூல்தான் இந்நோய் பற்றி எழுதப்பட்ட முதல் ஆய்வு நூல் என்று வரலாற்று ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.1565 ஆண்டு இந்நூல் வெனிஸ் நகரில் லத்தீன மொழியில் மொழிபெயர்க்கப்ட்ட பிறகு இந்நூல் ஐரோப்பா மழுவதும் பரவியுள்ளது. இந்நூலை படித்த பிறகுதான் எட்வெர்ட் ஜென்னர் அம்மைக் கான தடுப்பூசியை அம்மை குத்துததலை பற்றி ஆய்வு செய்தார் என வரலாறு சொல்கிறது. இந்நோய்களை கடவுளின் சாபம் என்று ஐரோப்பா கருதிய காலகட்டத்தில் எந்த ஒரு நோயுக்கும் மருந்துண்டு; என்ற பெருமானார்(ஸல்) அவர்களின் பொன் மொழி (முஸ்லிம் 4084) இமாம் ராஜியை இது பற்றி ஆராயத்தூண்டியது.சிறந்த மருத்துவம் வேண்டும் என்போர் நாடிச் செல்லும் நகராக அன்றைய பக்தாத் திகழ்ந்தது. பீமாரிஸ்தான் என்ற பெயரில் நூற்றுக்கணக்காகன படுக்கை வசிதி கொண்ட மருத்துவமனைகள் 10 ம்நூற்றாண்டில் பக்தாதில் அமைந்திருந்திருந்தன. அப்பாஸிய கலீபா அல் முக்ததரிர் மருத்தர்களுக்கு சான்றளிக்கும் நடைமுறையை துவங்கினார். அரசாங்கம் வழங்கும் தரச்சான்றிதழ் பெற்ற மருத்துவர்கள் மட்டுடே மருத்துவம் பார்க்க அனுமதிக்பபடுவர் என்று அவர் உத்தரவிட்டார். அந்த உத்தரவின் விளைவாக 860 மருத்துவர்களுக்கு மட்டுமே மருத்துவம் பார்க்க அனுமதிக்கப்பட்டது. இதனால் உலகில் போலி மருத்துவர்கள் இல்லாத முதல் நகரமாக பக்தாது நகரம் விளங்கியது என்று வரலாற்று போற்றுகிறது. இன்றைய கால கட்டத்தில் மருத்துவர்கள் அரசிதழ் பதிவு பெற்றவர் அதிகாரியாக (கெஸட்ட் ஆபீஸர்) கருதப்படுகிறார். இந்த நடைமுறையை உலகிற்கு அறிமகப்படுத்தியவர் முஸ்லிம் மன்னர் கலீபா அல்முகததரி;தான் எனபதை வரலாறு தனது ஞாபகத்தில் பதித்து வைத்திருக்கிறது. நுஒpநசiஅநவெயட அநவாழன எனப்படும் ஆய்வு நடைமுறையை ஐரொப்பாவில் அறிமுகப்படுத்தியவர் ரோஜர் பேகன் (சுழபநச டியஉழn ). இவர் முஸ்லிம்களின் ஸ்பெயினில் கல்வி கற்றுவிட்டு வந்தவராவார்.12 ம் நூற்றாண்டிலேயே உலக வரை படத்தை (வோர்ல்டு மேப்) தயாரித்துக் கொடுத்தார் அல் இத்ரீஸ் என்ற முஸ்லிம் ஆய்வாளர். கெமிஸ்ட்ரீ (வேதியில்) துறையின் தந்தையாக ஜாபிர் பின் ஹய்யான் போற்றப்படுக்pறார்.15 நூற்றாண்டு வரை அவருடைய நூற்கள் தான் ஐரோப்பாவில் வேதியில் துறையின் இறுதிச்சான்றுகளாக கருதப்பட்டன. உலகம் முழவதிலும் எண்கள் (நம்பர்களை) எழுதுகிற போது 123 என்று எழுதும் வழக்கம் தான் வழக்கத்தில் இருக்கிறது. மற்ற நடைமுறைகள் அனைத்து சற்றேறரக்குறைய ஒழிந்து விட்டன அல்லது அழிந்து விட்டன என்று சொல்லலாம். காரணம் மற்றவை அனைத்தும் கிரமமானதாக இருந்தன. ஐரோப்பிய சமுதயம் ரோம எண்களை பயன்படுத்தி வந்தது. அதை புனிதமானது என்று கூட கருதினார்கள். அனால் அதில் பெரிய எண்களை எழுதவது சிரமமானது. எண்பத்தி எட்டு என்று எழதவதற்கு டுஓஓஓ ஏஐஐ என்று ஏழு எழுத்துக்களை எழுத வேண்டும். 123 என்ற எண்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு உலககம் நிம்மதிப் பெருகூச்சு விட்டது. இன்று நாம் பயன்படுத்துகிற 123 என்ற எண்களுக்கு முழுவடிவம் கொடுத்தவர்கள் முஸ்லிம்கள் தான் என்று நம்பிள்ளைகளுக்கு நாம் சொன்னால் அவர்கள் ஆச்சரியத்தில் வாயை பிளப்பார்கள். தமிழ் நாட்டில் விற்பனையாகிற ஒரு அரிச்சுவடிப் புத்தகத்தை வாங்கி எண்கள் என்ற பாடத்தை எடுத்து 123 என்ற எண் வடிவங்களுக்கு மேலே பார்த்தீர்கள் என்றால் அவை அரபி என்ககள் என்று அடையாளம் இடப்பட்டிருப்பதை காணலாம். ஐரோப்பியர்களும் இந்த எண்களை அரபி என்கள் என்றே குறிப்பிட்டார்கள்.ஆனால் புழைய இஸ்லாமிய அரபி நூல்களில் இந்த எண்களை இந்திய எண்கள் என்று குறிப்பிட்டிருப்பார்கள். உண்மையில் இந்த எண்களில் 1 முதல் 9 முடிய உள்ள எணகள் இந்திய எண்களே! இந்தியர்களிடம் 9 வரை தான் நம்பர் இருந்தது. அதனால் அது முழமை பெறாமல் இருந்தது. இரு நூறு என்று சொல்வதற்கு 2 நூறு என்று தான எழுத வேண்டியிருந்தது. இந்த நம்பர்களை ஆங்வு செய்த அபு மூஸா அல்குவாரிஜ்மி (780 - 850)என்ற முஸ்லிம் கணிதவியலாளர்தர்ன் இனறைய வழக்த்திலள்ள சைபர் நடைமுறையை பயன்படுத்தி எண்களை இலகுவாக கையாள முடியும் என்று உணர்த்தினார். இது போல இன்னும் ஏராளமான தகவல்கள் முஸ்லிம்கள் அறிவுலகத்தின் அரசர்களாக வாழ்ந்த வரலாற்றை சொல்லிக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்கள் அறிவியல் துறைகளில் மிகப்பெரும் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருந்த இந்தக் கால கட்டத்தில் ஐரோப்பா அறிவியல் ஒளியற்ற இரண்ட கண்டமாக இருந்தது என பிரிட்டானிய கலைக்களஞ்சியம் ஒப்புதல் வாக்குமூலம் தருகிறது. ஐரோப்பிய வரலாற்றில் கி.பி 6 ம் நூற்றாண்டுக்கும் 10 ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம் இருண்ட காலம் என்றழைக்கப்படுகறிது. ஐரொப்பாவில் வன்முறை நிறைந்து அறிவொளி இருண்டுகிடந்த காலம் அது. (; பிரிட்டன் என்ஸைக்ளோபீடியா1984)இருண்டு கிடந்த ஐரோப்பாவிற்கு மட்டுமுல்ல அன்றை முழு உலகிற்கும் முஸ்லிம்களே விஞ்ஞானத்தினுடையவும் நாகரீகத்தினுஐடயவுமான கொடைகளை வாரிவழங்கிக் கொண்டிருந்தார்கள். காலச் சுழற்சியின்; எந்தக் கொடும்; புயலில் அந்த பழம் பெருமை சரிந்தததோ தெரியாது. முஸ்லிம் சமுதாயம் அறிவீனத்தின் பள்ளத்தில் விழுந்து இழிவுச் கதியை சாந்து பூசிக் கொண்டு விட்டது. இதற்கு கீழ் இன்னுமு; விழுவதற்கு பள்ளமில்லை எனும் அளவு வீழ்ந்து பட்ட பிறகு எழுந்தாக வேண்டிய நிர்பந்தத்திற்கு முஸ்லிம் சமுதாயம் ஆளிகியிருக்கிறது. எந்த ஊண்று கோல்களின் துணையுமில்லாமல் தட்டுமடுமாறு அது எழ முயற்சி செய்யும் போது முன்னோர்கள் வாழ்ந்த பொற்காலத்தை பற்றிய கனவு, எம் தந்தையைர்..அவர்கள் என்ற உணர்வு அதன் மூச்சுக்காற்றில் சக்தியை ஏற்றட்டும். முஸ்லிம்களிடம் ஆர்வத்தை உண்ட பன்னுவதற்காக முன்னோர்களின் வரலாறுகளை சொல்வது பெருமானார் (ஸல்) அவர்களுடைய பழக்கம். யூதர்களில் ஒருவர் ஆயிரம் மாதங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருந்தார் என்ற செய்தியை பெருமானார்(ஸல்) அவர்கள் சொன்ன போது அன்னாருடைய தோழர்கள் அது கேட்டு ஆச்சரியமும் ஆதங்ககமும் கொண்டனர். நாமும் அப்படி ஆக வேண்டுமே என்ற ஆர்வம் கொண்டனர். அப்போது தான் அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக ரமலானில் ஒரு இரவை கத்ருடைய இரவாக ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்த இரவாக முஸ்லிம்க்கு வழங்கினான் என்பது இஸ்லாமிய வரலாறு. முன்னோர்களின் சிறப்பான வாழ்வு முறைகளை ப்பற்றி கேள்விப்படும் போது அந்தப் பெருமையில் கரைந்து போய் விடாமல் அதிலிருந்து ஊக்கமும் உற்சாகமும் பெற்று உயிர்தெழ வேண்டிய கடமை முஸ்லிம் சமூகத்தினுடையது. ஏழ்மை என்பது பரிதாபத்திற்குரியதல்ல . ஒரு பணக்கார வம்சத்தின் வாரிசு ஏழையாக வாழ நேரிட்டால் அது பரிதாபத்திற்குரியது. ஓரு விவசாயக் கூலித் தொழிலாளியின் மகன் கல்வியறிவற்றவராக இருப்பது சகித்துக் கொள்ளத்தக்கது தான் . ஆறிவாளிகளின் குடும்பத்தில் ஒருவர் அல்லது வாத்தியார் வீட்டுப் பிள்ளை படிப்பறிவற்றவராக இருப்பது அதிகம் கேலிக்குரியது.இத்தகைய பரிதாபத்திற்கும் கேலிக்கும் இன்று ஆளாகியிருக்கிற இன்றுள்ள முஸ்லிம் சமுதாயம் அறிவியலின் தளத்தில் தனது பலத்தை பெருக்கிக் கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் மிகுந்த மரியாதைக்குரியது. ஆறிவியலின் புதிய கண்டு பிடிப்புகளை மாhக்கம் கற்றுத் தந்திரக்கிற அளவீடுகளின் சரியான அடிப்படையில் அணுகி அவற்றை உபயோகிக்கவும் பயன்படுத்தவும் சமுதாயம் அக்கறை செலுத்த வேண்டும். கம்ப்யூட்;ரினால் கிடைக்கிற நன்மைகள் ஏராளமாக இருக்கிற போது அதை டிவி பொட்டி என்று கருதி நிராகரிக்கிற மூர்க்கத்தனத்திலிருந்து விடுபட வேண்டும். ஏதேனும் ஒரு துறையில் ஒரு முஸ்லிம் நிபணரவாவது இன்றைய சூழ்நிலையில் அவரக்கு மட்டுமே பெருமை சேர்ப்பதாக இல்லாமல் சமுதயத்திற்கும் மரியதை பெற்றுதருவதாகவும் அமையும். நூறு பணக்காரர்களை விட நூறு செல்வாக்கு பெற்ற தலைவர்களைவிட ஒரு சிந்தனையாளர் ஒரு விஞ்ஞானி சமுதாயத்திற்கு அதிகம் முக்கியமானவராவார். கிரேக்க நாடு எத்தனையோ அரசர்களை பார்த்திருக்கலாம். எத்தனையோ செல்வந்தர்களைப் பார்த்திருக்கலாம். ஒரு சாக்ரடீஸ் தான் வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது கவனித்தில் கொள்ளத்தக்க செய்தியாகும். எனவே சமுதயத்தில் பணக்காரர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் தரப்படுகிற மரியாதை படித்தவர்களுக்கும் சிந்தனையாளர்களுக்கும் தரப்பட வேண்டும்.ஆறிவியல் துறைகளிலும் ஆய்வுகளிலும் ஈடுபடுவோருக்கு ஆக்கமும் ஊக்கமும் வழங்கப்பட வேண்டும். அதே சமயத்தில் அறிவியலின் புதிய வெளிப்பாடுகள் அத்தனையும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ள முடியாது. எதை எடுப்பது எதை விடுவது என்பதில் மார்க்கத்தின் வழிகாட்டுதல்கள் தெளிவாகவே இருக்கின்றன. சில விசயங்களை தீர்மாணிப்பதில் தாமதம் ஏற்படலாம் எனினும் முடிவு தெளிவானதாகவும் உலக சமுதாயத்திற்கு வழிகாட்டக் கூடியதாகவும் அமையும் என்பதை சமுதாயம் கருத்தில் கொள்ள வேண்டும்.அறிவியல் என்பது அல்லாஹ்வை அறிந்து கொள்ளும் வழி நம் விழிகளுக்கு வெளிச்சத்தை தரட்டும்.

இஸ்லாமும் (இந்திய) சுதந்திரமும்

பிரிட்டிஷ் பேரரசில் சூரியன் அஸ்தமிப்பதில்லை என்றார் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சார்ச்சில். 20 ம் நூற்றாண்டின் மத்தியில் ஐரோப்பாவின் அந்த பிர்அவனிய உதடுகள் உதிர்த்த இந்த வார்த்தைகள் வரலாற்றில் இடம் பிடித்து விட்டன என்றாலும் அந்த வார்ததைகள் நிலைத்த அளவு அதிலுள்ள உண்மை நிலைக்க வில்லை. நூற்றுக்கணக்கான உலக நாடுகள் ஆங்கிலேயரிடம் அடிமைப் பட்டுக்கிடந்தன. உலகின் அத்தனை கண்டத்திலும் தன்னுடைய கலனிகனை உருவாக்கி ஏதோச்சதிகாரம் செலுத்திக் கொண்டிருந்தது பரிட்டன் அரசாங்கம். காலனி நாடுகளிலுள்ள வளங்களை சுரண்டி அங்கிருந்த மக்களை கசக்கிப் பிழிந்து கொண்டிருந்த கிரேட் பரிட்டனின் சூரியன் அஸ்தமிக்காத அரசாட்சிக்கு இந்தியா முதல் அபாயச் சங்கு ஊதியது. இந்தியாவில் நடைபெற்ற விடுதலைப் பேராட்டங்கள் இந்தியவின் விடுதலைக்கும் அதை தொடர்ந்து மற்ற காலனிகள் விடுதலையாவதற்கும் காரணமாக அமைந்தன. தேசத்தின் சுயமரியாதையை மீட்டெடுக்கிற சுதந்திரப் பொரில் முஸ்லிம்களில் பெருமளவில் வீரத்தோடும் தீரத் தோடும் ஈடுபட்டனர். இந்த தேசத்தில் வாழ்ந்த வேறு எந்த சமூகத்திற்கும் சளைக்காத வகையில் முஸ்லிம்கள் விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தார்கள் என்பதும் அந்த பேராட்டதில் சகல விதமான அர்ப்பணிப்புகளையும் அவர்கள் மனமுவந்து செய்தார்கள் என்பதும் மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மைகளாகும். சற்று அழுத்தமாக சொல்வதானால் விடுதலைப் போராட்டத்தின் உணர்ச்சி மிகு வரலாற்றில் முஸ்லிம்களிடம் இருப்பது போன்ற பெறுமைக்கரிய செய்திகள் மற்ற சமூகத்தாரிடம் இல்லை எனலாம்.மொத்த சமுதாயமும் விடுதலைப் போராட்டதில் வெகு தீவிரமாக ஈடுபட்டதால் இரண்டு தலைமுறைக்கான எதிர்காலத்தை முஸ்லிம்கள் அர்ப்பணிக்க நேர்ந்தது. ஐக்கிய இந்தியாவிலிருந்து பாகிஸ்த்தான் பரிந்து போனதை மட்டுமே காரணமாக காட்டி இந்திய முஸ்லிம்களின் விடுதலைப் போராடடப் பங்களிப்பை குறைத்து மதிப்பிட பலர் முயற்சி செய்கிறார்கள். அது கைகளால் சூரியனை மறைக்க முயல்வது போலாகும்.பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் எழுதுகிறார்:இந்திய விடுதலைக்கு சிறை சென்றவர்களிலும் உயிர் நீத்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிகமாகவே இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப்போரில் மாண்டோர் எண்ணிக்கையின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது. (இல்லஸ்ட்ரேட் வீக்லி. 29.12.1975)நாட்டு விடுதலைக்காக போராடுவது என்பது முஸ்லிம்களைப் பொருத்த வரை தேசப்பற்றாக மட்டும் இல்லாமல் அது சமயத்தின் வழிகாட்டுதலாகவும் இருந்தது. முஸ்லிம்கள் சமயததின் மீது அதிகப் பற்று கொண்டவர்கள் என்பது எல்லூருக்கும் தெரிந்த செய்திதான். தேசப் பற்று என்பதோ சுதந்திர உணர்ச்சி என்பதோ சமயப்ற்றின் ஒரு பகுதியாக இஸ்லாம் கருதுவதால் சுதந்திர மனப்பான்மையும் தேசப்பற்றும் அவர்களிடம் இயற்கையாக உருக்கொண் கொண்டிருந்தது.சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்கள் தீவிரமாக ஈடுபட்டதற்கான காரணங்களை ஆராய்கிற பேச்சாளர்கள் பலரும் முஸ்லிம்கள் தான் ஆங்கிலேயரிடம் ஆட்சியை பறிகொடுத்திருந்தனர் அதனால் இழந்தததை பெருவதற்காக தீரத்தோடு போராடினார்கள் என்று சொல்வது வாடிக்கை. இதை ஒரு சிறு காரணமாக ஏற்றுக் கொள்ளலாமே தவிர இதுவே பிரதான காரணம் அல்ல. வுpடுதலைப் போரில் முஸ்லிம்கள் தீவிரமாக ஈடுபட பிரதான காரணம் இஸ்லாம் ஆகும். ஆம் இஸ்லாமிய மனப்பான்மை தான் அவர்களை விடுதலைப் போருக்கு அதிகம் தூண்டியது. ஆதனால் தான் ராஜீய முஸ்லிம்கள் மட்டுமின்றி சாமான்ய முஸ்லிம்களும் பெருவாhக இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். சுதந்திரப் போராட்ட கால வரலாற்றை நினைவு கூர்கிற பலரும் அதில் முஸ்லிம்களின் பங்களிப்பை பற்றியே அதிகம் பேசுகின்றனர். போரட்ட களத்தில் இஸ்லாம் என்கிற சமயத்தின் பங்களிப்பை அதிகம் கண்டு கொள்வதில்லை. விடுதலைப் போரில் முஸ்லிம்கள் ஆற்றிய பணி என்பதை விட இந்திய விடுதலைப் போரில் இஸ்லாம் ஆற்;றிய பணி பற்றி ஆராய்வது மனித சுதந்திரத்தின் வரலாற்றின் இஸ்லாதின் தாக்கம் எத்தகையது என்பதை புரியவைக்கும். இஸ்லாம் இந்த உலகுக்கு வழங்கிய கொடைகளில் முக்கியமான ஒன்று மக்களுக்கு சுதந்திர மனப்பான்மையை கற்பித்ததாகும். எந்த ஒரு முஸ்லிமும் தன்னை அடக்கி ஆளும் தகுதி இறைவன் ஒருவனுக்கு மட்டுமே உண்டு என்பதை அழுத்தமாக நம்புகிறார். இந்த நம்பிக்கை, இன்னொரு மனிதனுக்கு சட்டரீதியாக அன்றி மற்ற வழிகளில் அடங்கிப் போவதை தடுத்துவிடுகிறது. இதுவே சுதந்திர மனப்பான்மை முஸ்லிம்களிடம் இயற்கையாக எழுவதற்கு காரணமாகிறது. ஒரு முஸ்லிம் முதன்மையாக மொழிகிற லாயிலாக இலாஹ இல்லல்லாஹ் (வணங்கத் தகுந்தவன் அல்லாஹவை தவிர வேறு எவரும் இல்லை) என்ற கலிமா வாசகம்; மனிதன் மனிதனுக்கு தலைவணங்கிச் கிடப்பதை தடை செய்கிறது. அது தனிமனிதனின் சுய மரியதையை மீட்டெடுத்து அவனுக்கு சுதந்திர மனிதனுக்குரிய கம்பீரத்தை வழங்கியது. நபித்தோழர்களில் ஒருவரான பிலால் (ரலி) அவர்கள் ஒரு நீக்ரோ இனத்து அடிமையாக மக்காவில் பல்லாண்டுகள் வாழ்ந்தவராவார். அவர் இஸ்லாமைத் தழுவிய பிறகு ஒரு நாள் அபூதர் (ரலி) என்ற நபித் தோழர் அவரை கருப்பியின் மகனே! என்று ஏசிவிடுகிறார். இந்த வார்த்தைகளால் வேதனை அடைந்த பிலால் (ரலி) அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களிடம் சென்று முறையிட்டார். பெருமானார் (ஸல்) அவர்கள் அபூதர் (ரலி) அவர்களை அழைத்து உங்களிடம் அறியாமைக் காலத்து பழக்கம் இருக்கிறது என்று கடுமையாக கடிந்து கொண்டார்கள். (புகாரி:30)இந்த நிகழ்சியில் ஒரு கருப்பின மனிதரின் கருத்துக்கு பெருமானார்(ஸல்) அவர்கள் மதிப்பளித்தார்கள், அவரது மரியதையை பாதுகாத்தார்கள் என்ற செய்தியை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்த வேறு ஒரு செய்தி இருக்கிறது. பல்லாண்டு காலம் அடிமையாய் ஏச்சுக்கும் பேச்சுக்கும் அடிக்கும் உதைக்கும ஆளாகி, அதை தாங்கிக் கொண்டிருந்த ஹஜ்ரத் பிலால் (ரலி)அவர்கள் இஸ்லாமை தழுவிய பிறகு கருப்பியன் மகனே என்ற வார்த்தைக்கு ஆவேசம் ஆடைந்தார்கள் என்றால் லாயிலாக இல்லல்hஹ் கலிமா வாகசம் அவருக்கு சுதந்திர உணர்வையும் சுய மரியாதையையும் ஊட்டியிருந்தது தான் காரணம் என்பதை கவனிக்க வேண்டும்.அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற போராடுவதும் ஆதிக்க வெறியர்களின் கொட்டத்திற்கு முடிவு கட்டுவதும் நபிமார்களின் வழிமுறையாக இருந்ததது என்பதை திருக்குர் ஆன் சுட்டிக்காட்டுகிறது. இறைத்தூதர் மூஸா (அலை) அவர்கள் எகிப்திய கொடுங்கோல் அரசன் பிர்அவ்னிடம் ஏகத்துவத்தின் செய்தியை மட்டும் எடுத்துச் சொல்ல வில்லை. அவன் கொத்தடிமைகளாக வைத்திருக்கிற சுமார் 6 லட்சம் யூதர்களின் விடுதலைக்hகாக போராடவும் செய்தார்கள்;.திருக்குர்ஆன் கூறுகிறது. ''ஆகவே, (மூஸா - ஹாரூன் ஆகிய) நீங்கள் இருவரும் அவனிடம் சென்று: 'நாங்களிருவரும் உன்னுடைய இறைவனின் தூதர்கள், பனூ இஸ்ராயீல்களை எங்களுடன் அனுப்பி விடு, மேலும் அவர்களை வேதனை படுத்தாதே, நிச்சயமாக, நாங்கள் உன் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை உனக்குக் கொண்டு வந்திருக்கிறோம், எவர் நேர் வழியைப் பின்பற்றுகிறாரோ அவர் மீது (சாந்தி) ஸலாம் உண்டாவதாக' என்று சொல்லுங்கள்'' (என்று அல்லாஹ் கட்டளையிட்டான்). (20:47)நபி தாவூத் (அலை) ஜாலு{த்தின் கொடுங்கோன்மைக்கு முடிவு கட்டினார்கள் எனபதையும் குர்ஆன் குறிப்பிட்டுச் சொல்கிறது. (2.251)விடுதலைப் பாராட்டத்திற்கு தலைமை ஏற்பதும் கொடுங்கோன்மையை எதிர்ப்பதும் நபிமார்கள் எனும் இறைத்தூதர்களின் பணியாக இருந்திருக்கிறது என்பதை இவ்வசனங்கள் சுட்டிக்காட்டகின்றன. அடக்குமறைகளுக்கு எதிரான நபிமார்களின் மரபு வழியான பிரச்சாரத்தின் தொடர்ச்சியாகத்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது கடைசி ஹஜ்ஜின் போது இனம் நிறம் மொழி தேசம் என்ற எந்த அடிப்படையிலும் மனிதனை மனிதன் அடிமைப்படுத்த முடியாது என்ற பிரகடணத்தை வெளியிட்டார்கள். அந்தப் பிரகடணம் தனி மனித சுதந்திரததை இறுதிநாள் வரைக்கும் உறுதிப்படுத்துகிற எஃகுப்பிரகடணமாக அமைந்தது.ஹஜ்ஜுப் பெருநாளுக்கு அடுத்து வந்த அய்யாமுத் தஸ்ரீக் எனப்படும் புனித நாட்களின் ஒரு பொழுதில், மக்களுக்கு உரையாற்றிய பெருமானார் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: மக்களே! உங்களது இறைவன் ஒருவனே! உங்களது தந்தையும் ஒருவரே! ஆரபியர்களுக்கு மற்றவர்களை விட தனிச்சிற்பபு எதுவுமில்லை.அதுபோவே மற்றவர்களுக்கு அரபியரைவிட சிறப்பு எதுவுமில்லை. சிவப்பு நிறமுடையவர்களுக்கு கருப்பர்களை விட எந்தச் சிறப்பும் இல்லை. கருப்பர்களுக்கும் சிவப்பு நிறமுடையவர்களைவிட எந்தச் சிறப்பும் இல்லை. இறையச்சத்தினால் மட்டுமே நீங்கள் சிறப்படைய முடியும். (அஹ்மது: 22391)அரபு மொழி பேசத் தெரியாதவர்களை அஜமி ஊமையன் என்று சொல்லும் அளவுக்கு தமது இனத்தின் மீதும் மொழியின் மீது வெறி கொண்டிருந்த மக்களை பெருந்திரளாக வைத்துக் கொண்டு பெருமானார் (ஸல்) அவர்கள் வெளியிட்ட இந்தப்பிரகடணம் தனி மனித சுதந்திரத்தையும் சமத்தவத்தையும் உரத்து உறுதியாக பறைசாற்றியது. எந்தக் காரணத்தை கொண்டும் மனிதன் மனிதனுக்கு அடிமையாகக் கூடாது என்ற கட்டளையை தந்தது. ஐரோப்பாவில் 1789 ல் நடை பெற்ற பிரஞ்சுப் புரட்சிக்குப் பின்னால் வெளியிடப்பட்ட (னநஉடயசயவழை ழக வாந சiபாவள ழக அயn ) மனித உரிமைப்; பிரகடணத்தை விட இப்பிரகடணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது வே மனித வரலாற்றில் நிலைத்த தாக்கத்தை செலுத்தியத்திய பிரகடணமாகும். பிரஞ்சு புரட்சியின் தொடக்க காலம் சுதந்திரத்தை பாதுகாப்பதாக இருந்தது என்றாலும் அதன் கடைசி முடிவு நெப்பொலியன் என்ற சர்வாதிகாரியின் பிறப்பிலே தான் முடிந்தது. 1789 புரட்சியின் மூலம் 16 லூயியின் மன்னராட்சியை தூக்கி எறிந்த பிரான்ஸ் தேசம் 1804 ம் ஆண்டில் நெப்பொலியனை மன்னராக ஏற்றுக் கொண்டது. இந்தக் காரணத்தினாலேய வரலாற்றாசியர்கள் பலரும் பிரஞ்சுப் புரட்சி முழு வெற்றியடைந்ததாக கருத முடியாது என்று சொல்வதுண்டு.ஆனால் முஹம்மது (ஸல்) அவர்களின் பிரகடணம் இன்று வரை சமூகத்தின் அனைத்து தளத்திலும் செயல்பாட்டில் இருக்கிறது. சுதந்திரம் என்ற உடன் பலரும் பிரஞ்சுப் புரட்சியையையும் அதன் பிரகடனங்களையும் மெச்சிப் பேசுவது பலருடைய வழக்கம். ஆனால் உன்மையில் பிரஞ்சுப் புரட்சிக்கும் அதற்கு முன்னதாக நிகழ்ந்த ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கும் கூட இஸ்லாமும் முஸ்லிம்களும் முக்கிய காரணிகளாக இருந்தார்கள். சிலுவைப் பேர்களின் போது ஐரோப்பிய வீரர்கள் முஸ்லிம்களின் நிலப்பகுதிக்குள் நுழைந்தார்கள். அங்கு பிரபுக்கள் குடியானவர்கள் என்ற பேதமின்றி முஸ்லிம்கள் வாழ்வதை கண்டார்கள். திருச்சபைகளின் ஆதிக்கமோ பிரபுக்களின் அதிகார வெறியாட்டமோ இல்லாத சமத்துவ சமுதாயத்தை அவர்கள் முஸ்லிம்களிடம் கண்டார்கள். இது ஐரோப்பிய வீரர்களின் மனதில் ஒரு மாற்றத்தை உண்டு பண்ணியிருந்தது. தங்கள் ஊருக்கு திரும்பிய அவர்கள் முஸ்லிம்களிடம் காணப்படுவது போன்ற சமத்துவ வாழ்வுக்காக போராடினார்கள். அந்தப் போராட்டத்தின் விளைவே ஐரோப்பிய மறுமலாச்சியாகவும் பிரஞ்சுப் புரட்சியாகவும் வெடித்தது.இந்தியாவில் சுதந்திரப் பொராட்ட காலத்தின் போது 1906 ஆண்டு பாலகங்காதர திலகர் சுதந்திரம் எனது பிறப்புரிமை என்ற கோஷத்தை முன்வைத்தார். அது இந்தியாவிலருந்த மற்றவர்களுக்கு புதிய கோஷமாக இருந்திருக்கலாம். ஆனால் முஸ்லிம்களுக்கு அது புதியதல்ல. கி.பி. 7 ம் நூற்றாண்டிலேயே ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் உலகுக்கு சுதந்திரம் மக்களது பிறப்புரிமை என்ற கருத்தை முன்வைத்து விட்டார்கள்.ஹஜ்ரத் (உமர்) அவர்கள் காலத்தில் எகிப்தின் ஆளுநராக அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஒரு முறை எகிப்தில் ஒட்டகப் பந்தயம் நடந்தது. அதில் கவர்னர் அம்ரின் மகன் முஹம்மதுவும் கலந்து கொண்டார். அவரது ஒட்டகை முதலில் ஒடிக் கொண்டிருந்தது. திடீரென எகிப்தை பூர்வீகமாக கொண்ட ஒரு கிப்தி இன இளைஞன் அவரை முந்திச் சென்றான். அப்படி முந்திச் செல்லும் போது அவனது வாயிலிருந்து ஒரு ஆவேச வாக்கியம் வெளிப்பட்டது. அது முஹம்மதை கோபப்படுத்தி விட்டது. அவர் அந்த இளைஞனை நோக்கி இந்தா பிடி! நான் பிரமுகரின் மகனாக்கும்! (குத்ஹா! வ அன இப்னுல் முக்ரமீன்) என்று சொல்லி ஓங்கி ஒரு குத்து விட்டார். கவர்னரின் மகன் தன்னை தாக்கியிருப்தால் இங்கு முறையிட்டால் நீதி கிடைக்காது என்று கருதிய அந்த எகிப்திய இiளுஞன் நேரே மதீனாவுக்கு வந்து ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களிடம் முறையிட்டான். உடனடியாக உமர் (ரலி) அவர்கள் ஆளுநர் அம்ரையும் அவரது மகனையும் தலைநகருக்கு வரும்படி உத்தரவிட்டார்கள். அவர்கள் வந்ததும், அரசாங்க மண்டபத்தில் வைத்து விசாரித்துவிட்டு எகிப்திய இளைஞனிள் கையில் சவுக்கை கொடுத்து உன்னை தாக்கிய முஹம்மதை அடி என்றார்கள். அவ்விளைஞன் அப்படியே செய்தான். அவன் அவரை அடித்து முடித்ததும் ஆளுநர் அம்ரை சுட்டிக்காட்டி இவரையும் அடி என்றார்கள். அந்த இளைஞன் அதிர்ந்து போனான். இவர் என்னை ஒன்றும் செய்ய வில்லையே என்று கூறினான். அப்பொது உமர் (ரலி) அவர்கள் அவருடைய மகன் உன்னை அடிப்பதற்கு அவரது தந்தை ஆளுநர் என்ற எண்ணம்தான் காரணம். அத்தகைய எண்ணத்தை மகனுக்கு கெடுத்தததற்கு இவரையும் நீ அடிக்கலாம் என்றார்கள். (இன்னமா லரபக இப்னுஹு பி ஸுல்தானி அபீஹி). அந்த வாலிபர் ஆளுநரை அடிக்கத் தயங்கினார். அப்படியானால் அது உன் இஷ்டம் என்று கூறிய உமர் (ரலி) அவர்கள் ஆளுநர் அம்ர் (ரலி) அவர்களைப் பார்த்து எப்போதிருந்து நீங்கள் மக்களை அடிமைகளாக கருத ஆரம்பித்தீர்கள். அவர்கiளுடைய தாய்மர்கள் அவர்களை சுதந்திர மனிதர்களாக பெற்றெடுத் திருக்கிறார்கள் (மதா தஅப்பத்துமுன்னாஸ வகத் வலதத்ஹும் உம்முஹாத்துஹும் அஹ்ராரா) என்று கேட்டார்கள். இஸ்லாம் ஊட்டிய இத்தகைய சுதந்திர உணர்வு தான் அடிமை இந்தியாவில் விடுதலைக்காக போராடும்படி முஸ்லிம்களில் அனைத்து தரப்பினரையும் தூண்டியது. இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் என்று சொல்லப்படும் சிப்பாய் கலகம் ஏற்படுவற்கு முஸ்லிம்கள் முக்கியக்காரணம் என்றும் பலரும் சொல்வார்கள்.சரியாகச் சொல்வதானால் சிப்பாய் கலகம் ஏற்படுவதற்கு இஸ்லாமே காரணமமாக இருநந்தது. சிப்பாய் கலகத்திற்கான காரணத்தை எழுத முற்படும் எந்த வரலாற்றாய்வளரும் ஆங்கிலேயர்களை எதிர்ககும் துணிச்சல் இந்தியர்களுக்கு எப்படி வந்தது என்பதை விவரிக்கையில் ஆப்கானிஸ்தான் போர் தான் இந்திய வீரர்களுக்கு ஆங்கிலேயரை எதிர்ககும் துணிச்சலை கொடுத்தது என்று சொல்லுவார்கள். ஆப்கானிஸ்தானை வெற்றி கொள்வதற்காக மேற்கோண்ட போரில் இங்கிலாந்து நாட்டின் வலிமை மிக்க படை தோல்வியடைந்தது. 20 ஆயிரம் பிரிட்டிஷ் வீரர்கள் அதில் பலியானார்கள். இந்த செய்தி ஆங்கிலேயர்களை எதிர்க்க முடியும் என்ற துணிச்சலை இந்திய வீரர்களுக்கு கொடுத்தது. பேராசிரியர் அப்துஸ்ஸமத் தியாகத்தின் நிரம் பச்சை என்ற தன்னுடைய நூலில் இப்டிக் கூறுகிறார். ஆங்கிலேயரை வென்று துரத்த முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்தது ஒரு இஸ்லாமிய நாடென்றால் அவர்களுக்கு எதிராக கிளர்ந்து எழுவதற்கான சூழலை உருவர்கிகியது ஒரு இஸ்லாமிய மார்க்க நெறியாகும். 1856 ம் ஆண்டு புதிய என்பீல்டு ரக துப்பாக்கியை பிரிட்டிஷார் அறிமுகம் செ;யதனர். அப்போது வங்காளத்தில் முகாமிட்டிருந்த 19 வது படைப்பிரிவில் பயன்படுத்தி அதை பரிசீலிக்க பிரிட்டிஷார் திட்டமிட்டிருந்தனர். அத்துப்பாக்கியில் அடைக்கப்பட்டுள்ள தோட்டாக்கள் அதிலிருந்து எளிதில் வெளியேறுவதற்காக பன்றிக் கொழுப்பும் பசுக் கொலுப்பும் தோட்டாக்களில் தடவப்பட்டது. தோட்டாக்கள் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய பின் அதன் மேலுரைத் தகடுகளை பல்லால் கடித்து இழுத்துத்தான் வெளியேற்ற வேண்டும். அந்த சமயத்தில் அதில் தடவப்பட்டிருக்கும் கொலுப்பு வாயில்படுவதற்கு வாய்ப்பிருந்தது. எனவே அத்தோட்டக்களை பயன்படுத்த முடியாது என் முஸ்லிம்கள் மறுத்தனர் இது வே சிப்பாய்கலகம் ஏற்படுவதற்கு காரணம். இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் என்று வர்ணிக்கப்படுகிற அந்த சிப்பாய் கலகம் இந்தியவிவிருந்த கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்திற்கு முடிவுகட்டி. இங்கிலாந்து ராணியின் ஆளமையின் கீழ் கொண்டு வந்தது. 1857 ம் ஆண்டு நடைபெற்ற அந்த சிப்பாய் கலகத்திற்குப்பிறகு தொடர்ச்சியாக நடைபெற்ற போராட்டங்களின வழியாக நாடு சுதந்திரம் பெற்றது. இன்று இந்தியா சுதந்திர தேசங்களின் வரிசையில் தலை நிமிர்ந்து நிற்கிறது. அரசியல் சாசனரீதியாக அமெரிக்க ஐக்கிய குடியரசின் குடிமக்களை விட உலக அளவில் போற்றத்தகுந்த உரிமைகள் பெற்ற சுதந்திரக் குடிமக்களாக நாம் இருக்கிறோம். இங்கே பிரச்சினைகள் ஏராளமாக இருக்கலாம். மதவெறியும் லஞ்ச லாவண்யமும் தரம் குறைந்த அரசியலும் நிர்வாக குளறுபடிகளும் சுதந்திரத்தின் மரியாதையை கேள்விக்குரியாக ஆக்கியிருக்கலாம். பாசிசக் கருத்துக்களும் வன்முறைகளும் பெருகி அவ்வபபோது அமைதியை குலைத்து வரலாம். ஆனால் ஒன்று மட்டும் மறுக்க முடியாத நிஜம். அத்தைன கசப்பான சூழலிலும் இந்திய தேசத்தின் குடிமகன் சுதந்திரமானவனாக இருக்கிறான். உலகின் வேறு பல நாடுகளிலும் குடிமக்களுக்கு கிடைக்காத மரியதையும் அமைதியான வாழ்வும் செழிப்பும் இந்தியக் குடிமகனுக்கு கிடைதது வருகிறது. இது நமது முன்னோர்கள் அரும்பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தின் சுகந்தமான விளைவுகளாகும். இன்று இந்தியா அறிவுத்துறைகளில் வெகுவேகமாக முன்னேறி வருகிறது. பொருளாதார வளர்ச்சி சீராக உயர்ந்து வருகிறது. மக்களின் வாழ்கை தரம் மிகப் பெரிய அளவில் மாற்றம் கண்டிருக்கிறது. இந்த தேசத்தின் சுதந்திரத்தை எல்லா வகையிலும் பாதுகாக் வேண்டிய கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது. முஸ்லிம்கள் தேசத்தின் விடுதலைக்காக பணியாற்றியவர்கள் என்ற அடிப்படையில் அவர்களது பொறுப்பு இன்னும் அதிகமாகிறது.இந்த தேசத்தின் விடுதலைக்கு காரணமாக இருந்த இஸ்லாமும் முஸ்லிம்களும் இன்று பல் முனைத்தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறது என்பது வாஸ்த்தவம் தான். மிகப் பக்குவமாக அதை கையாள வேண்டிய கடமை முஸ்லிம்களுக்கு இருக்கிறது. இன்றுள்ள சூழ்நிலையில் முஸ்லிம்களது வாழ்வின் மீது தெடுக்கப்படுகிற தாக்குதல்களும் அவர்களது சமூக அமைப்பின் மீது ஏவப்படுகிற கணைகளும் கலவரங்களும் கண்ணீத் துளிகளும் இந்த தேசத்தை பாதுகாப்பதில் அவர்களது பொறுப்புணர்வை அதிகரித்திருப்பதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்திய சுதந்திரத்திற்கும், இந்திய மக்களின் சமத்துவ சமூக அமைப்புக்கும் யார் விரோதிகாளக இருந்தார்களோ அவர்களே இப்பொது முஸ்லிம்களின் எதிர்கால வாழ்விற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.இந்தச் சந்தர்பத்தில் முஸ்லிம்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விசயங்கள் உண்டு.எந்த ஒரு விவகாரமானாலும் அதில் முஸ்லிம் என்ற பெயர் எளிதில் இணைக்கப்படுகிற கசப்பான சூழ்நிலையில் நமது அனைத்து விசயங்களையும் சட்டத்திற்கு உட்பட்டதாக அமையுமாறு பார்ததுக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். வியாபாரம், வீடுகட்டுதல், வாகனங்கள் வாங்குதல், தெழிற்கூடங்கள் அமைத்தல், ஒன்று கூடுதல் அதிகார வர்க்கத்துடன் ஒத்துப் போகுதல், இன்னபிற ஈடுபாடுகள் அனைத்திலும் சட்டத்தின் வரையரைகளை அறிந்து கொள்வதும் அதன்படி செயலாற்றுவதும் மிக முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய விசயமாகும். ஆதே போல, வாய்ப்பின் வாசல்கள் அகலத் திறந்திருக்கிற நமது தேசத்தில் நமக்கான வாய்ப்புகளை தேடி எடுத்துக் கொள்வதில் ஆர்வமும் அக்கறையும் காட்ட வேண்டும். அரசியல், அரசாங்கம், அரசுப்பணிகளில் ஒதுங்கியிருக்கிற மனப்பான்மை மாற வேண்டும். சலுகைகளை எதிர்பார்த்துக் கொண்டிராமல் பொதுவில் போட்டியிடுகிற திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். நமது தகுதிகளை நாம் நிர்மாணித்தால் நமது அந்தஸ்த்தை நாடு தீர்மாணிக்கும். இது நமது தேசம். நாம் இதன் குடிமக்கள். இது நாம் பெற்ற சுதந்திரம். வாருங்கள் எல்லோரும் கொண்டாடுவோம். அனைவரக்கும் இனிய சுதந்திர தின நல் வாழ்த்துகள்.